Friday, 30 December 2011

என்னை Error ஆக்கிய Terror கும்மீஸ்..


ஒரு முக்கிய அறிவிப்பு...

என் கோடான கோடி ரசிகர்களுக்கு……

டேய்!!! இதெல்லாம் ரொம்ப ஓவர்…

என் லட்சோப லட்ச ரசிகர்களுக்கு

மவனே!!! செருப்ப சாணில முக்கி அடிக்க வேண்டி இருக்கும்….

என் ஆயிரக் கணக்கான ரசிகர்களுக்கு……

உன் ரேஞ்சுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர் கண்ணா.!!!!!

என் நூற்றுக் கணக்கான ரசிகர்களுக்கு……

இன்னும் அதே வட்டத்துக்குள்ளத்தான் சுத்திகிட்டு இருக்கே!!!! வேணாம்!!!!

ஆஹா!!! இதுக்கு மேலயும் அசிங்கப் பட முடியாது… உண்மையை சொல்லிட வேண்டியதுதான்.-மைண்ட் வாய்ஸ்

அஞ்சோ, பத்தோ வாங்கிட்டு என் ப்லாக் வரும் என் அஞ்சு பத்து ரசிகர்களுக்கு நான் இப்பதிவின் அறிவிப்பது என்னவென்றால், டெரர் கும்மி வலைத்தளத்தால் நடத்தப்படும் டெரர் கும்மி விருதுகள் 2011 பற்றிய நற்செய்தியே!!!

இந்த போர்டு எல்லோர் ப்லாக்லயும் தக தக’னு மினுங்குது.. நம்மளுக்கு மாத்திரம் செவ்வனே’னு இருக்கே..

போட்டி பற்றிய அறிவிப்பு வந்ததுமே, டெரர் கும்மி பசங்க (இதுல பசங்க’ங்குற வார்த்தைக்குள்ள 55 வயதைக் கடந்த பெரியவர் வெங்கட் சேர்க்கப் படவில்லை) ரொம்ப லொல்லு பார்ட்டியாச்சே’னு யோசிச்சு கிட்டே காலண்டரை பார்த்து அன்னைக்கு ஏப்பிரல் 1ம் தேதி இல்லைனு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன்.

ஒருத்தனுக்குள்ள உள்ள மிருகத்த தட்டி எழுப்பிராதீங்க’னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா எனக்குள்ள உள்ள மிருகத்த மட்டும் கொஞ்சமாலும் தூங்கவே விடுரீங்க இல்லையே..!!! (யோவ்!!! உன் மூஞ்ச க்ளோச் அப்’ல பார்த்தா மிருகமத்துக்கு கூட தூக்கம் போகாதுய்யா....) 

ஒவ்வொரு மாசமும் ஏதாவது ஒரு போட்டி’னு உசுப்பேத்தி என்னை தீயா அழைய விட்டுர்ரீங்க… (எந்தப் போட்டிலயாவது பரிசு கெடச்சுதானு யாராச்சும் கேட்டா எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஜாக்ரத,..) 

நம்ம ப்லாக் சரத் குமார் படம் மாதிரி… பாட்டு இருக்கோ.. இல்லையோ.. பைட்டு இருக்கோ..இல்லையோ… கட்டாயம் ஒரு ஃப்லாஷ் பேக் இருக்கும். எனவே வந்தவங்க எல்லோரும் ஒரு சுருளி சுற்றி ஃப்லாஷ் பேக்’கு போக தயாராகுங்க….

போலாம்...ரைட்...


ஃப்லாஷ் பேக் 1 :- எங்க ஊருல எந்தப் போட்டி நடந்தாலும் நான் மைதானத்துல இறங்கினா எனக்கு ஈக்குவலா ஒரு பய இறங்கினது கிடையாது. (யோவ்!!! போட்டி முடிஞ்சதும் போய் இறங்கினா எவன்யா இருப்பான்???) 

ப்லாஷ் பேக் 2 :- நம்ம ஃபிரண்டு பாப்’க்கு ஒரு பெரிய கம்பனி’ல இண்டர்வியூ… நானும் கொழும்பை சுற்றிப் பார்க்க இத விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது’னு அவன் கூட தொங்கிகிட்டேன். அந்த இண்டர்வியூல முக்கியமா கேட்டிருந்தது Sports Certificate.

மச்சான்!! உன் கிட்ட Sports Certificate இருக்குள்ள….??

ஒரு சட்டிபிக்கேட் இருக்குடா.. அத வச்சி இண்டர்வியூ பாஸாகிடலாம்..

 ஆஹா.. ரொம்ப பெரிய Sports Certificate வச்சிருக்கான் போல’னு நானும் கம்முனு இருந்துட்டேன். பயபுள்ள இண்டர்வியூ’லயும் பாஸ் ஆகிட்டான். அப்புறம்தான் கேட்டேன்.

மச்சான் உன் Sports Certificate தேசிய மட்டத்துலயா??? இல்ல மாகாண மட்டத்துலயா?? என்ன போட்டிக்கு கிடைச்சது?

அதுவா..வருசா வருசம் எங்க ஊர் வயல்’ல சிங்கள/ தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கும்’ல..அப்போ “வாய்ல கரண்டிய வச்சு அதுல தேசிக்காய வச்சுடு ஓடுர ஓட்டம்” இருக்கே. அதுல ச்சின்ன வயசுல நான் 3வது வந்திருக்கேன்ல. அதுக்கு கெடச்ச Certificate’றா….

கிர்ர்ர்க்ர்க்ரிரிர்ர்ர்ர்ர்ர்ர்…. டேய்!! இதப் பார்த்ததும் காரித் துப்பி இருப்பானுங்களே!!!!

ஆமா.. உன் கிட்ட எத்தனை Sports Certificate இருக்கு…

ஹி..ஹி.. ஒன்னும் கிடையாது….

கர்……….த்த்தூ……..

இதுக்கு மேலயும் சம்பந்தமில்லாம ஃப்லாஷ் பேக் சொல்லி அசிங்கப் பட முடியாது என்பதால மறு படியும்……………….



டெரர் கும்மி விருதுகள் 2011 இன் போட்டி விதிமுறைகள் பற்றி என் ப்லாக்கில் குறிப்பிட முடியாது. Because நம்ம ப்லாக்’ல எப்பவுமே

STRICKLY NO RULES

எனவே இங்கு க்ளிக் பண்ணி போட்டி விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்ளவும்.

இப்போ என்ன பிரச்சனைனா, பதிவுலகையே புரட்டிப் போட்ட என் பதிகளில் எதை போட்டிக்கு அனுப்பலாம்’னு என் வாசகர்களுக்கு ஒரே யோசனை. நான் என்ன பண்ண முடியும் கைய வச்சாலே காவியமா வருதே!!!. அதனால நானும் என் உலக மகா பதிவுகளில் என் தெரிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முடிவு உங்கள் கையில்….

நகைச்சுவைப்  பதிவுகள்.

கவிதைகள்


விழிப்புணர்வு

அனுபவம்/பயணக்கட்டுரை

டிஸ்கி For டெரர் கும்மீஸ்…
1.டெரர் கும்மி நண்பர்களிடம் இது சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் கேட்க முடியாது என்பதால், அவர்கள் ’அனானி’யாக வந்து தங்கள் கருத்துக்களை வாறி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

2. அல்லது பெயரிலியாக அதாவது புனைப் பெயருடன் வந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். ஏதும் பிரச்சனை வந்தால் உங்கள் கருத்துக்கும் டெரர் கும்மி நிறுவனத்துக்கும் எந்த சம்பதமும் இல்லை’னு காதுல பூ சுத்திடலாம்.


25 comments:

  1. என்னன்னு சொல்ல தெரியாதுங்க...
    >>>
    இப்படி ஒரு லேபிளா? நீங்க எங்கேயோ பொறக்க வேண்டியவர் தவறிபோய் இந்தியாவ்ய்ல வந்து பொறந்துட்டீங்க.

    ReplyDelete
  2. :)
    :)
    :)


    miga kadumaiyaga
    puyalal pathikka pattor sangam

    ReplyDelete
  3. // (இதுல பசங்க’ங்குற வார்த்தைக்குள்ள 55 வயதைக் கடந்த பெரியவர் வெங்கட் சேர்க்கப் படவில்லை)//

    5-க்கும் 5-க்கும் நடுவே ஒரு புள்ளி விட்டுடீங்க
    அங்கிள்..! ( 5.5 வயசு )

    ReplyDelete
  4. போட்டி பற்றிய பதிவுக்கு நன்றிங்க :)) வழக்கம்போல இடை இடையே உங்களின் நகைச்சுவைகள் சிரிக்கவைத்தன :))

    ReplyDelete
  5. // என் தெரிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முடிவு உங்கள் கையில்…. //

    ஆமா... மவுஸ் எங்ககிட்ட தானே இருக்கு..!!

    அப்படியே ரைட் சைடு ஓரம் மேலே போனா.
    " X " இருக்கும்.. ஒரு க்ளிக்..
    இந்த ப்ளாக் Close ஆகிடும்.!

    ReplyDelete
  6. ங்ணா உங்க ரேஞ்சுக்கு நம்ம விருதெல்லாம் எதுக்குங்ணா... நீங்க ஆஸ்காருக்கு ட்ரை பண்ணுங்ணா....

    ReplyDelete
  7. ///வெங்கட் said...
    // (இதுல பசங்க’ங்குற வார்த்தைக்குள்ள 55 வயதைக் கடந்த பெரியவர் வெங்கட் சேர்க்கப் படவில்லை)//

    5-க்கும் 5-க்கும் நடுவே ஒரு புள்ளி விட்டுடீங்க
    அங்கிள்..! ( 5.5 வயசு )////

    ஏன் புள்ளிய ரெண்டு 5 க்கும் முன்னாடி (.55) வெச்சிட்டா இன்னும் சவுரியமா போகும்ல?

    ReplyDelete
  8. ////ஒரு முக்கிய அறிவிப்பு.../////

    வெளக்கெண்ணைய தயிர்ல கலந்து வெறும் வயித்துல குடிச்சா இனிமே முக்காம அறிவிக்கலாங்கங்கோ.....

    ReplyDelete
  9. /////அஞ்சோ, பத்தோ வாங்கிட்டு என் ப்லாக் வரும் என் அஞ்சு பத்து ரசிகர்களுக்கு நான் இப்பதிவின் அறிவிப்பது என்னவென்றால், /////

    வெங்கட்டுக்கு மட்டும் ஒரு பத்து ரூபா கூட்டி கொடுக்கப்படாதா, உங்களுக்காக வெளம்பரம்லாம் பண்ணி இருக்காரு.......!

    ReplyDelete
  10. @ ராஜி said...

    /// என்னன்னு சொல்ல தெரியாதுங்க...
    >>>
    இப்படி ஒரு லேபிளா? நீங்க எங்கேயோ பொறக்க வேண்டியவர் தவறிபோய் இந்தியாவ்ய்ல வந்து பொறந்துட்டீங்க.///

    ச்சின்ன திருத்தம் நான் பொறந்தது இலங்கை’ல..

    ReplyDelete
  11. @ NAAI-NAKKS said...

    /// :)
    :)
    :)


    miga kadumaiyaga
    puyalal pathikka pattor sangam////

    இதுக்கே இப்படியா????

    ReplyDelete
  12. @ வெங்கட் said...

    // // (இதுல பசங்க’ங்குற வார்த்தைக்குள்ள 55 வயதைக் கடந்த பெரியவர் வெங்கட் சேர்க்கப் படவில்லை)//

    5-க்கும் 5-க்கும் நடுவே ஒரு புள்ளி விட்டுடீங்க
    அங்கிள்..! ( 5.5 வயசு )///

    இதுக்கு பன்னி குட்டி சார் ஒரு பதில் சொல்லி இருக்காரு பாருங்க...

    @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ஏன் புள்ளிய ரெண்டு 5 க்கும் முன்னாடி (.55) வெச்சிட்டா இன்னும் சவுரியமா போகும்ல?

    ReplyDelete
  13. @ Selvakumar selvu said...

    //// போட்டி பற்றிய பதிவுக்கு நன்றிங்க :)) வழக்கம்போல இடை இடையே உங்களின் நகைச்சுவைகள் சிரிக்கவைத்தன :))///

    அது என் கடமை...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா...

    ReplyDelete
  14. @ வெங்கட் said...

    /// // என் தெரிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முடிவு உங்கள் கையில்…. //

    ஆமா... மவுஸ் எங்ககிட்ட தானே இருக்கு..!!

    அப்படியே ரைட் சைடு ஓரம் மேலே போனா.
    " X " இருக்கும்.. ஒரு க்ளிக்..
    இந்த ப்ளாக் Close ஆகிடும்.!///

    ச்சின்னப் பையன இப்படியெல்லாம் மிரட்டலாமா தல...

    ReplyDelete
  15. @பன்னிக்குட்டி ராம்சாமி said...

    /// ங்ணா உங்க ரேஞ்சுக்கு நம்ம விருதெல்லாம் எதுக்குங்ணா... நீங்க ஆஸ்காருக்கு ட்ரை பண்ணுங்ணா....////

    நம்மளுக்கு கார், பஸ் மேலயெல்லாம் ஆசை கிடையாதுங்கண்ணா...

    ReplyDelete
  16. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    // ////ஒரு முக்கிய அறிவிப்பு.../////

    வெளக்கெண்ணைய தயிர்ல கலந்து வெறும் வயித்துல குடிச்சா இனிமே முக்காம அறிவிக்கலாங்கங்கோ.....///

    டிப்ஸ் சூப்பர் தல... வெளக்கெண்னை எந்த விளக்குல இருந்து எடுக்கனுமுங்க...

    ReplyDelete
  17. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    // /////அஞ்சோ, பத்தோ வாங்கிட்டு என் ப்லாக் வரும் என் அஞ்சு பத்து ரசிகர்களுக்கு நான் இப்பதிவின் அறிவிப்பது என்னவென்றால், /////

    வெங்கட்டுக்கு மட்டும் ஒரு பத்து ரூபா கூட்டி கொடுக்கப்படாதா, உங்களுக்காக வெளம்பரம்லாம் பண்ணி இருக்காரு.......!///

    இதெல்லாம் கம்பனி சீக்ரெட்... வெளில சொல்லிரதிங்க பாஸ்...

    ReplyDelete
  18. வணக்கம் நண்பா.
    ஆரம்பத்தில் டெரர் தனமாக அறிவித்து விட்டு, இறுதியில் தங்களின் எந்தப் பதிவினை போட்டிக்கு அனுப்பலாம் என்று கேட்டிருக்கிறீங்க.

    என் ரசனையில் சில பதிவுகளைச் சொல்கிறேன்.

    ReplyDelete
  19. நகைச்சுவைப் பதிவுகள்.
    இரும்புக் கோட்டை கோழித்திருடன்
    மைக்ரோசொஃப்ட் எனும் மடையனுங்க….
    இஃப்தார் விருந்தில் வந்தஇடியாப்ப சிக்கல்
    டுபாய் முயின்ரோட்டுல மலையாளி

    இதில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யலாம்.

    ReplyDelete
  20. கவிதைகள்
    1. புலிகளும்சிங்கங்களும் மோதிக் கொள்ள நாம் ஏன் அகதியானோம்….
    //

    இது நல்லா இருக்கும் நண்பா.

    ReplyDelete
  21. விழிப்புணர்வு
    1. டுபாய் குறுக்குச்சந்து

    அனுபவம்/பயணக்கட்டுரை

    *வெள்ளை மாளிகைவிருந்துபசாரத்தில் நான்
    *ஈர லுங்கியுடன் 20கிலோ மீட்டர் பயணம்

    இவற்றில் ஏதாவது ஒன்றினை நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

    ReplyDelete
  22. :) நல்ல நகைச்சுவைப்பதிவு..!

    ReplyDelete
  23. ஏன் இந்த பதிவையே அனுப்பலாம்

    ReplyDelete