Monday 9 November 2015

மைனர் குஞ்ச சுட்டுட்டேன்...



ஊருக்கு ஊர் கல்யாண ப்ரோக்கர் இருந்தாலும்,காதல் கத்தரிக்கானு எத்தன ஜோடு ஊர விட்டு ஓடிப் போனாலும் எரும வயசாகியும் (எருமைக்கு எத்தன வயசு?னு கேக்கப்பாடாது) கல்யாணம் ஆகாத மைனர் குஞ்சுங்க நாலு பேரு கட்டாயம் ஒவ்வொரு ஊருலயும் இருப்பானுங்க. நம்ம ஃப்ரெண்டு க்ரேஸியோட ஃப்ரெண்டு லிஸ்ட்,லயும் இதுல பலபேரு இருந்தானுங்க. (எவன்யா அது என்ன உத்து பாக்குறது??? - மைண்ட் வாய்ஸ்)

அன்று ஒரு நாள் நான் க்ரேஸிய சந்திக்க போக,க்ரேஸி ஒரு மைனர் குஞ்சு வீட்டுக்கு போக ரெடியா இருக்க, எனக்கும் அவன் கூட போக வேண்டியாகிடுச்சு.

வீட்டுக்குள்ள போய் ஒரு ரூம்ல ஒரு கதிரையும் கட்டிலும் இருந்தது (ரூமுக்குள்ள மைதானாமா இருக்க போகுது????).  நான் கட்டிலில் உட்காரப் போக க்ரேஸி, டேய்!! கட்டில்லயா உக்காரப் போற???  இண்டீஸ்ண்ட் ஃபெலோவ்!!! எங்க போனாலும் இன்னொருத்தர் கட்டில்ல உக்காரக்கூடாது.. யூ நோ???? நு மானத்த வாங்கின பிக்காளிப் பய (ஆமா... இவரு அசிங்கப்பட்டதே இல்லையாக்கும்...) அங்கிருந்த கம்ப்யூட்டருக்கு பக்கத்துல இருந்த புது adjustable chairல போய் உக்கார, அது வரை சரியாக இருக்கப் படாமல் இருந்த கதிரை சர்ரென் கீழே வழுகிச் செல்ல, க்ரேஸியின் அந்தரத்தில் பரந்த கால்கள் கம்யூட்டர்மேசையின் அடியில் சென்று மோத, அதிலிருந்த ஆணியொண்று க்ரெஸியின் பெரு விரலை பதம் பார்த்தது. காலில் தக்காளிச் சட்னியுடன் விழுந்த க்ரேஸியை மல்லாக்கா தூக்கி வந்து கட்டிலில் குப்புர படுக்க வைத்தோம்.

அசிங்கப்பட்டான் க்ரேஸி.. இனிமே அடங்கிப் போவான்னு நீங்க நெனச்சா, வாயில பினாயில் ஊத்தி கழுவனும். கட்டில்லகிடந்த க்ரேஸி, மை. குஞ்ச பாத்து “அண்ணே!!! உங்க கட்டில்ல இருக்குறது பீச்ல இருக்குறது மாதிரி இருக்குண்ணே!!னு சொல்ல, மை. குஞ்சுடன் பெருமிதத்துடன் “ஏன் தம்பி அவ்ளோ காத்தோட்டமாவா இருக்கு’’னு கேட்க, இல்லண்ணே!!! கட்டில்ல அவ்ளோ மணலா இருக்கு..அதுதான் கேட்டேன். இத தட்டி சுத்தப்படுத்தவே மாட்டீங்களா??? னு சொல்ல மை. குஞ்சுவின் மூஞ்சுல ஈயாடல. அது எப்படியோ க்ரேஸியோட பேச்ச கேட்டு எனக்கு வயித்த கலக்கிடுச்சு. சந்தைக்கு போன அண்ணன் சண்டையோட வருவான்னு ஒரு வடிவேல் டையலாக் இருக்கு....அது எப்படியோ, க்ரேஸியோட போற எவனா இருந்தாலும் கிழிசலோடத்தான் வந்து சேருவாங்குறது நாம் அனுபவத்துல கண்ட உண்மை.

தன்னை சுதாகரித்துக் கொண்ட மை. குஞ்சு “ தம்பி.. நான் ஒரு ஒண்டிக் கட்ட.. என் வேலைகளை செய்யவே நேரமில்ல. இதெல்லாம் எப்போ செய்ரது??’னு மை.குஞ்சு ஃபீல் பாண்ண, கல்யாணம் ஒண்ண பண்ண வேண்டியதுதானே? நான் சொல்ல, கடந்த இருபது வருஷமா .. சாரி கடந்த இரண்டு வருஷமா நானும் பாக்குறேன். எதுவுமே சரியா அமையல. இப்பொழுதுதான் ஒரு சம்பந்தம் வந்து எல்லாம் நல்ல படியா முடியப் போகுது. நாளைக்கும் பொண்ணு வீட்ல இருந்து வர்ராங்க.. எல்லாம் சரியா இருந்தா நாளைக்கு Date fix பண்ணிடுவாங்க.. எப்டியும் ஒரு வாரத்துல கல்யாணம் ஆயிடும் தம்பி. நாளை பொண்ணு வீட்டாரை கவர்ரதுக்கு எதாவது பண்ணனுமே!! அதுதான் அங்க இங்கனு ஓடியாடிட்டு இருக்கேன். ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லுங்க தம்பி’னு க்ரேஸிஐ பார்த்துக் கேட்டாரு. சில பேருக்கு நல்ல நேரம் வந்தாலும் தன் வாயால அதை விரட்டி விட்ருவாங்க.. மை. குஞ்சும் அதுல ஒருத்தர்தான்.

க்ரேஸிக்கும், மை.குஞ்சுக்கும் நடந்த உரையாடல்...

அண்ணே!! இரண்டு வருசமா பொண்ணு பாத்து வேல ஆகுமா??? என்னய பாருங்க.. இரண்டு வயசுல இருந்து பாக்குரேன். இன்னும் ஒண்ணு கூட திரும்பிப் பாக்கவுமில்ல.(இதுக்கு பிறகும் யாரும் பாக்கப்போறதில்ல.... - மைண்ட் வாய்ஸ்) ஆமா... உங்களுக்கு எத்தன வயசாகுது??

எனக்கு 25 வயசு தம்பி

கிரிரிரிர்கிர்.) அண்ணே!! எங்களுக்கே 24தாண்ணே!! ஒரு பொய் சொல்லும் பொது அதுல கொஞ்சம் உண்மையும் இருக்கணும்ணே!!! சரி.. வர்ர பொண்ணு வீட்டாளுங்களூக்கு என்ன பலகாரம் வைக்க போரீங்க....

மை. குஞ்சுவும் சில பல சிங்களப் பலகாரங்களை எடுத்து விட க்ரேஸி டென்ஷன் ஆகிட்டான்.
அண்ணே!! உங்களுக்கு வயசு 40க்கு மேலாகுது.. நான் சொல்ரது சரிதானே???

எப்படி தம்பி சரியா கண்டுபுடிச்சீங்க...???

இந்த மாதிரி போர்த்துக்கீசர் காலத்து பலகாரங்கல வச்சாலே உங்க வயசு தெரிஞ்சுராதா??? கொஞ்சம் புதுசா யோசிங்கண்ணே!!!! நான் சொல்ர ஐடங்களை வாங்கி வச்சு பாருங்க.. ஒரு கிழமைல நீங்க மாப்லயா இருப்பீங்க’னு புதிய ஐட்டங்கள் சிலவற்றை எடுத்து விட்டான் க்ரேஸி.

கடைசியா அண்ணே!!! வர்ரவங்களுக்கு குடிக்க என்ன குடுப்பீங்க’னு கேக்க, மை. குஞ்சும் டீ குடுக்கலாம்னு இருக்கேன்னு சொல்ல க்ரேஸி Again Tension.....


அண்ணே!!! புதுசா யோசிங்கணு சொண்ணேன்ல...

தம்பி.. பழைய டீயையா குடுக்க முடியும்.. புதுசாத்தான் ரெடி பண்ணி குடுப்போம்ல..

யோவ்!! அத சொல்லலையா... டீக்கு பதில் வேறேதாவது குடுக்கலாம்.. ம்ம்... ஒண்ணு பண்ணலாம்.. டீக்கு பதில் ஐஸ்கிரீம் வைக்கலாம்.

சூப்பர் தம்பி.. நாளைக்கே போய் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வந்துர்ரேன்.

நாளைக்கா??? 40 வருஷம் லேட் ஆகினது போதாதா??? இப்பொழுதே போய்வாங்கிட்டு வாங்க... (மை.குஞ்சு ஏதோ பேச முயல)“அண்ணே!! கல்யாணம் நல்ல படியா நடக்கனும்னா எதிர் பேச்சு பேசாம நான் சொல்ரத மட்டும் செய்ங்க...

மைனர் குஞ்சுவும் கடைக்குச் செல்ல நாமளும் க்ரேஸியை கைத்தாங்களாக பிடித்துக் வந்து சேர்ந்தேன்.

******

அடுத்த நாள் இரவு க்ரேஸி கிட்ட இருந்து போன். மிஸ் கால் மட்டுமே அடிக்கிரவன் இன்னைக்கு என்னடா விடாம கால் அடிக்கிறானேனு பார்த்தா, மச்சி.. ரெண்டு நாள் உங்க வீட்ல ஒழிஞ்சிக்கலாமா??”னு அலர்ரான்..ஏண்டா’னு கேட்டதுக்கு, மச்சி.. மைனர் குஞ்சு கல்யாணம் நிண்டு போனதுக்காக ஆளுங்களோட என்ன அடிக்கிறதுக்கு விரட்ராண்டா... கால்ல வேற காயம். வழமை மாதிரி என்னால ஓடித் தப்பிக்கவும் முடியல, என்ன காப்பாத்து மச்சி’னு ஒரே ஒப்பாரி....

டேய்... நீதானே பெரிய இவன் மாதிரி ஐடியா குடுத்தே!!!! என்னாச்சுடா???

நேற்று ஐஸ்கிரீம் வாங்க சொன்னோமே!!!! அந்த நாதாரி,அவன் வீட்ல ஃப்ரிட்ஜ் இல்லைனு ஒரு வார்த்த சொன்னானா??? இல்லைல..(நீ எங்கடா அவன சொல்ல விட்டே??? - மைண்ட் வாய்ஸ்) அவன் ஐஸ்கிரீமைவாங்கி வந்து அப்ப்டியே வீட்ல வச்சிருக்கான். அடுத்த நாள் நாரிப்போன அதே ஐஸ்கிரீமை பொண்ணு வீட்டாருக்கு குடுக்க, கல்யாணம் கென்சல் ஆயிடுச்சு...

என்னது?? ஃப்ரிட்ஜ் இல்லையாமா???

யோவ்!! கரண்டே இல்லையாம்யா.... பில்லுலி கட்டாததால கரண்டு லைனை வெட்டி 2 வருஷமாகுதாம். அந்த கம்ப்யூட்டரும் டேபிளும் கூட பக்கத்தூட்டுல வாங்கின செட்டப்,பாம்யா...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்



Wednesday 29 July 2015

Ebayனா இளிச்சவாயனுங்களா???



போன வாரம் கடைல ஒய்யாரமா உக்காந்துட்டு இருக்கேன், இந்த வாரம் எந்தப் பைத்தியத்துகிட்ட சிக்கனமோ, அந்த பைத்தியம் கஸ்டமர் ரூபத்துல வந்து முன்னுக்கு நின்னுச்சு...

அண்ணே!!! எனக்கு கட்டாயமா ஒரு பொருள் வாங்கணும்ணே... எவன கேட்ட்டாலும் ஈ பாய் கிட்ட வாங்கு... ஈ பாய் கிட்ட வாங்குங்குறானுங்க... யார்ணே அந்த ஈ பாய்?? அவ்ளோ பெரிய பிஸ்னஸ் மேனா???

டேய்!! அது e bay'டா..

ஓ... அப்டியா??. அந்தக் கடை கிழக்கு மாகாணத்துலயா இருக்கு???

ஏன் பக்கி?? எதுக்குடா அது கிழக்கு மாகாணத்துல இருக்கனும்???

Arugam Bay, China Bayணு எல்லா ஊரும் அங்கதானே இருக்கு???

கர்ர்..த்தூ... அதுக்கு நீ என்கேயுமே போக தேவல.. இங்கிருந்தே வாங்கலாம். புரிஞ்சுதா???

சரிண்ணே.. E-bay கடைய எந்த நேரம் திறப்பாங்க??? எப்போ மூடுவாங்க???

டேய்!! அது கடையில்லடா... ஆன்லைன் மார்க்கட்டிங்.. புரிஞ்சுதா??

அப்போ, எப்ப ஆன்லைன்ல இருப்பாங்க?? எப்போ எப்போ offlineல இருப்பாங்க???

அவ்வ்வ்.... வேற என்னவாவது கேளுடா .. முடியல...

அப்டின்னா?? நம்ம ஊர்ல உள்ள ஷேர் மார்க்கட் மாதிரியா???

கிர்ர்ர்... நம்ம ஊர்ல ஷேர் மார்க்கட்’டா??? அதெங்கடா இருக்கு??/  நம்மளுக்கே தெரியாம...

நம்ம சந்தைக்கு பின்னாடி உள்ள மூத்தர சந்துல இருக்கே ஒரு ஆபீஸ்.நெறைய பேரு இங்க்லீஸ் பேப்பர் படிச்ச்சிட்டு இருப்பாங்களே??

என்னது??? மூத்தர சந்துல ஷேர் மார்க்கட்டா????  கர்ர்ர்,,த்தூ... டேய், சூதாட்ட விடுதிடா நாதாரி...

அப்போ அந்த E-bay எங்கண்ணே இருக்கு??

தம்பி அது ஆன்லைன் மார்க்கட்டிங்’ப்பா... இன்டெர்னெட் மூலமா தேவையான பொருள ஆடர் பண்ணி க்ரெடிட் கார்ட் மூலமா பணம் குடுத்தா, அவங்க பொருள நம்ம வீட்டுக்கே அணுப்பி வச்சிடுவாங்க. ஆமா உன்கிட்ட க்ரெடிட் கார்ட் இருக்கா????

க்ரெடிட்’னா ஊரெல்லாம் இருக்குண்ணே.. க்ரெடிட் கார்ட்’னா இன்னும் இல்ல. அங்கயும் கடன் தருவாங்கனு தெரிஞ்சிருந்தா எப்பவோ வாங்கியிருப்பேன்...

கர்ர்ர்....(ச்சே இவனுக்கு காரித்துப்பி துப்பியே என் தொண்ட வத்திடுச்சு. இந்தப் பழக்கத்த இன்னையோட நிறுத்தனும் - மைண்ட் வாய்ஸ்)

Tuesday 14 July 2015

தலைவா - Time to ESCAPE

காலேஜ்ல,
ஒருவாறு கீழ் வகுப்புல இருந்து மேல் வகுப்புக்கு போய் சேர்ந்தாச்சு. மேல்வகுப்புக்கு வந்து பார்த்தா, நம்ம பழைய நண்பர்களில் டட்ஸனும், பாப்’ம் மட்டும்தான் இருக்கானுங்க. மத்தவனுங்க எல்லாம் புதிய பசங்க. க்ரேஸி, புள்ளி ராஜா வேற வகுப்பு.

மேல் வகுப்புக்கு வந்தா Prefect (மாணவர் தலைவர்) தேர்வு செய்வாங்க. நம்ம வகுப்புல டட்ஸனும், பாப்’ம் ஆல்ரெடி மாணவர் தலைவர், மத்தவுங்க எல்லானும் புதுசு, காலேஜ் மெனேஜ்மெண்ட்டுக்கு வேற வழியே இல்லாம நம்மளையும் மாணவர் தலைவனாக்கிட்டாங்க. நக்கலா சிரிக்காதீங்க... க்ரேஸிஐயோ, புள்ளி ராஜாவையோ மாணவர் தலைவராக்கல.. Note the Point...

நாம சும்மாவே உருவத்துல சிறிசு, அது போக திருட்டு முழி வேற கூடவே பொறந்தது. நாமெல்லாம் மா. தலைவர்னு அம்மா சத்தியம் பண்ணினாத்தான் நம்புவனுங்க. அதனால Senior Prefectஇடம் கெஞ்சி கூத்தாடி சின்ன வகுப்புக்கு என்னை நானே நியமித்துக் கொண்டாச்சு..

சும்மா சொல்லக் கூடாது, அந்த க்ளாஸ்ல ஒரு பத்து, பதினைஞ்சு பேரு நம்ம கிட்ட அடி வாங்குறதுக்கே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருந்தானுங்க. அப்புறம் என்ன?? இதுவர மா. தலைவர்களிடம் நாம் பட்ட அதேஅவஸ்தைய நம்ம கிட்ட அந்தப் பசங்க பட்டு மாஞ்சானுங்க....

நம்ம காலேஜ்ல முக்கியமான ஒரு சட்டம் இருக்கு, அதாவது டவுசர் போடாம வந்தா கூட உள்ள விட்ருவானுங்க. ஸ்கூல் பேட்ஜை சட்டைப் பைல தைக்காம வந்தா கேட்டைக் கூட தொட விடமாட்டானுங்க. பேட்ஜை நாலு பக்கமும் நல்ல முறைல தச்சிருக்கனும், ஆனா, சில பசங்க அவசரத்துல பேட்ஜை வைத்து பின்’னால குத்திட்டு வருவானுங்க. சில பேரு லைட்டா தச்சுட்டு வருவானுங்க. அத புடிங்கி அவனுங்க கைல குடுத்து, நாளை வரும் போது, சரியா தச்சுட்டு வர சொல்லி எச்சரிக்கனும்.நீங்க காரித் துப்பினாலும் பரவால ஒரு உண்மைய சொல்ரேன், மா. தலைவர் வேலைலயே எனக்கு புடிச்சது இந்த வேலதான்..

அடையாளப் படம்
பேட்ஜை பிடுங்கும் போது சில வேளை, பேட்ஜுடன் சேர்ந்து பாக்கட்டும் கைக்கு வந்துடும். அப்புறம் நம்ம உச்ச கட்ட அதிகாரத்த பிரயோகித்து அவனை அடக்க வேண்டி இருக்கும். சில வேளை, உச்ச கட்ட அதிகாரம்னு சொல்ரது வெள்ளைக் கொடியாகவோ, அதை விட கீழ்த்தரமாகவோ இருக்கும். அவ்வ்....விட்ரா விட்ரா நீ படாத அவமானமா?? பார்க்காத அசிங்கமா?? கேக்காத கெட்ட வார்த்தையா???

ஒரு நாள் டியூட்டில இருக்கேன், அம்மாஞ்சியா ஒருத்தன் வர்ரான். அவன் மூஞ்ச பாத்தா முசுப்புக்கே(அலுப்பு) மூஞ்சில மூனு குத்து குத்தலாம் போல இருக்கும். இவன வச்சு நாம ரவுடி ஆகிடலாம்னு அவன நல்லா நோட்டம் விட்டேன், நம்ம கிட்ட இருந்து அவ்ளோ ஈஸியா எஸ்கேப் ஆகலாமா?? அவனோட ஸ்கூல் பேட்ஜ் ரெண்டு பக்கம் தைக்காம இருக்குறது என் கண்ணுல பட்டிடுச்சு.

டேய்!!! இங்க வாடா????னு கூப்டதும் பம்மிகிட்டு வந்தான், என்ன நடக்க போகுதுனு எதிர் பார்த்திருப்பான் போலும், பேட்ஜை ஒழுங்கா தைக்கலல’னு சேர்ட்டை புடிச்சு அவன் பேட்ஜை இழுக்க, அவனும் என்னவோ சொல்ல முயல, அவன் பேட்ஜ் என் கைல வந்தது...

பேட்ஜ் மட்டும் வந்திருந்தா பரவால...பாக்கெட்டும்.....


பாக்கெட் மட்டும் வந்திருந்தாலும் கூட பரவால.....அவ்வ்வ்வ்

அவனோட ஷேர்ட்டும் சேர்ந்து கிழிந்து என் கைக்கு வந்துடுச்சு....

சனியன் அன்னக்கி பனியனும் போட்டில்ல.. நெஞ்சுப் பகுதி அப்டியே வெளியே தெரிய, உடனே அழ ஆரம்பிச்சுட்டான்.

சாரிடா தம்பி.. தவறுதலா ஆச்சுடா...

போங்கண்ணே!!! இது எங்க மூத்த அண்ணன் போட்ட சேர்ட்டு.. கிழிச்சுட்டீங்களே!!!

அடப்பாவி நான் புதுசோ’னு நெனச்சு பயந்துட்டேண்டா.... ஆமா, நீ உன் குடும்பத்துல எத்தனையாவது ஆளு???

7வது...

அடப்பாவி. கவர்மெண்ட்  ஃப்ரீயா சட்டைப் புடவை குடுக்க, நீ ஒரே சேர்ட்ட ஏழு தலைமுறையாவா உடுக்குறே???? மவனே இந்த சேர்ட்டோட சேர்த்து, உன்னையும் மியூசியத்துல வச்சிருவேன் பாரு...ஓட்ரா.....

வெளிய வா... என் ஆறு அண்ணனையும் கூட்டி வர்ரேன்.

அடுத்த மூனு நாளா நான் காய்ச்சல் காரணமா காலேஜ் போகல, நான் ஏன் இத இங்க சொல்ரேண்ணா, நான் அவன் அண்ணன்ங்களுக்கு பயந்து காலேஜ் போகலனு நீங்க யாரும் தப்பா நெனக்க கூடாது பாருங்க...

Tuesday 7 July 2015

பெட்ரோல்மக்ஸ் லைட்டேத்தான் வேணுமா???

சம்பவம் 1:
அன்று கடையை மூடி விட்டு வீடு செல்ல கொஞ்சம் லேட் ஆயிச்சு. பொதுவா இருட்ட முன்னாடியே கிளம்பிடுவேன், அன்று அது மிஸ்ஸிங். வளைவுகள் நிறைந்த வீதி, அதனால் ஒரு பைக்கின் பின்னால் மெதுவாக சென்று கொண்டிருந்தேன். வளைவுகள் முடிந்து கொஞ்சம் நேரான பாதை வர பைக்கை முந்திடலாம்னு எக்ஸ்லேட்டரை முறுக்க, திடீர்னு முன்னாடி வந்து நின்றது ஒரு சைக்கிள்.

ப்ரேக் பிடிக்க நினைக்கவும் முடியல, கொஞ்சம் பாதையின் வெளியே நான் திருப்ப, நேருக்கு நேர் மோதாமல் சைக்கிளோட Handle என் கையை பதம் பார்க்க என் சைட் கண்ணாடி சைக்கிள்காரனுடைய கையை பதம் பார்க்க, வெவ்வேறு திசையில் போய் விழுந்தோம். பைக் விழாமலிருக்க முயற்ச்சி செய்ததில் எனது காழும் கையும் தசை பிடிப்புக்காளாகி விட்டது.

விழுந்தவுடன் பைக்கை தூக்கவுமில்லை, உடனே சைக்கிள்காரனிடம் ஓடிச் செல்ல அவனும் மெதுவாக எழுந்துவிட்டான். ஒரு 70 வயது மதிக்கத் தக்க ஒரு கிழவன், நல்லா குடிச்சிருந்தான். “என் மேலஎந்தத் தப்பும் இல்ல, நான் என் பக்கத்துலதான் வந்தேன்”னு கத்திகிட்டு இருந்தான். அதற்குள் கூட்டமும் சேர்ந்துவிட்டது.

அவனுக்கு கையில் கொஞ்சம் ரத்தம் கசிந்திருந்தது, அவனை அதை பார்க்க விடவில்லை, சைக்கிளுக்கு எந்தக் காயமும் இல்லை. பொதுவா இப்படி விபத்துக்கள் நடந்தால் நம்மளிடம் பணம் அறுத்து விடுவார்கள். சிங்கள ஊர், அடிபட்டவனும் சிங்கள ஆளு, கொஞ்சம் விட்டா நம்மள மேய்ஞ்சிடுவானுங்க,அதனால யாரையும் வாய் திறக்க விடல, நானே வலவலனு பேசி, அந்தக் கிழவன யோசிக்கவே விடாம, அவசரமாக அந்த இடத்திலிருந்து அனுப்பிவிட்டு எஸ்கேப் ஆனேன்.

அந்தக் கிழவன் சைக்கிளில் எதாவது ஒரு வெளிச்சம் கொண்டுவந்திருந்தால் அந்த விபத்து தடுக்கப் பட்டிருக்கும். அட்லீஸ்ட்,ஒரு Reflection Lightஆவது சைக்கிளில் வைத்திருக்க வேண்டும். டுபாயில் சைக்கிளில் போவோர் கட்டாயமாக Reflection kit, Helmet அணிந்திருக்க வேண்டும். இது போன்ற சட்டங்கள் நம் நாட்டிலும் வேண்டும்.

சம்பவம் 2:
இந்த அம்பவம் முடிந்து ஒரு வாரம் இருக்கும், பக்கத்து டவுனுக்கு போகலாம்னு பேமிலியுடன் ஆட்டோவில் கிளம்பினேன். பெட்ரோல் ஷெட்’டில் பெட்ரோல் அடித்துவிட்டு, ரோட்டுக்கு ஆட்டோவை போட பார்க்கும் போது, திடீர்ன்னு ஒரு லைட் இல்லாத சைக்கிள்காரன் முன்னாடி வந்து சேர, மனைவி போட்ட சப்தத்தில் ஒரு ரத்தக் களரி ஜஸ்ட்டு மிஸ்ஸு. எனக்கு செம டோஸ் கிடச்சதுனு நான் சொல்லாமலேஉங்களுக்கு தெரிந்திருக்கும்.
அப்படியே ஒரு மூனு கிலோ மீட்டர் போயிருப்போம், புதுசா போட்ட நல்ல கருப்பு ரோடு, அதுல ஏதோ வெளிச்சம் அசையுர மாதிரி தெரிந்தது. பக்கத்துல போகும் போதுதான் பார்த்தேன், கருப்பு ரோட்டுல கருப்பு ட்ரெஸ்ல அதே கலருல ஒரு கிழவி விழுந்து கிடக்குறா. நான் ப்ரேக் அடிச்சு வண்டிய சமாளிக்கிறதுக்குள்ள, மெதுவா எழுந்து ஓரமாயிடுச்சு அந்தக் கிழவி,

கையில் வெளிச்சம் இருந்ததால் அன்று ஒரு விபத்து தடுக்கப் பட்டது, இல்லாவிட்டால் கிழவி என் ஆட்டோவுக்கடியில் “ஆச்சி65” ஆயிருக்கும். ஓ மை காட்!!!

சம்பவம் 3:
இரண்டாவது சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும், ஒரு நாள் இரவு பள்ளிக்கு ஆட்டோல போய் தொழுதுட்டு வெளிய வந்து பாக்குறேன், ஒரு நாய் ஆட்டோ சீட்டுல புதுசா போட்ட சீட் கவர்ல ஒய்யாரமா படுத்துட்டு இருக்கு. ஆட்டோக்குள்ள இருந்ததால நாய அடிக்க முடியல. புது சீட் கவர கழுவ சோம்பரத்துல வீசிட்டேன்.

அடுத்த நாள் இரவு மஸ்ஜித்திலிருந்து வெளியே வர்ரேன், அதே நாய் ரோட்டுப் பக்கமா இருளுக்குள்ள ஒட்டிட்டு இருக்கு, வந்த கோவத்துல கைல கெடச்ச செங்கள் பாதிய ஒரே வீசு. இருட்டிலிருந்து “அய்யோ... அம்மா”னு கதறல் சத்தம்.

ஆஹா.. தமிழ் தெரிஞ்ச நாயா இருக்குமோனு டார்ச்சை எடுத்துட்டு போய் பார்த்தா, வெள்ளையும் சொல்லையுமா நம்ம ஊரு கல்யாண ப்ரோக்கர் காலில் ரத்த காயத்தோடு ரோட்டில் விழுந்து கிடக்க, பக்கத்துல நான் வீசின செங்கல் பாதி.

சாரிண்ணே!! நாய்க்கு அடிச்சது.... தவறுதலா...

என்ன பாத்தா நாய் மாதிரியாடா இருக்கு.....


இல்லண்ணே!!  நாய பாத்தாதான் உங்கள மாதிரி இருக்கு(ஆனா ஊருக்குள்ள அத விட கேவலமாத்தான் உங்கள பாக்குராங்க....- மைண்ட் வாய்ஸ்)

டேய்!! எனக்கும் நாய்க்கும் வித்தியாசம் தெரியலயா????

அது உங்க தொழில் மகிமைண்ணே!!!!

டேய்!!!!

அங்கயும் கூட்டம் கூட, கல்யாண ப்ரோக்கர் மேல ஊர் மக்களுக்கு இருந்த கடுப்புல என் தலை தப்பியது. இருட்டில் வராமல் ஏதாவது ஒரு வெளிச்சம் கொண்டுவந்திருந்தால் கல்யாண ப்ரோக்கருக்கு செங்கல் பாதியால் அடி வாங்கியிருக்க வேண்டியதில்லை.

Wednesday 1 July 2015

என் உச்சி மண்டைல....



போன வெள்ளிக் கிழமை,
பகல் வேளை,
மஸ்ஜித்துக்கு போகலாம்னு அவசரமா கடைய மூடிட்டு இருக்கேன் கடைசி கதவை போடும் நேரம் பார்த்து, பக்கத்து ஊர்ல சலூன் நடத்துர நம்ம உலக மகா கஸ்டமர் ஒருத்தன் வந்துட்டான்..

அண்ணே!!! அவசரமா கத்தரி (Scissors) ஒன்னு குடுங்கண்ணே!!

தம்பி, தம்பி கடைய மூடிட்டு இருக்கேன், கோவிச்சுக்காம வேற எங்கயாவது போய் வாங்கிக்கோப்பா..

அதெல்லாம் முடியாதுண்ணே!!! சீக்கிரமா குடுங்க..ரொம்ப அவசரம்..

முடியா..

அண்ணே, பேசிட்டு இருக்குர நேரம் குடுத்திருக்கலாம்ல.. சீக்கிரம்னே....

தொல்ல தாங்க முடியாம போய் கத்தரியை எ டுக்க வேறெதையோ எடுத்தேன். அத கைல வாங்கிட்டு ஓட பார்த்தான்.

டேய்!! அது பென்சில் பாக்ஸ்’டா..அத குடு.. இதோ இருக்கு நீ கேட்டது...

இதோ பணம் இருக்கு...குடு குடு குடு குடு...

டேய்!!! எதுக்கு இப்போ குடுகுடுப்பை காரம் மாதிரி அடிக்குரே.. கொஞ்சம் பொறுடா.. பேக்ல போட வேணாமா....???

போக்;லாம் தேவல. நான் என் பாக்கட்லயே வச்சுக்குறேன். வரட்டா...

ஆமா.. மீதி பணம் வேணாமா?? அத நான் என் பாக்கட்ல வச்சுக்கவா....

சீக்கிரம் குடுங்கண்ணே!!!! அய்யோ!!!! லேட் ஆவுதே!!!

இந்தா மீதி..போய் தொலை. . கத்தரிய டவுசர் பாக்கட்ல போட்டிருக்கே, எங்கயாவது, எதையாவது அறுத்துட போகுதுடா....

அட்வைஸ் பண்ர நேரமாணே இது??? சலூன்ல ஒருத்தன் பாதி முடி வெட்டின நிலமைல இருக்காண்ணே!!!

அடப்பாவி.. இத முதல்லயே சொல்ல வேணாமாடா???


அவன் போனதுமே கடைய சாத்திட்டு ஜும்மாவுக்கு போய்ட்டு, ஜும்மா தொழுகை முடிஞ்சு சாப்டு விட்டு, சுமாரா ரெண்டரை மணித்தியாலத்துக்கு பிறகு கடைக்கு வர்ரேன், கத்தரி வாங்கின பார்ட்டி கடை வாசல்ல குந்திகிட்டு இருக்கான்.

டேய்!! அதுக்குள்ள கடைக்கு போய் வந்துட்டியா???

அழும் தொனியில்...
நான் எங்கண்ணா கடைக்குப் போனேன்???  அவசரத்துல என்னோட பைக் சாவிய உங்க கடைக்குள்ள வச்சுட்டேண்ணே!!!  அவ்வ்.....

கிர்ர்ர்ர்........அப்போ, முடி வெட்டிட்டு பாதிலயே விட்டுட்டு வந்தியே, அந்தாளோட நிலைமை என்னாடா???

யாருக்குண்ணே தெரியும்??? இனிமே நான் சலூன் பக்கம் போனாத்தானே!!!!








Saturday 13 June 2015

உங்க அறிவப் பாத்து நான் வியக்குகேன்....



போன வாரம் எங்க ஊர்ல மளிகை சாமான் வாங்கலாம்னு கடைக்கு போயிருந்தேன். அந்த நேரம் பாத்து சுமாரா 30 வயசுல ஒரு பொண்ணும் வந்து சேர்ந்திச்சு.
அந்தப் பெண் பேசுர ஸ்டைல வச்சு, தமிழ் தெரியாத பெண்ணாயிருக்கணும், வீட்டுலயும் ஆங்கிலம்தான் பேசுவாங்க போல,னு நெனச்சுகிட்டேன்.

கடைக்காரரிடம் அந்தப் பொண்ணு,
அண்ணே!! Lactogen Three  இருக்கா??

இல்லம்மா... Lactogen Twoதான் இருக்கு...

அப்ப்டியே கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு கேட்டிச்சு பாருங்க ஒரு கேள்வி.... பேசாம நானும் செவ்வாய் கிரகத்துக்கே போய்டலாமானு யோசிக்க வச்ச அந்த கேள்வி

.....



.....




.......




.......



ம்ம்ம்.... Two’னா..... 02ம் நம்பர் போட்டதா????

கிர்ர்ர்ர்ர்....... அடிப்பாவிகளா??? இந்தளவு ஆங்கில அறிவ வச்சுகிட்டாடி நம்மள இந்த ஓட்டு ஓட்டுரீங்க???

Wednesday 3 June 2015

வாய் மூடி பேசவும்




டுபாயில் இருக்கும் போது பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் எங்காவது வெளியில் செல்வது வழக்கம். அந்த வகையில் ஒரு முறை ஒரு நண்பனை பார்க்க அபூதாபிக்கு செல்வதாக முடிவு செய்தோம். போகுமிடமெல்லாம் சாக்கட சாமில் வாங்கிக் கட்டிக் கொண்டு வருவதால் அவனை மட்டும் தனியாக விடாமல் அவனையும் கூட்டிப் போகலாம்னு முடிவு செய்தோம்.

அபூதாபியில் நண்பன் ரூமுக்கு போய் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு நேபாளி பையன் வந்து நல்ல முறையில் பேசிக் கொண்டிருந்தான். கையில் கட்டுடன் இருந்தவன், தான் வேலை செய்யுமிடத்தில் விழுந்து விட்டதாகவும் சொன்னான். இப்படியே கொஞ்ச நேரத்தில் சாக்கடைக்கும் நேபாளிக்கும் இடையில் நல்ல நற்பொன்று உருவாகிவிட்டது.

கொஞ்ச நேரத்துல தேனீர் குடிக்க’னு நண்பன் உள்ளே கூப்பிட, சாக்கடை மட்டும் தான் வரவிலையென்று சொல்லிவிட்டு, நேபாளி பையனுடன் தெரியாத ஹிந்தியில் ஏதோதோ கதைத்துக் கொண்டிருந்தான்.


தேனீர் அருந்திவிட்டு வெளியே வந்தபோது நேபாளி பையனின்முகத்தில் சிறு மாறுதல். நம்முடன் பேசவும் இல்லை, நமக்கு சந்தேகத்துக்கு இடமேயில்லை, சாக்கடை எதாவது செய்திருப்பான்னு தெளிவாக புரிந்தது.

டேய் சனியன் சாக்கட.. இந்தப் பையனுக்கு ஏதாவது பண்ணினியா???

ச்சே!! நான் நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தேன், திடீர்னு என் கூட பேச மாட்டேங்குறான்.

டேய்!! உன்ன நம்ப முடியாது.நீ என்ன பேசினேனு மட்டும் சொல்லு...
பெருசா ஒன்னும் பேசல, கைல அடி பட்டு கட்டு போட்டிருக்கியே, அதனால தப்பித் தவறியும் குளிச்சிடாதே’னு எனக்கு தெரிஞ்ச ஹிந்தில கொஞ்சம் இங்லீசும் கலந்து சொன்னேன். அவ்ளோதான்,அதோட அவன் முகமெல்லாம் மாறிடுச்சு. பேச மாட்டேங்குறான்.

ஹிந்திலயா??? போன வாரம்தானே ஹிந்தில பேசி ஒரு பாகிஸ்தானி உன்ன கொல்லப் பார்த்தான் (டுபாயில் சாக்கட). மறுபடியுமா??? ஆமா எப்படி ஹிந்தில சொன்னேனு கொஞ்சம் சொல்லு பாக்கலாம்.

முழுசா ஹிந்திலயே சொல்லத் தெரியாததால, ”Bath நெகி கரோ” அப்டினு சொன்னேன். இது தப்ப்பா???

டேய்!!@&$%^$&@#@(**@($&*$@)($@($(*@$&$%^ “பாத் நெகி கரோ”னு சொன்னா பேசாதே’னு அர்த்தம்டா பக்கி.

இல்ல மச்சான் ... அது வந்து....

டேய்!!! நீ கொஞ்சம் பாத் நெகி கரோ....

நான் குளிச்சு மூனு ஆகுதுடா..

அவ்வ்வ்வ்............


Friday 29 May 2015

டுபாயில் சாக்கடை




வெளிநாட்டில் தனியாக இருப்பது என்பது கொடுமை. நம்ம நண்பன் சாக்கட சாமிலுடன் இருப்பது அத விட கொடுமை.

சாக்கட சாமில் டுபாய் வந்து ஒரு மாதம் கூட இருக்காது, தனியாக வெளியே கிளம்பிட்டான், சாக்கடையுடன் எவனும் வெளியே போக தயாரில்லை என்பதும் ஒரு காரணம். 

போய் கொஞ்ச நேரத்துல போன்ல சாக்கடை,
டேய் மச்சான், சேர்ட் வாங்கலாம்னு ஒரு புடவைக் கடைக்கு வந்தேண்டா, ஒரு பாகிஸ்தான்காரன் கொடுக்க முடியாது’னு வம்புக்கிழுக்கிறான், அவன நான் கொல்லாம விடமாட்டேன்... டேய்!!

டேய்!! சாக்கட..கொஞ்சம் பொறுடா நான் வர்ரேன்.. எங்கடா இருக்கே???? 

மச்சி நான் Industrial Area'ல இருக்கேண்டா...

உடனே போன கட் பண்ணிட்டு வெளியே கிளம்பினேன்.. என் மனவோட்டம் சுழல ஆரம்பிச்சது.. 

“Industrial Areaல ஒரு துணிக் கடையா?????? சாக்கடைக்கு ஹிந்தி/ உருது எல்லாம் கணக்கு பாடம் மாதிரியே.. சுத்தமா தெரியாதே!!!
சாக்கடை பாகிஸ்தான் காரண புடிச்சு வக்கிரதா??? நிச்சயமா பாகிஸ்தான் காரன்,தான் சாக்கடைய புடிச்சு வச்சிருபான்..- மைண்ட் வாய்ஸ்

அங்கு சென்று பார்த்தபோது என் மைண்ட் வாய்ஸ் சரியாகத்தான் இருந்தது, அங்கு ரெண்டு பட்டாண் (பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியை சேர்ந்தவர்கள்) சாக்கடையை அமுக்கி வைத்திருந்தார்கள்.
டேய்!!! சாக்கட, இங்க எதுக்குடா வந்தே... என்னடா பிரச்சனை???

ஒரு சேர்ட் வாங்கலாம்னு இந்தப் பக்கம் வந்தேன்,இவன் கடை முன்னாடி நிறைய சேர்ட் வச்சிருந்தானுங்க, நான் போய் கேட்டதும் நிறைய சேர்டை எடுத்து முன்னாடி வச்சான், அப்புறமா நான் எனக்கு பிடிச்சத தேடி குடுத்த புரட்டி புரட்டி பாத்துட்டு, தர முடியாதுங்குறான். இவன இன்னைக்கு விடக் கூடாதுடா...

கர்ர்ர்..த்த்தூ.... டேய் வெண்ண... இது Laundry Shop'டா பக்கி...உனக்கு உருது தெரியல,அவனுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியல. நீ Laundry'ல குடுத்த சேர்டை எடுக்க வந்ததா நெனச்சு உன் முன்னாடி சேர்ட்களை வச்சிருக்கான், நீ ஒரு சேர்ட்ட எடுத்ததும், அதன் நம்பர பாத்துட்டு, வேறொருத்தோரடதுனு எடுத்து வச்சிருக்கான். அது புரியாம நீ அவன் கூட மொக்குத்தனமா சண்ட போட்டிருக்கே!!!   கொஞ்சம் விட்டிருந்தா உன் கால கைய வெட்டி ”கபாப்” பண்ணியிருப்பான்டா பக்கி.

அப்புறம் பாகிஸ்தானியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே வந்தோம். இனிமே சாக்கடய எங்கயும் தனியா அனுப்பக் கூடாதுனு நெனச்சேன். அடுத்த வாரமே அதுக்கும் வச்சான் பாருங்க ஆப்பு... அது அடுத்த பதிவில்....

Friday 22 May 2015

தலைவலிக்கு எண் ஒன்றை அழுத்தவும்



நாம ஒழிஞ்சிட்டு இருந்தாலே ஒன்பது பேரு வந்து கடுப்பேத்துவானுங்க, வெளில போனா சொல்லவுமா வேணும்??? (நீ என்ன டுபாக்கூரு வேல செஞ்சிட்டு ஒழிஞ்சிட்டு இருக்கியோ??? எவனுக்கு ஆப்படிக்க வெளில போறியோ???)

கடையில்,
தெரிஞ்ச ஒரு ஆள் வந்து "தம்பி, எனக்கொரு E-mail அனுப்பனும்னு சொன்னாரு(நீ ஈ விரட்டி கிட்டு இருக்கேன்னு யாரோ சொன்னத தப்பா புரிஞ்சு்கிட்டு நம்ம கிட்டு வந்திர்ருப்பாரு போல) நானும் Addressஐ கேட்டு அனுப்பி வச்சுட்டேன். அது வர நல்லாத்தான் போய் கிட்டு இருந்திச்சு.

அப்புறம் மாலை நேரம் வந்தவர்,

தம்பி, அந்த E-mail போயிடுச்சா...???

போயிருக்கும்னு நினைக்கிறேன்..

என்ன தம்பி இப்படி பொறுப்பில்லாம சொல்றீங்க..(மூணு மாசம் பில்லே கட்டல...அப்புறம் எப்படி பொறூப்போட சொல்ரது????) “E-mail sent  successfully’னு ஒரு Message வரலையா??? 

இல்லண்ணே. அப்படியெல்லாம் வராதுண்ணே!!

அதெப்படி வராம இருக்க முடியும்??? தம்பி, sms பெருசா??? இல்ல, E-mail பெருசா???

ம்ம்ம்... E-mailதான் பெருசு... அத எதுக்கு கேக்குறீங்க??

என்னோட போன்ல sms பண்ணினா ”  sms sent  successfully”னு Message வருது..(எங்க போன்ல Balance not enough'னுதானே வருது)உங்க E-mailல வரமாட்டேங்குது.. தம்பி,உங்களுக்கு உண்மையாவே E-mail அனுப்ப தெரியுமுல்ல...(இப்போத்தான் நம்ம மூஞ்சியயும் மொகரக்கட்டயையும் சரியாப் பார்த்திருப்பானோ???)

அண்ணே... அது வேற இது வேற...

அதெல்லாம் எனக்குத் தெரியாது. முதல்ல உங்க Email என்னனு சொல்லுங்க..???

Gmail

ஊருக்குள்ள அப்படியொரு Email நான் கேள்விப்பட்டதே இல்லையே தம்பி, (டேய்!! நீயெல்லாம் கல்குலேட்டர்’னு ஒன்னு இருக்குரது கேள்விப்பட்டிருந்தாலே பெருசு) உங்க Email என்னதுனு கேக்குரேன்.. Airtel’ஆ Hutch’ஆ, Dialog’ஆ,இல்ல Mobitel’ஆ???

ஆஹா. ..இந்தப் பைத்தியத்த சமாளிக்க நாமளும் இவன் வழிக்கே போறத தவிர வேற வழியில்ல- மைண்ட் வாய்ஸ் (இதையேதான் அவன் மைண்ட் வாய்ஸும் சொல்லி இருக்குமோ)

என்னோடது Airtell Emailண்ணே.. 

என்ன தம்பி நீங்க இத முதல்லயே சொல்ல வேண்டியதுதானே!! என்னோடது Dialog தம்பி. அதுலதான்   sms sent  successfullyனு  Message வரும், Airtellஅ வராது போல..தம்பி, வயசுப் பசங்க கொஞ்சம் விவரமா இருக்கனும், இவ்ளோ வெள்ளந்தியா இருக்கக் கூடாது..வரட்டா..

அவ்வ்வ்.... (பைத்திய்மெல்லாம் ஃப்ரீ எட்வைஸ் பண்ணுர அளவுக்கு நம்ம நிலமை ஆயிடுச்சே!!)