Friday 30 September 2011

Home Page'ஐ இஷ்டம் போல் நிறுவ..

Google Home page'ஐ எப்பவுமே ஒரே மதிரி பார்த்து பார்த்து நம்மளுக்கு போரடிச்சுப் போயிருக்கும். அதை எங்களுக்கு விருப்பமானது போல், எங்கள் மனநிலைக்கு ஏற்றது போல் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்???

"Sleek Search" னு ஒரு வெப் சைட்`ல வித விதமான Home Page'களை குடுத்திருக்கிறார்கள்.  எங்களுக்கு விருப்பமானதை "Apply Now" ஐ கிளிக்குவதன் மூலம் நிறுவிக்கொள்ளலாம். நமக்கே Theme`ஐ உருவாக்கவும் முடியும்.இவற்றில் சில ஓடும் படங்கலாஹவும் இருக்கின்றன. (Ex : Matrix )

இந்த Theme`களில் உள்ள விசேஷம் என்னவென்றால், Home  Page 'லையே,

Face Book
Twitter
Yaho
Gmail
CNN
Amazon
BBC
You Tube
Linkedin
Google News
Yahoo Mail

போன்றவற்றுக்கான short  cut 'ம் கீழ் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நானும் சிலவற்றை Home  Pageஆக  மாற்றிப் பார்த்தேன். நன்றாகவே இருக்கிறது. பிடித்திருந்தால் நீங்களும் முயற்சிக்கலாம்.

Google என்பதற்கு பதிலாக நம்ம கம்பனி பெயரை (Mac  DG )  குடுத்திருக்கிறேன்.











Tuesday 27 September 2011

காற்றிலே ஒரு கடிதம்



காலேஜ் போகின்ற காலத்துல, நானும் நம்ம நண்பர்களும் ஒரு மைதானத்துல கிரிக்கட் ஆடுரது வழக்கம். அந்த மைதானம் பாதையோரத்தில் இருந்தால் கிரிக்கட் விளையாடுவது போக, ரோட்டுல போகும் வரும் பிகர்களை சைட் அடிக்கும் வசதியும் இருந்ததால் நம் மைதானத்துல எப்போதுமே கூட்டம் கலைகட்டும்...

ஒரு நாள் வழமை போல நாள் விளையாட்டிக் கொண்டிருக்கும் போது, ஒரே கூத்தும் கும்மாளமுமாக ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. பார்க்கும் போதே சுற்றுலா சென்றுகொண்டிருக்கும் பாடசாலை மாணவிகளின் வண்டி என்பது புரிஞ்சிடுச்சு.

நாமளும் விளையாட்டை நிறுத்தி விட்டு ஜொள்ளு வடிய வண்டியை பெப்பெரப்பே`னு பார்த்துடு இருக்க, வண்டியிலிருந்து வந்த ஒரு காகிதத்துண்டு நண்பன் க்ரேஸியின் காலடியில் வந்து விழ, நண்பன் முகத்தில் ஜொள்ளு இரு மடங்காக கரை புரண்டு ஓடியது.

நம்மளுக்கோ கடுப்பு தாங்கமுடியல.... இவ்ளோ பேர் இருக்கோம். அவன் கிட்டவா விழனும்.. ச்சே!!!

"மச்சி.... ஒரு வேளை அந்த லெட்டர் எனக்குதான்யா வந்திருக்கும்....`னு நண்பன் பொப் சொல்ல நம்மளையெல்லாம் ரொம்ப கேவலமா ஒரு லுக்கு விட்ட க்ரேஸி

"டேய்!!! நாம் தூரத்துல இருந்து வரும் போதே பாத்துடுதான்யா இருக்கேன்.. (இப்போதான்யா  புரியுது, இவன் ஏன் எல்லா பந்தையும் கோட்டை விட்டிருக்கான்`னு...?) நிச்சயமா இது எனக்கு வந்துதாண்டா.."னு சொல்ல..

"மச்சி ஒரு அந்த பொண்ணு "Bombay Looking Kolkata Going"ஆ இருக்குமோ..(மாறு கண் என்பதை நாம இப்படித்தான் சொல்லுவோம்..)`னு நாம கடுப்பேத்த, மறுபடியும் அதே கேவலமான லுக்`அ விட்டுடு, லெட்டரை திறக்க ஆரம்பித்தான்..


நம்மளுக்கெல்லாம் "Address இருக்குமோ Phone No. இருக்குமோ "ஒரே தவிப்போ தவிப்பு... போயும் போயும் இவன் கைல சிக்கிடுச்சே`னு கடுப்போ கடுப்பு...

லெட்டரை திறந்த க்ரேஸியின் முகமோ நாம் எதிர் பார்த்ததிற்கு மாற்றமாக "சோத்தாலையும் அடி வாங்கி சேத்தாலையும் அடி வாங்கி"ன மாதிரி ஆயிடுச்சு.

ஆமா.. அதுல அப்படி என்னதான் எழுதி இருந்துச்சு`னு பார்த்தா...

........................................................




........................................................




........................................................




........................................................




........................................................





"டேய்! தெருப்பொருக்கி நாயே!!!!
ரோட்டுல கிடக்குரதெல்லாம் பொருக்கி வாசிக்கிரியே!!!!
வெக்கமாயில்ல.......
வீட்டுல சோறா திண்ணுர இல்ல ****** திண்ணுர???
காவாலிப் பயலே "
( கடிதத்தை சிங்கள மொழியிலிருந்து இருந்து உங்களுக்காக தமிழில் மொழி பெயர்த்தவர் உங்கள் அபிமான "புன்னகையே வாழ்க்கை" ப்லாக் ஓனர் சாட்சாத் நானேதான்..)


முதல்ல தெருப்பொருக்கி நாய்`னு பின்னாடி காவாலி`னு திட்டியிருக்காங்களே!!! லாஜிக் இடிக்குதே`னு தோன்றினாலும், அதை கேட்டா, நம்மள இடிப்பானுங்களே`னு சைலண்ட் மொட்`லயே இருந்துட்டேன்



Sunday 25 September 2011

உலகத்தின் பெண்சுதந்திரம் !!!!


 உலகத்தின் பெண்சுதந்திரம்
உலகம்
கண்ட பெண் சுதந்திரம்
என்ன சுதந்திரமாம்? கண்ணும் , மனதும் கூசும்
பள்ளியிலே ஆரம்பிக்கிறது
பெண் குழந்தைகளின்
சுதந்திரம், அருவருப்பான
பாடலுக்கு ஒரு ஆட்டம்
கேட்டால் பள்ளி இறுதி
கொண்டாட்டம்!

மாநிலத்தில் அழகி போட்டி!
உலகளவில் ஒரு அழகி போட்டி!
பெண்ணின் அங்கங்களை அளந்து
ஒரு பூனை நடை!
ஒரு எலி நடை!
பெண்களின் உடலை மதிப்பிட்டு
மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க
வக்கிரம் கொண்ட ஆண்கள்
புடை சூழ – தாராளமாக
வந்த பெண்ணிற்கு
உலக அழகி (அருவருப்பு)பட்டம்!

உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும்
கழுகுகளுக்கு கிடைத்ததோ
ஒரு அழகி(அருவருப்பு)போட்டி!

அரைகுறை உடையுடன் நடக்க வைத்து
பண முதலைகளின் பொருள்களை விற்க
பெண்களை சந்தைப்படுத்தி
உலக அழகி (சுதந்திர) அடிமை பட்டம்!

கார் விளம்பரமா?
ஆண்கள் பயன்படுத்தும்
பொருள்களின் விளம்பரமா?
இழுத்து வா பெண்ணை
அரைகுறை ஆடையுடன்
நிற்க வை! ஆணுடன்!

கல்லூரியா? ஆணுடன்
பெண்ணையும்
கலந்து படிக்க வை!
பாய் – பிரண்ட்
கேர்ள் – பிரண்ட்
இரண்டும் இல்லையென்றால்
நீ ஒரு பைத்தியம்
இந்த உலகில்!
சிவப்பு விளக்கு
என்ற ஒரு தெரு!

அரசே அங்கீகாரம்
கொடுத்து நடத்தும்
அசிங்கங்கள்!
அசிங்கத்திற்கே
மரியாதை கொடுக்கும்
உலகத்தின் அரசாங்கங்கள்!

வக்கிரம் படைத்தவர்களுக்கு
பெண் என்றால் எல்லாவற்றையும்
துறந்து அலைய வேண்டும்!
வேஷ்டியோடு அலையும்
ஊரில் பேண்ட் போட்டுக்கொண்டு
நடந்தால் ஆச்சர்யம்!

தலைவிரி கோலத்துடன்
செய்தி வாசிக்கும் பெண்!
ஐந்துவயது பெண் குழந்தையின்
ஆடையுடன் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் நடத்தும் பெண்!
இறுக்கமான ஆடை அணிந்து
ஹாய், பாய் – காலேஜ் பெண்!


பெண்ணையே திருமணம்
செய்து கொள்ளும் பெண்!
யாரோடும் வாழ்வேன் – யாரும்
என் சுதந்திரத்தில் தலையிடாதே
நவீன நரகல் பெண்கள்!
இப்படிப்பட்ட கண்ணியமற்ற
சுதந்திரம்(?) பெண்களுக்கு வேண்டுமாம்!

உலகத்தில் உள்ள வக்கிரம்
படைத்தவர்கள் கதறுகிறார்கள்!!!
நாங்கள் கொடுத்த சுதந்திரம்
ஏன் இஸ்லாத்தில் இல்லை?
எரிச்சலில் – அவதூறு
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லையாம்!

இஸ்லாம் வழங்கிய
சுதந்திரத்தை பார்த்து
எங்கள் பெண்கள் போல்
நீங்களும் வந்தால்தான்
நாங்கள் பார்க்கமுடியும்!
இப்படி புர்க்காவோடு வந்தால்
எப்படி? - பற்றி எறிகிறது
அவர்களின் வயிறு!

அந்த கலக்கத்தில்
கீழ்ப்பாக்கத்தில்
இருப்பதற்கு தகுதி படைத்த
உலக அறிவிலிகள் கதறுகிறார்கள்!

இஸ்லாத்தில் பெண் சுதந்திரம்
இல்லை என்று!
1432 வருடத்திற்கு முன்பே
இஸ்லாம் வழங்கிய சுதந்திரம்!


வாழ்வதற்கே சுதந்திரம்
பிற மதங்களில் இல்லை!

ஆனால் இஸ்லாத்தில்
வாழ, பேச, படிக்க
வியாபாரம் செய்ய
சொத்துக்களை தன்
பெயரில் வைத்துக்கொள்ள
சுதந்திரம்!

பிடித்த மணமகனை
தேர்வு செய்ய சுதந்திரம்!
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து
பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!
என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!
திருமணத்தில் மஹர் என்ற உரிமை!
தந்தை சொத்தில் உரிமை!
கணவன் சொத்தில் உரிமை!
மகன் சொத்தில் உரிமை!
இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!
உலகில் பெண்ணுக்கு
மனிதன் வழங்கிய சுதந்திரம்
கண்ணியமற்ற அலங்கோலம்!
உலகை படைத்த அல்லாஹ்
வழங்கிய பெண் சுதந்திரம்
கண்ணியமிக்க அந்தஸ்து!

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட
பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய
பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.
அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 33:59)

தமது பார்வைகளத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும்
நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே
தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக்
கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)

தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும்
அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க
வேண்டாம்.நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால்
வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 24:31)

மஹர் - திருமணத்தின் போது மண மகனால் மண மகளுக்கு குடுக்க வேண்டியது. இது பணமாகவோ, பொருளாகவோ குடுக்கலாம். இதற்கான குறிப்பிட்ட தொகை இல்லை. மணமகளுக்கு தான் விரும்பிய தொகையை கேற்கும் உரிமை இருக்கிறது.


எழுதியவர்:
அலாவுதீன். S.

Copy & Paste By:
புன்னகையே வாழ்க்கை ப்லாக் ஓனர்..
பேஸ்புக்`ல “AlMowilath Islamic library"ங்குர தளத்திலி இருந்து அவர்கள் அனுமதியுடன் எடுக்கப்பட்டது.




Wednesday 21 September 2011

தமிழக சிற்பங்கள் பற்றி நீங்கள் அறியாதவைகள்


ல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!
இந்த ஜோக்`ஐ எல்லோரும் இதுக்கு முன்னால பார்த்திருப்பீங்க. இதை ஒரு மாணவன் எழுதினதாதான் நினைத்திருப்போம். ஏன் ஒரு ஆசிரியர் எழுதியிருக்கக் கூடாது????  இதை ஏன் சொல்றேன்னா... கீழ உள்ள விடைத் தாள்களை (Answer Sheet) பார்த்தால் உங்களுக்கே புரியும்.

பெரிதாக பார்க்க படங்களை கிளிக்கவும். அப்படியும் தெரியாவிடின் பூதக் கண்ணாடி பாவிக்கவும். அப்படியும் தெரியாவிடின் நல்ல டாக்டரை பார்க்கவும்.

நாயக்கர்களை பற்றி எழுதி இருக்காரு... தெரிஞ்டிக்கங்க..













இது எப்படி இருக்கு...
தமிழ் நாட்டிலுள்ள உள்ள கோயில்களை அக்கு வேறு ஆணி வேராக பிரித்து மேய்ந்திருக்கிறார். படித்து தெரிந்து கொள்ளுங்கள்

தமிழக சிற்பங்கள், அது செய்யப் பட்ட முறைகள் விலாவரியாக விளக்கப் படுத்தி இருக்காரு...

Final Touch ஒன்னு குடுத்திருக்காரு... ஷப்பா முடியல..

 டிஸ்கி 1: நாம பதிவு முடிய முன்னாடியே டிஸ்கி போடுவோம்`னு அறியத்தருகிறேன்.

டிஸ்கி 2: இந்தப் படங்களை நான் மெயிலில் இருந்து சுடவில்லை என்பதை அறியத்தருகிறேன்.  (அப்போ எங்கிருந்து சுட்டிருப்பேன்`னு தலைய பிச்சுகங்க..)



வெளி நாட்டுப் பசங்களும் சாதாரண ஆளுங்க கிடையாது. நம்ம லெவலுக்கு இல்லாவிட்டாலும், அவங்களும் ஏதோ முயற்சி செஞ்ருக்காங்க..









 இப்போ சொல்லுங்க...
ஆசிரியரா இருக்குரது கஷ்டமா??? மாணவனா இருக்குரது கஷ்டமா?????




Saturday 17 September 2011

நாங்கெல்லாம் வில்லேஜ் விஞ்ஞானிங்க...

இதையெல்லாம் பாத்து பயந்துராதீங்க... வழமை போல மொக்கைதான்..

நம் ஊர்களில் சில பழக்க வழக்கங்கள் பொதுவாக இருக்கும். அதில் அனேகமானவை மூட நம்பிக்கைகளாக கூட இருக்கும். இன்னும் சில விஞ்ஞானத்துடனே வீம்பா விளையாடக் கூடியதாக இருக்கும். சில பழக்க வழக்கங்கள் என்ன காரணம் என்று தெரியாமலே முன்னோர்கள் செய்த ஒரே காரணத்திற்காக செய்பவையும் உண்டு.

சின்ன வயசில் பார்த்திருக்கிறேன், வயல்களில் Cassateகளில் உள்ள ரீல்களை குறுக்கும் நெடுக்குமாக கொடி போல் கட்டி இருப்பார்கள். அது காற்று வீசும் போது ஒரு வினோதமான சத்ததை உருவாக்கும். இதன் மூலம் பயிரை நாடி வரும் பறவைகள் மற்றும் கால் நடைகளை விரட்டுது நோக்கமாகும். (இதுக்கு பேருதான் விஞ்ஞானத்தோடு வீம்பா விளையாடுரதா????) புதிதாக கட்டும் வீடுகளில் பொம்மைகளை வைப்பர். இது மக்களின் பார்வையை திசை திருப்பி கண் திருஷ்டியிலிருந்து பாதுகாக்கும் உத்தியாகும். இப்படி பல உண்டு....

ஆனால், எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு, அது என்னதுன்னா,  நம் ஊர்களில் பழ மரங்களில் பூ பூத்து, பிஞ்சாகி, காயாகி, பழமாகும் வேலையிலே (உங்க ஊர்ல மட்டும்தான் இப்படி நடக்குதா???) பழங்களை ஒரு பையால் சுற்றி வைப்பர். அது எதுக்கு`னுதான்....



ஒரு நாள் நானும், க்ரேஸி, பொப், காமராசு, டட்ஸன், புள்ளி ராஜா போன்ற நன்பர்களும் மேலதிக வகுப்புக்கு போய் வந்து கொண்டிருந்த வேளை, தூரத்தில் ஒரு மா மரத்தில் காய்த்த, பழுத்த பழங்களை பைகளால் கட்டி வைத்திருந்தனர். (பைல கட்டி வச்சிருந்தா அது பழுத்ததா, காயா`னு எப்படி தெரியும்`னு கேக்க கூடாது. அதுக்கெல்லாம் ரொம்ப அனுபவம் வேணும்) இதை பார்த்ததும் நம்ம புள்ளி ராஜாவுக்கு அறிவுப்பசி வந்துடுச்சு (பழத்தை பார்த்ததும் என்ன பசி வந்திருக்கும்`னு நம்மளுக்கு தெரியாதா???) . நம்மள பார்த்து ”இப்படி ஏன் பண்ராங்க`னு” கேட்க, நம்ம பசங்க ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அனுமாங்களை தட்டி விட்டனர்.


காமராசு:-
மச்சீ... அது அணில், குரங்கு, பறவைகள் பழத்த சாப்பிட்ராம இருக்கத்தான் அப்படி கட்டி வச்சிருக்கானுங்கடா...

பொப்:-
இல்லடா... அது கண் திருஷ்டில இருந்து பாதுகாக்கத்தான் அப்படி ஒரு வேலை பண்ணி இருக்கானுங்க...

நான்:-
பழம் சீக்கிரமாக பழுக்குரதுக்காக அப்படி பண்ணி இருக்கானுங்கடா...
(மூடி வைப்பதன் மூலம் CO2 செறிவடைவதால் பழம் சீக்கிரமாக பழுத்து விடும்)


க்றேஸி:-
திருடன் எவனும் ஆட்டைய போட்டுட கூடாதுள்ள.. அதுதான்யா அப்படி பண்ணி வச்சிருக்காங்க..  (இவர் சொல்வது கற்கள், கட்டைகளின் மூலம் பழம் பறிக்கும் பொடிப் பசங்க)

டட்ஸன்:-
அப்படியெல்லாம் இல்ல மச்சி... பழம் பழுத்து கீழே விழுந்தா வேஸ்ட் ஆயிடும்ல.... அதற்காகத்தான் அது ஒரு பாதுகாப்பு உத்தி.

நானும் இன்று வரை யோசிச்சுகிட்டே இருக்கேன். (உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா????) இதுல எது சரியா இருக்கும்`னு... ஆனா இன்று வரை புரியவே இல்ல..

Sunday 11 September 2011

ஊர்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்


 இலங்கையின் பல பகுதிகளிலும் கடும் கோடை நிலவுகிறது. முக்கியமாக மலை நாட்டில்.... நேற்று இரவு மழைவிலிருந்து பெய்து கொண்டிருக்கிறது. மாத்தளை (வடக்கு), அனுராதபுரம், பொலன்னறுவ, மற்றும் வட கிழக்கு மாகாணங்களில் கோடை காலங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, நீர் தேடி காட்டில் இருந்து ஊர்களுக்குல் புகுந்து விடும் யானைகள். ஆனால் ஊருக்குள்ளும் தண்ணீர் இருக்காது`ங்குரது வேற மேட்டர்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு பதிவர் ரியாஸ்'ஐ [(Riyas's) ப்லாகின் பெயரை அடிக்கடி மாற்றுவார். அடைப்பு குறிக்குள் இருப்பது தற்போதைய பெயர்] அனுகவும்.


வழமை போல இந்த முறையும் கோடையில் மத யானை  இல்லாத நேரம் பார்த்து (ஹி..ஹி.. நான்தான் அது) இரண்டு காட்டு யானை நம்ம ஊருக்குள்ள (நிக்ககொள்ள, மாத்தளை மாவட்டம்) புகுந்துடுச்சு. பீதியில் மக்கள் வீட்டை வீட்டு வெளியிரங்கவே பயத்தில்  உள்ளனர்.


நம்ம நாடுகளின் சட்டம்  எப்படியும் “விலங்குகள் 1000 மனிதரைக் கொண்டாலும் நாம் அந்த விலங்குகளை கொல்வது தப்பு” அப்படி`னுதான் இருக்க போகுது. அதுக்காக வேலை வெட்டி இல்லாத ஒரு க்ரூப் சங்கமே அமைத்து வைத்திருக்கும். காட்டிலாகவினர் வந்து வயல்களுக்கோ வீடுகளுக்கோ எந்த சேதம் வந்தாலும் யானைக்கு எந்த கீறலும் விழாமல் காட்டுக்கு விரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

Thursday 8 September 2011

PIT புகைப்ப்ட போட்டி - September

இந்த மாத (September) PIT Photography  போட்டிக்கான தலைப்பு “எழுத்துருக்கள்”. அதாவது, போட்டோவில் தமிழ், அல்லது ஆங்கில எதாவது ஒரு எழுத்துரு தெளிவாக தெரிய வேண்டும்.என்னிடமிருந்த போட்டோக்களில் சல்லடை போட்டு ஒரு சிலதை தேடிப் பொறுக்கி எடுத்து அதில் ஒன்றை அனுப்ப முடிவு செய்திருக்கிறேன். தெரிவு உங்கள் கையில்.....

உங்களுக்கு பிடித்த (தலைப்புக்கு பொறுத்தமான) போட்டோவை சொல்லவும்.

எல்லாமே நல்லா இருக்கு`னு சொல்லிராதீங்க... (அதுக்கெல்லாம் சான்சே கிடையாது ..Don't Worry)

சில வேளை தலைப்புக்கு பொருத்தமில்லாமல் இருக்கலாம். So, மன்னிச்சூ............

ஒவ்வொரு படத்திலும் என்ன எழுத்துரு இருக்குனு அடைப்புக் குறிக்குல போட்டிருக்கிறேன்.

இந்த போட்டோவ சுட்டு வேற யாராவது அனுப்பிட்டா என்ன பண்ணுவீங்க`னு கடந்த மாதம் பீதிய கிளப்பி விட்டுதால இந்த முறை ஒவ்வொரு போட்டோவிலும் நம்ம கம்பெனி Logo (Mac DG) போட்டிருக்கேன். நம்ம கிட்ட யாரும் வாலாட்ட முடியாதுல்ல..

1.  ( t )Dubaiஇன் பர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் பக்கத்திலுள்ள ஒரு கட்டிடம். கட்டிட நிர்மான வேலை முடிந்து  Tower Craneஐ அகற்றும் காட்சி.


2. ( O ) டுபாயில் எடுக்கப் பட்டது. கூடைப் பந்தாட்டக் கூடை


3. ( O ) அபூதாபி, ஷேக் சையத் மஸ்ஜிதிலுள்ள ஒரு மினாராவின் உற்புரத் தோற்றம்


4. ( H ) நம்ம பயலுகதான்.. ச்சும்மா தமாசு...


5. ( A ) Ibnu Batuta Mall, Jabel Ali Dubai


6. ( Y ) New Zealand Farm, Ambewela, Nuwareliya


7. ( ள ) New Zealand Farm, Ambewela, Nuwareliya


8. ( C ) Terminal 3 Air Port, Dubai


9. ( A ) நீர் பருகுமிடம். ஷேக் சையத் மஸ்ஜித், அபூதாபி


11. ( A ) வாயில்களில் ஒரு வாயில், ஷேக் சையத் மஸ்ஜித், அபூதாபி


12. ( C ) இதன் சரியான பேரு மறந்திடுச்சு....  நம்ம ஊரு


13. ( Y ) நம்ம ஊரு


14. ( e ) டுபாய் மால்`இன் ஒரு அலங்கரிக்கப் பட்ட கூரை


15. ( S ) தலவாக்கலை வீதி, இதுல S உருவை காண்பது கஷ்டம்தான்...


16. ( r ) New Zealand Farm, Ambewela, Nuwareliya


17. ( T ) ரயிலுக்கான பிரிட்டிஷ் கால இரும்புப் பாலம், நானு ஓய, நுவரெலிய


18. (Y) St. Clair's Falls, தலவாக்கலை.