Friday, 25 March 2011

குவைட்,இராக்’கின் பஸ்ரா பகுதிகளில் வரலாறு காணாத மணல் புயல் 25-03-2011
இன்று மாலை (25-02-2011) குவைட்,இராக்’கின் பஸ்ரா பகுதிகளில் வரலாறு காணாத  (வரலாறு வந்து சொல்லிச்சா?) மணல் காற்று வீசியது.மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்த மணல் காற்றில் இரவு 8.00 மணிவரை நீடித்தது. (டின்னர் லேட் ஆச்சுல்ல....)  பயங்கர காற்றும் அள்ளி வீசும் மணலும் (மணல் காற்றுல மணல்தான்யா வரும்)  எனக்கு ஒரு புதிய அனுபவமாகவும், கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.


* இன்றுதான் மொத்த வேலைத்தளத்தினதும் சுத்தம் செய்யும் வேலை முடிந்தது. மறுபடி நாளை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
* புயல் வரும் முன்னே நம்முடன் வேலை செய்யும் செர்பிய நாட்டு முதியவர், அழைத்துக் கொண்டு போய் காட்டியதால், கொஞ்சம் போட்டோ எடுக்க முடிந்தது.
* புயல் வருவதை பார்த்ததுமே நம்ம கூட வேலை பார்க்கும் கர்நாடக நபர் ஒருவர் “ அய்யோ... 2012’க்கு முன்னே உலகம் அழியப்போகுதே”னு ஒப்பரி வைக்க தொடங்கி விட்டார்.
ஏற்கனவே ”சூப்பர் மூன்” விஷயத்தில்( சோதிடத்டை நம்பி)  பயந்து கொண்டிருந்தவர், புயலை பார்த்ததும் பண்ணிய அலப்பரை தாங்க முடியலப்பா.....
*Office Room, Bed room எல்லம் மணல் காடாய் இருக்கிறது. என்ன பண்ணலாம்???????

மிக முக்கியமாம செய்தி

ரொம்ப நாளாக கழுவாமல் பாதுகாத்து வந்த என் காலுரைகளை நேற்றுதான் மக்கள் நலன் கருதி கழுவி காய போட்டேன். அதையும் புயல் தூக்கிடுச்சு. (புயல் வந்ததே அதனாலதான்யா) அது கிடைக்க அனைவரும் பிரார்த்திக்கவும். (Cool...Cool.. சின்ன பசங்க வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா....)

நான் கிளிக்கிய போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


சேர்பிய நன்பர்
சைனா காரன் தில்’ல பார்தீங்களா......


ஓடுங்கப்பா..... ஓடுங்கப்பா.....

புயல் நம்மள வந்தடைந்த போது.....
Wednesday, 23 March 2011

Burj Khaleefa (புர்ஜ் கலீபா)ஒரு  கெமரா வாங்கின நாளில் இருந்து (நன்பனிடம் வாடகைக்கு, 2வருடத்திற்கு முன்னால்......) இரவுக் காட்சியை படம் பிடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை.( வெளிச்சத்துல பிடிக்கிர புகைப்படமே out of focus. இதுல, இரவிலா?)

நம்ம தகுதி அந்தஸ்த்துக்கு ஏற்ற இடத்துக்கு போனால்தானே நமக்கு பெருமை. (சிறைச்சாலைக்கு போக வேண்டியதுதானே!!!) எனவே,  நான் போன இடம், Burj khaleefa, Dubai Mall.

இந்த பதிவில் இரவில் எடுத்த போட்டோக்களை இட வில்லை. அது அடுத்த பதிவில்............  (வெளிச்சதுல எடுத்ததே இருட்டாத்தான் தெரியுது. இருட்டு எடுத்தது????????????)

எல்லா புகைப் படங்களும் என்னால் எடுக்கப்பட்டவையே!!!! (நெட்டில் இருந்தா?)


உலகின் அதி உயர்ந்த கட்டிடம்
160 மாடிகள், 828 மீட்டரிலும் அதி உயரம் (2 716.5 அடி)
உலகின் அதிக மாடிகளை உடைய கட்டிடம்
மனிதர்களால் உருவாக்கப் பட்ட அதி உயர் கட்டமைப்பு (free standing structure)
உலகிலேயே அதிக உயரமும் நீண்ட தூரமும் செல்லக் கூடிய Lifts.
3000 வாகனம் நிருத்தும் வசதி, 11 ஹெக்டேயர் பரப்பு கொண்ட தோட்டமும் (பார்க்), ஆறு நீர்த்தடாகங்களும் கொண்டது.
57 elevators  8 escalatorsகளை கொண்டது
30 கட்டுமான கம்பனிகள் சேர்ந்து 100 நாடுகளை சேர்ந்த 12 000 தொழிளாளிகளால் 22 மில்லியன் man hours (தமிழில் என்ன? ) 6 வருடங்களில் (2004 - 2010)உருவாக்கப்பட்டது.
 burj Khaleefa இல் இருந்து 300 மீட்டர் தூரத்திலுள்ள ஒரு கட்டிடப்பணியிலேயே 2 வருடம் வேலை செய்ததால் இதன் கடைசி இரு வருட ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்துக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கட்டிட திறப்பு விழா, வாண வேடிக்கை பார்க்க முடியாமல் போனது கவலையே!!
 இதன் மேல் பொருத்தப்பட்டுள்ள, சுழலும் விளக்குகளின் ஒளி வானிலுள்ள மேகத்தில் விழுவதை பார்த்திருக்கிறேன். இது ஒன்றே இதன் உயரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். மேக மூட்டமான நாட்களில், இந்த ஒளி மேகத்தில் படுவது, மேக ஓட்டம் இரண்டும் பார்க்கும் போது பார்க்க சூப்பராக இருக்கும்.கட்டும் போது இருந்த ஆர்வமும் பெருமையும் திறக்கும் போது டுபாய் அரசாங்கத்துக்கோ, எமார் நிறுவனதுக்கோ இருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் அந்த நேரம் டுபாய் மிகப் பெரிய பொருளதார நெருக்கடியை சந்தித்திருந்தமை. இக் கட்டிட நிர்மாணப் பணியை முடிப்பதே ஒரு சவாலாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மிகப் பெரிய கடன் சுமை, பொருளாதார நெருக்கடியால் இக் கட்டிடம் அபூ தாபி அரசாங்கத்திற்கு விட்கப்பட்டு விட்டதாகவும் ஒரு கதை உலவுகின்றது. அதை மெய்ப்பிக்கும் வகையில் புர்ஜ் டுபாய் என்று பெயரிடப்பட்டு இருந்த இக் கட்டிடம் திறப்பு விழாவிற்கு முந்திய இரவு “புர்ஜ் கலீபா” என்று பெயர் மாற்றப்பட்டது. 

 
மேலே தெரியும் விமானம் திட்டமிட்டு போட்டோ பிடிக்கப்பட்டதல்ல. எதேச்சையாக அமைந்தது
இது போல் ஒரு கட்டிடம் ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ இதே செலவில் அல்ல, இது போல் இரண்டு மடங்கு செலவிலும் அமைக்க முடியாது. காரணம், நம் இந்திய, பாகிஸ்தானிய, வங்காள தேசத்து மிக மிக குறைந்த சம்பள எதைச் சொன்னாலும் செய்யும் முழு நேர தொழிளாளிகள். 


பக்கதிலுள்ள என்னை கவர்ந்த ஒரு கட்டிடம். இதன் கண்ணாடிச் சுவரில் புர்ஜ் கலீஃபா’வின் நிழலை பார்க்கலாம்.

11 ஹெக்டேயர் பரப்பு கொண்ட தோட்டத்தின் ஒரு பகுதி
 
Sunday, 20 March 2011

அமீரகம்- இது ஒரு சுய நல பூமி

" அப்போ.. அப்போ.. பழசையும் கொஞ்சம் நெனச்சு பார்க்கனும், அது நமக்கு கற்று தந்த பாடங்கள் நிறைய இருக்கு...."அமீரகம் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. கண்டவை, உணர்ந்தவை, அனுபவித்தவை, காயங்கள்,வலிகள், புதிய நன்பர்கள், புது முகங்கள், பல்வேறு நாட்டு மக்களின் தொடர்பு, இப்படி எத்தனையோ கடந்து வந்தாச்சு. பழையவற்றை எண்ணிப் பார்க்கும் போது, சில வலிகள் இப்போது இன்பமாய் இருக்கிறது. அப்போது இருந்த  சந்தோசங்கள் இப்போது வலிக்கிறது.

இங்குள்ள மக்களின் மதிப்பு, அவர்களின் நற்குணங்களில் இல்லை. அவர்களின் சம்பளத்திலேயே இருக்கிறது. ஒவ்வொருத்தரும் இங்கு வாழ்வதை விட வாழ்வது போல் பாசாங்கு செய்து கொண்டு தம் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.10- 20- 30 வருடங்களை இன்கேயே கழித்து விட்டு அழும் முதியவர்களையும் பார்த்திருக்கிறேன். அதையே பெருமையாயை சொல்லிக் கொள்ளும் மக்களையும் தினம் தினம் பார்க்கிறேன்.ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை ஒரு புதிராகத்தான் கழிகின்றது. இங்கிருந்து வேலையை விட்டு நாடு செல்வோரை சந்தோசமாக வழி அனுப்பி வைப்பவர்கள் ஒரு சிலரில் நானும் ஒருவன். எனக்கு கிடைக்காத பாக்கியம் அவர்களுக்கு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன். இங்கு நன்பர்கள் வரும் போது, இவர்களும் இந்த சகதியில் வந்து சிக்கிக் கொள்கின்றனரே! என்று மனதில் ஒரு வழி பிறக்கிறது. இந்த வெளி நாட்டு வாழ்க்கை நம் கைகளால் நாமே தேடிக் கொண்ட ஒரு மீள முடியா துயரம்.

தொடரும் இந்த அவலம்..........