Sunday, 30 October 2011

டுபாய் குறுக்குச் சந்து - எதிர்ப் பதிவு

என் கடைசிப் பதிவுல, டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி’னு டுபாய் ரோட்ட கொஞ்சம் புகழ்ந்து எழுதிவிட்டேன்.  அந்தப் பதிவிற்கு இது எதிர் பதிவு. எங்காவது குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தன் சொந்தப் பதிவிற்கே எதிர் பதிவு எழுதிய முதல் ஆள் நானாகத்தான் இருக்கும்...

 மேலே உள்ள படங்கள் டுபாய் கிரீக்’னு யாரும் தவறா நினைத்து விட வேண்டாம். இதுவும் டுபாய்’ல உள்ள ஒரு ரோடு’தான். இதில் உள்ள நீர் ஆற்று நீர், அல்லது குள்ளத்து நீர் அல்ல. மலசல கழிவு நீர்.

டுபாய், மற்றும் அபூ தாபியில் இங்கு வேலை செய்யும் தொழிளாழிகள் தங்கவென தனி ஏரியாக்கள் உண்டு. அதில் சோனாபூர் எனும் பகுதியின் புகைப்படங்களே இவையாகும். டுபாயின் மற்றைய பகுதிகளில் செல்வமும் செழிப்பும் கொழித்தாலும் இந்தப் பகுதி சேரியாகவே காணப்படும்.

மது, மற்றும் சூது போன்றவை மலிந்து காணப்படும் இந்தப் பகுதிகளில் போலீஸ், மற்றும் அரசாங்க சேவைகள் அபூர்வமாகவே வரும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலசல கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட  பிரச்சனையில் கொஞ்சம் கொஞ்சமாக பாதையில் நிறையத் தொடங்கிய நீர், வாகனங்கள் போக முடியாத அளவு நிறைந்தது. மலசல கழிவு நீர் என்பதால் பயங்கர நாற்றம் வேறு.

ஒரு சில பங்காளிகள், மிஸ்ரிகள் (எகிப்தியர்) இதை பொருட் படுத்தாது, இந்த நீரில் நடந்து செல்வர். சிலர் ஒரு குருட்டு தைரியத்தில் எப்படியும் கடந்து விடலாம்’னு வாகனத்தை இட்டு, அது நடுவில் போய் நின்றவுடன் நடுவில் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருப்பர். அப்போதும் பங்காளிகள் அதை வியாபாரமாக்கி கழிவு நீரில் இறங்கி வாகனத்தை தள்ளிக் கரை சேர்ப்பர்.

இப்படியே  கிட்டத்தட்ட 6 - 8 மாதங்கள் கழிந்தது. குளிர் காலமாதலால் அடிக்கடி மழை வந்து நீர் அதிகமாகி சில கட்டிங்களுக்குள்ளும் பரவ ஆரம்பித்தது. அரசாங்கமோ கண்டு கொள்ளவில்லை... முடிவாக யாரோ ஒரு நல்ல மனிதன் பத்திரிகைக்கு அறிவித்து விட, இந்த செய்திகள் புகைப்படத்துடன் பத்திரிகையில் வர அரசாங்கம் விழித்துக் கொண்டது. பாதை சுத்தமாக்கப்பட்டு பழைய நிலைக்கு வர 3-4 மாதங்கள் ஆனது.


சுத்தமாக்கப் பட்டு பழைய நிலைக்கு திரும்பிய பாதை

இன்னும் சில வெளி உலகுக்கு வராத டுபாயின் கருப்புப் பக்க போட்டோக்கள். 
(கருப்புப் பக்கம்’னு சொல்லிட்டு போட்டோ எல்லாம் கலரா இருக்கே’னு யாராச்சும் சொன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்.. ஜாக்ரத....)


இந்தத் தொளிலாழிகளின் 6 நாள் 12-14 மணித்தியால வேளையின் பின் ஒரு நாள் சுவர்க்கம் (வெள்ளிக் கிழமை). சிலருக்கு அதுவும் பாதி நாள்தான்.

இதுவும் டுபாய் ரோட்டுத்தான் மாக்காஸ்..... இந்த ரோட்டுல ஒரு பிளேட்டு சோத்த கொட்டி, சாப்பிட்டா எப்படி இருக்கும்????Thursday, 27 October 2011

டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி


கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம நண்பன் ஒருத்தன் டுபாய் வந்தான். அவன் கெட்ட நேரம்’னு நினைக்கிறேன் வரும் போதே எவனோ ஒருத்தன் என் தொலைபேசி இலக்கத்தை அவனிடம் குடுத்துட்டானுங்க... வந்து ஒரு ஹோட்டல்’ல தங்கியதுமே முதல் வேளையா என்னை தொலைபேசியில் அழைக்கிறான்.

மச்சான்...  நான் டுபாய் வந்துட்டேண்டா..... நீ எங்கடா இருக்கே!!!

நான் எங்கே இருக்கே’னு சொன்னா உனக்கு வெளங்கவா போகுது.... நீ எங்க இருக்கே’னு சொல்லுடா.. நான் வர்ரேன்.

மச்சீ.. நான் எங்கே இருக்கேன்’னே தெரியலடா... ஒன்னுமே புரியல...

சரி.. நீ இருக்குர இடத்துல இருக்குர ஒரு Land Mark'ஐ சொல்லுடா....

ம்ம்ம்ம்... நான் ஒரு மெயின் ரோட்’டுக்கு பக்கமா இருக்கேண்டா...

டேய்!! மாவட்டத்துக்கே ஒரே ஒரு மெயின் ரோடு இருக்க, இது உங்க ஊரா??? இங்க எல்லாமே மெயின் ரோட்’தான்.. வேற ஏதாவது சொல்லுடா.....

ம்ம்ம்.. ஆங்.. மச்சி தலைக்கு மேலால கப்பல் பறக்குதுடா...

என்னது??? கப்பல் பறக்குதா?? என்னடா சொல்றே????

நான் சொல்றது பறக்குர கப்பல்’டா...

டேய்!! பிளைட்டு’னு சொல்டா... டுபாய்’ல காக்கா, குருவிய விட பிளைட்டுத்தான் அதிகமா பறக்கும். வேற எதாவது சொல்லு மாப்பூ...

WoW!!! மச்சான் கண்டு புடிச்சிட்டேன்.... ரோட்டு ஓரத்துல  மலையாளி ஒருத்தன்’ட டீக்கடை  வச்சிருக்காண்டா..... அத வச்சி ஈஸியா இடத்த கண்டு புடிச்சிடலாமுள்ள...

அடப்பாவி... ரோட்டு ஒரமா இல்லடா... ரோட்டே (காற்றே) இல்லாத இடத்துல கூட மலையாளி டீக்கடை இருக்கும்டா.....

ஆ!!!! இந்த ரோட்டுல போற பஸ் நம்பர சொல்லவா.....????

வேணாம்.. வேணவே வேணாம்.... அவனுங்க 10 கி.மீ தூரத்த 50 கீ.மீ போவானுங்க.. சந்து பொந்த கூட விட்டு வைக்க மாட்டானுங்க...

மச்சீ.. வேணாம்டா... நீ என்ன சந்திக்கவே வேணாம்.. ஆள விடு...

சரி..சரி.. நான் இருக்குற இடத்துக்கு எப்படி வரனும்’னு சொல்றேன். வாரியா????

ஓ.கே’டா... உன் அட்ரஸ்’ஐ சொல்லு.. எழுதிக்கிறேன்..

எங்கடா எழுதுவே!!! இப்போ ரோட்’லதானே இருக்கே!!!

ஹோட்டல் ரிசப்ஷன்’ல குடுத்த கார்டு இருக்குடா.. அதுல பின்புறமா எழுதிக்கிறேன்.

அடப்பாவி... அத வச்சிகிட்டா இந்த ஓட்டு ஓட்டினே!!! அதுல ஹோட்டல் அட்ரஸ் இருக்கா..??

ஆமா இருக்குடா....

#@#^&*$%#*%$*%$*%$#*%$#*@*#)*)#&#*^&R^^#%^&....
அதப்படிடா முதல்ல......

டிஸ்கி 1: இன்னும் சில இடங்களில் விமானத்துக்கு கப்பல்’னுதான்  சொல்வாங்க... அந்தக் காலத்துல கப்பலையே பாத்துகிட்டு இருந்தவங்களுக்கு, விமானம் வந்ததும், பெயர் தெரியாமல், கப்பல் என்றே அழைத்திருப்பார்களோ!!!

டிஸ்கி 2: தலைப்பில் மலையாளியை சேர்த்திருப்பது, மலையாளிக்கு எதாவது ஏடா கூடமா நடந்தா முதலில் சந்தோசப் படுரது நம்ம ஆளுங்கதான்.
(ஐடியா பை : ரியாஸ்)

டிஸ்கி 3 : என்னடா இவன் டுபாய் ரோட்ட ஓவரா புகழ்ரானே’னு பாக்காதீங்க.. அடுத்த பதிவுல, யாரும் பார்த்திராத டுபாய் ரோட் புகைப்படங்களை பதிவிடுகிறேன் இன்ஷா அல்லாஹ்.


Monday, 24 October 2011

ஆபிரிக்காவும் எயிட்சும்..... 13+ எனது மூன்றரை வருட வெளி நாட்டு வாழ்க்கையில், நான் பார்த்து அதிசயித்த, பொறாமை பட்டவர்கள் என்றால் அது ஆபிரிக்கர்களாகத்தான் இருக்கும். அவர்களுக்குள் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அவர்களின் அசைக்க முடியாத ஒற்றுமை காரணமாக அவர்களை யாரும் அசைக்க முடியவில்லை.

அதற்கு நேர் எதிர்தான் நம்ம ஆட்கள். (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை). நமக்குள் ஒற்றுமையாக இருந்தாலும் வெளியிடத்தில் இருந்து பிரச்சனை வரும் போது, எவனுக்கு வந்தா நமக்கென்ன`னு ஒதுங்கிப் போய் விடுவோம். அது நம் உற்ற நன்பனாயிருந்தாலும் சரியே..பிறகு ஒரு நாள் நமக்கு பிரச்சனை வரும் போதும் எவனுமே உதவுரதில்ல...

இப்படி காலம் போய்கொண்டிருக்கையிலே, 2 வாரம் முன்னாடி நம்ம கூட வேலை செய்யுர 2 ஆபிரிக்கர் (லைபீரியா)”அய்யோ...!!! குத்துதே குடையுதே’னு இருக்க, வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தோம். அங்கு போன ஆளுங்கள இரண்டு நாளா காணல.. எங்க போயிருப்பானுங்க’னு பார்த்தா.. வைத்திசாலையே அடச்சி வச்சிருக்காங்க... காரணம்.....
ஒருத்தனுக்கு எயிட்ஸ் இருக்கு.....
அடுத்தவனுக்கு மலேரியா...

இந்த நாட்டு சட்டப் படி, அந்தாளுங்கல வெளியே விட முடியாது, உடனே நாடு கடத்த வேணும்’னு சொல்லிட்டானுங்க. சரி. உடனே அனுப்பி வச்சுர்ரோம்’னு அவனுங்கள கூட்டி வர,ஒரு வகை விரக்தில இருந்தவனுங்க “நாம இந்த எடத்த விட்டு அசைய மாட்டோம்’னு அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க..

அந்த ரெண்டு பேரையும் மூட்டை முடிச்சுக்களை அனுப்பும் போது, திடீரென அபீஸுக்குல புகுந்தவன் “டேய்!!! உங்களையெல்லாம் விஷம் குடுத்து, குத்தி கொலை செஞ்சி, மர்டர் பண்ணி தூக்குல போட்டு நெத்தில சுட்டு கடல்ல வீசிடுவேண்டா.. நான் ஆபிரிக்க காரன்’டா...” தொடைய தட்டாமலே எல்லோரையும் பார்த்து (என்னைத் தவிர) சவால் விட, நம்ம டெமேஜரோட கால் ரெண்டும் Vibrate Mode’க்கு மாறினத நான் கவனிக்கத் தவறவில்லை.

உடனே விழித்துக் கொண்ட கம்பெனி, நம்ம எல்லோருடைய இரத்ததையும் சோதித்து பாக்குரதுனு முடிவு பண்ணி எல்லோரையும் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சுடுச்சு.

அங்குதான் எனக்கு ஒரு பல்பு காத்து கிட்டு இருந்தது.

(இதுக்கு பின்னாடி பதிவு கொஞ்சம் காட்டமா இருக்கும். விரும்பினவங்க படிக்கலாம்)


எல்லோரும் ஹாஸ்பிட்டலுக்கு வெளில காத்துகிட்டு இருக்க,  நான் போய் இரத்தம் சோதிக்க, மாதிரி இரத்தம் குடுத்துட்டு வர்ரேன்.. அப்போ ஒரு நேபாளி ஓடி வர்ரான்.

தம்பி!!! யூரின் டெஸ்ட்டுக்கு யூரின் எங்க இருந்து அண்ணே எடுப்பாங்க...???

டேய்!!! என்கிட்டயேவா???? வேணாம் ஓடிடு..... 

ச்சும்மா சொல்லுங்க தம்பி !! நான் என்ன தப்பாவா கேட்டேன். 

டேய்!!! வயசுல மூத்தவனே’னு பாக்குறேன். எனக்கு கோவம் வர்ரதுக்குள்ள ஓடிடு....

என்ன தம்பி கேட்டுபுட்டேன். இந்த ச்சின்ன விசயத்துக்கு போயி இப்படி கோச்சிக்கிரீங்க...

டேய்!!! அவனா நீ..???... எதுக்குடா என்னையே தேடி வர்ரீங்க.... 

ஆமா... நீங்கதான் இப்ப போயி யூரின் குடுத்துடு வந்தீங்கள்ள...

டேய்!! சாக்கட வாயா.... அது யூரின் இல்லடா ”ப்லட்”

ஆமால்ல... இரத்ததுக்கு இங்லீஸ்’ல ப்லட்’னுதான் சொல்வாங்கள்ள... நான் யூரின்’னு நெனச்சிட்டேன்..

அடப்பாவி.... கொஞ்ச நேரத்துல, உன் பொண்டாட்டிய விதவையாக்கி, புள்ள குட்டிய அனாதையாக்கப் பார்த்தியேடா,.. போடா...!!! டேய்!!! போ.. போய்.. புள்ள குட்டிகளையாவது படிக்க வை...

ச்சே...ச்சே.... எவ்ளோ அலார்ட்’ஆ இருந்தாலும் எவன் கிட்டயாவது மாட்டிக்குறோமே!!!Friday, 21 October 2011

பய(ங்கர) டேட்டா தயாரிப்பது எப்படி..

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னால், நான் பதிவுலகத்துக்கு வந்த புதுசுல 3 நாளுக்கு ஒரு பதிவு வீதம் எழுதி வந்தேன். அதிகமாக சொந்த அனுபவங்களையே பதிவாக எழுதி வருகிறேன். இப்படியே போனால், கொஞ்ச  நாள்ல சரக்கு முடிஞ்சிடுமோ`னு பயந்து கொஞ்ச நாட்களுக்கு பின்னரோ வாரம் ஒரு பதிவு என்று எழுத ஆரம்பித்தேன்.

இப்போது நிலமையை பார்த்தால், தினம் ஒரு பதிவு எழுதலாம் போலிருக்கு.. ஆமாங்க... ஒவ்வொரு நாளும் ஒரு பைத்தியத்து கிட்ட சிக்கி சின்னா பின்னமாகிட்டு இருக்கேன். எப்படித்தான் நம்மள தேடி வர்ரானுங்க`னே புரியல..

நேற்று ஆபீஸ்`ல வேலை பண்ணிடு இருக்கேன்`னு சொன்னா நீங்க நம்பவா போரீங்க.. அதனால அபீஸ்`ல இருக்கேன்`னு வச்சுக்குவோம். அப்போ, நம்ம கூட வேலை பாக்குர இராக் நாட்டு பையன் வந்து,

அண்ணே, நான் புது வேலை தேடிட்டு இருக்கேன். எனக்கொரு BIO DATA பண்ணிக் குடுப்பீங்களா? அப்டின்னான்..

நானும் “டேய்!! இது ஆபீஸ் நேரம்`டா... இப்போ முடியாது (பக்கத்துல டெமேஜர்..அதுதான் இந்த பில்ட் அப்பு...) மாலை`ல வா`னு அனுப்பி வச்சுட்டேன்..

மாலைல ஆள காணல.. அடுத்த நாள் காலைலயே வந்து,

அண்ணே!!! BIO DATA தயாரா??

டேய்!! நான் எப்படிடா தயார் பண்ரது???? நீ வரனுமுல்ல...

அப்போ!!! நேற்று மாலை பண்ணி வக்கிரதா சொன்னீங்களே!!

ஷப்பா!!! டேய்! தம்பி... உன் முழுப் பேரு எனக்கு தெரியுமா?

தெரியாது...

உன் ஊரு, முகவரி தெரியுமா???

தெரிந்திருக்க வாய்ப்பில்லை....

உன் வயசு என்ன`னு எனக்கு தெரியுமா???

அதுவும் தெரியாது..

நீ என்ன தொழில் பண்ணுராய்`னாவது எனக்கு முழு விபரம் தெரியுமா??

அதுவும் உங்களுக்கு தெரியாது`னு  நினைக்கிறேன்..

அப்புறம் எப்படிடா நான் உனக்கு BIO DATA தயாரிக்கிறது..

இதுக்கு பின்னாடி கேட்டான் பாருங்க ஒரு கேள்வி... ஷப்பா....

அண்ணே!! எனக்கொரு டவுட்டு....BIO DATA பண்றதுக்கு இந்த டீடெய்ல்`லாம் வேணுமா`னே????

டேய்!!! எப்படிடா என்னையே தேடி வர்ரீங்க..எனக்கு கொல வெறி வர்ரதுக்குள்ள இந்த இடத்த விட்டு ஓடிடு..

இப்படித்தாங்க என் ஒவ்வொரு நாளும் க(கி)ழியுது.. இதாவது பரவாயில்ல.. போன வாரம் நேபால்காரன் ஒருத்தன் கிட்ட மாட்டினேன். அது இதை விடக் கொடும.. அது அடுத்த பதிவுல வரும்...
Wednesday, 19 October 2011

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும். 

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
 எழுதியவர்: 
Ash-Sheikh T. Haidar Ali
Gampola, Sri lanka

Copy & Paste By:

புன்னகையே வாழ்க்கை ப்லாக் ஓனர்..
(பேஸ்புக் தளத்திலிஇருந்து அவர்கள் அனுமதியுடன் எடுக்கப்பட்டது.)
 

Sunday, 16 October 2011

தமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ!!!

 உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...


பதிவுகத்திலேயே இப்போதைய HOT TOPIC என்ன`ன்னா?? தமிழ் மணம் பற்றிய சர்ச்ச்சைதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எனவே அந்த மாவை நான் மீண்டும் அரைக்க தேவையில்லை.

நான் பொதுவாக இண்ட்லி`யிலேயே உலவுவேன். தமிழ் மணத்தில் ஒரே ஒரு நாள் உலவி இருக்கிறேன், ஆனால் தமிழ் மணம் மீது ஒரு மதிப்பு இருந்தது.  நல்ல பதிவுகளாய் இருந்தால் கட்டாயம் தமிழ் மணத்தில் ஓட்டும் போட்டு வந்தேன். பொதுவாக என் பதிவுகளை 100-200 பேரே படிக்கின்றனர். அதில் அதிகமானோர், தமிழ் மணத்தின் ஊடாகவே வருகின்றனர்.  

ஆனால், கடந்த சில தினங்களாக நடந்த நிகழ்வுகளை பார்க்கையில் தமிழ் மணம் தன் முகத்தில் தானே (பல்லு வெளக்காம..) காரித்துப்பியதை யாரும் மறுக்க முடியாது. டெரர் கும்மியில் தமிழ் மணத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட திரு. தமனீதரன்(பெயரிலி) அவர்களின் சொற்றாடல் அவ்வளவு கேவலமாக இருக்கும்`னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லனும்`னு சொல்வாங்க.. அதுபோலதான் இருந்தது திரு. தமனீதரன்(பெயரிலி) அவர்களது வாதம்.

இரண்டு காரணங்களை வைத்துப் பார்க்கையில் இதற்கு பின்னும் தமிழ் மணத்தில் இணைந்திருக்க வேண்டுமா? என்று யோசிக்க வேண்டியாகிவிட்டது என்று கூட சொல்ல முடியாமல் விலக வேண்டியதாகிவிட்டது என்றே சொல்ல வேண்டியாகிவிட்டது.

1. ” ///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்///”


முஸ்லீம்களான நாம் கூறும் முகமனை கேலிக்குள்ளாக்கியமை. இதை பற்றிய கேட்கப்பட்ட கேள்விக்கு வழமை போல், அசட்டையாக சொன்ன பதில்கள்..

2. என் பதிவுலக அறிமுகத்தில் இருந்தே, இன்று வரை என்னை ஊக்குவித்து வரும் டெரர் கும்மி நன்பர்களுடன் ஏற்பட்ட பகைமை. அவர்களை தமிழ் மணத்தை விட்டு நீக்கியமை (தமிழ் மணம் நீக்க முன்னாடியே, அவங்க  தமிழ் மணத்தை தூக்கி வீசிட்டாங்க..)

இப்போ உங்க உள்மனசுல,
 ”டேய்!!! நீயே ஒரு டம்மி பீஸு.... நீ தமிழ் மணத்தில் இருந்தா என்ன???? இல்லாட்டி என்ன`னு ஒரு கேள்வி கட்டாயம் வந்திருக்கலாம்.வந்திருக்கும்.வந்திருக்கனும்.வந்துதான் ஆகனும். அதுக்கும் ஒரு பதில் வச்சிருக்கேன்.. கீழ படிங்க..

நபி இப்ராஹிம்அலை....(ஆப்ரஹாம்) அவர்களை நம்ரூத் என்ற கொடிய அரசன் மிகப் பெரிய அக்கிணிக் குண்டத்தில் தூக்கி எறிந்த போது, ஒரு ச்சின்னஞ் சிறு குருவி, தன் சொண்டில் நீரை கொண்டு போய் கொட்டியது. இதை பார்த்த மற்றைய குருவிகள், உன்னால அந்த நெருப்ப அனைக்க முடியுமா??? எதுக்கு இந்த பில்ட் அப்பு`னு கேட்ட போது, குருவி சொன்ன பதில், ”இறைவனின் தூதர் நெருப்பில் எறியப்பட்ட போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்???” இறைவன் ஒரு நாள் என்னிடம் கேட்டால், என் சக்திக்குற்பட்டதை நான் செய்துவிட்டேன் என்ற பதில் என்னிடம் உள்ளது” என்றது அந்தக் குருவி.

இது போல் நானும் என் சக்திக்குற்பட்டதை செய்து விட்டேன்.

முக்கிய குறிப்பு :

ஏண்டா வெளியேறினோம்’னு கவலையோட போகல... சந்தோசமா வெளியேருகிறேன்.

கடைசியா ஒரு காமெடி

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.Friday, 14 October 2011

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி வைக்கிராங்கப்பா....

ஒரு நாள் மாலை நேரம் வீட்டுல வெட்டியா உக்காந்துட்டு இருக்கேன் (முழு நாளும் வெட்டியாத்தானே இருக்கே) , பக்கத்து வீட்டு "மலை" தலை தெறிக்க ஓடி வர்றான். பொதுவா, நம்மள பாத்துத்தான் இப்படி ஓடுவானுங்க. இவன் என்னன்னா நம்ம கிட்ட வர்றானே'னு யோசிக்கும் போதே வந்து சேர்ந்துட்டான்.
இதுதான் நம்ம மலையோட Mouse Pad . இதை பார்த்தாலே மலை எப்படிப்பட்டவர்'னு புரியும்.

"அண்ணே!! எனக்கொரு பிரச்சனைனே!!"

ஷப்பா... ப்ளாக் ஆரம்பிச்சததுல இருந்து நம்மள செம்பே இல்லாத நாட்டமையாகிட்டானுன்கப்பா'னு நினைத்துக் கொண்டே, தம்பி என்ன பிரச்சனைன்னு சொல்லுடா'ன்னேன். (நீதான்யா, எல்லா இடத்திலும் பிரச்சன..) 

அண்ணே!! என் "key  Board "க்கு எவனோ சூனியம் வச்சிட்டான்னே!!னு ஒரே ஒப்பாரி.....

ஆஹா... இவன் ரொம்ப அப்பாவியாச்சே!! ஒரு நம்மளுக்கு வைக்க வேண்டியத்தான் இவனுக்கு மாறிடுச்சோ'னு யோசிச்சுக் கொண்டே மேலும் பேச்சுக் குடுத்தேன்.
தம்பி.. ப்ளாக் (blog )ஏதாவது எழுதிரியாப்பா?

இல்லைண்ணே... அது White colour   key  board 'ண்ணே...

இல்ல தம்பி, நன் கேக்குறது  blog .. blog .. 

இல்லைண்ணே!! நன் எதையுமே block  பண்ணலையே !!

ஆஹா.. ரொம்ம்ம்ப அப்பிராணியா இருக்கனே!!!  சரிப்பா... உன் key  board 'ல என்ன பிரச்சனை'னு சொல்லு...
அத ஏன் கேக்குறீங்கண்ணே!!  B 'ஐ தட்டினால் X  வருதுண்ணே!!  A ' ஐ  தட்டினால் Q  வருதுண்ணே!!!!
N 'ஐ தட்டினால் F  வருதுண்ணே!! S 'ஐ தட்டினால் L  வருதுண்ணே!!

ஆகா ரொம்ப கை தேர்ந்த சூனியக் காரணா இருப்பான் போலிருக்கே!! சரி, என்ன நடந்திருக்கு'னு பாக்கலாம்'னு நானும் மலை கூடவே போனேன்.  அங்க போய் Key  Board 'ஐ பார்த்த இப்படித்தாங்க இருந்தது... 

....................................


....................................


.........................................................................................................

அந்த சமயத்துல போட்டோ எடுக்க முடியல. இது கூகுள்'ல  இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தது..
என் தலைல மின்சாரமே இல்லாமல் 100000 வால்ட் பல்பு, நெருப்பே இல்லாமல் எரிந்தது..

டேய்!! என்னடா பண்ணி வச்சிருக்கே!!

பன்னி வைக்கலண்ணே. Key  Board 'ஐ தானே வச்சிருக்கேன்.

ஷப்பா.... டேய்.. என்னடா செஞ்சி வச்சிருக்கே!! 


அண்ணே!! என் தம்பி Key  Board 'ஐ கீழே தள்ளி விட்டான்னே... எல்லா keys 'ம் கழண்டு விழுந்துடுச்சு.. அப்புறம்  எதுக்கு தேவையில்லாம குழப்பி போடணும்'னு இப்படி Alphabet Order'ல  பண்ணிட்டேன். என்ன ஆச்சுண்ணே தெரியல.. அப்போதிலிருந்து Key  போர்டு'ல B 'ஐ தட்டினால் X  வருதுண்ணே!!  A ' ஐ  தட்டினால் Q  வருதுண்ணே!!! N 'ஐ தட்டினால் F  வருதுண்ணே!! S 'ஐ தட்டினால் L  வருதுண்ணே!!

முதல்ல.. உன்ன 4  தட்டு தட்டியிருந்தா என் நேரமாவது மிச்சமாயிருக்கும்டா... நான் போய் வர்றேன். அவ்வவ்வ்வ்வ்...

அண்ணே!!! Key  Board ....

டேய்... இனிமேல் இதுக்கு Key  Board 'னு சொன்னா, பெற்றோல ஊத்தி கொளுத்திடுவேன்..  ஜாக்ரத... 

சே... செ.. எப்படித்தான் நம்மளையே தேடி வர்றானுங்க'னு புரியலப்பா...

Monday, 10 October 2011

ஈர லுங்கியுடன் 20 கி.மீ பயணம்...


ஒரு விடுமுறை நாள்`ல வீட்டுல ஏதோ வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறேன், தொலை பேசி குத்தாட்டம் போடுது (எவ்ளோ நாளைக்குத்தான் தொலைபேசி சினுங்கிகிட்டே இருக்குரது...) யார்`னு பார்த்தா, நம்ம நண்பன் “க்ரேஸி”.

“மச்சான்!! நாமெல்லாம் பக்கத்துல உள்ள அருவிக்கு குளிக்க போகலாம்`னு இருக்கோம். ரெடியா இரு. கொஞ்ச நேரத்துல வந்துர்ரோம்.”

”டேய்!! குளிச்சு 3 மாசம் கூட ஆகல.. எனக்கு நீச்சலும் தெரியாது. ஏற்கனவே ஒரு முறை நீ எம்மோடு குளிக்க வந்து வாங்கி கட்டியிருக்கே!!! ( ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்பு ) மறுபடி எதுக்குடா??? அருவிக்கு போறதுக்கு வண்டியும் கிடையாதே!!”
நாம குளிக்கப் போன அருவியோட போட்டோ கிடைக்கல. இது பக்கத்துல உள்ள அருவி


”மச்சான்!! நம்ம ஊர்ல இருந்து உறவுக்கார பையன் ஒருத்தன் வந்திருக்கான்!! 6 மாசத்துக்கு முன்னாடிதான் புதுசா வண்டி (Van) எடுத்திருக்கான். அதனால, நம்மள கூட்டிக் கொண்டு எங்காவது வெளில போகனும்`னு ஆசைப் படுரான். பயபுள்ள இதுவர அருவில குளிச்சதே இல்லையாம். அதனாலதான் இப்படி ஒரு ப்ளான். நம்ம பயளுக பொப், காமராசு, புள்ளிராஜா`னு எல்லானும் வர்ரானுங்க. நீயும் ரெடியா இரு”னு போனை வைத்து விட்டான்.

அருவி சார்ந்த பகுதி
“சரி.. விருந்தாளியா வந்த பையனாச்சே, புதுசா வண்டி வேறு எடுத்திருக்கான். ட்ரீட்`னு சொல்லி ஓ.சி`ல பிரியானி கிடைக்காவிட்டாலும் ஒரு முட்ட கோஸ்`ஆவது கிடைக்க சான்ஸ் இருக்கு`ங்குர நப்பாசை`ல நானும் குளிக்க போக தயாரானேன்.

 வண்டி வர, நானும் ஏறிக் கொள்ள, கொஞ்ச நேரத்துல வண்டி பக்கத்து ஊரை அடையும் போது வண்டிக்கு டீசல் (Diesel) இட வேண்டும்`னு ஒரு Fuel shed'ல வண்டியை நிறுத்தினோம். பொதுவாக நம்ம ஊர் Fuel shed'ல “ஓட்டோ டீசல் (Auto Diesel) அப்படினு எழுதி இருக்கும். (Automobile Diesel அப்படின்னும் நினைக்கிறேன்). அவ்வளவு நேரமும் நல்ல உறக்கத்தில் இருந்த நண்பன் க்ரேஸி திடீரென விழித்தவன் “டேய்!! எவண்டா அது ஆட்டோ டீஸல்(Auto Diesel)`ஐ வானுக்கு(Van) இடுரது, அத ஆட்டோ`க்குதானே இடனும்”னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டான். அங்கு வேலை பார்த்த பயலுக எப்படியெல்லாம் மனசால திட்டியிருப்பானுங்க`னு கடைசிலதான் புரிந்தது.

ரொம்ப கஷ்டப் பட்டு தேடின போட்டோ. பெரிதாக்கிப் பார்த்தால் Auto Diesel தெரியும். இல்லாவிடில் பக்கத்துல உள்ள Fuel Shed`க்கு போய் பார்த்துகங்க..

ஒரு வழியாக அருவியை சென்றடைந்து குளிக்க தயாரான போது, கைத் தொலைபேசி, பர்ஸ், கடிகாரங்கள் என்பன நம்மிடம் இருந்ததால் குளிப்பத்ற்காக உடுத்த லுங்கிய தவிர மற்றைய எல்லாவற்றையும் வண்டிக்குள் வச்சு பூட்டி விடலாம்`னு க்ரேஸி ஒரு உருப்படியான ஐடியா குடுக்க, அதே போல் செய்து விட்டோம்.

அருவியில் நீர் பயங்கரமாக கொட்டிக் கொண்டிருந்தது. பயபுள்ளக குதிச்சு கும்மாளமிட தொடங்கினானுங்க.. நீச்சல் தெரியாத என்னைய போல ஆளுங்க குளிக்க நீரே இல்லாத ஒரு அருவி இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்`னு சொன்னேன். அவனுமே சிரிக்கல. எனக்கு முன்னாடியே எல்லா சர்தார்ஜி ஜோக்`ஐயும் படிச்சிருப்பானுங்க போல....

கொஞ்ச நேரம் குளித்திருப்போம். அந்த நேரம் பார்த்து, அந்த ஏரியாவுக்கு சம்பதமே இல்லாத ஒரு நபர் வந்து நம்ம குரூப்`ல உள்ள ஒருத்தன் கையில ஏதோ ஒரு கவரை குடுத்துவிட்டு ஓடி மறைந்தார்.

அந்தக் கவர்ல என்னதான் இருக்கு`னு பார்த்தா, ஒரு லெட்டர் இருந்தது. அந்த லெட்ட்ர்`ல

“டேய் பக்கிகளா... ஃபைனான்ஸ்`ல வான் (van) வாங்கிடு சரியான நேரத்துல பைசா`வ பைசல் பண்ணாம இருந்தா, பைசா குடுத்தவன் பொட்டு வச்சிடு பொங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்`னு நெனச்சீங்களா..????? நாங்க வண்டிய எடுத்துட்டு போறோம். முடிஞ்சா பைசா`வ குடுத்துடு வண்டிய எடுத்துக்க... கோட்டுல(Court) சந்திப்போம்”னு எழுதி இருக்கு.”

அருவி சார்ந்த பகுதி
இதைப் பார்த்ததும் ஓடிப் போய் வான் நிறுத்திய இடத்தை பார்த்தால், வானைத் தவிர மற்றையதெல்லாம் இருந்தது. க்ரேஸியோட உறவுக்காரப் பையனோ வாய்லயும் வயித்துலயும் அடிச்சுக் கொண்டு அழ ஆரம்பிச்சுட்டான். நாமளும் சமாதானப் படுத்தலாம்`னு முயற்சி பேச்சுக் கொடுத்தோம்...

அண்ணே!!! எவ்வளவு காலமா பைசா கட்டலண்ணே!!!

ஜஸ்டு ஒரு 6 மாசம்தான் தம்பி.. அதுக்கு இப்படி பண்ணிட்டானுங்களே!!!

அண்ணே!! நீங்க வண்டி வாங்கியே 6 மாசம்தானே ஆகுது...

ஹி..ஹி...

அப்போ ஒரு தவணை கூட கட்டலையா...????

ஹி...ஹி...

நல்ல வேலை நம்மளையும் போட்டுத் தள்ளாம வான்`ஐ மட்டும் எடுத்துடு போனானுங்க`னு மனதால் நினைத்துக் கொண்டேன்.

க்ரேஸி குடுத்த ஐடியாவுல, மொபைல் போன், பர்ஸு, ட்ரஸ்`னு எல்லாத்தையும் வானுக்குள்ளையே வச்சிருந்ததால, உடுத்திருந்த ஈர லுங்கியை தவிர வேறெதுவும் இல்லை. வீட்டுக்கு போக வண்டியும் இல்லை.

 அருவி அமைதுள்ள ஏரியா, வாகங்கள் அதிகம் வராத, மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி. அந்தக் காலத்துல இப்பொழுது போல் எல்லோரிடமும் மொபைல் போனும் இருக்கல.

என்ன பண்ணலாம்`னு யோசிச்சு கொண்டே அந்தப் பக்கமாக 2,3 பேரை மடக்கி வீட்டுக்கு அறிவிக்க முயற்சி செய்தோம். வந்தவன் எவனிடமும் போன் இருக்கல.. போன் இருந்தா அது பைசா இருக்கல. 5,6 மணித்தியால அவஸ்தைக்கு பின் ஒருத்தன் வர அவன் போனிலிருந்து வீட்டுக்கு அறிவித்து, ஊரிலிந்து வண்டி வந்து நம்மல கூட்டிப் போகும் போது, ஊரெல்லாம் செய்தி பரவி, நம்மல ஈர லுங்கியோடு பார்த்து ரசிக்க கூட்டம் சேர்ந்துடுச்சு..

விடுப்பா.. விடுப்பா..... நாம பார்க்காத அவமானமா???
 

டிஸ்கி 1:- ஃபைனான்ஸ்`ல வண்டி எடுத்துவிட்டு சரியான தவணையில் பைசா குடுக்கா விட்டால் வண்டியை கடத்திக் கொண்டு வருவதற்கு, ஒரு கூலிப்படைய பைனான்ஸ் கம்பனிகள் வைத்திருக்கும். வண்டியை கடத்தியதற்கான கூலியையும் கூலிப்படைக்கு வண்டியின் உரிமையாளரே குடுக்க வேண்டும். அது ஒரு பெரும்தொகையாக இருக்கும்.

 டிஸ்கி 2:- அந்தக் கூலிப் படை வண்டிக்காரரை பின் தொடர்ந்து, வண்டிக்காரர் அசர்ர நேரம் பார்த்து, ஆட்டையப் போட்டுவிடுவார்கள். சில வேலை கைகலப்பில் முடியும் சந்தர்ப்பங்களும் உண்டு.

டிஸ்கி 3:- இது இலங்கையில் மட்டும்தானா? இல்லை, பொதுவாக எல்லா இடத்திலும் நடக்கும் நிகழ்வுதானா`னு தெரியல...

டிஸ்கி 4:- உண்மையிலேயே வீட்டுக்கான தூரம் 20 கிமீ அல்ல.. வெறும் 7-8 கி.மீ. தலைப்பு கொஞ்சம் கவர்ச்சியா இருக்கட்டுமே`னு போட்டிருக்கேன்.

சிறிது நாட்களின் பின் அந்த அண்ணனை சந்தித்தேன்...

அண்ணே!! வழக்கு என்னாச்சு???

வழக்குல நான் ஜெயிச்சுட்டேன் தம்பி..

சந்தோசம்னே.. வண்டி கிடைச்சுடுச்சா???

இல்ல தம்பி.. வண்டி கெடக்கல...

அப்போ உங்க பைசா....???

அதுவும் கிடைக்கல தம்பி.... அதுக்காக இன்னொரு வழக்குப் போட்டிருக்கேன்..Thursday, 6 October 2011

அசர அசர ஆப்படித்த ஆசிரியர் தின விழா..

இது ஒரு மீள் பதிவு. போன மாசம் ஆசிரியர் தினம்`னு அரசல் புரசலாக செய்தி வர அவசரமாக எழுதிய பதிவு. பிறகுதான் தெரிந்தது, இலங்கையில் ஆசிரியர் தினம் ஒக்டோபர் 6ம் திகதி`னு... எனவே போன பதிவில் தவறாக குடுத்த திகதிகளை மாற்றி மீள் பதிவிட்டிருக்கிறேன்.இன்று ஆசிரியர் தினம்`னு இப்போதுதான் தெரிந்தது. சரி, நாமளும் வழமை போல நம்ம வண்டவாலத்தையே தண்டவாளம் ஏற்றலாம்`னு முடிவு பண்ணி எழுதுகின்ற ஒரு அவசர பதிவு இது. (சரக்கில்லாம இருக்குரதால, இந்த மாதிரி ஒரு சந்தர்ர்ப்பத்தை தவற விடக் கூடாது`னு ஒரு உத்வேகம்..)

நம் பாடசாலைகளில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினம் கொண்டாடப் படும். அதன் போது மேல் வகுப்பு மாணவர்களால் விழாக்கள் ஏற்பாடு செய்யப் பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படும்.

நாம உயர் வகுப்புல இருக்கும் போதும் (2003), வரலாறு காணாத ஒரு விழாவை நடத்தனும்`னு தீர்மானிச்சு, தடபுடலாக ஆசிரியர் தின விழா நடத்த  தயாரானோம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வகுப்பு வாரியாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப் பட்டு நிகழ்ச்சிக்காக பயிற்சியும் அளிக்கப் பட்டது.


பொதுவாக நம்ம ஒடிடோரியம் கட்டடித்தில்தான் விழாக்கள் நடக்கும். நாம மிகப் பெரிய விழா நடத்துரதால அந்த கட்டடம் போதாது`னு சொல்லி வெளில மேடை அடிப்பதாகவும் மேல் வகுப்பு மாணவர் அனைவரும் செப்டம்பர் 4ம் திகதி இரவு, ஒன்று சேர்ந்து மேடை அமைப்பதாகவும் முடிவாச்சு.

திட்டமிட்டது போல, விழாவிற்கு (ஒக்டோபர், 05) முந்தைய இரவில் அனைவரும் ஒன்று கூடி, வகுப்புகளில் இருந்த மேசைகளையெல்லாம் ஒன்று சேர்ந்த்து மேடை அமைக்கும் பணி ஆரம்பிக்க லேசாக மழை தூர ஆரம்பித்து, மேடை அமைக்க இருந்த மைதானத்தை சகதியாக்கி விட்டது.

இதற்கு என்ன பண்ணலாம்`னு யோசிச்சா, ஒருத்தன் “மச்சீ.. மரத்தூள் கொண்டுவந்து போட்டா, சும்மா காங்ரீட் போட்டது போல இருக்கும்`டானு சொல்ல, பக்கத்திலுள்ள மரம் கிழிக்கும்  ஆலைக்கு சென்று மரத்தூள் கேட்க ஒரு மூடை மாத்திரம் எடுத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது. நாமும் ஒவ்வொருத்தரும்!!! ஒவ்வொரு!!! மூடை மாத்திரமே (50-60 பேர் இருந்தோம்) எடுத்துக் கொண்டு போய் மேடை அமைக்க இருந்த மைதானத்தை சரி செய்ய ஆரம்பிக்க, மழை கணமாக பெய்ய ஆரம்பித்தது.


ஆஹா!!! இப்போ என்ன பண்ணலாம்`னு யோசிக்க, மழை விடும் வரை பொறுமையாக இருக்கலாம்`னு முடிவு பண்ணினோம். அந்த நேரம் பார்த்து ஒருத்தன் எங்கிருந்தோ ஒரு ரேடியோவை தூக்கிக் கொண்டு வந்தான். அந்த கால கட்டத்தில் பாய்ஸ் திரைப்படம் வெளிவந்த புதுசு. எவனோ ஒருத்தன் பாய்ஸ் பாடல் கேசட்டையும் எடுத்து வர, அன்று பாடசாலை அதிபரும் குவார்டஸில் இல்லாமல் வெளியே சென்றிருக்க, இரவு பூரா ஏரியாலயே எவனும் தூங்க முடியாத படி ஆட்டம், பாட்டம், குத்தாட்டம்தான்.

மழை எப்போதோ முடிந்திருந்தாலும் நம்ம கூத்தும் கும்மாளமும் முடிய அதிகாலை 5.00 மணி இருக்கும். சாதாரண சகதியாக இருந்த நிலம், நாம் போட்ட மரத்தூளுடன் சேர்ந்து எருமை கூட பக்கத்தில் கூட போக முடியாத சகதியாகி இருந்தது.

இதன் பின் மேடை அமைப்பது முடியாத காரியம் என்பது தெரிந்தவுடன், மறுபடி ஒடிடோரியம் கட்டிடம் வந்து, அதை தயார் செய்ய முயற்சித்த போது விடிந்து விட்டது. எப்படியாவது சமாளிக்கலா`னு யோசிச்சுடு ஒவ்வொருத்தனும் தங்கள் அறைகளுக்கு போக நானும் போய் குளிச்சுடு வரலாம்`னு போய் கட்டில்`ல உட்கார்ந்தவன் எழுந்து பார்க்கும் போது கடிகாரத்தில் 12.00 மணி பல்லிலித்தது.


கண்ணை கசக்கிக் கொண்டு, பல்லும் விளக்காமல் பாடசாலைக்கு ஓடிப் போனால், நம்ம பசங்க பேந்த பேந்த விழிக்கிறானுங்க.. கேட்டால் விழா நடக்கவே இல்லையாம். அது போக மொத்த பாடசாலையும் நம் மீது கொலை வெறியுடன் இருந்தது. நம் மீது இருந்த குற்றச்சாட்டுக்கள்....

* மொத்த விழாவையும் மேடை அமைக்கிறேன் பேர்வழி`னு குழப்பி, எதுவுமே நடக்காமல் பண்ணியது

* இரவு பூராக குத்தாட்டம் போட்டு, அயலவர்கள் தூக்கத்தை கெடுத்தது.

* மாணவர்களின் மேசை கதிரைகளை கொண்டு போய் சகதியிலும், மழையிலும் நனைத்தது

*மேடை அமைப்பதற்க சொல்லி பள்ளி மைதானத்தை சகதியாக்கியது.

*மரத்தூள் திருடியது.
 
இவற்றயெல்லாம் பேசி சமாளிக்கும் போது நம் ஆசிரியர் தின விழா வரலாறு காணாத விழாவாகவே மாறி விட்டிருந்தது.

Wednesday, 5 October 2011

செவ்வாய், சனிமற்றும் புளூட்டொவில் நீர் இருப்பது 100% உறுதி. படங்கள் இணைக்கப்பட்டுள்ளதுஉலக வரலாற்றை படித்துப் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக தெரியும். (அப்போ 2,3,4 எல்லாம் மங்களாகவா தெரியும்??) அதாவது நிலைத்து நிற்க வேண்டுமாயின் ( இரண்டு காலும் நல்லா இருக்கனும்) காலத்திற்கு ஏற்ப எங்களை நான் மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது “தக்கன பிழைத்தல்”னு சொல்வாங்க..

இது பதிவுலகத்திற்கு ரொம்ப பொருந்தும். (யோவ்.. கில்மா பதிவு போட்டாலே நிலைச்சுடலாம்யா...) பதிவுகில் கடந்த காலங்களில் அதிக மாற்றங்கள் நடந்து வருவதும் பாராட்டத்தக்கதும் சந்தோசத்துக்குரியதுமாக இருக்கின்றது.

மொக்கை மன்னனும் கக்கா போரதுல இருந்து காபி போட்ரது வரை எழுதிய திரு. பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் ”பூமியை தேடி”னு அட்டாகாசமான ஒரு தொடர் பதிவை எழுதி ஒரு அசத்த அசத்தினார். சிரிப்பு போலீஸ் கூட அப்ப சிந்திக்கிர போலீஸ்`ஆ மாறிடுராரு...

காணாமல் போயிருந்த அருன் ப்ரசாத் கூட அப்ப அப்ப மொரீஸியஸ்`ல உள்ள எரிமலைகளை கிளரி விடுராரு.. கொம்மண்ட்ஸ் மட்டுமே போட்ட டெரர் பாண்டியன் அவர்களே ஒட்டகத்துக்கெல்லாம் லீவு விட்டுடு ப்லாக்`ஐ தூசி தட்டி விழிப்புணர்வுப் பதிவெழுதி நம்ம பெண்ட நிமிர்திட்டாரு..

தன்னைத் தானே  கலாய்த்துக் கொண்டிருந்த வெங்கட் கடந்த ஒரு மாதமாக ப்லாக்`இல் செய்த புரட்சி செய்து வருகிறார். இந்தக் காலம் அவர் ப்லாக்கின் பொற்காலம்`னு சொல்லலாம்.

சரி இவ்வளவு மேட்டர் நடக்கும் போது, நாமளும் எதாவது உருப்பட்டியா பண்னனுமே`னு மனசுல ஒரே குடைச்சல்.. அதனாலதான் செவ்வாய் (Mars), சனி (Saturn) , புளூட்டோ (Pluto)`னு உங்கள கூட்டிட்டு போக போகிறேன்.


செவ்வாயில் நீர் இருக்கா இல்லையா`னு விஞ்ஞானிகளுக்கு இன்னும் முடிவு எடக்க முடியாமலும், மற்றைய கோள்களில் நீர் இருப்பது பற்றி எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இருந்து வருவதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தற்போது கிடைத்துள்ள போட்டோக்களின் படி சனி (Saturn) , புளூட்டோ (Pluto) போன்றவற்றில் நீர் இருக்கும் தெளிவான போட்டோக்கள் இப்போது கிடைத்துள்ளது.

அது போக, செவ்வாயில்ருந்து (Mars) பல கோணங்களில் இருந்து எடுக்கப் பட்ட போட்டோக்கள் மட்டுமல்ல இதுவரை மனிதனுக்குகிடைத்த பகுதிகளை வைத்து ஆராய்ச்சி செய்த போது அதில் 40-60 % நீர் இருப்பது 100% உறுதியாக்கப் பட்டதை கண்டு ஆச்சரியம் அடந்துள்ளனர். நீர்போக வேறு என்ன என்ன மூலக் கூறுகள் மற்றும் கட்டமைப்பை  பட்டியலிட்டு உள்ளனர்.


" is made of chocolate-malt nougat topped with a layer of caramel and covered with milk chocolate embedded with "crispies" (whose main ingredients are wheat flour and sugar"
என்கிறது விக்கிபீடியா.


இன்னொரு ஆராய்ச்சி


”Milk Chocolate, (Sugar, Cocoa Butter, Chocolate, Lactose, Skim Milk, Milkfat, Soy Lechithin, Artificial Flavor), Almonds, Corn Syrup, Sugar, Partially Hydrogenated Soybean Oil, Skim Milk, Less than 2% - Butter, Milkfat, Lactose, Salt, Egg-Whites, Soy Protein, Artifical Flavor” என்கிறது


ஆராய்ச்சிக்காக பாவித்த செவ்வாயின் (mars) சிறிய துண்டொன்றையும் , செவ்வாய் (Mars), சனி (Saturn) மற்றும் புளூட்டோ (Pluto) நீர் இருப்பதை காட்டும் பல கோணங்களில் பெறப்பட்ட புகைப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை உங்கள் பார்வைக்கு..


..............................


............................................................


ஆராய்ச்சிக்காக பாவித்த செவ்வாயின் (mars) சிறிய துண்டுகள்

ஆராய்ச்சிக்காக பாவித்த செவ்வாயின் (mars) சிறிய துண்டுகள்

 

இங்கு செவ்வாயின் (Mars)  மேற்பரப்பில் நீர் இருப்பதை தெளிவாக காண முடியும்.


இன்னொரு கோணத்தில் எடுக்கப்பட்ட செவ்வாயின் (Mars) புகைப்படம். இந்நீர் குடி நீருக்கு உகந்தது என்று நினைக்கிறேன். 
இதில் செவ்வாய் மட்டுமில்லாது, சனி (Saturn) , புளூட்டோ (Pluto) ஆகிவற்றின் நீர் இருப்பதை காட்டும் தெளிவான போட்டோ.. (படத்தை கிளிக்கி பெரிதாக்கை பார்க்கவும்)

இதுக்கு பிறகு நான் எதாஅவ்து சொன்னாலும் நீங்க கேக்குற மூட்`அல் இருக்க மாட்டீங்கனு எனக்கு தெரியும். எனவே, அடுத்த பதிவுல சந்திப்போம். வரட்டா....