அன்று ஒரு நாள் வழமை போல இரவு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருக்கும் போது, திடீரெனெ ஒரு தொலைபேசி அழைப்பு.(யோவ்.!!! தொலை பேசி அழைப்பு முன்னறிவிப்பு செஞ்சிட்டாய்யா வரும்? திடீர்னுதான்யா வரும்...) யாராக இருக்கும்’னு ஒரே குழப்பத்தோடு (கடன் காரனா இருக்கும்யா...) பதிலளித்தால், நம்ம பக்கத்து வீட்டு பையன் ’’மலை”யின் அலரல் சத்தம்.
“அண்ணே!! அண்ணே!!! எங்க வீட்டு கோழியை திருடன் திருடிட்டு ஓடுராண்ணே.... அவசரமா ஓடி வாங்க”னு ஒரே கதறல் (திருடிட்டு ஓடுரது நீயா’னு பார்க்க போன் பண்ணியிருப்பான்யா...) . ஆஹா!!!! நம்ம வீரத்தை நம்பி ஒருத்தன் வேட்டைக்கு அழைத்திருக்கானே!!...நம்ம்ம்பி,(முயல் புடிக்கிற நாயை மூஞ்ச பாத்தா தெரியுமாம்..) திருடன புடிச்சி அத போட்டோ எடுத்து ப்லாக்’ல போட்டு பிரபலம் ஆகிரலாம்’னு ஒரு நப்பாசையில் AK 47, T56, வாள் எதுவும் இல்லாததால் வெறும் கம்பையும் டார்ச்’சையும் தூக்கிக் கொண்டு ஓடினேன்.
வெளியே வந்தால் “அண்ணே வீட்டுக்கு பின் பக்கமா, காட்டுப்பக்கமா ஓடுராண்ணே!!(மெயின் ரோடு’ல ஓடுரதுக்கு அவன் ஓட்ட்ப்பந்தத்துலயா ஓடுரான்? திருடன்னா, காட்டுப் பக்கமாதான் ஓடிவான்... )அந்தப் பக்கமா வாங்கண்ணே!!!”னு சத்தம். நானும், நம்ம வீரத்தை காட்டனுமே’னு முள்ளு கள்ளு இருட்டு’னு எதுவும் பார்க்கமல் காடு மேடெல்லாம் ஓடினேன்.
அங்கே போய் “தம்பி என்னாச்சுடா?” (திருடன பிடிக்க போனியா? இல்ல... பேட்டி எடுக்க போனியா?) னு கேட்டால், “அண்ணே!! இருந்ததே ஒரே ஒரு கோழி. அதையும் திருடிட்டானுங்கன்னே’னு ஒரே ஒப்பாரி. ”சரிப்பா... ஆடு’ன்னு பொறந்தா விட்டை’ய போட்ரதும் கோழி’னு இருந்தா ஆட்டைய போட்ரதும் சகஜமப்பா!! ஒரு தத்துவத்தை பொழிந்து (அறிவாளியா பொறந்தா இதெல்லாம் சகஜம்தானே!!!!) அவனை சமாதானப் படித்த முயன்றேன்.
“அண்ணே!!!! இரும்பு பெட்டிக்குள்ளே போட்டி வைத்திருந்த கோழி’ன்னே.. எப்படி திருடியிருப்பான்?னே புரியல..
இல்லடா..தம்பி. ஒரு வேளை கோழியே வெளியே ஓடியிருக்குமோ!!
இல்லன்னே!! கோழியே வெளியே பாய்ந்திருந்தா கதவு திறந்திருக்கனுமே!! ஆனால், கதவை பூட்டிய மாதிரியே வச்சிருக்கான்னே!!!!
ஆமால்ல... இரும்பு பொட்டி’யாச்சே!!!! எப்படி திருடியிருப்பனோ!!! ஜக ஜாலக் கில்லாடியா இருப்பான் போலிருக்கு”னு பேசிக்கொண்டோம்.
திருடன் வந்த செய்தி நம்ம ஏரியா பூராவும் பரவ, எல்லோரும் ஆயுங்களுடன் தேடுதல் வேட்டையில் இறங்கினோம். (உன் வீரத்தையும் தைரியத்தையும் பற்றி தெரிந்ததால், மத்தவங்களையும் கூப்பிட்டிருப்பான்..) ஒரு பத்து பேர் இருப்போம். ஒரே ஒரு டார்ச்’தான் இருந்திச்சு. “யோவ் என் பக்கமா டார்ச் அடிய்யா’னு ஒருத்தன் கத்த... யோவ்!!! இந்த பக்கம் இருட்டுய்யா.. இன்னொருத்தன் கத்த... நம்மாளுங்களுக்கு டார்ச்’காக போட்ட சண்டையிலேயே திருடன் ஓடியிப்பான் போலும். கும்மிருட்டு, காடு என்பதால் இருட்டுல நம்மளையே திருடன்னு போட்டு தள்ளிருவானுங்களோ’னு (நம்மளுக்கு எதிரிகள் ஜாஸ்தில்ல.....) வேறு ஒரு பயம் தொற்றிக் கொண்டது.
பயங்கர குளிர், கும்மிருட்டு, காட்டுக்குள் திரிந்ததில் காலெல்லாம் காயம் வேறு.... இரண்டு மணித்தியாலம் தேடி அலைந்திருப்போம். நாம் களைப்படைந்தோமே தவிர திருடன் சிக்கவில்லை. வந்தவர்கள் எல்லோரும் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர்.
அப்பொழுதுதான் ஒரு யோசனை வந்தது... “ தம்பி.. அந்த இரும்பு கூட்டை எப்படித் திறந்து கோழியை ஆட்டைய போட்டிருப்பன்னு ஒரே குழப்பமா இருக்கு.. அந்த கோழிக் கூட்டை பார்க்கலாமா?’னு கேட்டேன்.(அடுத்த முறை நீ ஆட்டைய போட்ரதுக்கு இப்பவே குறி வெச்சிருப்பே....) “இல்லன்னே அத அப்புறம் பாக்கலாம். நீங்க போய் படுங்க.”னு சொன்னாலும் என் அறிவுப் பசி என்னை ச்சும்மா இருக்க விடவில்லை(யாருப்பா அது? அறிவு’ங்குறத் விட்டு வெறும் ”பசி”ண்டுரத மாத்திரம் படிக்குரது) . அப்பவே பார்க்கனும்னு வலுக்கட்டாயமா போய் பார்த்த போது அந்த கோழிக் கூடு இப்படிதானுங்க இருந்துச்சு....
***********************
***********************
***********************
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். இன்னும் கீழே வாங்க.. நாங்க காடு மேடெல்லாம் ஓடியிருக்கோமுள்ள.......
***********************
***********************
நோ!!!! நோ!!! யாரும் அழக் கூடாது.....
இது வெறும் ட்ரைலர்’ங்க..... உள்ள பாத்தீங்கண்ணா.... ஷாக் ஆகிருவீங்க........
கோழியின் சிறகுகள் இருப்பதை பார்க்கலாம். நம்ம “மலை” இதை FBIக்கு குடுக்கலாம்’னு பத்திரமாக வெச்சிருக்காரு.... |
இதுதாங்க... அவர் சொன்ன Master Lock. திருடன் பூட்டிய படியே வைத்து விட்டு போன நிலையில்.....
இதையெல்லாம் பார்த்து விட்டு நாம் சொன்னது... “யோவ்!!! இதுல கோழியை அல்ல, கோழி முட்டயை வைத்தால் கூட வெளியே ஓடிரும்யா...”
நம் வீரத்தை காட்டலாம்னு சாப்பிட்ட சாப்பாட்டையும் வச்சிட்டு போனதுங்க... எவ்வளவு பீல் பண்ணினேன் தெரியுமா...........?
இப்பொழுதும் வழமையானதைதான் சொல்றேங்க.... “ நம்ம கதைல Starting நல்லாயிருக்கும்,,, (எப்போ?) ஆனால், Finishing சரியில்லையே!!!!!!!
சூப்பர் அண்ணே.. எப்டி இப்டியெல்லாம் யோசிக்கிறிங்க..
ReplyDeleteஆங் வட... கிடைச்சது.. கோழி தப்பிச்சுது
ReplyDeleteஉங்க ஏரியாவுல நிறைய கோழி கானாமல் போகுதாமே
ReplyDeleteநம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது..
//இரும்புக் கோட்டை கோழித் திருடன்//
ReplyDeleteதலைப்பே சூப்பர்
@ Riyas //
ReplyDelete///எப்டி இப்டியெல்லாம் யோசிக்கிறிங்க.. ./////
இது கதை இல்லீங்க.... நிஜம்...
@ Riyas //
ReplyDelete///தலைப்பே சூப்பர் ////
வெளில பில்ட் அப் குடத்தாதானுங்க, உள்ள எட்டி பாக்குறாங்க....
அவ்ளோ அழகான பெட்டியை திருடாம
ReplyDeleteஅவன் ஏன் கோழியை திருடிட்டு போனான்னு
யோசனை பண்ணிட்டு இருக்கேன்..!!
@ வெங்கட் ..
ReplyDelete///அவ்ளோ அழகான பெட்டியை திருடாம
அவன் ஏன் கோழியை திருடிட்டு போனான்னு
யோசனை பண்ணிட்டு இருக்கேன்..!! ////
இருட்டுல பெட்டிட அழகு விளங்கியிருக்காதுன்னு நினைக்கிறேன்.
உங்க ஏரியாவுல நிறைய கோழி கானாமல் போகுதாமே
ReplyDeleteநம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது.. //
repeattuu
உங்க ஏரியாவுல நிறைய கோழி கானாமல் போகுதாமே நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது.. //
ReplyDeleteME repeattuu
:)) கேபிள் சஙக்ர்
ReplyDelete@ எம் அப்துல் காதர், ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ReplyDelete///உங்க ஏரியாவுல நிறைய கோழி கானாமல் போகுதாமே நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது.. //
நம்மள மாதிரி ஆளுங்க இல்ல’ங்குற தைரியத்துல அப்பிடியெல்லாம் நடக்குரது சகஜம்தானே!!!
@ கேபிள் சஙக்ர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி....