Thursday 9 June 2016

பத்து எண்ரதுக்குள்ள..Part ii

முதல் பதிவை படிக்க...

பத்து எண்ரதுக்குள்ள..1

தொடர்ச்சி...

Flashback Auto (ஆட்டா) Start




டட்சன்: மச்சி.. எங்க மாமா ஆட்டா ஒன்னு கொண்டு வந்திருக்காரு. இன்னைக்கே அதுல ட்ரைவிங் பழகலனா, அப்புறம் எப்பவுமே இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்காது.

வேணாம் மச்சி.. இதுக்கு மேலயும் என் உடம்பு தாங்காது. அது போக நீ பைக்ல ப்ரேக்கை கையால அமுக்கினத இன்னமும் சின்ன பசங்க கூட சொல்லி கலாய்க்கிராங்க.. ஆள விடு..

சரி விடு மச்சி. பழசெல்லாம் இப்போ எதுக்கு?? சைக்கிள்ல விழுந்தோம், பைக்ல விழுந்தோம். என்ன நடந்தாலும் ஆட்டால இருந்து விழப் போறதில்ல. நம்பிக்கையோட வா மச்சி. நம்பிக்கைதானே வாழ்க்கை.

அப்ப்டீங்குர.... சரி.. ஒரு ஆளில்லாத ரோட்டுல வண்டிய விடு.. எதாவது ஏடாகூடமா பண்ணினா நான் வெளிய குதிச்சுடுவேன். ரைட்டா???

டேய்!! மோட்டர் பைக் ஓட்டினவனுக்கு ஆட்டோ ஓட்டுரதுல என்னடா பிரச்சனை??? இப்போ ஸ்கூல் முடியுர நேரம். அந்தப் பக்கம் போறோம்.. ஒரு கலக்கு கலக்குறோம்.

எனக்கு இப்பவே கலக்குதுடா......

நான் நினைத்ததை விட டட்சன் நல்லாத்தான் வண்டி ஓட்டினான். நீ பெரிய ஆளுடா’னு நினைக்குறதுக்குள்ள சடார்னு வண்டிய ஒரு வெட்டு வெட்டு, மூனு சில்லுல போக வேண்டிய வண்டி, ரெண்டு சில்லுல போய், ஒரு சுத்து சுத்தி, ஸ்கூல் கேட் முன்னாடி விழ, நான் அதுக்கு முன்னாடியே வீசிப் பட்டு, பக்கத்திலிருந்த முற் புதருக்குள் விழுந்தேன்.

அட நன்னாரிப் பயலே...முன்னாடியெல்லாம் எதாவது காரணத்தோடு கால வாருவியே!! இன்னைக்கு எதுக்குடா இப்படி??? ஏதோ என்ன அசிங்கப்படுத்துரதுக்காகவே கூட்டி வந்து தள்ளிவிட்ட மாதிரி இருக்குதேடா???

காரணம் இருக்கு.. பைக்ல போகும் போது, ஹெல்மட் இல்லம போனா, போலீஸ கண்டதும் உடனே வண்டிய திருப்பிடுவேன். இன்னைக்கும் ஸ்கூல் பக்கத்துல போலீஸ் யுனிஃபார்ம கண்டதும் ஆட்டோல போறோம்னதும் ஹெல்மட் போடலைனு ஞாபகம் வந்துடுச்சு. ஆட்டா Handleம் பைக் மாதிரியே இருக்கா?? உடனே திருப்பிட்டேன். சாரி மச்சான்...

அடப்பாவி!! எங்கடா அந்தப் போலீஸ்?? அவனுங்கள காணவே இல்லையேடா?

சாரி மச்சி.. விழுந்ததும்தான் பார்த்தேன், அது போலீஸ் இல்ல.. நம்ம ஸ்கூல் பியூன் அண்ணா. யுனிஃபார்ம் ஒரே கலர்ல இருந்ததால கொஞ்சம் கன்பீஸ் ஆயிடுச்சு..

Flashback Auto (ஆட்டா) finished

இவ்வளவு நடந்த பிறகும் எப்படி மச்சான் உன்னால என்ன கூப்பிட முடியுது??

நான் முன்னாடி சொன்னது போல, நம்பிக்கைதான் வாழ்க்கைடா..

டேய்!! உன்ன நம்பினதுல பல முறை என் வாழ்க்கையே கேள்விக் குறியாகி இருக்கு!!!

சரி விட்ரா... உன் ஃப்ரண்டு டட்சன் சாகும் வர ட்ரைவிங் தெரியாமாலே இருந்துட்டு போகட்டும்...

அழாதடா... கேவலமா இருக்கு... சரி நானும் வர்ரேன், ஆனா, உன் மேல உள்ள நம்பிக்கைல இல்ல, உங்க 20 kmph க்கு மேல போகாதுங்குர நம்பிக்கைல வர்ரேன்.

ரொம்ப கஷ்டப்பட்டு ஸ்டார்ட் பண்ணி, பக்கத்து ஊரை நோக்கி கிழம்பினோம்.

டட்சன், இது லீஸிங்க்கு எடுத்த வண்டி இல்லையே?? முன்னாடி ஒரு க்ரேஸிட ஊர்க்காரன் ஒருத்தனோட வண்டில குளிக்க போய், ஈர லுங்கியோட அலைஞ்ச கத தெரியும்ல.....  (ஈர லுங்கியுடன் 20 கி.மீ பயணம்...

அதெல்லாம் இல்லடா, அப்பாவுக்கு ஒருத்தன் கடன் குடுக்க இருந்தான், அதுக்காக அப்பா அவனோட வண்டிய எடுத்துட்டு வந்துட்டாரு..

உன்னையெல்லாம் நம்பி வண்டிய குடுக்கும் போதே யோசிச்சேண்டா... ஆமா.. அந்தாளு தர வேண்டிய கடன் ஒரு 500/- இருக்குமா???

மச்சான், வண்டிதான் பழசு. ஆனா இஞ்சின் புத்தம் புதுசுடா...

ஆமா.. நம்பிட்டோம்..

கொஞ்ச நேரத்தில் பார்த்தால் மேலெல்லாம் எதோ கருப்பா விழுந்திருக்கு, என்னடானு பார்த்தா, கூரைல உள்ள துருவெல்லாம் கழன்று விழுந்திருக்கு, அப்போத்தான் பார்த்தேன், டட்சன் தொப்பி போட்டு வந்திருக்கான்,

பாவி, முன்னாடியே சொல்லியிருந்தா அட்லீஸ்ட் ஒரு குடையாவது எடுத்து வந்திருப்பேன்ல....

வண்டிக்குள்ள குடை பிடிச்சா கேவலமா இருக்கும்டா...

இந்த வண்டில போறது மட்டும் பெருமையாவாடா இருக்கு???

வீட்டிலிருந்து ஒரு அரை கிலோமீட்டர் சென்றிருப்போம். ஒரு குருகிய இடத்துல போகும் போது, முன்னாடி ஒரு மணல் லாரி காரன் வந்துட்டான்.
(ஆஹா.... நான், மணல் லாரி, ட்ரைவராக டட்சன்... அய்ய்யய்யோ.... காம்பினேஷனே சரில்லையே... - மைண்ட் வாய்ஸ்)

லாரிக்கு பக்கமாக போய் நிறுத்திய டட்சன் லாரிய மலைச்சுப் போய் பார்த்துக் கிட்டே இருக்கான். டேய்!! லாரிகாரன் முரட்டு ஆளா இருப்பான் போலிருக்கு, வண்டிய ரிவர்ஸ் எடுடா’னு மூனு நாலு வாட்டி சொன்னதும், திடீர்னு வண்டில இருந்து இறங்கி பின்னாடி ஓடிட்டான்.

அடப்பாவி வண்டிய ரிவர்ஸ்,ல எடுக்கனும்னா நம்ம கிட்ட சொல்ல வேண்டியதுதானே, இவனே போய் லொக்கேஷன் பார்க்கனுமா’னு நானும் நெனச்சு, பாத்துகிட்டே இருக்கேன், ரொம்ப நேரமா ஆளை காணல. திரும்பி பார்த்தா டட்சன்;னு ஒரு ஜீவன் இருந்ததற்கு எந்த அடையாளமுமே தெரியல..



லாரிக் காரன் வேற முரட்டு ஆளு. ஹார்ன் அடிக்க ஆரம்பிச்சுட்டான். சரி நாமளாவது ரிவர்ஸ் எடுக்கலாம்னு பார்த்தா டட்சன் சாவியையும் கழட்டி எடுத்துட்டு ஓடியிருக்கான்.  அடப்பாவி டட்சன் கீழே தள்ளாமலே தலைல மண்ண போட்டியேடா?? - மைண்ட் வாய்ஸ்..

மணல் லாரிக்காரன் வேறு கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டான். “மவனே போலீஸ் வந்ததுனு வச்சுக்கோ.. உன்னோட உயிரோட விட மாட்டேன் பாரு” மிரட்ட தொடங்கிவிட்டான். (அடப்பாவிகளா!! மணல் கடத்துர பாட்டியா நீங்க??? எந்த அமைச்சரோட ஆளுங்களா இருப்பானுங்களோ??? - மைண்ட் வாய்ஸ்)

டேய்!! எங்கடா உன் ட்ரைவர்?? அவன் வரலன்னா, இந்த தகர டப்பாவ என் கையாலயே அடிச்சு உடைப்பேன் பாரு???

அந்தளவுக்கெல்லாம் இந்த வண்டி Worth கிடையாதுண்ணே!!! அது போக இந்த வண்டில கை வச்சி Clostridium Tetani Bacterial Infection ஏதாவது வந்துடப்போகுதுண்ணே!! பீ கேர்புல்...

டேய்!!! இங்க்லீஸ்லயா திட்ரே??  இருடா வர்ரேன்..

நான் கொஞ்சமும் பயப்படல.. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், என் மான் கராத்தேக்கு முன்னால ஈடு குடுக்க முடியாதுங்குர முழு நம்பிக்கை எனக்கிருந்தது. வந்த வழியே திரும்பி ஓட பார்க்கும் போது, தூரத்துல டட்சன் அப்பாவ கூட்டிட்டு வந்துகொண்டிருந்தான்.

அடப்பாவி??? இதுக்காடா அவ்ளோ வேகமா ஓடின?? என் கிட்ட சொல்லியிருக்க வேண்டியதுதானேடா???

சாரி மச்சி!! எனக்கு வண்டிய ரிவர்ஸ் எடுக்க தெரியாது.. அப்பா வேற யாருக்கும் தன் வண்டிய குடுக்குரத விரும்ப மாட்டாரு.. (இத வண்டினு சொல்ரதயே யாரும் விரும்ப மாட்டாங்கடா????) வண்டிக்கு ஏதாச்சும் ஆயிடக் கூடதுல்ல..

அப்படியே குடுத்தாலும் எவனும் எடுக்கவும் விரும்பப் போறதில்ல.. அவனவனுக்கு தன் உயிர் முக்கியமுல்ல...

அத விடு மச்சி.. எப்படியோ கார் ஓட்ட பழகியாச்சு.. அடுத்து ஏரோப்பிளான்’தான்...

அவ்வ்வ்வ்........

Monday 21 March 2016

பத்து எண்ரதுக்குள்ள..... Part i

போன வாரம் நம்ம ஃப்ரெண்டு டட்சனுக்கு கல்யாணம். கல்யாணத்துக்கு போன வேலை (பத்து ப்ளேட்ட முழுங்கியிருப்பே!!!) அவன் வீட்டு முன்னால நிறுத்தியிருந்த காரை பார்த்ததும் (டுபாய்ல இருந்த பழக்கதோஷத்துல பக்கத்துல நிண்ணு போட்டோ எடுத்திருப்பியே) எனக்கு அப்டியே சுருள் சுத்தி ஃப்லேஷ் பேக்குக்கு போக ஆரம்பிச்சுட்டேன்.

சுமார் 10 வருடமிருக்கும். கலேஜ்ல வச்சு, புதுசா அப்பா கார் வாங்கி இருக்குரதா சொன்னான் டட்சன், போய் வண்டிய பாத்துட்டு வந்துரலாம்னு டட்சன் வீட்டுக்கு போனேன்.

என்னா மச்சான்??? வண்டிக்கு கண் திருஷ்டி பட்டுடாம தகர டப்பாவால மூடி வச்சிருக்கீங்கலா....???  அதுக்காக புதிய வண்டிய இவ்ளோ கேவலமாவா மூடுவீங்க???

டேய்!! தகர டப்பாவால மூடலடா... அப்பா வேங்கியிருக்கிற வண்டியே அதுதான்...

கிர்ர்ர்ர்ர்....  டேய்!! இதையா புது வண்டினு சொன்னே???

நான் எப்படா புது வண்டினு சொன்னேன். வண்டி புதுசா வாங்கியிருக்குனுதானே சொன்னேன்.  சரி, வண்டிய பக்கத்து ஆத்துல போய் கழுவிட்டு வருவோமா???

டேய்!! வண்டிய கழுவினா அழுக்குத்தான் போகும்டா, துருப் போகாதுடா.. இத எதுக்குடா கழுவனும்???

மச்சி, யாராவது அவசரமா எங்கையாவது போகனும்னா??? வண்டி கிளீனா இருக்கனும்ல..

அவசரமா போகனும்னா நடந்து போகட்டும்டா.. இந்த வண்டில போறத விட சீக்கிரமா போய்டுவாங்க...

டேய்!! ஹெல்ப் பண்ணு மச்சி, இப்படி எதாவது சொன்னாத்தான் அப்பா வண்டிய குடுப்பாரு. எனக்கும் கொஞ்சம் ட்ரைவிங் பழகிக்கலாம்.

அடப்பாவி உனக்கு ட்ரைவிங்’கே தெரியாதா??? நல்ல வேல இப்பவவாவது சொன்னியே!! உன் கூட நான் பட்ட அனுபவங்கள் ஏராளம். ஆள விட்டா போதும்...

டேய்!! நான் ட்ரைவிங் பழக போகும் போது நண்பன் நீயே வரலனா, வேறு எவண்டா வருவான்???

போகும் போது உன் கூட வருவேன், ஆனா வரும் போது முழுசா வருவேனாங்குரதுதான் என் பிரச்சனை. அப்படியே ஃப்லேஷ் பேக்குக்கு போய் நீ சைக்கிள் பழகினத நெனச்சுப் பாரு.....

Flashback Cycle start



அப்போ எனக்கு பத்து வயசு, நம்மளுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது, அதனால எவனாவது சைக்கிள் ஓட்டினா ஓடிப் போய் ஏறிக்குரது வழமை, ஒரு நாள் டட்சன் சைக்கிள்ல வர நானும் ஆர்வக்கோளாருல போய் ஏறிட்டேன். ஒரு வளைவுல போகும் போது,திடீர்னு ஒரு மணல் லாரி வந்து ஹார்ன் அடிக்க, பயந்து போன பரதேசி டட்ஸன் சைக்கிளுடன் சேர்ந்து புதருக்குள் போய் விழ, சிராய்ப்புக் காயங்களோடு நான் உயிர்தப்ப, சேஃப்ஃபாக எனக்கு மேல விழுந்து தப்பிச்சான் டட்சன்.
Flashback Cycle finished'

டேய் டட்சன், ஒரு லாரி ஹார்ன் அடிச்சதுக்கே வண்டியோட விழுந்தவன் நீ. உன்னைய எப்படிட்டா நம்புரது??

சரிடா,.. வாழ்க்கைனா ஒரு சில அடி விழத்தானே செய்யும்??

உன் வாழ்க்கைக்கு விழுர அடிய நீ போய் வாங்குடா, நானும் சேர்ந்து எதுக்கு வாங்கிக் கட்டணும்??? நீ மோட்டர் பைக் பழகினத கொஞ்சம் யோசித்துப் பார்த்தியா???

Flashback Motor Bike start


அப்போ எனக்கு ஒரு 15 வயசிருக்கும். டட்சனோட அப்பா ஒரு மோட்டர் பைக் வாங்கியிருந்தாரு, அந்த பைக் பக்கத்து ஊர்ல வரும்போதே நம்ம ஊர்ல தூங்குர குழந்தைங்க கண் விழுச்சிடும். அவ்ளோ சத்தம். அது என்னவோ தெரியல  டட்சனோட பட்டப் பெயருக்கும் அவனோட அப்பா வச்சிக்கிட்டு இருக்கிர வண்டிக்கும் எப்பவுமே தொடர்பிருக்கும். அந்தக் காலத்துல டட்சன “புடு புடு டட்சன்”னுதான் கூப்பிடுவோம்.

ஒரு குளிர் கால காலை வேலைல டட்சனோட அப்பா பைக்கை ஸ்டார்ட் பண்ர நேரம் பாத்து நம்ம ஃப்ரெண்டு க்ரேஸி குளிர்ல காதை மூட, “டேய்!!! என் பைக் சத்ததுக்கா காத மூடிர’னு அடிக்க விரட்ட....நல்ல வேளை அவர் பைக்ல விரட்டினதால க்ரேஸி ஓடித் தப்பிச்சுட்டான்.

வாழ்க்கைல செஞ்ச பெரிய தப்புக்களில் ஒன்று, டட்சனுக்கு முன்னாடியே நான் பைக் ஓட்ட பழகியதாகத்தான் இருக்கும். அவனுக்கும் பைக் பழக்கி விடச் சொல்லி பண்ணிய டார்ச்சரில், நானும் ஒரு குருட்டு நம்பிக்கையில் கிழம்பினேன்.


டட்சன் நல்லா கேட்டுக்க, சைக்கிள் மாதிரியேதான் மோட்டார் பைக்கும், அதுல மிதிக்கனும், இதுல எக்ஸ்லரேட் பண்ணனும் அவ்வளவுதான் வித்தியாசம். புரியுதா???

ப்பூ... இவ்ளோதானா?? நான் ஏதோ பெரிய மேட்டர்னு பயந்துட்டேன்.

டேய்!! முன்னைய மாதிரி எதாவது வாகனம் வந்து ஹார்ன் அடிச்சா, விழுந்துட மாட்டியே???? பைக்ல விழுந்தா சைக்கிள்ல விழுர மாதிரி கிடையாது, கொஞ்சம் ஜாக்கிரதையா போடா...

மெதுவா டட்சன் வண்டிய கிளப்ப நானும் பின்னாடியிருந்து கொண்டேன். கொஞ்ச தூரம் போகும் முன்னாடி அதே மணல் லாரி வேகமா வந்துகொண்டிருக்க, ஃப்லேஷ் பேக் என் கண்ணு முன்னால வர, மச்சி ப்ரேக்’க பிடிடா’னு நான் சொல்ல, படுபாவி டட்சன் காலுக்கு பக்கத்திலிருந்த ப்ரேக்கை குனிந்து கையால் அமுக்க, அவ்வ்வ்வ்வ்.....

அடப்பாவி டட்ஸன். ப்ரேக்க பிடின்னா அத கையாலயாடா பிடிப்பே!!!

நீதானே சொன்னே, சைக்கிள் ஓட்டுர மாதிரியே ஓட்டனும்னு... சைக்கிள்ல ப்ரேக்க காலாலயா மிதிப்பாங்க??? நாம விழுந்தத யாரும் பாக்கலல...

உங்கப்பன் பைக் வர்ரத ஏதோ ஹெலிகப்டர் வந்துட்டதா நெனச்சு முழு ஊரும் வந்துடுச்சுடா பாக்குரதுக்கு.... அவ்வ்வ்.....

Flashback Motor Bike finished

சரி விடு மச்சி. பழசெல்லாம் இப்போ எதுக்கு?? சைக்கிள்ல விழுந்தோம், பைக்ல விழுந்தோம். என்ன நடந்தாலும் வேன்ல இருந்து விழப் போறதில்ல. நம்பிக்கையோட வா மச்சி. நம்பிக்கைதானே வாழ்க்கை.

கொஞ்சம் நிறுத்துடா டட்ஸன். இந்த டையலாக்க எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே!!! டேய்!! ஆட்டோ பழகும் போதும் இதையேதானே சொன்னே?? ஆனா என்ன நடந்ததுனு நல்லா யோசிச்சுப் பாரு....

Auto flashback  adutha pathivil. ..