Tuesday, 21 December 2010

நாங்கெல்லாம் கணக்குல அனகோண்டா (Anagonda )


இது நண்பர் வெங்கட்'இன் உலகப் புகழ் பெற்ற பதிவான நாங்கெல்லாம் கணக்குல டைனோசர்!!! பதிவுக்கு எதிர் பதிவு கிடையாது... என்னா இது அந்த அளவுக்கு  மரண மொக்கையா இருக்காது..  
நாம் ஒன்று'க்கு "1 " என்றும், இரண்டுக்கு "2 " என்றும் எழுதுறோமே! (ஆஹா! என்னா கண்டுபிடிப்புய்யா!!! ) அது ஏன்னு எப்பவாவது சிந்திச்சிருக்கோமா? (ஆபீஸ்'ல வெட்டியா குந்திட்டு இருந்தா இப்படித்தான்ய யோசிக்க தோணும்...    புரிஞ்சுதுல்ல ...சரி விடு...) ஏற்கனவே நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையும் ஐன்ஸ்டீன் இன்னும் பலதையும் (அது என்ன'ன்னு  தெரிஞ்சா சொல்ல மாட்டோமா?)  கண்டு பிடுத்து விட்டதால் நாம நம்ம மூளையை..  அதாங்க "GRAINN "னும்பான்களே!  பாவிச்சு (இதுல காமெடி கீமெடி ஏதும் இல்லையே)  ஏதாவது கண்டு பிடிக்கலாம்'னு  யோசிச்சப்போ இந்த மேட்டர் மனதில் பட்டது.. ( மூளைய பாவிச்சா மூளைலதனே படனும். அது  எப்படியா மனசுல பட்டிச்சு..)அப்படின்னு சொன்ன நம்பவா போறீங்க...  எங்க இருந்து சுட்டா என்னங்க... மேட்டர் நல்ல இருந்தா சரிதானே! எந்தக் கோழி போட்ட முட்டையா இருந்தா நமக்கென்ன... ஆம்லேட்'தானே முக்கியம்...


இப்போ மேட்டர்'க்கு  வருவோம்... நாம் ஏன் ஒன்றை "1 " எனவும் இரண்டை "2 " எனவும் எழுதுகின்றோம். இதுல கூட லாஜிக் இருக்குங்க.... நாம் முன்னைய கால இலக்க வடிவங்களை (அது என்னங்க முன்னைய காலம் பின்னைய காலம்'ன்னு கேட்காதீங்க... எதை எதையோ மாத்துற நம்மாளுங்க, இலக்க முறையை மட்டும் சும்மா விடுவாங்களா?) பார்த்தோமானால், அதற்கு பதில் கிடைக்கும். ஆமாங்க... இந்த இலக்க உருக்களில் உள்ள கோணங்களின்  எண்ணிக்கையே அந்த இலக்கமாகும்... உதாரணமாக "1 " என்பதில் ஒரு கோணம் உண்டு..."2 " என்பதில் இரு கோணம் உண்டு.. "0" என்பதில் எந்த கோணமும் கிடையாது... இவ்வளவுதான்  மேட்டர்...


 இதை ஏற்கனவே E -mail 'ல  பார்த்திருந்தால் ஓட்டு, கருத்தையும் போட்டுட்டு போயிருங்க... பார்த்திருக்காவிட்டாலும் வாசிச்சுட்டு  ஓட்டு, கருத்தையும் போட்டுட்டு போயிருங்க... நீங்க ஓட்டு போட்டா போதும்... ஓட்டு போட்டா மட்டும் போதும்..

Monday, 13 December 2010

நித்தியானந்தா எந்த குற்றமும் அற்றவர் என்பதை நிரூபிக்கும் ஒரு ஆதாரம் சிக்கியுள்ளது..

ரஞ்சிதா..
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>
>>>>>அட! அயோக்கியப் பயலே!
வெறும் பெயர சொன்னதுக்கு இந்த வேகத்துல வர்றியே...
பக்கத்துல இருந்து பார்த்த.. 
அந்த முற்றும் துறந்த சாமியார்
மனசு எவ்வளோ பாடு பட்டிருக்கும்..
யோசிங்க.... நல்லா யோசிங்க...


Friday, 10 December 2010

DECEMBER மாத PIT புகைப்பட போட்டிக்கான போட்டோ..

இந்த மாத PIT புகைப்பட போட்டிக்கான தலைப்பு "அதிகாலை" . சரி நாமளும் நாம் சுட்ட (கேமரா'ல சுட்டதுங்க.. வேறு யார்கிட்டயும் இருந்து கிடையாது) போட்டோ'ல இருந்து நம் பங்குக்கு ஏதாவது அனுப்பலாமேன்னு பார்த்தா, எத அனுப்புறதுன்னு ஒரே குழப்பம்.(நம்ப முடியலையே!)  இருக்குற எல்லா போட்டோவுமே சூபெர்னு நீங்க நெனச்சா உங்கள நீங்களே தட்டி எழுப்புங்க.. ஒன்னு கூட உருப்படியா இல்ல... (அதானே பார்த்தேன்)  


எதோ நம்மளால முடிஞ்ச கொஞ்ச  போட்டோ'வ   போட்டிருக்கேன்.. இதுல எது நல்லாயிருக்கும்னு நீங்களே சொல்லுங்க... எதுவுமே  நல்லாயில்லன்னு சொல்லி (அதுதானே உண்மை) என் குழந்த மனச ( 20 வருசத்துக்கு முன்னாடியா?)  நோகடிச்சிரதீங்க... அழுதுருவேன்... ஆமா..நெசமாவே அழுதுருவேன்..1 . SHARJAH 'வின் அழகிய கடற்கரை, காலை வேளையில்...
2 . இலங்கையின்  KURUNEGALA -MATALE வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..

3. இலங்கையின்  KURUNEGALA -MATALE வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
4 . இலங்கையின்  KURUNEGALA -MATALE வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
5 . இலங்கையின்  MELSIRIPURA  -MATALE நகரங்களை இணைக்கும் bypass  வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
6 . இலங்கையின்  MELSIRIPURA  -MATALE நகரங்களை இணைக்கும் bypass  வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
7 . ஐக்கிய அரபு இராச்சியத்தில் RAS -AL -KHAIMAH 'வின் WADI AL SFINI எனும் ஊரின் சூர்யோதயம்..
  
8 . ஐக்கிய அரபு இராச்சியத்தில் ABU DHABI 'யிலுள்ள SHIEIK ZAYED MASJITH 'இன் அதி காலை தோற்றம்.
9 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து .... ஒரு குளிர் கால அதி காலை வேளையில்.. 
10 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து BURJ DUBAI & BUSINESS BAY .   ஒரு குளிர் கால அதி காலை வேளையில்..
11 . இதுவும் ஒரு அதி காலைதான் . நம்புங்கள்..
12 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து SHEIK ZAYED ROAD ... ஒரு குளிர் கால அதி காலை வேளையில்.. 
13 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து JUMEIRA & BURJ AL ARAB 7 STAR HOTEL. ஒரு குளிர் கால அதி காலை வேளையில்.. 
ம்ம்ம். உங்களுக்கு புடிச்ச போட்டோ'வின் இலக்கத்தை சொல்லுங்க.. இன்னும் 4 நாட்கள்தான் உள்ளது..ம்ம்ம்    ம்ம்ம் சீக்கிரம்...

Wednesday, 8 December 2010

தில்லாலங்கடி


ஒருத்தன் கையில்
மினு மினுப்பான  உலோகம் ஒன்று கிடைத்தது..
அதை வைத்து என்ன செய்யலாம்?
என்று யோசிச்சவன் மண்டையில 
உதிச்சது ஒரு உல்டாலக்கடி ஐடியா 
அதன்  படி 
சில தங்க காசுகளை  செய்து
விற்றுவிட்டான்.
பய புள்ளக்கு சந்தோசம் தாங்க முடியல….
ஆனால்
சில நாட்களில் தெரிந்தது
அந்த உலோகம் தங்கத்தை விட
  ஐந்து மடங்கு பெறுமதியான
பிளாட்டினம் (Pt) எனும் உலோகம் என்று…
(இது ஒரு உன்மைச் சம்பவம்)

Monday, 6 December 2010

மச்சி........ எனக்கு கல்யாணம் ஆச்சுடா……….

நான் விடுமுறையில் இருந்த போது பழைய நன்பன் (ப்லாக் எழுத ஆரம்பிச்சதுல இருந்து எல்லானுமே பழைய நன்பன் லிஸ்ட்`ல சேர்ந்துட்டானுங்க.. எவனுமே நம்ம கூட கூட்டு வைக்கிறது கிடையாது) (”ஓட்டு போடு ஓட்டு போடு”னு நீ குடுக்குற டார்ச்சர எவன்யா தாங்குவான்) ஒருவனை சந்திக்க நேர்ந்தது. அவனுக்கு புதுசாத்தான் கல்யாணம் ஆச்சு. அவனுக்கும் எனக்கும் நடந்த சில உறையாடல்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இதை வாசித்து நீதி வழங்குமாறு வேண்டுகிறேன்….சந்திப்பு 1:

நன்பன் : டேய் மச்சி! முன்பு இங்குதானடா நாம கிரிக்கட் விளையாடுவோம்

நான் : ஆமா! அதுக்கென்ன? இப்பவும் விளையாடினா போச்சு!

நன்பன்: இப்பொ முடியாதுடா………

நான்: ஏண்டா? உடம்பு சரியில்லையா?

நன்பன்: இல்லடா, எனக்கு கல்யாணம் ஆச்சுள்ள…….

நான்:???????????????????????????????????????????
(பார்ரா….)சந்திப்பு 2:

நன்பன்: ஞாபகம் இருக்காடா! முன்பு ஆற்றுக்கு குளிக்க போவோமுள்ள……

நான்: ஆமாண்டா! இன்றும் போவோமா?


நன்பன்: இல்லடா மச்சி! முடியாதுடா….

நான்: ஏண்டா? ஆத்துல தண்ணி இல்லயா?

நன்பன்: அது இல்லடா, எனக்கு கல்யாணம் ஆச்சுல்ல……….

(உன்னைய நம்பி எவன்யா ஆத்துல இறங்குவான்?)

நான்: ???????????????????????????????????
(சரி விடு)சந்திப்பு 3:

நன்பன்: முன்பு க்ரேஸி வீட்டு மொட்ட மாடில இருந்து ராத்திரி பூரா பேசிட்டிருப்போமுள்ள…..

நான்: ஆமாண்டா…! இன்றும் SET ஆகுவோமா?


நன்பன்: முடியாதுடா! …………………………………..
(நீ கூப்பிட்ரதே ஓ.சி. டீ குடிக்கதான்னு அவனுக்கு தெரிஞ்சுரிச்சி போல…)நான்:?????????????????????????????????????????
(ஷப்பா….. இப்பவே கண்ண கட்டுதே…)சந்திப்பு 4:

நன்பன்: முன்பு விடுமுறை வந்தா சுற்றுலா போவோமுள்ள….

நான்: ஆமா! நானும் போகலாம்னு இருக்கேன்.வாரியா?

நன்பன்: நோ!!!!!!

நான்: ஏண்டா? உனக்கு வாந்தி பேதியா?

நன்பன்: மச்சி! கல்யாணம் ஆச்சுடா.. அப்படியெல்லாம் வெளில சுத்த முடியாதுள்ள…

நான்:??????????????????????????????????????????
(முடியல…..)சந்திப்பு 5:

நான்: மச்சி! நம்ம நன்பன் xxx வீட்டுக்கு போரேன்… வாரியா?

நன்பன்:……………………………….


நான்: ஓ! ஸாரி…. உனக்கு கல்யானம் ஆச்சுல்ல………..
(என்ன கொடும சார் இது)

ஏனுங்க… கல்யாணம் என்பது இவ்வளவு பெரிய கொடுமையா? இல்ல, இவனுங்களே இப்பாடி ஆக்கிக் கொள்ரானுங்களா`ன்னு புரியல… யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா………

இதற்கு விளக்கம் சொல்வதால் வரும் முன் விளைவு, பின் விளைவு, பக்க விளைவு, மேல், கீழ் விளைவு என எதற்கும் இந்த ப்லாக் பொறுப்பேற்க மாட்டாது……

Tuesday, 30 November 2010

கல் நெஞ்சக்காரனின் காதல்


உன்னை பார்த்தால் 
கல்லுக்கும் காதல் வரும் 
இந்த கல் நெஞ்சக் காரனுக்கு 
வந்ததில் என்ன ஆச்சரியம்.. 
Sunday, 28 November 2010

புகைப்பட துறையின் மைல் கற்கள்

எப்பவுமே மொக்கயாவே எழுதுறோமே(இப்பவாவது புரிஞ்சுதே) .... நாமும் ஒரு சீரியஸ் பதிவு எழுதலாமேன்னு ரொம்ப நாள் யோசிச்சிகிட்டே இருந்தேன் (அப்படியே இருக்க வேண்டியதுதானே). அதனால்தான் இந்த திடீர் சீரியஸ் பதிவு... 
புகப்படத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய "புகைப்படச் சுருளை" கண்டுபிடித்த Eastman's Kodak (இடது) மற்றும் தாமஸ் அல்வா எடிசன் (வலது) 

உலகில் புகைப்படத்துறை அறிமுகமாகி 150 வருடங்கள் தாண்டிவிட்டது. எத்தனையோ சிறந்த புகைப்படங்கள் பிடிக்கப் பட்டிருந்தாலும், எத்தனையோ சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும் இத்துறையில் மைல் கல்லாக இருக்கும் நான்கு சிறந்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். 


(நம்மாளுங்க சிந்திக்கிற & செயல் படுற ஸ்டைலே  தனிதான்ப்பா...)


ஆறுதல் பரிசு...
 

ஆஹா இதுதாண்டா ஸ்டைல் ...
மூன்றாம்  பரிசு 

என்னவொரு பொருத்தம் என்னவொரு expression ... ஷப்பா..இரண்டாம்  பரிசு 


முடியல.... room போட்டு யோசிப்பாங்களோ!

முதலாம் பரிசு பெற்ற உலகின் மிகச் சிறந்த போட்டோ 


*******


*******


*******


*******

*******


*******


*******
என்ன கொடும சார் இது....
என்னது சீரியஸ் பதிவா? இன்னுமாய்யா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டு இருக்கு... ஐயோ!  ஐயோ! 

Wednesday, 24 November 2010

வெளிநாட்டு வேலை
"உழைக்க வேண்டிய 
வயசு இதுதானடா"
என்று விமானம்
ஏறி வந்தோம்,
வாழ வேண்டிய வயதும் 
இதுதான் என்பதை 
மறந்து.....


Saturday, 20 November 2010

நான்கு வேதங்களிலும் பெற்றுக்கொண்ட 12 விடயங்கள்..

கஹ்புல் அஹ்பார் (ரலி) அவர்கள் 4 வேதங்களையும் ஆராய்ந்து பெற்றுக்கொண்ட 12 விடயங்கள்..


1. ஆதமுடைய மகனே(மனிதர்களே)  சகல வஸ்துக்களும் உனக்காக படைத்துள்ளேன், உன்னை எனக்காக படைத்துள்ளேன்.

2. நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசி.

3. என் ஆட்சி இருக்கும் வரை என் அல்லாத யாரையும் பயப்படாதே.

4. மேல் வானத்திலிருந்து கீழ் பூமி வரை சகல வஸ்துக்களும் என்னை தேடுகிறது, நானோ உன்னை தேடுகிறேன். ஆனால் நீயோ என்னை விட்டு விரண்டோடுகிறாய்.

5. உன்னை ஒரு இந்திரிய துளியால் படைத்தேன், உனது ரிஸ்கின்(உணவு மற்றும் தேவைகள்) ஏற்பாட்டயும் நானே செய்துள்ளேன்.

6. எனது கஸானா(பொக்கிஷம்) முடிவடைவதில்லை, எனது கஸானா(பொக்கிஷம்) இறுக்கும் வரை உனது ரிஸ்க்(உணவு மற்றும் தேவைகள்)  தவறிப்போகும் என்று பயப்படாதே.

7. என்னிடம் நாளைக்குறிய ரிஸ்க்கை(உணவு மற்றும் தேவைகள்) இன்றே கேட்காதே, ஏனெனில் நாளைய அமலை(நற்செயல்கள்) இன்றே உன்னிடம் நான் கேட்பதில்லை.

8. நீ எனது விதியை பொருந்திக்கொண்டால் உனது மனதுக்கு நான் நிம்மதியை அளிப்பேன், எனது விதியை பொருந்திக்கொள்ளாவிட்டால் உலகை உன் மீது ஏவி விடுவேன், அது மலையில் காட்டு விலங்குகள் திரிவதை போல் திரிவாய், எனினும் உனக்கு நான் விதித்ததை தவிர வேறெதையும் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

9. உனக்காக என் மீது கோபப்படாதே மாறாக எனக்காக உன் மீது கோபப்படு.

10. என் அல்லாதவர்களை நெருங்க முயலாதே, நான் உனக்கு அருகில் இருக்கிறேன். நீ எப்போது என்னை தேடினாலும் என்னை அடைந்துகொள்வாய்.

11. நீ சிராத்தல் முஸ்தகீம் பாலத்தை தாண்டி உனது இரு கால்களையும் சுவர்க்கத்தில் வைக்கும் வரை எனது வேதனையை விட்டும் அச்சம் தீர்ந்து விடாதே.

12. எனது விதியை பொருந்திக்கொள்ளாமலும், எனது வேதனையை சகித்துக்கொள்ளாமலும் எனது உபகாரங்களுக்கு நன்றி செலுத்தாமலும் இருப்பவன் எனது வானத்தின் கீழ் இருந்து வெளியாகி வேரொறு இறைவனை தேடிக்கொள்ளட்டும்.

குறிப்பு:-
மேற்கூறப்பட்ட இந்த ஸஹாபி(முஹம்மது நபியின் தோழர்)  இந்த 12 விடயங்களையும் ஒரு நாளைக்கு 3 தடவை வாசித்து விட்டு அவருடைய அலுவல்களுக்கு செல்வார்.

Tuesday, 14 September 2010

பட்டாளத்தானிடம் பட்டால்…….ஒரு முறை கொழும்பிலிருந்து
பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது
நம் பஸ்ஸிற்கும்
முன்னாள் சென்ற பஸ்ஸிற்கும் போட்டியாகி விட்டது.
முன்னாள் சென்ற பஸ் ஓட்டுனர்
மெதுவாக சென்றதுமல்லாமல்
நமக்கு முந்திச் செல்ல இடமும் குடுக்கவில்லை.
நம் பஸ்ஸின் ஓட்டுனரோ சத்தம் (Horn)
எழுப்பிக் கொண்டே செல்ல
(என்னையும் தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டானுங்க..)
அதில் கடுப்பான முன்னாள் பஸ்ஸின் ஓட்டுனர்
பாதையின் குறுக்காக பஸ்ஸை நிறுத்தி விட்டு
இறங்கி வந்து நம்ம நம் பஸ் ஓட்டுனரிடம்
சண்டையிட்டு அடிக்கவும் செய்தார்.

தமது ஓய்வுக் காலம் முடிந்து யுத்தக் களத்துக்கு
சென்று கொண்டிருந்த நான்கு படை வீரர்கள்
நம் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே கடுப்பில் இருந்தவர்கள்,
இதை பார்த்தவுடன் கோபத்தின் உச்சத்துக்கே சென்றனர்.
(எத்தனை மீட்டர் உயரம்?)
இறங்கிச் சென்று வசமாக மாட்டிய
அந்த ஓட்டுனரை கும்மு கும்மு என்று கும்மினர்.
தாம் படித்த எல்லா கலைகளையும் ஓட்டுனர் முகத்தில்
ஒத்திகை பார்த்தனர்…..
அவர் வந்த வேகத்திலேயே திரும்பி ஓட
இவர்களும் அடுத்த பஸ் வரை
விரட்டி விரட்டி உதைத்தனர்.

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஓட்டுனர்
அதன் பின் நம்ம பஸ்ஸுக்கு வழி விட்டு விட்டு
வலியுடன் பின்னால் வந்தார்.
மீண்டுமொறு மீன் தன் மீதே மசாலாவை
தடவிக்கொண்டு எண்ணையில் குதித்தது…
(நான் தற்போது விடுமுறைக்காக இலங்கை வந்திருப்பதால், பதிவுலக நன்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட முடியவில்லை. மன்னிக்கவும். ஆனாலும் பதிவு போடாமல் உங்களை நிம்மதியாக இருக்க விடவும் மனமில்லை. அதனால்தான் இந்த திடீர் பதிவு........ )

Sunday, 5 September 2010

மான்புமிகு மன்னனும் மக்கு மங்குனியும்..


ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜ திலக etc….. பக்கத்து நாட்டு மன்னன் பரதேசி வந்து நம் மன்னனை சந்தித்து விட்டு போகிறார்….

அவர் போனதும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்த மங்குனி அமைச்சரை கூப்பிட்ட மன்னன்…..
மன்னன் : தற்பொழுது வந்து போவது யாரென்று தெரியுமா?
மங்குனி : அவனா? பக்கத்து நாட்டு பரதேசி
மன்னன் : யோவ்!!! மங்குனி %(&(*&&%*^$%#%^ (சென்ஸார்) ஒரு நாட்டு
          மன்னனை அப்படியா கூப்பிடுவது?
          ஒரு மரியாதைக்கு “திரு” என்று அழக்க வேண்டுமென்று உமக்கு
          தெரியாதா….
          (மன்னனின் கோபத்தை பார்த்த மங்குனி வேறு வழியில்லாமல்..)
மங்குனி  : புரிந்தது மன்னா..எல்லாம் நன்றாக புரிந்து விட்டது.

அடுத்த நாள்..
மன்னன் : மங்குனி… எனக்கு வைத்திருந்த பால் எங்கே?
மங்குனி : (எதையெல்லாம் அமைச்சரிடம் கேட்பது என்ற விவஸ்தையே
           இல்லையா?. மங்குனி…உஷார்.. நேற்று பட்ட அவமானம் இன்று                                                    
           படக்கூடாது…)
           மன்னா.. அதை ”திரு” பூனையார் குடித்து விட்டார்..

ஏற்கனவே பாலை இழந்த கடுப்பில் இருந்த மன்னனுக்கு இந்த பதிலை கேட்டதும் பல்ஸ் எகிறியது

மன்னன் : யோவ்!!! மங்குனி %(&(*&&%*^$%#%^ (சென்ஸார்)
          வாழ்க்கையிலேயே  “திரு” என்ற வார்த்தையை பாவிக்கக்
          கூடாது.
மங்குனி  : !!!!!!!!!!!
(மங்குனி இதற்கும் வழமை போல தலையாட்டுகிறார்.)

மூன்றாவது நாள்
மன்னன் : மங்குனி… என் வாள் எங்கே?
மங்குனி : (அதை பற்றி போருக்கு போகின்றவர்தானே கவலை பட    
          வேண்டும். நம் மன்னன் எதற்கு கவலைப் படுகிறார். ஒரு
          வேலை அதற்காக இருக்குமோ, ஒரு வேலை இதற்காக
          இருக்குமோ!! என்று யோசித்தவாறு…. தயக்கத்துடன்….)
          மன்னா சமையல் கட்டில் எதாவது அவசர தேவையா?

மன்னன் : யோவ்!!! மங்குனி %(&(*&&%*^$%#%^ (மீண்டும் சென்ஸார்)
          (கோவம் கொலை வெறியாக மாறினாலும் நிலைமையை
          கருத்தில் கொண்டு … மங்குனியின் காதருகில் சென்று )
          யோவ்! மங்குனி… முதுகு பயங்கரமா அரிக்குதுய்யா……..
          என்ன செய்வியோ.. ஏது செய்வியோ தெரியாது. அவசரமாக
          என் உடை வாள் வேண்டும்.
மங்குனி : (தயங்கியவாறே…)

          அது வந்து…….
         
          அது வந்து……..
         
          மன்னா.. உங்கள் வாளை நேற்று இரவு “டன் வந்து டிட்டுப்
          போய்விட்டான்”
மன்னன் : (ஒன்றும் புரியாத மன்னன்.)
          யோவ்… மக்கு மங்குனி நீர் என்னய்யா சொல்கிறீர்?
மங்குனி : (சென்ற முறை மாதிரி இந்த முறை பல்பு வாங்கக் கூடாது.
          உஷார்…..)
          ஆமாம் மன்னா.. உங்கள் வாளை நேற்று இரவு “டன் வந்து
          போய்விட்டான்”
மன்னன் கோபத்தில் மங்குவின் சங்கை கடிக்கிறார். நிலவரம்                               மோசமடைவதை உணர்ந்த மங்கு………. மீண்டும் கத்துகிறார்.
மங்குனி : மன்னா.. உங்கள் வாளை நேற்று இரவு “திரு”டன் வந்து                  
          ”திரு”டிட்டுப் போய்விட்டான்”

Wednesday, 1 September 2010

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்


என்னையும் ஒரு பதிவராக மதித்து தொடர் பதிவுக்கு அழைத்த நன்பன் ஹாய் அரும்பாவூர் முபாரக்`கிற்கு என் நன்றிகள் ( முபாரக்`ற்கு 4 குச்சி மிட்டாயும் 3 குருவி ரொட்டியும் பார்சல்....)
(யோவ் நீ பதிவெழுத வந்தே ஒரு மாதந்தான் ஆச்சு… அதுக்குள்ளயா...? சாதனை படைத்து விட்டு கின்னஸில் எழுதுவது உங்க பாணி…. கின்னஸில் எழுதி விட்டு சாதனை படைப்பது எங்க பாணி…. நோ நோ… பாணியைப் பற்றி பேசினா யாருப்பா அது சாணி அடிக்கிறது.. )

பதிவுலகில் எனக்கு ஆதரவு தரும் பதிவர்களுக்கும் என் இம்சை தாங்காமல் ஓட்டு மற்றும் பின்னூட்டம் இடும் நன்பர்களுக்கும் என் நன்றிகள்.

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்…
அது சம்பவம் அல்ல சரித்திரம்..
அது விபத்து அல்ல விசித்திரம்
சினிமாவில் ஹீரோ அறிமுகக் காட்சியில் கெமராவக் கொஞ்சம் ஆட்டுரது வழக்கம். அதுதான் நாமளும் கொஞ்சம் செய்து பார்க்கலாமென நம்ம கெமரா காரருக்கு குடுத்த இம்சையில் பயபுள்ள போட்டோவை இப்படி எடுத்துவிட்டான். (யோவ்…… உன் போட்டோவ விட இது எவ்வளவோ நல்லாயிருக்கு)1.அது என்ன புன்னகையே வாழ்க்கை ?
இதை எங்கே சுட்டேன் என்று தெரியாது. ஆனால் ரொம்ப நாளாக என் பெயருடன் எழுதி வருகிறேன்.  அதனால் தலைப்பை தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்க வில்லை.
  பதிவுலகத்திற்கு வர காரணம் ?
        கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் அலுவலகத்தில் பயங்கர பிஸியாக  வலையுலகில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக அழுத்தியதில் ஒரு பதிவு திறந்து விட்டது. அநேகமாக அது “இட்லி வடை”யாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன் பின் நியூஸ் பானை, தமிலிஷ் என அறிமுகமாகி 2 வருடங்கள் வெறும் பின்னூட்டம் மட்டுமே இட்டுக் கொண்டிருந்தேன். பதிவு ஆரம்பிக்க ஆசையிருந்த்தும் ஒரு நமக்கு எழுதுவதில் இருந்த ஆர்வம்!! பற்றி தெரிந்திருந்ததால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.( தப்பிவிட்டோம் என்று சிரிக்க வேண்டாம்.. மீண்டும் வருவேன்)  ஒரு நாள் நன்பர் Mr. Zakir இன் இருப்பிடத்துக்கு சென்ற போது அவர் ”உன்மை உணர்வுகள்” எனும் பதிவு எழுதுவது தெரியவந்தது. அப்போதுதான் ஆஹா நாமும் ஆர்ம்பித்தால் என்ன? என்று யோசித்தேன். எனக்கு சொந்தமா எழுத வராது. எதையாவது சுட்டு நம் பதிவில் இட்டால் கூட இப்போ கும்மு கும்மு என்று குமுறிர்ராணுங்க… என்ன பன்னலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன். எனக்கு பிரச்சனையே அதிகம் எழுத முடியாமையே…அப்பொது கோகுலத்தில் சூரியனில் நன்பர் வெங்கட்`டின் பதிவுகளை படிக்க நேர்ந்தது. ஒவ்வொரு ஆக்கமும் 4- 10 வரிகளில் சும்மா நச்`ண்டு இருக்கும். நாமும் இப்படியாவது ஆரம்பிப்போம் என்று எழுத ஆரம்பித்தேன். அதன் பின்னர்தான் தெரிந்தது, நிறைய எழுதுவது கஷ்டமல்ல.. கொஞ்சமாக எழுதுவதுதான் கஷ்டமென்று…

 எப்படி தொடங்குவது என்று யோசித்த போது Miss. Sumajla அக்காவின் ”ப்ளாக் தொடங்குவது எப்படி?” என்ற பதிவு கிடைத்தது.அதை பின்பற்றி ஆரம்பித்தேன். மின்னஞ்சல் மூலமும் நிறைய உதவிகள் செய்தார்.. பின்பு ப்லாக்`கை மெருகேற்ற நன்பர் Mr. Zakir (உன்மை உணர்வுகள்) மற்றும் நன்பர் Mr. Mubarak (ஹாய் அரும்பாவூர்) ரொம்ப உதவினர்.

 நாமும் எதாவது நாலு பேருக்கு பிரயோசனாமாக எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கிறது. ஆனால் தட்டச்சில் கை வைத்தும் வெறும் மொக்கை மட்டும்தான் வருகிறது.
  2.முதல் பதிவை பற்றி ?
ப்லாக் ஆரம்பித்து ஒரு மாதம் வரை எதுவுமே எழுதவில்லை. வெறுமனே டெம்ப்லேட் மாற்றிக்கொண்டும் விட்ஜெட் மாற்றிக்கொண்டும் காலத்தை ஓட்டினேன். காரணம் முதல் பதிவை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பின்பு ஒருவாறு ”வெள்ளோட்டம்” என்று ஒரு அறிமுகப்படுத்தும் விதமாக எழுதினேன். பின் அபூதாபியிலுள்ள் ஷேக் சையத் மஸ்ஜித் பற்றி எழுதலாம் என எண்ணி அம்மஸ்ஜிதுக்கு சென்று புகைப்படங்களை சுட்டு வந்து ஒரு பதிவு எழுதினேன்.

3.முதல் பாராட்டு 
முதல் பின்னூட்டமாக வந்த பாராட்டு Miss.புவநேவரி ராமநாதன்`னிடம் இருந்து வந்தது. தொலை பேசியில் Mr. Deva அண்ணா, நன்பர் ஞானசேகர் தொடர்பு கொண்டு ஊக்கமளித்தார் (கடந்த வாரம் ஒரு இரவில் நன்பர் முபாரக் தொடர்பு கொண்டு பேசினார். நானும் தூக்க மயக்கத்துடன் பேசினேன், என்ன பேசியிருப்பேன் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன்). Gtalk’இல் நன்பர் பனித்துளி சங்கர் , நன்பர் அருன் ப்ரசாத் போன்றோர் ஊக்கமளித்தனர். Mr. Venkat (கோகுலத்தில் சூரியன்),  என் ஒவ்வொறு எழுத்தாக வாசித்து (என்ன கொடுமப்பா…)  நிறைய Tips தந்தார். இன்றும் இவர்களது சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எப்பொழுதும் பின்னூட்டம் இடும் நன்பர் ஸாகிர், நன்பர் கோமாளி, நூறு கவிதை புகழ் வெறும்பய (கவிஞர் வெறும்பாதி) சௌந்தர், சிரிப்பு பொலீஸ், அருன் ப்ரசாத், அபுல் பசார், அப்துல் காதர், பென்னி, ரியாஸ் இன்னும் இதர நன்பர்களுக்கும் என் நன்றிகள்.

4.பின்னுட்டம் வாக்களிப்பு எதற்கு முன்னுரிமை ?
இரண்டுக்குமே சம உரிமைதான். நம் பதிவு பல பேரை சென்றடைய வாக்கு அவசியம். பின்னூட்டம் மேலும் மேலும்  நம்மை எழுதத் தூண்டும். (”ஐ….   இதுதானா மேட்டரு.. இதுக்கு பின்னாடி உனக்கு பின்னூட்டமே கிடையாது” என்றெல்லாம் சொல்லக் கூடாது)
தொழினுட்ப பதிவுகளுக்கு, பொது அறிவு, வரலாறு போன்ற பதிவுகளுக்கு கட்டாயம் வாக்களிப்பேன். அடுத்த பதிவுகள் பிடித்திருந்தால் வாக்களிப்பேன். Animation Films, ARRahman தவிர்ந்த எந்த சினிமா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதோ வாக்களிப்பதோ கிடையாது.

ச்சும்மா...

5.வலைபதிவை பிரபலம் ஆக்க என்ன செய்விர்கள் ?
இண்ட்லி, தமிழ் 10, உழவு, இலங்கை பதிவர்கள் போன்ற திரட்டிகளில் இணைக்கிறேன். பதிவுலக நன்பர்களுக்கு G Talk, Gmail மூலம் தெரிவிக்கிறேன். நன்பர்களுக்கு கிடைக்கிற Gap`இல் எல்லாம் பதிவு போட்டிருக்கிறேன், படிச்சியா? படிச்சியா? என்று torture குடுக்கிறேன்.  

6.நண்பர்களின் ஆதரவு உள்ளதா ?
என்னது? ஆதரவா? அமீரகத்தில் ஆட்டோ இல்லாத்தால் தப்பித்திருக்கிறேன். இல்லாவிடில் எப்போதோ என் கதை முடிந்திருக்கும். அவ்வளவு இம்சை குடுத்திருக்கிறேன். சில வேளை வாக்களிப்புக்காகவும் பின்னூட்டத்திற்காகவும் மிரட்டலும் விட வேண்டியதாகி விடுகிறது. முன்பெல்லாம் Yahoo Meassanger, G talk, Skype, Face Book என எல்லா வழிகளிலும் மொக்கை போட்ட பயலுக நம்மளை கண்டாலே பின் வாசல்(sign out) வழியாக தப்பிச்சிர்ரானுங்க…. ஆனாலும் நாங்க விட மாட்டோமுள்ள… 

7.உங்களுக்கு பிடித்த  பதிவர்?
புன்னகையே வாழ்க்கை” என்று ஒரு பதிவுங்க.. Mr. Faaique என்று ஒரு பையன் சூப்பரா எழுதுரானுங்க.. அப்படி சொன்னால் நீங்க நம்பவா போரீங்க….
நிறைய பேர் உண்டு…… ஒரு சிலரின் எல்லா பதிவுகளும் பிடிக்கும். சிலவேளை சிலரது ஒரு சில பதிவுகள் மாத்திரம் பிடிக்கலாம்.   

8.வலைபதிவு வந்த பின்பு ஏதும் மாற்றம் ?
அதிகமாக யோசிக்க வேண்டியிருக்கிறது… தூங்கும் நேரம் குறைந்துள்ளது. (அலுவலகத்திலா .. வீட்டிலா?) அதிக நன்பர்கள் வட்டம், அவ்வளவுதான்…..

9.பதிவுலகில் வந்த பின்பு நண்பர்களின் வட்டம் அதிகம் ஆகி உள்ளதா ?
நிறையவே….. உலகமெல்லாம் நன்பர்கள் கிடைத்துள்ளனர்… 


10.மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு ஏதும் கருத்து ?
அடுத்தவர்களுக்கு கருத்து சொல்வதை விட, அடுத்தவர்களிடம் இருந்து நான் கேட்க வேண்டியவை நிறைய இருக்கு…….
பதிவெழுதுதல், பதிவுலகம் பற்றி பாடசாலை மட்டத்தில் அறிமுகம் செய்து மாணவர்களின் நல்ல பதிவுகளை, ஆக்கங்களை வெளியுலகிற்கு கொண்டு வரவும்,  சொந்தமாக பதிவு எழுத வைக்கவும் திட்டம் ஒன்று உள்ளது. நான் அமீரகத்தில் இருந்து கொண்டு இந்த திட்டம் எந்தளவு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. 

Monday, 30 August 2010

மழையில் நனைந்த நன்பன்……
ஒரு நாள் மழை நேரம்
நன்பன் க்ரேஸியின் வீட்டுப் பக்கம் போய்
போய் கொண்டிருந்தேன்.
(அங்க ஏதாவது ப்ரீயா குடுக்குராங்களா?)
வீட்டுக்கு பின் புறத்தில் இருந்து கொண்டு
நன்பன் தனது பயிற்சி கொப்பியை மழையில்
பிடித்து நனைத்துகொண்டிருக்கிறான்.
நானும் பதரிப் போய்
”ஏன்னாச்சுடா?” என்று காரணம் கேட்டால்….
பயபுள்ள மேலதிக வகுப்புக்கு செல்வதென்று,
வீட்டில் சொல்லிவிட்டு படம் பார்க்க செல்வது வழக்கம்.
(அப்போ நீ???  ஹி..ஹி... அதெல்லாம் இங்க எதுக்கு...
அன்று செல்லும் போது கொப்பியை மறந்து விட்டான்.
வரும் போது மழை வந்ததால் நன்கு நனைந்து விட,
இவன் மட்டும் நனைந்தால் போதுமா?
கொப்பியும் நனைய வேண்டுமே!
அதுதான் வீடு வந்ததும் இந்த ஏற்பாடு…
(பாடக் குறிப்புகளுக்கு என்ன செய்வான்?
என்று நீங்கள் கேட்கலாம், அதைதான் முந்திய
இரவே எழுதி வைத்து விடுவானுள்ள்…….)
  (நாம எந்த ground'ல இறங்கினாலும் பிளான் பண்ணித்தான் இறங்குவோமுள்ள...)

Thursday, 26 August 2010

தம்புள்ள மைதானமும், மஹேல ஜயவர்தனயும்...பாகம் II

முதல் பாகத்தை படிக்க ingu kilikkavum...   


இந்த மைதானத்துக்கு ஒரு சிறப்பம்சமும் பெருமயும் என்னவெண்றால் இந்த மைதானம் இருப்பதும் பிரபல பதிவாளர்!! Mr .Faaique (அதாங்க நான்தான்)  இருப்பதும் ஒரே மாவட்டத்திலாகும். என் வீட்டிலிருந்து வெறும் 30 கி.மி. களே…)

பின்பு சாப்பாட்டு இடைவேலையின் போது வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு (அதை நீ சொல்லித்தானா தெரிய வேண்டும்) வந்து உட்கார்ந்து score board`ஐ கவனமாக பார்க்க தொடங்கினோம். பக்கத்தில் ஒரு கூட்டம் குரங்கு வித்தைகள் காட்டிக்கொண்டு இருந்த்தனர். (தொலைக்காட்சியில் வர வேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டு வந்திருப்பானுங்க போலும்…) தப்பித்தவறி கெமராவில் பட்டு (எல்லாம் ஒரு அசட்டு நம்பிக்கைதான்) அதை யாராவது பார்த்து விட்டால், கதை கந்தலாகி விடும் என்பதால் நாம் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தோம்.(நமது இரசாயணவியல் ஆசிரியர் கிரிக்கட்டில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர், அவர் கண்ணில் பட்டால்……..)
அந்த நேரம் மஹேல ஜயவர்தன out of form`இல் இருந்த நேரம். அந்த நேரத்தில் வழமை போலவே சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். இந்த சின்ன மேட்டருக்கா ”மஹேல ஜயவர்தன” என்று தலைப்பு வைத்தாய்? என்று திட்டக் கூடாது. மேட்டர் பின்னால் வரும். (யாருப்பா.. அது திரும்பி பின்னால் திரும்பிப் பாக்குரது…. நான் சொன்னது கட்டுரையின் பின்னால் வருமென்று)

போட்டியின் கடைசி நேரம் இரு ஒவர்களில் 26 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அனேகமானோரது எண்ணம் இலங்கை தோற்று விடும் என்பதாகவே இருந்தது. கடைசி நேரம் டில்ஷான் (அந்த நேரம் டில்ஷான் ஐந்தாவது அல்லது ஆறாவது துடுப்பாட வருவார்) தொடர்ந்து நான்கு நான்கு ரன்கள் அடிக்க முழு மைதானமும் குதூகலித்தது. நாமும் தலை கால் தெரியாமல் ஆடினோம்.

இங்கும் வழமை போல் இந்த நேரம்தான் விதி விளையாடியது, அதாவது, எவனோ ஒரு கமெராக் காரண் சரியாக நம்மையும் ஆட்டத்தையும் வீடியோ எடுத்து அது நேரடியாக ஒளிபரப்பாகி விட்டது. இது நமக்கு தெரியாததால் நாமும் ஆபிரிக்க காட்டு வாசி போல் தொடர்ந்து ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தோம்.

கடைசியில் இலங்கை அணி வெல்ல பரிசளிப்பையும் பார்த்து விட்டு போகலாம் என்றெண்ணினால், அந்தப் பகுதி இரும்புக்கம்பியால் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் அங்கும் இங்கும் தேடிய போது நம் ஆசிய விதிப்படி ஒரு ஆள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு ஒரு வழி இருப்பதை கண்டு பிடித்தோம். உடனே போலீஸின் கண்ணில் மண்னை தூவி விட்டு ( நீ அந்த கும்மிருட்டில் புகுந்தால் எவனுக்குய்யா தெரியும்.. ஓவரா பில்ட்-அப் குடுக்குர…)  அந்த வழியின் மூலம் ஊர்ந்து மைதானத்தை அடைந்தோம். முன்னாள் இலங்கை அணி பலத்த பாதுகாப்புடன் போய் கொண்டிருக்க அந்த சம்பவம் நடந்தது.

எவனோ ஒருவன் பார்வையாளர் பகுதியில் இருந்து “யோவ் மஹேல…… உனக்கு கிரிக்கட் சரி வராது. நீ வீட்டுக்கு போய் வேறு எதாவது வேலை பார்” (வேறு என்ன வேலை செய்வார்’? யாருக்காவது guess பண்ண முடியுமா?) என்று சத்தம் போட மஹேல ஜயவர்தனயும் தன் பங்குக்கு “யோவ் எவன்யா அது? தைரியமிருந்த்தால் வெளியே வாய்யா..” என்று சத்தம் போட… இதை கொஞ்சமும் எதிர் பாராத அந்த சௌண்ட் பார்ட்டி கூட்டதுக்குள் புகுந்து மறைந்தான்.

அதன் பின் வந்த காலங்களில் மஹேல ஜயவர்தன சிறந்த முறையில் விளையாடி அணியின் ஒரு சிறந்த தலைவராகவும் தன்னை வெளிப்படித்தினார். இன்றைய உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களை பட்டியலிட்டால் அதில் மஹேலவுக்கு ஒரு உயர்ந்த இடம் (கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம்? என்றெல்லாம் கேட்கக் கூடாது.) இருக்கிறது. இது அவரது தன்னம்பிக்கைக்கு நல்ல எடுத்துக்காட்டு..


நாம் திரும்பி வரும் போது மாத்தளை நகரம் வர பஸ் இல்லாமல் ஒரு லொரியில் ஏறி வழியில் ஓரிடத்தில் இறங்கி இன்னோர் லொரியில் ஏறினோம். அதில் ஏறிய பின்னர் தான் தெரிந்தது அந்த ஓட்டுனர் போதை வஸ்து பாவிப்பவர் என்று. வேகம் என்றால் அப்படியொறு நம் வரலாறு காணாத வேகம்… ஆஹா…. அன்று நம் வாழ்வில் கடைசி நாள் என்று நினைத்துக்கொண்டு நம் கைகளை இருக பிடித்துக்கொண்டு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் பாடசாலையில் சொல்ல நாம் ஒவ்வொரு பொய் தயாரித்துக் கொண்டு போக, நாம் கிரிக்கட் பார்க்கப் போன விடயம் தொலைக்காட்சியில் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருந்ததால் முழுப் பாடசாலையும் பரவியிருந்தது. இது தெரியாமல் நாம் இரசாயணவியல் ஆசிரியரிடம் போய் பல்லித்து மாட்டிக் கொண்டு வழமை போல் வாங்கிக் கட்டினோம்.  (நம்ம கதைகளில் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கு பினிஸிங் சரியில்லையே…)

Wednesday, 25 August 2010

தம்புள்ள மைதானமும், மஹேல ஜயவர்தனயும்...


2003ம் ஆண்டு நாம் உயர் தரம் படித்துக்கொண்டு இருக்கையில் தம்புள்ள மைதானத்தில் இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் கிரிக்கட் போட்டி நடக்க இருந்தது. இதை தெரிந்தவுடன் நானும் டட்ஸனும் ராஜாவும் போக முடிவெடுத்தோம். ஆனால் அன்று பாடசாலை நடக்கும் தினம், ஆனாலும் நமக்கு ரிஸ்க் எடுக்குரது ரஸ்க் சாப்பிடர மாதிரி என்பது நம் பதிவுகளை தொடர்ந்து!!! படிக்கும் (இதை எழுதும் போது உனக்கே சிப்பு வந்திருக்குமே சிப்பு..)  இதயம் பலவீனமில்லாத நல்லுள்ளம் படைத்த நன்பர்களுக்கு தெரியும்.எனவே, பாடசாலைக்கு முழுக்கு போட்டு விட்டு போவதென்று முடிவெடுக்கப் பட்டது. 

பாடசாலைக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொல்லி செய்தி அனுப்பிவிட்டோம், (அது எப்பவவாவது லீவு போடறவன் செய்றது..)  இதில் எனக்கும் ராஜாவுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை காரணம் (உங்களையெல்லாம் எவன் கணக்கிலேடுத்தான்?) நாம் அந்த ஊரில் தங்கி படித்துக்கொண்டிருந்தோம், ஆனால் டட்ஸனோ வீட்டில் இருந்து வெளியேறுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்பதால் அவன் வீட்டுக்கே சென்று கூட்டி வருவது என்று முடிவு செய்தோம். (சிங்கத்தையே அதன் குகைக்கு சென்று சந்திப்பதுதான் நம்ம ஸ்டைல்( இலங்கயில் சிங்கம் இல்லாததால் தப்பிச்சேன்).

சரியாக போட்டி தினத்தன்று நாமும் தயாராகி டட்ஸனின் வீட்டை அடந்த்தோம். நமது திட்டம் டட்ஸனின் தந்தை வீட்டை விட்டு வெளியேறியவுடன் நாம் டட்ஸனுடன் தப்பிப்பதே. ஹொலிவூட் படங்களுக்கு நிகராக  திட்டம் போட்டுவிட்டு போய் வசமாக  டட்ஸனின் தந்தையிடம் மாட்டிக்கொண்டோம் (எந்தவொரு விஷயத்தையும் நீ ப்ளான் பண்ணினா இப்படித்தான் இருக்கும்). பிறகு என்ன? ஆரம்பிக்க வேண்டியதுதானே…..!! திணர திணர கதர கதர திட்டு விழுந்தது. எல்லாம் ஒருவாறு முடிந்ததவுடன் ”வை ப்லட் சேம் ப்லட்” என மூவரும் துடைத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினோம்.  (அவ்வளவு திட்டியும் திருந்தவில்லை??? அப்பவே திருந்தியிருந்தா இப்போ எதுக்கு ப்லாக் எழுதிட்டு இருக்கனும்)
தம்புள்ள விகாரை 
 நமது திட்டப்படி முதலில் தம்புள்ள விகாரைக்கு சென்று சும்மா சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்த குரங்குகளுடன் குத்தாட்டம் போட்டு அதை  போட்டோ எடுத்து விட்டு (போட்டோல எப்படிய்யா வித்தியாசம் கண்டு பிடிச்சே) அப்படியே மைதானத்துக்கு நடையை விட்டோம். நமக்கு மைதானம் இருந்த இடம் தெரியாததால் ரொம்ப தூரம் நடக்க வேண்டியாகிவிட்டது. ஒருவாறு மைதானத்தை அடைந்து டிக்கட்!! எடுத்து விட்டு (இதென்ன புதிய பழக்கம்) ஒரு வாறு ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்தோம். நாம் என்ன வி.ஐ.பி எரியாலயா உட்கார்ந்திருப்போம்… வெளியில் இருந்த கொங்ரீட் படிக்கட்டுதான் நம்ம இருக்கை.

இங்கு வந்ததுதான் புரிந்தது வீட்டில் பார்ப்பதே சிறந்தது என்று.. வேறென்ன… ஒன்றுமே சரியாக தெரியவில்லை. எல்லோறும் சிறிது சிறிதாக தெரிந்தனர். (ஊர்ல தென்னந்தோப்புல விளையாடியவநெல்லாம் சர்வதேச மைதானத்துக்கு போனால் அப்படித்தான் இருக்கும்)     இப்பொதுபோல் பெரிய டிஜிட்டல் திரைகள் அப்போது இருக்கவில்லை (நீ எடுத்து 10/= டிக்கட்டுக்கு உட்கார இடம் கிடைத்தே பெரிய விடயம்.. டிஜிட்டல் திரை வேறு கேட்குதா)
எல்லோரும் பயங்கரமாக கத்திக் கூத்தாடும் போது எதோ முக்கியமாக நடந்து விட்டது தெரிந்து நாமும் சேர்ந்து பயங்கரமாக (நீ சிரித்தாலே அப்படித்தானே  இருக்கும்) கூத்தாடுவோம். பின்பு என்ன நடந்தது என்று score board`ஐ பார்த்து "என்ன நடந்தது?" தெரிந்து கொள்வோம். கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்தால் நியூஸிலாந்து 140 ரன்கள் அடித்து இருந்தது.

(மைதானம் திறந்த புதிதில் 140 ரன்கள் அடிப்பதே பெரும் பாடாக இருந்தது. கடைசியாக நடந்த போட்டியில் அப்ரிடி அடித்த அடியை பார்க்கும் போது இது தம்புள்ள மைதானம்தானா? என்ற சந்தேகம் வந்தது.)
இந்த மைதானத்துக்கு இன்னுமொரு சிறப்பம்சம் உண்டு, ஆனால் அதை அநேகமானோர் அறிய மாட்டீர்கள். அந்த விபரம்... மற்றும் தொடர்ச்சி.. 
தொடரும்...