Friday, 20 May 2011

ஓடு ராஜா ஓடு...



ச்சின்ன வயசுல கண்ணாமூச்சு விளையாடிக் கொண்டிருந்த காலம், ஒரு நாள் அண்ணன் ஒருவர் “இன்று கிரிக்கட் விளையாடலாமா?’னு கேட்க சந்தோசம் தாங்க முடியல. அந்த வயசுல கிரிக்கட் விளைய்யாடுரதுன்னா,  நாம வளர்ந்துட்டோமுன்னு அர்த்தம்...

ஆனாலும் நாம ஆழம் அறியாம காலை விட மாட்டோமுள்ள.. முதலிலேயே இரண்டு Condition போட்டேன்.
1. நான் துடுப்பாடும் போது பந்தை மெதுவாக வீச வேண்டும்.
2. எனக்கு துடுப்பெடுத்தாட 3 சந்தர்ப்பம் தர வேண்டும் (மொத்தம்3 பந்து போடனும்’னு சொல்லு)

கேலவலமாக ஒரு லுக்கு விட்ட அண்ணன் (எல்லோருமே உன்ன அப்பிடிதானே பாக்குராங்க..) சரி’னு சொல்ல விளையாட போயாச்சு... கொஞ்ச நேரத்தில் நாம துடுப்பாடும் சந்த்ர்ப்பம்மும் வர, அண்ணே!! மெதுவா போடனும்’னு நம்ம Condition'ஐ இன்னொரு முறை ஞாபகப்படுத்திக் கொண்டு, களத்தில் இறங்க.....

முதல் பந்தே மெதுவாக வந்தாலும் அடிக்க முடியல.. “அண்ணே!!! இன்னும் மெதுவாக போடுங்க”னு சொல்ல, ”யோவ் இன்னும் மெதுவா வீசினா, பந்து பாதி வழியிலேயே நின்னுரும்யா”னு சொல்லி முடிந்ததள்வு மெதுவாக போட நானும் முழுப்பலத்தையும் சேர்த்து துடுப்பை சுழற்ற பக்கத்து தோட்டத்தில் உள்ள புதர் காட்டுக்குள் விழ, பந்தை எடுக்க அண்ணனும் மற்றவர்களும் ஓடினர்.



சற்று நேரத்தின் பின், பந்தை எடுத்துக் கொண்டு வந்தவர்களை பார்த்து,
“ச்சே... இன்னும் கொஞ்சம் lateஆயிருந்தா Half Century (50 ரன்கள்) போட்டிருப்பேன். Just Miss”னு சொல்ல, ”டேய்!!! என்னடா சொல்கிறாய்’னு அவர்களும் புரியாமல் கேட்க,
”ஆமா.... பந்து தொலைந்த நேரம் பார்த்து 46 ரன் ஓடிட்டோமுள்ள... இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தா 50 ஓடி இருக்கலாம்’னு கவலையுடன் சொல்ல, “யோவ் ஒரு 4 ரன்னுக்கு மேலே ஓட முடியாதுய்யா.... அப்படி ஓடினாலும் அதற்கு ஓட்டம் கிடையாது’னு விளக்கப் படுத்த, “அய்யய்யோ!!!! இவ்வளவு நேரம் ஓடினதுக்கு வெறும் 4 ஓட்டம்தானா????  42 ஓட்டம் வீணாப்போச்சே’னு தலைல கை வைக்க, ”என்னது 4 ஓட்டமா???? அந்த ஏரியாவுக்கு பந்து போனா ஓட்டமே கிடையாது’னு முதல்லயே சொன்னேன்ல’னு அண்ணன் சொல்லும் போதுதான் அந்த மேட்டரும் நினைவு வந்திச்சு...


டிஸ்கி: உடற் பயிற்சி உடம்புக்கு நல்லது. ஓட்டம் நல்லதொரு உடற் பயிற்சி.


14 comments:

  1. naanga vilayadurappo inta conditiona remove panniduvome........

    ReplyDelete
  2. ஒரு தடவை நீங்க சதம் அடிச்சதா
    சொன்னீங்களே.. அதுவும் இப்படி
    ஓடி., ஓடி எடுத்தது தானா.?!

    ReplyDelete
  3. , ”யோவ் இன்னும் மெதுவா வீசினா, பந்து பாதி வழியிலேயே நின்னுரும்யா”

    வெட்கமே இல்லயா

    ReplyDelete
  4. ப்ரதர் !
    நீங்க லவ் பண்ண கதைய சொல்லுங்க. லவ் பண்ற வயசுல நாம எல்லாருமே சீரியஸ்ங்கற பேர்ல பயங்கர காமெடி பண்ணியிருப்போம்.அன்னைக்கு சீரியசா இருந்த மேட்டர்லாம் இன்னைக்கு ..?

    ReplyDelete
  5. நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. @ஜீவன்பென்னி said...

    /// naanga vilayadurappo inta conditiona remove panniduvome........////

    நாங்க கண்டிஷன் போட்டாலும் கலக்க போரதில்ல.னு எதிரணிக்கு நல்லாவே தெரியும் பாஸ்...

    ReplyDelete
  7. @ வெங்கட் said...

    ஒரு தடவை நீங்க சதம் அடிச்சதா
    சொன்னீங்களே.. அதுவும் இப்படி
    ஓடி., ஓடி எடுத்தது தானா.?!////

    எப்படி எடுத்தோம்னது முக்கியம் இல்லீங்க.... எவ்ளோ எடுத்தோம்’னதுதன் முக்கியம்....

    ReplyDelete
  8. @ யாதவன் said...

    , ”யோவ் இன்னும் மெதுவா வீசினா, பந்து பாதி வழியிலேயே நின்னுரும்யா”

    வெட்கமே இல்லயா///

    வெட்கப் பட்டா சாதனை படைக்க முடியுமா??? இப்போ எத்தனை சாதனை படச்சிருக்கீங்கண்டெல்லாம் கேக்க கூடாது...

    ReplyDelete
  9. @ சித்தூர்.எஸ்.முருகேசன் said...

    ப்ரதர் !
    நீங்க லவ் பண்ண கதைய சொல்லுங்க. லவ் பண்ற வயசுல நாம எல்லாருமே சீரியஸ்ங்கற பேர்ல பயங்கர காமெடி பண்ணியிருப்போம்.அன்னைக்கு சீரியசா இருந்த மேட்டர்லாம் இன்னைக்கு ..///

    உண்மைதான்... ஆனால், எழுதினா ஆட்டோ வருமே!!!

    ReplyDelete
  10. சி.பி.செந்தில்குமார் said...

    // hi hi hi ஹி ஹி ஹி//

    எவ்ளோ பெரிய சீரியஸ் மேட்டர் சொல்லி இருக்கேன்.. சிரிக்கிரீங்களே பாஸ்

    ReplyDelete
  11. @ மதுரை சரவணன் said...

    // நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. நம்மளை மாதிரி ஒடு டீல் வைச்சுத் தான் கிரிக்கட் விளையாடி இருக்கீங்க.
    ஞாபக மீட்சல் பதிவைக் காமெடி கலந்து சொல்லியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  13. சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் எழுத்துகள். அருமையான பகிர்வு

    ReplyDelete