நாம் வாழ்வில் படிக்கும் பாடங்களில் மிகச் சிறந்த, என்றும் மறக்காத பாடமென்றால் அது ”அனுபவம்”தான். அதனால நான் ஒரு சிறந்த கம்ப்யூட்டரை எப்படி தேர்வு செய்ரது’ங்குரதையும் என் அனுபவ வடிவமாகவே சொல்கிறேன்.
காலேஜ்’ல படிக்குர வயசுல எங்க கேங்’லயே நான், பாப், காமராசு, டட்சன், புள்ளி ராஜா, க்ரேஸி எல்லாருமே கம்ப்யூட்ட’ல புலிகள். புலிக்கு கம்ப்யூட்டர் எப்படி சுத்தமா தெரியாதோ,அது போலவே நம்மளுக்கும் கம்யூட்டர் சுத்தமா தெரியாது. ஆனால், நம்ம பக்கத்து வீட்டு பையன் ”மலை” கம்ப்யூட்டர் விசயத்தில் நம்ம எல்லோருக்கும் நேர் எதிர்.
எந்தவொரு திருட்டு விசிடி கெடச்சாலும் அந்த சிடி’ல எத்தனை குண்டும் குழியுமா இருந்தாலும், எழுத்து ஓடுர சீன்’ல இருந்து க்ளைமேக்ஸ் சீன் வர அந்தப் படத்தை ஓட்டுரதுல நம்ம மலைக்கு நிகர் ஊர் உலகத்துலயே யாரும் இல்ல. அதுக்காக சிடிக்கு பவுடர் போடுரது. வெள்ளாவியுல வெளுக்குரது, ஷாம்ப்பூ போட்டு கழுவுரது’னு ஏகப்பட்ட வித்தைகளை தெரிந்த ஒரே ஆளு நம்ம மலை.
நம்ம ஏரியால யாரு கம்ப்யூட்டர் வாங்குரதா இருந்தாலும், நம்ம மலையை கன்சல்ட் பண்ணாம போனதா சரித்திரமே கிடையாது. நாமளும் இவன் கூட வெறும் மொக்கை போட்டுகிட்டெ திரியுரமே, நாமளும் ஏதாவது படிக்கனும்’னு யோசித்த நானும் அடுத்த முறை யாருக்காவது கம்ப்யூட்டர் வாங்க போகும் போது, நம்மளையும் கூட்டி போகுமாறு மலை கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் எடுத்து வச்சிருந்தோம்.
கொஞ்ச நாள்’ல மலையோட உறவுக்கார பையன் கம்ப்யூட்டர் வாங்கனும்’னு மலையை தேடி வர, நாம வாங்க சிறந்த கம்ப்யூட்டரா’னு சோதிக்க தேவையான சில பொருட்களை எடுத்து பைக்குள் வைத்துக் கொள்ள, நானும் அவர்களுடன் சேர்ந்து கண்டி நகரத்துக்கு போயாச்சு. இதன் பிறகு வருவதெல்லாம் மலைக்கும், உறவுக்கார பையனுக்கும் நடந்த உறையாடல். நான் வெறுமனே பராக்கு பார்த்தது மட்டுமே!!
அண்ணே!!! அந்தக் கடையுல வாங்கலாமானே!!!!!
தம்பி!! அங்க வேணாம்ப்பா. இந்த கடைல வாங்கலாம். இங்கதான் சூப்பர் Wall Papers போட்டு குடுப்பானுங்க..
ஐ!! ஜாலி’ண்ணே... எங்க வீட்டு சுவர்'ல அழகா ஒட்டி வைக்கலாம்.
டேய்!! அதுல சுவர்ல ஒட்டுர Wall Papers இல்லடா.. Photo..Picture..
???????????
கடைக்குல நுளைஞ்சாச்சு.....
அண்ணே!! அந்த CPU'வ வாங்கலாமா???
டேய்!! அது ரொம்ப சின்னதா இருக்குடா?? பெருசா இருந்தாதானே, உங்க வீட்டுல கம்ப்யூட்டர் இருக்குறது 4 பேருக்கு தெரியும். பக்கத்துல இருக்குற பெரிய CPU'வை எடுப்பா.....
ஆஹா!!! அருமையான ஐடியாண்ணே!!!!
அண்ணே!!! அந்த Mouse’ஐ வாங்கலாமா!!!
டேய்!! தம்பி!! நல்லா பாரு... அந்த Mouse’ல வெறும் சிவப்பு கலரு லைட்டுதான் இருக்கு.. இந்தப் பக்கம் உள்ள Mouse’ஐ பார்த்தியா??? சிவப்பு, நீலம், பச்சை’னு மூனு கலருல பல்பு இருக்கு. உன் கம்ப்ப்யூட்டரே ச்சும்மா கல கல கல’’னு கல்யாண வீடு போல இருக்கும்ப்பா....
சரிண்ணே!! இப்போ கம்ப்யூட்டர எடுத்துட்டு போகலாமா???
தம்பி!! நீ பச்ச மண்ணுப்பா....இதுக்கு பிறகுதான் ரொம்ப முக்கியமான இரண்டு டெஸ்ட் இருக்கு. அது OK’ன்னா கம்ப்யூட்ட்ர எடுக்கலாம்.
ஆஹா!! இதுதான் முக்கியமான கட்டம். நாமளும் நல்லா நோட் பண்ணிக்கனும்’னு அவதானிக்க ஆரம்பிக்க, மலை கம்ப்யூட்டரை செக் பண்ணவென தன் பையில் இருந்து இரண்டு சி.டி களை எடுத்தான். அதுல ஒன்னு வீடியோ சி.டி அடுத்தது ஓடியோ சி.டி.
முதலில் வீடியோ சிடியை போட்டு, Window Media Player’ஐ இயக்கிப் பார்த்து விட்டு, அடுத்து ஓடியோ சி.டி யை போட்டு Window Media Player’ஐ இயக்கிப் பார்த்து விட்டு, தம்பி கம்ப்யூட்டர் சூப்பரா இருக்கு. இதை தைரியமாக வாங்கலாம்’னு திருவாய் மலர்ந்தார்.
நானும் ஆச்சரியம் தாங்க முடியாம,
என்ன தம்பி, அவ்ளோ சீக்கிரமா வாங்கிட்டீங்க...
அண்ணே!! படம் நல்லா ஓடுது, பாட்டும் நல்லா கேக்குது.. கம்ப்யூட்டர்’ல வேற என்னதான் சோதிக்க வேண்டி இருக்கு.. நீங்க இன்னும் வளரனும்ணே!!!!!
எனக்கு நம்ம மலையுடைய திறமையையும், சமயோசித அறிவையும் பார்த்து ரொம்ப பெருமையா இருந்தது. ஆனாலும் அந்தக் கடைல இருந்தவனுங்க ஒரு கேவலமான சிரிப்புடன் இருந்தானுங்க.. அது ஏன்’னு புரிய எனக்கு ரொம்ப காலம் ஆகவில்லை.
ஹா ஹா
ReplyDelete// அண்ணே!! படம் நல்லா ஓடுது,
ReplyDeleteபாட்டும் நல்லா கேக்குது.. கம்ப்யூட்டர்’ல
வேற என்னதான் சோதிக்க வேண்டி இருக்கு..
நீங்க இன்னும் வளரனும்ணே!!!!! //
ஒருவேளை உங்க ப்ரண்டு பில்கேட்ஸ்
கம்பெனில வேலை பார்க்கிறவரா இருப்பாரோ..!
ஹா ஹா...
ReplyDeleteஅருமை