Thursday 3 May 2012

இந்தியாவை தாக்கிய சீனா.. காப்பாற்றிய இலங்கை



நம்ம நாட்டு மக்களுக்கு எந்த கடமை உணர்ச்சி இல்லாவிட்டாலும், நம்ம நாடு எந்த நாடு கூட சண்டை போடுதோ, அந்த நாட்டுக் காரன் கூட நாமும் சண்டை போடனும், அவன் எது செஞ்சாலும் தப்பு கண்டு பிடிக்கனும், பேச்சு வாக்குல அவன் கால வாரனும்`னு ஒரு கடமை உணர்ச்சி மட்டும் எப்பவுமே இருக்கும்.

இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ்`னு தன் பக்கத்து நாடுகளுடன் எப்பவுமே பிரச்சனைதான். இலங்கையுடன் நல்லாயிருக்கு. அதுவும் நிறைய பேருக்கு பிடிக்குறதில்ல.. எப்படா இரண்டு நாட்டையும் மூட்டி விடலாம்`னு இருக்கிறாங்க. சரி..... மொக்கை போடுர நம்மளுக்கு எதுக்கு அரசியல்... நாம பதிவுக்கு போகலாம்..

நான் புதிய கம்பனில சேர்ந்த சமயம், ஒரு நாள் மாலை வேலை முடிந்து, நான் தங்கியிருக்கும் ஏரியா சுத்தி பாத்துட்டு அப்படியே Laundry Roomக்கு வர்ரேன். அங்க ஒரு சீனாக் காரன் தன் உடைகளை கழுவிக்கிட்டு இருக்கான். பக்கத்துல ஒரு ஹிந்திக் காரன் செவ்வனே`னு காத்துக் கிட்டு இருக்கான்.

என்னைப் பார்த்ததும் ஹிந்திக் காரனுக்கு என்னாசு`னு தெரியல, சைனாக் காரனிடம் போய், ’’யோவ்!!!! எவ்ளோ நேரம்யா நீயே கழுவிக்கிட்டு இருப்பே!!! நாம வேடிக்கை பாத்துகிட்டே இருக்கிறது”னு சொல்லி Washing machine`ல இருந்த உடைகளை வெளியே போட ஆரம்பிச்சுட்டான்.



கொஞ்ச நேரம் ஒரு மாதிரியா பாத்துக் கிட்டு இருந்த சீனாக் காரன் ஓங்கி விட்டான் பாருங்க ஒரு உதை. வட இந்தியாக் காரன் தெற்குல போய் விழுந்தான். அதோடு விட்டிருக்கலாம். ஓடிப் போய் அவன் மேல ஏறி கும்மு கும்மு`னு கும்ம ஆரம்பிச்சுட்டான்.

நானும் இப்போ நிறுத்துவான், இப்போ நிறுத்துவான்னு பாத்து கிட்டே இருக்கேன். அவனும் கும்மி கிட்டே இருக்கான். இதுக்கு மேலயும் பொறுக்கு முடியாது`னு ”டேய்ய்ய்!! நிறுத்துடா`னு சைனா காரன அள்ளி பக்கத்துல தள்ளி விட்டேன். அவனும் என்னைப் பார்த்து சைனா பாஷைல
”ச்சுவாசிங்குவாஹ்... ஹசிஓரேஹ்... அமிங்காயுஆ........”அப்டீங்குறான்...
(இதை தமிழ் தெரிந்த சைனா காரன் பாத்துடாம இருக்கனும்)

அநேகமா ” அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துகிறேன்” அப்டீன்னு சைனா பாஷைல சொல்லியிருப்பான்`னு நினைக்கிறேன்.  ”இனிமே கை வச்சிருந்தா நடக்குறதே வேறு!!!!” அவனுக்கு புரியாத பாஷைல ஏசி விட்டு (அவனுக்கு புரிஞ்சா நம்மளையும் போட்டு கும்மிருவானுல்ல....) ஹிந்தி காரனை தூக்கி நிறுத்தினேன்.

நம்மளுக்கு மத்தியில் நடந்த ஒரு ச்சின்ன உறையாடல்....

அண்ணே!!!!! ஏன் அண்ணே!! உங்களுக்கு தேவையில்லாத வேலை. எதுக்கு அவன் கிட்ட போய் வம்பிழுத்தீங்க....

தம்பி.. நீங்க புதுசா கம்பனிக்கு வந்திருக்கீங்கல்ல.. அதுதான் ஒரு பில்ட்-அப் குடுக்கலாம்னு....

அண்ணே!! ஓவர் பில்ட் -அப் உடம்புக்கு ஆகாது`னு ஒரு பதிவே போட்டிருக்கேனே!! அதெல்லாம் படிக்கிறதில்லையா.....???

தம்பி!! நான் குடும்பஸ்தன்ப்பா..... அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாது....


டேய்!!! இப்போ கூட, சாகப் பார்த்தவனைதானே காப்பாத்தி இருக்கேன். அதுக்கு மறுபடி பில்ட் அப் குடுக்குறே!!!

சாரி தம்பி.. இனிமே.. உங்க ஒரு பதிவு விடாம படிச்சிர்ரேன்ப்பா.....

படிச்சா மட்டும் போதாதுண்ணே..... காமெட்ஸ் போடனும்.....

அண்ணே!!! எனக்கு தமிழ் எழுதத் தெரியாதே!!! 

அதுக்கு எதுக்குய்யா புலம்புறே!!!! ”ஆஹா!!!! அசத்தல்... அருமை ... அபாரம்`னு நான் எழுதிக்குடுக்குறேன்.. நீ ஜஸ்டு காபி பேஸ்ட் பண்ணிடு அவ்வளவுதான்... அப்புறம் மறக்காம ஓட்டு போட்டுடுப்பா.....

என் உயிரைக் காப்பாத்தினவரு நீங்க.. ஒரு ஓட்டு இல்ல... 4,5 ஓட்டு போட்டுர்ரேண். கவலைய விடுங்க....

நோ!!!!!!!!!!!!!!!!! அப்படி மட்டும் பண்ணிடாதீங்க....

ஏன்!! தம்பி.... 4, 5 ஓட்டு கிடச்சா நல்லதுதானே!!!!!

அண்ணே!!! எனக்கு கிடைக்கிறதே 4,5 ஓட்டுதான். நீங்க பப்லிக்`ல இப்படி சொன்னீங்கனா, அந்த 4,5 ஓட்டு கூட கள்ள ஒட்டா இருக்குமோ`னு ஜனங்களுக்கு டவுட்டு வந்திடுமுல்ல......

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


Monday 26 March 2012

கொழும்பிலே ஒரு கொலைக்களம்

Gall Face கடற் கரை

 நான் கொழும்பு தெஹிவலைல படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு நாள் என்னைப் பார்க்கவென, நம்ம ஆருயிர் நண்பன் க்ரேஸி கண்டியிலிருந்து, தெஹிவலை வந்துவிட்டான்.

வந்தவனை சும்மா வச்சிருக்கலாமா??? எங்கேயாவது கூட்டிப் போகனுமே!!! எங்க போகலாம்`னு யோசித்தபோது, தெஹிவல Zoo'க்கு போகலாமானு யோசித்துவிட்டு, நம்மளையும் தூக்கி கூண்டுல போட்டுவானுங்களோ`னு ஒரு பயம் இருப்பதால, அதை கை விட்டு விட்டு, Gall Face கடற் கரைக்கு போகலாம்`னு முடிவு பண்ணினோம்.

Gall Face கடற் கரை

நம்ம கூட பசங்கள்ளையே முக்கியமே இல்லாத ஒரு நபர்தான் “நாய் சந்தி”யிலிருந்து வர்ர “சாக்கட சாமில்”.  இவர் இருக்குறதால அந்த ஏரியாவுக்கு ”நாய் சந்தி”னு சொல்றாங்களா??? இல்ல.. நாய் சந்தி`னு பேர் இருக்குறதால இவன் அந்த ஏரியால போய் இருக்கானா?னு எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. நாம எங்காவது வெளியே கிளம்பும் போது, இவன் வர்ரதா கேள்விப்பட்டா, அப்படியே ஷாக் ஆகிடுவோம். ஏண்ணா, வெளில போகும் போது, எப்பவுமே மறக்காம தன் பர்சை மறந்து வச்சிட்டு வந்துடுவான். இப்பேர்பட்ட அப்பாடக்கர் கிட்டயே ஓ.சி`ல வாங்கி சாப்பிட்ட பெருமை என்னையே சாரும்.

நாம பஸ் ஸ்டாண்ட்`ல இருக்கோம். நம்ம கூட சாக்கட சாமிலும் வந்து சேர்ந்து கொண்டான்.

மச்சான்... எங்கடா போரீங்க....

நாம........ Majestic City போறாம்....

ஐ!! நானும் அங்கதான் போகலாம்`னு.....

இல்ல மச்சான்.. நாம Liberty Plaza போனா நல்லா இருக்குமே!!!

நானும் அங்கயே வர்ரேன்....

டேய்!!! நாங்க Galle Face போறோம்டா....

சரி.. நானும் சும்மாத்தானே இருக்கேன். நானும் வர்ரேன்..

அவ்வ்வ்வ்...... - நம்ம மைண்ட் வாய்ஸ்...

Gall Face கடற் கரை

அப்போ வந்த ஒரு பஸ்ஸுல ஏற பஸ் நடத்துனர் ரொம்ப பின் வரிசைல இருந்தார். சாக்கட சாமில் பர்சை வழமை போல ரூம்ல வச்சுட்டு வந்துட்டதால, மூனு பேருக்கும் க்ரேஸி பைசாவை சாக்கட சாமிலிடம்  ”மச்சான், டிக்கட் எடுத்துடுடா’’னு குடுத்துட்டான்.

பஸ்ஸ விட்டு இறங்கினதும் பஸ் நடத்துனர் நம்மள ஒரு மாதிரியா  முறைத்துக் கொண்டே போகிறான். அப்புறம்தான் சாக்கட சாமிலை பிடித்து உலுக்கினா, பய புள்ள டிக்கட் பைசாவ பாக்கட்`ல வச்சிகிட்டு இருக்கான். பஸ் டிக்கட் காசை அவன் பாக்கட் மணியாக்கிட்டான்.. ஷப்பா...... முடியல....

Gall Face கடற் கரை

Galle Faceஇல் கூட்டம் அலை மோதியது. நாமளும் போய் கூட்டத்தோடு கூட்டமா கடல் அலையில் ஆடிக் கொண்டிருக்கும் போது சாக்கட சாமிலின் வாழ்வில் அந்த கோர சம்பவம் நடந்தது. கடலில் வந்த ஒரு அலையில் சாக்கட சாமில் குதிக்க, நானும் க்ரேஸியும் அவன் டீ-ஷர்ட்டுடைய ஒரு பக்க கையை பிடித்து இழுக்க........................... அவ்வ்வ்வ்வ்வ்........ டீ-ஷர்ட்டுடைய  கை மட்டும் கிழிந்து நம்ம கையில் வந்துடுச்சு....

சாக்கட சாமிலின் முகத்தை பாக்கனுமே.... !!!!அய்யோ....அய்யோ..... Galle Faceஇல் இருந்த மொத்த கூட்டமும் சாக்கட சாமிலை பார்த்து சிரிக்கத் தொடங்கிடுச்சு.... சாக்கட சாமிலுக்கு நம்ம மேல செம காண்டு... நம்மளுக்கு உறுப்படியா ஒரு வேலை செய்த சந்தோசம்....

டேய்ய்ய்!! இது என்னோட டீ-ஷர்ட் இல்ல தெரியுமா.....????

ஆமா!!! நீ எப்போ சொந்தமா உடுத்திருக்கே!!!!!

டேய்!! இது எங்க அண்ணனோடதுடா!!!!

ஷப்பா.....!!! இப்போத்தான் நிம்மதியா இருக்கு... நாம புது டீ-ஷர்ட்`ஆ இருக்குமோ`னு பயந்துட்டோம்...

டேய்!!! மானம் போகுதுடா!!!! காப்பாத்துங்கடா`னு அழாத குறை.....
 அப்புறம் என்ன பண்ண??? என்ன இருந்த நம்ம பயளாச்சே!!! அவன மறைத்துக் கொண்டு போய் ஒரு மூத்திர சந்தில் “இருட்டும் வரை இங்கேயே கிட... அப்புறம் மெதுவா,ஆளில்லாத பஸ்ஸுல வீடு போகலாம்`னு குந்த வச்சிட்டு நாம நிம்மதியா ஒரு அழகிய மாலைக் காட்சியை ரசித்தோம்.... மாலை காட்சியை மட்டுமா ரசித்தோம்????? சரி அதெல்லாம் இங்க எதுக்கு????

அப்புறம் இருட்டானதும் அவனை வீடு கொண்டு செல்லப் பட்ட பாடு..... ஷப்பா.......

Gall Face கடற் கரை
Gall Face கடற் கரை
Gall Face கடற் கரை
Gall Face கடற் கரை



Tuesday 7 February 2012

இலங்கை, வில்பத்து சரணாலயத்தில் சில கிளிக்ஸ்


இலங்கையின் வில்பத்து சரணாலயம் அமைந்துள்ள இடம் வரவாற்றுப் புகழ் மிக்கதாகும். கி.மு 543இல் விஜயன் தன் தோழர்களுடன் வந்திறங்கிய இடம் "குதிரை மலை",. குவேனி வாழ்ந்த இடமான "கலி வில்லு" போன்ற ஊர்கள் அனைத்தும் இந்த சரணாலயத்திற்குற்ப பகுதியிலேயே அமைந்துள்ளன. கிட்டத் தட்ட 2000 வருடங்களுக்கு முன் சாலிய மன்னனின் மகனான துட்டகைமுனு வாழ்ந்த ஊரான “மரதண் மடுவ” என்ற இடமும் இந்தப் பகுதியிலேயே அடங்கும்.  இலங்கையில் ஆங்கிலேயர் காலத்தில் அதாவதி 1905 இல் சரணாலயமாக அறிவிக்கப் பட்ட இந்தப் பகுதி, 1938ஆம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி தேசிய பூங்காவாக தரம் உயர்த்தப் பட்டது


வில்பத்து சரணாலயத்தின் அமைவிடம், அனுராத புரத்தில் இருந்து 30 கி.மீ தூரத்தில் (கொழும்பில் இருந்து 180 கி.மீ) வட மத்திய, வட மேல் மாகாணங்களில் கடல் மட்டத்திலிருந்து 152 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் தெற்கு எல்லையாக மோதரகம் ஆறும் வடக்கு எல்லையாக கலா ஓயாவையும், மேற்கு எல்லையாக இந்து சமுத்திரத்தையும் கொண்டுள்ளது.  வில் பத்துவே இலங்கையில் உள்ள பெரிய சரணாலயம் ஆகும். இதன் பரப்பளவு 131, 693ஹெக்டேயர் ஆகும்.இங்கு அறுபதுக்கும் மேற்பட்ட குளங்களும், ஏரிகளும் உள்ளடங்கும்.


 இங்கு ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 27.2 செல்சியசாக காணப் படுகிறது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 1000மிமி ஆகும். இலங்கையின் வரண்ட வலயத்தில் அமைந்திருந்தாலும் அதிகமான நீர் நிலைகள், அடர் மரங்களினூடே பயணிக்கையின் ஒரு காட்டிற்குள் வட கீழ் பருவக் காற்று மூலமும், மார்ச் ஏப்பிரல் மாதங்களில் பருவ மழை மூலமும் நீரைப் பெற்றுக் கொள்ளும் வில்பத்துவில் ஏப்பிரல் முதல் செப்டம்பர் வரை உலர் கால நிலையாகவே காணப் படுகிறது.


அதிகம் மழை பெறும் பகுதிகளில் உயர்ந்த மரங்களை கொண்ட அடர்ந்த காடுகளும், கடல் சார்ந்த பகுதிகளில் உவர் நீர்த் தாவரங்களும், மற்றும் பற்றைக் காடுகளும், புதர்க் காடுகள் வில் பத்துவில் உள்ளடங்குகிறது. Palu (Manilkara hexandra), and Satin (Chloroxylon swietenia), Milla (Vitex altissima), Weera (Drypetes sepiaria), Ebony (Disopyros ebenum) and Wewarna ( Alseodaphne semecapriflolia) போன்றவை இங்குள்ள முக்கிய தாவர வகைகளாகும்.

 

இங்கு 31 வகையான பாலூட்டிகள் வாழ்கின்றன. அவற்றில் உலகில் அருகி வரும் பாலூட்டி விலங்களான The elephant (Elephas maximus), Sloth bear (Melursus ursinus), leopard (Panthera pardus kotiya) and water Buffalo (Bubalus bubalis) போன்றவையும் அடங்கும். பறவைகளை பொறுத்த வரை ஈர நிலப் பறவைகள் அதிகமாகக் காணப் படுகின்றன. Garganey (Anas querquedula), Pin tail (Anas acuta), Whistling teal (Dendrocygna javanica), Spoonbill (Platalea leucorodia), White ibis (Threskiornis malanocephalus), Large white egret (Egretta alba modesta), Cattle egret (Bubulcus ibis) and Purple heron (Ardea purpurea) போன்ற அரிய வகை பறவைகளும் இதில் அடங்கும்.


ஊர்வன (Repltiles) பொறுத்தவரை Monitor (Varanus bengalensis), Mugger crocodile (Crocodylus palustris), Common cobra (Naja naja), Rat snake (Ptyas mucosus), Indian python (Python molurus), Pond turtle (Melanonchelys trijuga) and the Soft shelled turtle (Lissemys punctata) who are resident in the large permanent Villus. We can saw Star tortoises (Geochelone elegans) போன்றவை அதிகமாக வாழ்கின்றன.




டிசம்பர், 1988 இலிருந்து மார்ச் 16, 2003 வரை யுத்தம் காரணமாக மூடப் பட்டிருந்த விலபத்து சரணாலயம் இப்போது  திறக்கப் பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தை பார்வையிட சிறந்த காலம் ஃபெப்ரவரி, அக்டோபர் ஆகும்



இது நம்ம தேசியப் பறவை -  காட்டுக் கோழி






டிஸ்கி: விலங்குகளின் பெயர்களை ஆங்கிலத்துலேயே போட்டிருக்கிறேன். இதை கூகுல் translate ல போட்டு மீனிங்'ஐ பாத்து பீதி அடைஞ்சு போய் இருக்கேன்..


தகவல் உதவி: Eco Team  - Sri Lanka