Tuesday, 18 November 2014

நட்டு கலண்டிடுச்சே நாட்டு வைத்தியரே!!!

நாட்டு வைத்தியர்கள்... இவரிடம் போகாதவர்கள் நாட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்.(இவங்க ஃப்ரீயா எதாவது குடுப்பாங்களா???) படித்தவர்களில்லை. அவர்களின் மருத்துவத்தை புத்தகத்தில் படிக்கவும் முடியாது.(உனக்கு அ,ஆ வே படிக்க முடியாது, அப்புறம் எங்கடா புத்தகம் படிக்கிறது)

உடைவு, முறிவு என்றால் ஆங்கில வைத்தியத்தை நாடுபவர்கள் ரொம்ப அறிது.(ஏன்??? ஆங்கிலம் தெரியாதுங்குறதாலா??) வைத்தியசாலைகளில் காலை வெட்ட வேண்டுமென்று சொன்னவர்களின் காலை கூட சரி செய்பவர்கள் இந்த நாட்டு வைத்தியர்கள். இந்தப் பதிவு நாட்டு வைத்தியர்களை பற்றியதல்ல. நாட்டு வைத்தியரிடம் சென்ற நம் கதை..

க்ரேஸி கிட்ட இருந்து ஒரு Call.(நீ மிஸ்டு கால் மட்டும்தானே அடிப்பே!!) அதை call’னு சொல்ரதவிட அலறல்’னு சொல்லலாம்.(போன்ல சவுண்ட குறைடா..) ஏதோ மாங்கா மரத்துல இருந்து விழுந்துட்டானாம். யார் வீட்டு மரம்னு கேக்க கூடாது!!! ஏன்னா அது க்ரேஸிக்கே தெரியாம இருக்கும்!!!!! முளங்காலில் பயங்கர வலி.

க்ரேஸிக்கு நல்லது நடந்தா ட்ரீட் குடுப்பானோ இல்லையோ,(நீ குடுக்க மாட்டே!!) கெட்டது நடந்தா நம்ம அதன் மொத்த வலியையும் அவன விட நாமதான் ஃபீல் பண்ணனும். இப்போ மட்டும் விட்ருவானா???

பக்கத்தூர்ல உள்ள நாட்டு வைத்தியர் கிட்ட போகலாம்’னு சொன்னா, முடியாது, அவன் சரியில்ல, 60கி.மி தாண்டி ஒருத்தர் இருக்காரு. ரொம்ப பிரபலமான ஆளு. அவர்கிட்டயே போகலாம்னு ஒத்த கால்’ல நின்னான். பாவம் அவனுக்கிருந்ததே அந்த ஒத்த காலுதான்.

மாலை 6.00 மணிக்கே வைத்தியரிடம் போய் சேர்ந்தாச்சு. அங்க போனா 2 வரிசைல கூட்டம் இருக்கு. நாமளும் ஒரு பக்கமாய் போய் உக்காந்து கொள்ள நமக்கு எதிர்ப்பக்கம் இருந்த வரிசை நோயாளிகள் மளமளவென முடிவதும் புதிய நோயாளிகள் வந்து சேர்வதுமாக இருக்க, நம்ம வரிசை மட்டும் அப்படியே அசையாமல் இருந்தது.(முதலாவது இருந்தவன் தூங்கிட்டானா’னு பாருய்யா...)

டேய்!!! போய் முன்னாடி வரிசைல அமராம்டா.’னு க்ரேஸிகிட்ட கேட்டா, “அந்தப் பக்கம் நாட்டு வைத்தியரோட மகன் வைத்தியம் பார்ப்பான். அவன் சின்னப் பையன், நமக்கு சரிப்பட்டு வர மாட்டான்.(அவன்கிட்ட அக்கவுண்ட் வச்சிருப்பானோ??) கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்ல, அப்பா வைத்தியர்கிட்டயே வைத்தியம் பார்க்கலாம்’னு சொல்லிட்டான்.

உள்ளே வைத்தியர்ர ரூம்ல இருந்து அய்யோ!! அம்மா... காப்பாத்துங்க’னு சவுண்டு வந்து பீதிய கிளப்பியதே தவிர ஆளுங்க வர்ர மாதிரி தெரியல. ரெண்டு மணித்தியாலத்துக்கு பின்னாடி ஒருவாறு ஒருத்தன் பெரிய கட்டோடு வெளிய வந்தான். அப்புறம் அடுத்தவன் போனான், அவன் எத்தன மணித்தியாலம்னே தெரியல.... மொத்ததுல விடிஞ்சிடுச்சு...

மச்சி.. இந்த வைத்தியர்களுக்கு வெற்றிலையில் நடுவில் பணத்தை வைத்து குடுக்கனும். எவ்ளோ குடுத்தாலும் வாங்கிப்பானுங்க.. நாம எவ்ளோ குடுக்கலாம்??

ஒரு.... 500/- குடு. போதும்ல...

டேய்!!! 500/- எப்பிடிடா போதுமாகும். நான் 1500/- குடுக்க போரேன். இவங்கெல்லாம் நம் நாட்டின் சொத்து’டா...

ஷப்பா... நீ கொஞ்சும் பொத்துடா....

ஒருவாறு நம்ம நேரம் வந்ததும், உள்ளே போய், வெற்றிலையை குடுத்துவிட்டு க்ரெஸியை உக்காரவைக்க, க்ரேஸி தனக்கு நடந்ததை வைத்தியரிடம் சொல்லிக் கொண்டே தன் காயத்தைக் காட்ட முயற்சித்தவனின் முழியே சரியில்ல.

கீழே குனிந்து தடமாறிக் கொண்டிருந்த க்ரேஸியிடம் என்னடா’னு கேக்க ,நாதாரி க்ரேஸி சொன்ன வார்த்த...

..................

“மச்சி.. ஜீன்ஸ் டைட்டா இருக்குடா முழங்கால் வரை தூக்க முடியலடா...

அடப்பாவி க்ரேஸி. @$^$^%@$^@%$$@$^%$%#@$# வழமை மாதிரியே கவுத்துட்டியேடா... இதுக்காடா இவ்ளோ நேரம் காத்துகிட்டு இருந்தோம்.

தம்பி.. ஒன்னும் பிரச்சனையில்ல.. டவுசர கலட்டுப்பா.. - இது நா. வைத்தியர்.

டவுசர கலட்டவா??? முடியாது.. நான் மானஸ்தன். நான் வேணும்னா நாளை வரட்டுமா???

மறுபடி நாளையா??? டேய்!!!!!

Thursday, 30 October 2014

மதீனாவில் வேலையா???
ரொம்ப நாளைக்குப் பிறகு எதேச்சையாக தெரிந்த ஒரு பையனைச் சந்திக்க நேர்ந்தது.(எதேச்சையாக சந்திக்காம உன் கிட்டயெல்லாம் Appoinmentவாங்கிட்டா சந்திப்பாங்க??? )கொஞ்ச நேரந்தான் பேசியிருப்பேன் (விட்டா போதும்னு ஓடியிருப்பானே!!!).அதுக்குள்ள கிருக்கன் ஆக்கிட்டான்..(நீ முன்னாடியே அப்படித்தானே!!!)

டேய் தம்பி..இப்போ எங்கடா இருக்கே..!! ஆளையே காணல... (உன்ன கண்டதும் எங்கையாவது பதுங்கியிருப்பான்.. அவன் கெட்ட நேரம் இன்னைக்கு மாட்டிகிட்டான்...)

அண்ணே!!  நான் இப்போ மதீனால இருக்கேண்ணே!!!

வாவ்!!! சூப்பர்’டா தம்பி.. கேக்கவே சந்தோசமா இருக்கு... (கொஞ்சம் பொறு... ஏதாவது குடுப்பான்யா.. அலையாத...) ஆமா... மதீனால எங்க இருக்கே?? மஸ்ஜிதுன் நபவி’க்கு பக்கதுலயா???

இல்லண்ணே!! Harrison Jones ரோட்டுக்கு பக்கத்துல...

என்னது??? மதீனால Harrison Jones ரோட்டா??? டேய்!! எந்த மதீனாலடா இருக்கே!!!

டவுன்ல உள்ள மதீனா பேக் ஹவுஸ்’லண்ணே!!!

கிர்ர்... (அட முள்ளமாறி நாயே!!! இத முதல்லயே சொல்ல வேண்டியதுதானே!!!)

Thursday, 23 October 2014

கத்தி - மறுபக்கம்ஒரு நாள் க்ரேஸி வீட்டுப் பக்கம் போய்க் கொண்டிருக்கிரேன்  நம்ம நண்பன் க்ரேஸி கைல பெரிய கட்டோடு ரொம்ப ஃபீல் பண்ணியவாரு வந்துகிட்டு இருக்கான்.

மச்சி... என்னாச்சுடா??? கைல இவ்ளோ பெரிய கட்டு...

எல்லாம் கத்தியால வந்த வினைடா....

டேய்!!! நீ சுறாவையே பாத்த சூர மொக்க சுல்தானாச்சே!!! வெறும் கத்தி ட்ரைலருக்கே இப்படியா?? கத்தி எடுத்தவனுக்கு மட்டுமில்ல.. கத்தி பாத்தவனுக்கும் கத்தியாலதாண்டா சாவு (நம்ம க்ரூப்ல க்ரேஸி (ஒரே) ஒரு விஜய் ரசிகன்)

#$#%$@@$%$#@$(%(&^*# 4 டேய்!!! இது அந்த கத்தி இல்லடா.... நேற்று புதுசா வாங்கின கத்திடா.... முதல் முதலா ஒரு Appleஐ வெட்டலாம்னு பார்த்தேன்... வெட்டவே இல்ல....

அப்புறம்....

பின்னால ஓங்கி ஒரு அடி அடித்தேன்... பொலந்துடுச்சி.....

Apple'a???

இல்ல... என் கை.... அப்போதான் பார்த்தேன், அவ்வளவு நேரமும் கத்திய தலை கீழா புடிச்சுட்டு வெட்டியிருக்கேண்டா..

கர்ர்ர்.... தூ.......

Wednesday, 15 October 2014

கைது செய்யப் பட்ட கருணா....

2005ம் ஆண்டாக இருக்க வேண்டும். Mobile Phoneகள் அனைவரினதும் கைகளில் தவழ ஆரம்பித்திருந்த நேரம். எப்படியோ நம்ம நண்பன் க்ரேஸி வெளிநாட்டில் இருக்கும் அண்ணனின் காலில் கையில் விழுந்து ஒரு போனை வாங்கிவிட்டான். எதுக்கு அவ்வளவு அசிங்கப் பட்டு ஒரு போன் வாங்கனும்????? அப்பொழுதெல்லாம், போன் இருந்தா பொண்ணுக்களை ஈஸியாக மடக்காலாம்னு நம்பிக்கிட்டிருந்த காலம்.

போன் எடுத்ததிலிருந்து க்ரேஸியோட இம்ச தாங்க முடியல. எதோ போன் இருக்குறவன் மட்டும்தான் உலகத்துலயே வாழ தகுதியானனுங்க’ங்குற மாதிரி...... கைல Watch கட்டியிருந்தாலும் போன்லதான் டைம் பார்ப்பாராம்....

ஒரு நாள்.... க்ரேஸி என்னிடம்......

மச்சி... இன்னைக்கு செய்தி கேட்டியா....?

இல்ல மச்சி...  நீ எப்படா செய்தியெல்லாம் கேக்க ஆரம்பிச்ச????

போன் வாங்கினதிலிருந்து உலகமே கைக்குள்ள வந்த மாதிரிடா.... எல்லா செய்தியும் போன்லயே சொல்லிர்ரானுங்க....

போன்ல செய்தி சொல்ரானுங்களா??? டேய்!!! சும்மா பொய் சொல்லாதே.....!!!

கருணா அம்மனை கைது பண்ணிட்டாங்க தெரியுமா????

கருணா அம்மன் புலிகளுடன் இருந்து பிரிந்திருந்த கால கட்டம் அது... அபோதைய நிலவரப்படி க்ரேஸி சொன்னது ஒரு சூடான தகவலே!!!

எப்படா?? எப்படிடா???? உனக்கெப்படிடா தெரியும்????

இதுக்குதாண்டா போன் வச்சிருக்கணும்டு சொல்ரது.. இப்பொழுதான் ஃப்ரண்டு ஒருத்தனுக்கு Call பண்ணும் போது, போனை கட் பண்ணிட்டு “கருணாவை (அம்மன்) பஸ்’சுக்குள்ள அமர்த்தி பிடிச்சுருக்கதா” சிங்களத்துல சொன்னாங்க...

அடப்பாவி... உனக்கு சிங்களமே தெரியாதே!!! எப்படிடா சொன்னாங்க??

“கருணாகர பசுவ அமதன்ன”னு சொன்னாங்க... வேணும்னா அதே ஃப்ரண்டுக்கு மறுபடி Call பண்ணி காட்டவா??? நீயே கேக்குறியா???

அடப்பாவி க்ரேஸி.....   #%$##^#&&#%$@$#%^&@#*@#&@#@%^@#
” கருணாகர பசுவ அமதன்ன”னு சொன்னா கருணாவ பஸ்ஸுக்குள்ள அமத்திட்டானுங்க’னு அர்த்தமில்ல,(Call போரதுல ஏதோ ப்ராப்ளம் இருக்கு) தயவு செய்து பின்னர் அழுத்தவும்’னு அர்த்தம்டா.....

கிர்ர்ர்ர்ர்ர்............

Wednesday, 8 October 2014

நாரோடு சேர்ந்த பூவும் நாறும்...


வாசனைத் திரவியங்களுக்கு அரேபிய நாடுகளில் எப்போதும் ஒரு தனி மதிப்புண்டு. அரேபிய நாட்டு வாசனைத் திரவியங்களும் பெயர் போனவை.

ஆனால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, வாசனைத் திரவியம் பற்றியதும் அல்ல, அரேபிய நாடுகளைப் பற்றியும் அல்ல.... நாம் பார்க்கப் போவது சாக்கடையை பற்றி.. அவன்தான் நாய் சந்தியிலிந்து வரும் நம் நண்பன் சாக்கட சாமில்.

இவனை பற்றிய முன்னைய பதிவுகள்

1. கொழும்பிலே ஒரு கொலைக் களம்

2. டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி

டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி’ன்ற பதிவில் சாக்கட சாமில் டுபாய்க்கு வந்ததை பார்த்தோம். இனிமே டுபாய்’ல இவன் நம்மள பாடா படுத்தினத பாக்கலாம்.

ஒரு வெள்ளிக் கிழமை, லீவு நாளு, நல்ல குளிரு.. போர்த்திகிட்டு தூங்கலாம்னு பார்த்தா, நம்ம சாக்கட ரூமுக்கு வந்துட்டான். (இவனுக்கு வழி சொன்னவன் மட்டும் என் கைல கெடச்சான்????........ மைண்ட் வாய்ஸ்) 

மச்சி... நான் அத்தர் ஒன்னு வாங்கனும்டா.....

சரி போய் வாங்கு.....

அதெப்படி.... நீயும் வா... எனக்கு இடம் தெரியாதே.....

இவன் அத்தர் பூசினா, வாசம் அடிக்காவிட்டாலும் பரவால... இவன் கிட்ட அடிக்கிர நாற்றமாவது குறையுமே’னு நெனச்சி, நானும் போக ரெடியானேன்.

போய் பஸ்ஸில் ஏறியதும் வழமை போல, சாக்கட சாமில்,

மச்சி.. என் பர்ஸ உன் ரூம்ல வச்சிட்டு வந்துட்டேடா.....

பிரச்சனையே அல்ல... நான் கொண்டுவந்திருக்கேன்..

இல்ல மச்சான் நான் சொல்ரது என் பர்ஸுடா...

நான் கொண்டுவந்திருக்கரதும் உன் பர்ஸைத்தாண்டா........ (யார் கிட்ட.... எத்தனை முறைதான் நாமளும் ஏமார்ரது...- மைண்ட் வாய்ஸ்)

ஒருவாறு கடை வீதிக்குவந்தாச்சு,
ஒவ்வொரு கடையிலும் எத்தனை அத்தர் (Perfume) இருக்கோ,அத்தனையும் பூசிப் பார்த்தாச்சு... சாக்கடைக்கு எதுவுமே செட் ஆகல....

பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்’னு சொல்வாங்க... ஆனா... நாறோட சேர்ந்த பூவும் நாறும்’னு சாக்கடயிடம் படித்துக் கொண்டேன்.

ஒரு கடைக்காரன் சொன்னான்.. “ டேய்.. பாத்ரூம்’ல கொமட் இருக்கு.. அதையும் போய் முகர்ந்து பாக்குரயா????”

வேறு வெரைட்டி இல்லையானு ஒரு கடையில் கேட்க, அவன் சொன்னான்.. “டேய்!! என் அக்குளை வேணும்னா முகர்ந்து பாக்குறியா???

எவன் எவ்வளவு கேவலமா திட்டினாலும் சாக்கட அசரவேயில்ல... ஒவ்வொரு கடையா போய் கொண்டிருந்தோம்..

இப்படி ஒரு கடையில் அத்தர்(Perfume) தேடிக் கொண்டிருக்கும் போது, சாக்கட சாமில் ஒரு பெட்டியை தூக்கிக் கொண்டு,

மச்சி, இங்க பார்ரா... சூப்பரா இருக்கு... இதுதாண்டா இவ்வளவு நாளா தேடியது... வாவ்.. என்ன ஒரு வாசம்...

எனக்கும் ஒரே சந்தோசம்... ஷப்பா... வீடு போய் சேரலாம்னு......

கடைக் காரரைப் பார்த்து, அய்யா... ஒன்னுக்கு மூனு பெட்டியா பார்சல் பண்ணிக் குடுங்கையா... இவன் இம்ச தாங்க முடியல...

சாக்கட சாமிலின் கையில் இருந்த பெட்டியை பார்த்த, கடை முதளாலியின் முகத்தில் பொறி பறந்தது.... அப்போதுதான் அவரு சொன்னாரு......

..................


..................


..................


..................டேய்!!!! அது என்னோட சாப்பாட்டுப் பார்சல்’டா....

Wednesday, 20 August 2014

Moin Ali - பாவம்..... அவரே கன்பீஸ் ஆயிட்டாரு.....

நாமளே ஒதுங்கிப் போனாலும் சும்மா விட மாட்டான்ங்க போலிருக்கு...
செவ்வனே`னு போனவன கூப்பிட்டு தலைய தடவி குட்டுரானுங்க...

Bike'க்கு Petrol போடலாம்னு Petrol Shed'க்கு போனேன்....
அங்க வேல செய்யுர தமிழ் பையன் என்ன பாத்து சிங்களத்தில்...

  தம்பி!! நீங்க இங்கிலாந்து கிரிக்கட் டீம்`ல இருக்குற "மொயின் அலி" (Moil Ali) மாதிரி இருக்கீங்கண்ணே.... அப்டீன்னு சொல்ல... ஆகா நம்மள கலாய்க்கிறானோ??  அப்டீன்னு யோசிக்கும் போதே

பக்கத்தில் இருந்த சிங்கள பையன் ஆமா... நீங்க சரியா... அப்டித்தாண்ணே இருக்கீங்க`னு சொல்ல நானே என்னைப் பார்த்து பெருமையாக சிரித்துக் கொண்டேன்.

அதோடு இடத்தை காலி பண்ணியிருக்கணும். ஆனா... பயலுக இன்னும் நம்மளை புகழுவானுங்க... அதையும் கேட்டுட்டே போயிடலாம்`னு கொஞ்சம் பேச்சுக் குடுத்தேன்...

Moin Ali
சிங்களப் பையனைப் பார்த்து,

டேய் தம்பி!! நான் உண்மையிலேயே உனக்கு மொயின் அலி" (Moil Ali) போலவா இருக்கேன்???

ஆமாண்ணே!! அவரே மாதிரிதான் இருக்கீங்க...

உனக்கு அந்த ஆள தெரியுமா??? நல்லா பாத்திருக்கியா???

எப்படிண்ணே தெரியாம போகும்??? அவரு எவ்வளவு பெரிய பாக்ஸர்... (Boxer).

என்னது பாக்ஸரா??? தம்பி நீ யாரச் சொல்றே???

அந்த அமெரிக்கன் பாக்ஸர்(Boxer)`தானே!!! கருப்பா... குண்டா... முட்டக் கண்ணா இருப்பாரே!!! அந்த முகம்மத் அலி (Mohamed Ali)`ய எனக்குத் தெரியாதா???

கிர்ர்ர்ர்ர்.......

கிரிக்கட் பாக்காத பசங்களோட பேசினது ரொம்ப தப்பாப் போச்சே!!!!!!

Muhammad Ali


கிர்ர்ர்ர்ர்..........

Saturday, 16 August 2014

அஞ்சான்...... அடி வாங்குறதுக்கு....
காலேஜில் படிக்கும் போது சனி ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடக்கும். அதில் கணித வகுப்புகளும் அடக்கம். கணித ஆசிரியருக்கும் நமக்கும் எப்பவுமே ஏழாம் பொறுத்தம்தான். நம்ம நண்பன் க்ரேஸி ஒரு படி மேல்...... இவர்களைப் பற்றிய முன்னைய பதிவை பார்க்க.....

ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது


பொதுவாக க்ரேஸி வகுப்புகளுக்கே வருவதில்லை.. அப்புறம் மேலதிக வகுப்புக்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு திங்கட் கிழைமையும் கணக்கு ஆசிரியர் வந்ததும் முதல் வேலையாக மேலதிக வகுப்புக்கு வராதவர்களை வகுப்புக்கு வெளியே நிற்க வைத்து விடுவார்.

ஆனால், ஒரு முறை க்ரேஸி மேலதிக வகுப்புக்கு வந்து விட, அன்றைய நேரம் பார்த்து நண்பன் பாப் வகுப்புக்கு வரவில்லை. திங்கள் கிழமை வந்ததும், எல்லா நாளும் வெளியே நிற்கும் தான் உள்ளே இருக்கப் போவதையும், தன்னை கலாய்க்கும் பாப் வெளியே நிற்கப் போவதையும் நினைத்து க்ரேஸிக்கு சந்தோசம் அடக்க முடியவில்லை.

க்ரேஸி எதிர் பார்த்திருந்த கணிதப் பாடமும் வந்தது. கணக்கு ஆசிரியர் வகுப்பிற்குள் வரும் போதே, க்ரேஸி தன் சந்தோசத்தை அடக்க முடியாமல்...

சார்.......... பாப் வகுப்புக்கு வரல சார்... வெளியே அனுப்புங்க சார்..`னு உச்சஸ்தானியில் கதற..  கணக்கு சார் எந்த மூட்`ல வந்தார்னு தெரியல...வந்த கோபத்தில் க்ரேஸியின் காதை திருகி இழுத்து பளார்.. பளார்`னு ரெண்டு அரை விட்டு வகுப்பிற்கு வெளியே அனுப்பி விட்டார். நின்று கொண்டிருந்த பாப்`ஐ பார்த்து நீ எதுக்கு நிக்கிறே.... உக்காரு`னு அவனை உட்கார வைத்து விட்டு பாடம் நடத்த ஆரம்பித்தார்.

வகுப்புக்கே வராத பாப் உள்ளே.... வகுப்புக்கு வந்த க்ரேஸி வெளியே.... நமக்கு க்ரேஸியை பார்த்து சிரிப்பை அடக்க முடியல... ஆனால் சிரிச்சு மாட்டி கிட்டா நாமளும் வெளியே.... நமக்கு சந்தோசம் இல்லாவிட்டாலும் பரவாயில்ல... நம்ம எதிரி சந்தோசப் படக் கூடா.....


பாடம் முடிஞ்சதும் கணக்கு ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் வராததற்காண காரணம் கேட்டுக் கொண்டே வந்து, க்ரேஸியிடம் வந்து, நீ எதுக்குடா வகுப்புக்கு வரலை?னு கேட்க,

சார்,  நான் வந்தேனே!!!... நீங்க கூட எனக்கு ஒரு கணக்கு பிழையானதுக்கு கும்மு கும்முனு கும்மினீங்களே!!!! (ஒரு கணக்காடா பிழையாச்சு???? நீ போட்டதெல்லாமே பிழைதானே????)

டேய்ய்!!!!! அப்புறம் எதுக்குடா வெளியே போய் குந்திகிட்டு இருக்கே!!! நீயெல்லாம் எங்கடா உருப்படுவே!!!!

???????????????????????

Saturday, 14 June 2014

டுபாயில் ஒரு டுவிஸ்டு

டுபாயில் இருக்கும் போது,


வெள்ளிக் கிழமை விடுமுறை என்பதால், வியாழன் இரவே நண்பர்கள் அறைக்கு சென்று விடுவது வழக்கம்.

பகிஸ்தான் மெஸ்’ஸில் சாப்பிடுவது வழக்கம். அது என்னவோ தெரியல, ஓடியாடி வேலை செய்யும் பகல் நேர சாப்பாடு சுமாராகவும், தின்று விட்டு தூங்கப் போகும் இரவு சாப்பாடு தடபுடலாகவும் இருக்கும். அதற்கெல்லாம் காரணம் கேட்க எனக்கு ஹிந்தி, உருது தெரியாது.

ஒரு நாள், சாப்பிட்டு விட்டு ஒரு கையில் பையையும் எடுத்துக் கொண்டு வெளியே வருகிறேன்,  நம்ம ஆபீஸ் பாய், நேபாளி முன்னால கையை நீட்டிகிட்டு நிற்கிறான்.

இனிமேல் ஹிந்தியில் எப்படி பின்னுகிறேன்’னு பாருங்க.....

சார், வணக்கமுங்க.........

வணக்கம்....

சார், வணக்கம் சொன்னா மட்டும் போதுமா??? கை குடுங்க சார்....

வேணாம்னே!!!.. நான் போய்ட்டு வர்ரேன்..

சார், ஒருத்தன் கை குடுத்தா நாமளும் குடுக்கனும் சார்!!!!

டேய்.... முடியலடா.... போடா.....

சார், நான் ஒரு நேபாளி... அதுவும் அபீஸ் பாய்.. அதனாலதானே கை குடுக்க மாட்டீங்க.... சரி விடுங்க.....

(ஆஹா!!! கூட்டம் சேர்த்து நம்மள கும்மிருவானோ??) டேய்!! கை குடுக்கனும் அவ்வளவுதானே!!! கைய குடு......


ஆ.......ஆ......அய்யோ...... விடுங்க சார்..... விடுங்க சார்.....  என்ன சார்... கைல ரத்தம் வர வச்சிட்டீங்க..... அவ்வ்......

அதன் பிறகுதான்,என் கையில் விரல்களுக்குள் மறைந்திருந்த பல் குத்தும் குச்சியை (Tooth Pick) காட்டினேன்.சார்!!!, கைல பல் குத்துர குச்சி (Tooth Pick)  இருக்குனு முதல்லையே சொல்ல வேண்டியதுதானே....!!!!

டேய்!!! அத ஹிந்தில சொல்ல தெரியாமல்தானே இவ்வளவு நேரம், கை குடுக்காத, குடுக்காத’னு கத்திகிட்டு இருக்கேன்.. தெரிஞ்சிருந்தா சொல்லியிருக்க மாட்டேனா???? இனிமேல் கை தருவியா???


மவனே... நாளை ஆபீஸ் வா.... காபில காரி துப்பி குடுக்குறேன்...


அவ்வ்............

Saturday, 7 June 2014

ஸ்மைல் ப்ளீஸ்....


ஆசையே இல்லாமல் வாழனும்’னு புத்தர் ஆசை பட்டார். (உன் கிட்ட சொன்னாரா???) அது போல ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை, மோகம் கட்டாயம் இருக்கும். (உன் ப்லாக் பக்கம் வந்ததுக்கு ஆசயோ மோகமோ காரணமல்ல.. அது எங்க விதி..!!!) சில பேரினது வாழ்க்கையின் போக்கையே அது மாற்றிவிடும். (இப்பவே தலை வலிக்குது... ) சிலரிற்கு கொஞ்ச காலத்தில் மறந்து வேறொன்றிற்கும் தாவி விடுவர். (டேய்.. இப்பவே நான் வேற ப்லாக்குக்கு தாவிட்றேன்...யப்பா.. ஆளை விடு...
 
என்னடா இவன் தத்துவம் எல்லாம் பேசுரானேனு Confuse ஆகிடாதீங்க... (தூக்கதுல உளர்ரதுக்கு பேரு தத்துவமா???) என்ன தத்துவம் பேசி ஆரம்பிச்சாலும், (மொக்கைய போட்டுத்தானே முடிப்பே!!!) நம்ம பதிவு நாம வழமை போல நாம பல்பு வாங்கிய கதையாகத்தான் இருக்கும். (உன் மூஞ்சிக்கு நீ பல்பு வாங்காம பரீட்சைல மார்க்கா வாங்க போறே???)

நம்ம க்ரேஸிக்கு கேமரா மீது ஈடுபாடு ரொம்பவே அதிகம். (கேமரா’ங்குறது பொண்ணு பேரா’னு எவன்யா கேக்குறது???) போட்டோ எடுக்க தெரியுமா’னு கேக்க கூடாது? பயபுள்ள எப்போ பாரு, புதிய கேமரா என்ன வந்திருக்கு?? (அதை யார் கிட்ட ஆடைய போடலாம்???) அதை இயக்குறது எப்படி’னு கேமரா சம்பந்தமான விஷயங்களையே நோண்டிக்கிட்டே இருப்பான். (அதற்குப் பதிலா உன் கண்ண நோண்டியிருந்தா நாமளாவது நிம்மதியா இருந்திருப்போம்...)ஒரு முறை நானும் க்ரேஸியும், பாப்’ம் அடையாள அட்டை எடுப்பதற்காக (அடி வாங்குறவனுக்கெல்லாம் எதுக்குடா அடையாள அட்டை) ஒரு ஸ்டூடியோவுக்கு போய் போட்டோ எடுத்து விட்டு வந்தோம், அப்புறமா, சில நாட்களில் போட்டோ வீட்டுக்கு வந்தது, ஆனால், க்ரேஸி மாத்திரம் போட்டோவைக் காட்டாமல் மறைத்து விட்டு, வேறு போட்டோ எடுக்கலாம்னு சொல்லிக் கொண்டிருந்தான்.

மச்சி...வேற போட்டோ எடுத்தாலும் இதே மூஞ்சியும் முகரக் கட்டையும்தான் வரப்போகுது. உலகத்துல எவனுக்குடா, அவனோட அடையாள அட்டை போட்டோ  சூப்பரா வந்திருக்கு? அப்புறம் எதுக்குடா வேறு போட்டோ’னு சொல்லியும் பயபுள்ள கேக்குற மாதிரி இல்ல. அந்த போட்டோவில் ஏதோ ஒன்னு இருக்கு’னு புரிந்துகொண்டு நானும் பாப்’ம் க்ரேஸி  ஒழித்து வைத்திருந்த போட்டோவை கண்டு பிடித்த போது, அந்த போட்டோ இப்படித்தான் இருந்தது...xxxxxx

xxxxxx

xxxxxxடிஸ்கி: அடையாள அட்டை போட்டோ பக்க வாட்டில்தான் எடுப்பார்கள்

ஆ....... அய்ய்ய்ய்யோ!!!!!... அம்மா....... ஆத்தா.....

அடப்பாவி க்ரேஸி!!! இப்படியாடா போட்டோக்கு போஸ் குடுப்பே!!!! எப்படிடா இப்படி முடிஞ்சது உன்னால......

க்ரேஸி தான் செய்த சாதனையை அசடு வழிய விவரிக்க ஆரம்பித்தான்.
இல்ல மச்சி.... கேமராகாரன் ரொம்ப பழைய வகை கேமராவால போட்டோ எடுத்தானா????, அந்த வகை கேமரா எங்கையுமே காண முடியுரதில்ல. அதனால எப்படி போட்டோ எடுக்குரா’னு அவனுக்கு தெரியாம பார்த்தேன்.. அதுதான் இப்படி ஆகிடுச்சு...

போடாங்.......

Saturday, 31 May 2014

அலோ!!!! டுபாயா???


இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் ஊருக்கு ஊர், பேச்சு வழக்கிலும், பழக்க வழக்கங்களிலும் பாரிய வித்தியாசங்கள் இருந்து வருகின்றன. அதிலும் கிழக்கிற்கும் மற்றைய பகுதிகளுக்கும் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மக்கள் பேசும் தமிழை புரிந்து கொள்வது கூட சில வேளை கடிமானதாகவே இருக்கும். அதிலும் முதியவர்கள் பேசினால்.... கேட்கவே வேணாம்...

நம்ம நண்பன் க்ரேஸின் பிறப்பிடம், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு ஊர். நான் இங்கு சொல்லப் போகும் சம்பவத்தை பொறுத்தவரை ஊர் பேர் சொன்னால் அடி வாங்க வேண்டி இருக்கும். சிறிய வயதிலேயே குடும்பத்துடன் வந்து நம்ம ஊரில் தங்கியவர்கள்.

ஒரு நாள் என் வீட்டுக்கு வந்த க்ரேஸி, மச்சி, என் அண்ணனுக்கு கல்யாணம் Fix ஆயிடுச்சுடா... பொண்ணு நம்ம ஊரு.. நான், நீ, பாப், டட்சன், புள்ளி ராஜா, காமராசு எல்லோரும் போயி ஒரு வாரமாவது தங்கனும்’னு சொல்லி என் அப்பா,அம்மாவையும் கன்வின்ஸ் பண்ணிட்டு போய்ட்டான்.

போகும் போதே வீட்ல அப்பா, அம்மா, பாட்டி வரைக்கும் எல்லோரும் சொன்ன ஒரு விடயம்,

”புதிய ஊருக்கு போரே!!! ரொம்ப கவனம்டா..... பேச்சு வழக்கெல்லாம் வித்தியாசமா இருக்கும்.. எதையாவது பேசப் போயி அடி வாங்காம வந்து சேருங்கடா......”

போயி இரண்டு மூனு நாளு சூப்பராக கழிந்தது. மக்களும், சாப்பாட்டுவகைகளும், பாரம்பரியங்களும் நமக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தந்ததுடன், கடலோரப் பகுதியாகையால் இன்னும் சுவாரஸியமாக இருந்தது.

ஒரு நாள் நம்ம புள்ளி ராஜா, வீட்டுக்கு கால் பண்ணி 3,4 நாள் ஆவுதுடா... கட்டாயம் பேசியாகனும்’னு ஒரு Communication Centreஐ தேடினோம். கைப்பேசிகள் அதிகமில்லாத காலம் அது. கால் பண்ண வேண்டுமென்றால் Communication Centreக்கு போக வேண்டும்.

வீதிக்கு போயி, ஒரு முதியவரிடம்,

அய்யா.... இங்க Communication Centre எங்க இருக்கு பெரியவரே????

என்னது ???Communication Centre ஆ??? அப்டின்னா??  இரைச்சிக் கடையா???

இல்லங்க.....Communication Centre....

பல சரக்குக் கடையா???

இல்லங்க....

அப்போ.. மருந்துக் கடையா????

இல்லங்க....

டேய்!!! சாராயக் கடையா??? எங்க ஊர்ல வந்து என்னடா கேட்டீங்க... உங்கள வெட்டாம விட மாட்டேண்டா.....

அய்யா... அதில்லையா... வீட்டுக்கு கால் பண்ணனும்....Communication Centre எங்க இருக்குனு சொல்லுங்கையா....

ஆ.... தம்பி நீங்க கேக்குறது “ அலோ கடையா?????”

அடப்பாவிகளா... இந்த ஊர்ல அப்டியாடா சொல்வீங்க.... அவ்வ்வ்......

ஆமாங்க..ஆமா..... அந்த அலோ கடைதாங்க நாம தேட்றது.... வரட்டா.... ஆள விடுங்கையா....... அவ்வ்வ்.............

பாப்...நீ கூட சலூன் போகனும்னு சொன்னேல்ல.. அதுவும் எங்க இருக்குனு யார் கிட்டயாவது கேட்டுரலாமா???

வேணாம்டா.. வேணவே வேணாம்..... இவனுங்க சலூன்’னு சொல்லி எங்கையாவது தலையையே வெட்டுர இடத்துக்கு அனுப்பிர போரானுங்க...


Sunday, 25 May 2014

தம்பி..... இது China Phone'ஆ????சுமார் ஒரு 5 வருஷம் இருக்கும். Touch Phones Market'ல சூடு பிடிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்.. அதே வேளை சைனா போன்களும் வந்து குவிந்த நேரம்.

எனக்கும் Touch Phone ஒன்னு வாங்கனும்னு ரொம்ப நாள் ஆச.... எப்படா, எங்கடா  Offer போடுவாண்ணு காத்துகிட்டு இருந்து, Carrifour'ல ஒரு  Offer இருப்பதாக கேள்விப் பட்டு, போய் ஒரு Sony Ericsson G900 Phone ஒன்னு வாங்கியாச்சு......

Office'க்கு கொண்ணு வந்து Box'ஐ பிரிக்கிறேன், நேரம் பாத்து வந்த நம்ம ஆபீஸ் பாய் “நேபாளி”,

தம்பி, புது போன் வாங்கியிருகீங்களா??

பழைய போன்’ஐ Box'ல வச்சு பாவிக்க நான் ப(B)ங்காளியா???

அட.... என் ஐ போனை போலவே Touch Pen'லாம் இருக்கு...

என்னது??? ஐ போன்’ல  Touch Pen’ஆ?? எங்கண்ணே வாங்கினீங்க?? எவ்ளோ ஆச்சு????

பாக்கெட்ல இருந்து போனை எடுத்து காண்பிச்சாரு.... ஜிலு ஜிலு’னு ஒரு பொலிதீன் பையால பிரியாணி பொட்டலத்த போல கவர் பண்ணி வச்சிருக்காரு....  அப்டியே On பண்ணினா.. Twinkle Twinkle Little Star பாட்டுக்கு, நம்ம Montessori Teacher, பியானோ’ல மியூசிக் போட்றத விட கேவலமான ஒரு Starting Sound

சைனா மார்கெட்’ல வாங்கினேன் தம்பி... (நீ ஓப்பன் பண்ணும் போதே எனக்கு தெரியும்டா...)  பணம் பணம்’னு பார்த்து சரி வருமா தம்பி??? நாமளும் மத்தவங்கள மாதிரி இருக்க வேணாம்??? 150 AED’னு கூட பாக்காம வாங்கிட்டேன்!!!!!.

ஐ போன் சைனா மார்கெட்லயா?? அதுவும் 150 AEDயா????  யோவ்!!! அது ஐ போன் இல்ல.... பொய் போன்...

தம்பி, உங்க போன்ல கூடத்தான் Touch Pen இருக்கு...இதுவும் சைனா மார்கெட்லயா வாங்கினீங்க???

அண்ணே!!! வாய்ல எதாவது வந்துட போகுது.... இது Original Sony Ericsson போன்..

அப்போ!! எதுக்கு தம்பி Touch Pen இருக்கு.....

அண்ணே!!! Touch Pen சைனா காரன் வீட்டு சொத்தா??? மற்றைய போன்களில் இருக்க முடியாதா????

அப்போ!!!இது எங்க தயாரிச்ச போன் தம்பி.....

ஆஹா.... மடிக்கிட்டானே!!!! Original Sony Ericsson போன்கள் சைனாலாதானே தயாரிக்கிறாங்க... இவன எப்படி சமாளிக்கிறது??? - மைண்ட் வாய்ஸ்....

அண்ணே!!! தயாரிப்பு சைனா’தான்.. ஆனா.. இது நீங்க நெனக்கிறது மாதிரி இது 5,10க்கு விக்கிற சைனா போன் கிடையாது..

ச்சே!!! இவன் கிட்டயெல்லாம் குழைய வேண்டி இருக்கே!!!! - மைண்ட் வாய்ஸ்

அப்போ..... இது சைனால தயாரிச்சதுதானே!!!  சைனா போன்தானே!!!!

டேய்ய்!!!!! புது போன்’னும் பாக்காம அடிச்சு மண்டைய உடச்சுருவேன்... இது சைனா’ல தயாரிச்சதுதான்.... ஆனால் Original Sony Ericsson தயாரிப்பு. நம்பினா நம்பு... இல்லாவிட்டால் இடத்தை காலி பண்ணு...

சரி தம்பி நான் போய்ட்டு வர்ரேன்.. ஆனாலும் இது சைனா போன்’தானே தம்பி....

டேய்!!!!! இன்னுமாடா நீ இடத்த காலி பண்ணல...???? முடியலடா..... அவ்வ்வ்..........


Saturday, 17 May 2014

அபீஸீலே ஒரு அப்பாடக்கர்...
ஆபீஸ்ல வேலை செய்ரவர்களில் மூனு குரூப் இருக்காங்க...
1. தீவிரமா வேலை செய்ரது.....
2. கொஞ்சம் வேலை செய்ரது, அப்புறம் வேலை செய்யுர மாதிரி நடிக்கிறது..
3. வேலையே செய்யாமல் வெட்டியா இருப்பது...

நாம இதுல 2ம் வகை. வேலை செய்யுரது ஒன்னும் கஷ்டமில்ல. வேலை செய்யுர மாதிரி நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அதுக்காக எத்தனை ப்ளானிங் பண்ண வேண்டி இருக்கு...

ஒவ்வொரு நாளும் நாம வேலை பண்ணும் போது, எப்படி நம்ம நடவடிக்கைகள் இருக்கு.. ஒரு நிமிடத்தில் எத்தனை தடவை மவுஸ் க்ளிக் பண்ணுறோம், எந்த கோணத்தில் பார்வை இருக்கு. கீ-போர்டை எப்படி யூஸ் பண்ணுரோம்..இதெல்லாம் சரியா நம்மளை நாமளே நோட்டம் விட்டு, வெட்டியா இருக்குற நேரத்துல இதையெல்லாம்  Follow பண்ணனும்.அப்போத்தான் நாம வேலை செய்யுரோம்`னு உலகம் நம்பும். அது எல்லாவற்றையும் விட நம்ம சீட்டை சரியான இடத்துல அமைச்சுக்கனும்.

நம்ம டேபிளுக்கு பின்னாடி நம்ம மானிட்டரை பிரதி பளிக்கக் கூடிய எதாவது, கண்ணாடி அல்லது அது போல பொருட்கள் இருக்கா`னு பாத்துக்கனும். இல்லைனா.. நம்ம முன்னாடி உள்ள ஆளுங்களுக்கு அதுவே நம்மள போட்டு குடுத்துடும். நாம ஒவ்வொருத்தனும் கம்ப்யூட்டர்`ல என்ன பண்ணுரான்னு 20 அடி தூரத்துல இருந்தே சொல்லிடுவோம்.. எல்லாம் அனுபவம் தந்த பாடம்.

அது போக, ஆபீஸ்ல உள்ள ஒவ்வொருத்தருடைய நடையையும் சரியாக நோட் பண்ணி வச்சிருக்கனும். அப்போதுதான் எந்தப் பக்கத்தில் இருந்து, யார் வரும் காலடி சத்தம் கேட்டாலும்,தலையை தூக்காமலே யார் வருகிறார்கள் என கண்டு பிடித்து அதற்கேற்ப நாம் ரெஸ்பான்ஸ் பண்ணலாம்.

நம்ம ஆபீஸ்`ல இவன் மட்டும்தான்யா கம்பனில ஒழுங்கா வேலை பாக்குரவன்`னு எனக்கு ஒரு நல்ல பேரு இருக்கு. எல்லாம் நம்ம ப்ளானிங்தான்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஈராக்கில் வேலை பார்த்த போது  நடந்த சம்பவம்.....

நம்ம டேபிளுக்கு முன்னாடி நம்ம டேமெஜர் உக்காந்துட்டு இருக்காரு.. நம்ம கம்பனில வேலை பாக்குர நேபாளி வர்ரான்.  இவனை பற்றிய முதல் இரண்டு பதிவுகள்  

1. கோ - இது அடுத்த நெக்ஸ்டு

 

2.  ஆபிரிக்காவும் எயிட்சும்..... 13+

சரி இவன் பார்த்தா ஒன்னும் பிரச்சனை இல்லையே`னு நானும் ப்லாக்கை திறந்து வச்சுகிட்டு ஒரு பதிவு எழுதிகிட்டு இருக்கேன். வந்த வேகத்துலயே...

தம்பி!!! இது என்ன பாஷை தம்பி இது???? எப்படி தம்பி இவ்வளவு வேகமா டைப் பண்ரீங்க???`னு போட்டான் பாருங்க ஒரு சத்தம்.. நான் திருட்டு முழி முழிக்கிறத பார்த்த டேமேஜர் ஒரே லுக்குல நாலு உதை விட்டாரு...

அடப்பாவி... ஒரு வருஷமா ஓட்டின ட்ராமாவுக்கு ஒரு நிமிடத்துல End Card  போட்டுட்டியேடா!!!! என்னை மாட்டி விடுரதுக்குன்னே உன்னைய நேர்ச்சை பண்ணி அணுப்பி வச்சிருக்கானுங்களா????


தம்பி!!! கோவிச்சுக்காதீங்க தம்பி.... எனக்கு ஒரு உதவி வேணும்....

டேய்!!! உபத்திரவம் பண்ணிட்டு இப்ப உதவி கேக்குறியா?? என் கொலைவெறி தலைக்கு ஏர்ரதுகுள்ள ஓடிடு....

தம்பி!!! என் பயோடேட்டாவை கொஞ்சம் சரி பண்ணி குடுங்க தம்பி!!!

ஆஹா!!! பயோடேட்டாவா??? அப்படி சொல்ல வேணாமா?? அத சரி பண்ணி உன்னைய வேறு கம்பனிக்கு அனுப்பினால்தான் எனக்கு நிம்மதி.. இது உனக்கு செய்யுர உதவி இல்ல.. எனக்கு நானே செஞ்சுக்குற உதவி...

தம்பி!! இந்த கம்பனி ஒரு நரகம். புதிய கம்பனிக்கு போயிடனும்`னு சொன்னீங்களே!!! என் புதிய கம்பனில உங்களுக்கும் வேலை இருக்கானு பாக்கவா???

அண்ணே!! நீங்கபொய்ட்டீங்க`னு வச்சிகங்க..  இந்த வேலையே எனக்கு சுவர்க்கம் மாதிரி ஆகிடும்..
எங்கண்ணே உங்க பயோடேட்டா???

நாலு A4 Paperஐ நீட்டினாரு..

அண்ணே!!! இத Edit பண்ணனும்னா, Soft Copy வேணும்னே!!!  Soft Copy இருக்கா???

இதுவும் Soft'ஆத்தானே இருக்கு.. இது போதாதா???

இல்லண்ணே!!! நான் கேக்குரது Soft Copy... அது இருக்கா??

இதவிடவும் Softஆன பேப்பர்லாயா வேணும்????

டேய்ய்ய்ய்!!!!!!!!.......