Tuesday, 7 June 2011

Microsoft எனும் மடையனுங்க...


சர்வதேச முட்டாளுங்க...

போன வாரம் க்ரேஸி’ய சந்திக்க போனால், பார்ட்டி (க்ரேஸியோட பாட்டி’யானு கேட்க கூடாது) பயங்கர சோகத்துல இருக்கு.. (நீ போனா எவனுக்குய்யா சந்தோசம் வரும்???)

டேய்!!! என்னாச்சுடா?’னு விசாரிச்சா வயிறு எரியுதுடா’னு ஒரே அலுப்பு. (Fire Service'கு போன் பண்ணவா’னு கேக்கலாம்’னு யோசிச்சுடு, சும்மாஅ எதுக்கு அடி வாங்கனும்’னு விட்டுட்டேன்) ஏன்டா, இந்த IT Field'ku வந்தோம்’னு இருக்குடா’ங்குறான். நீதானே “நிறைய பிகருங்க வரும்’னு போய் சேர்ந்தாய். இப்போ திடீர்னு என்னாச்சு????னு கேட்டேன். ( ஒரு வேலை எல்லாமே சப்ப பிகரா இருக்குமோ)

ஒருத்தன் சோகமா இருந்தா அவன் மனச கிளரி விடுரதுல உள்ள சந்தோசமே தனி. சரி மச்சான், சும்மா சொல்லுப்பா’னு கெஞ்ச, (இதுக்கு போயி கெஞ்சியிருக்கானே’னு பாக்குரீங்களா?? ஓட்டு போடு’னு எத்தனை முறை கெஞ்சி இருப்போம், இதெல்லாம் சப்ப மேட்டரு)
அவனும்,
“மைக்ரோசொஃப்ட்’ல உள்ளவன் எல்லாம் ரொம்ப புத்திசாலினு நெனச்சிடு இருந்தேண்டா. ஆனால், எல்லானுமே சுத்த மடையனுங்களா இருக்கானுங்க...னு சொன்னான். (அடப்பாவி, இப்போ அதையெல்லாமா ஆராய்ச்சி பண்ர??)

கொஞ்சம் விளக்கமா சொல்ல சொன்னா, அவன் சொன்ன பதில் செருப்ப சாணில முக்கி கன்னதுல அடிச்ச போல் இருந்தது...


அந்த பதில்........

அந்த பதில்........


அந்த பதில்........மைக்ரோசொஃப்ட் நிறுவனம் “ஸ்கைப் (Skype)"ஐ $8.5 பில்லியன் குடுத்து வாங்கியிருக்கானுங்களாம். முட்டால் பசங்க... என் கிட்ட சொல்லியிருந்த்தா கூட ஃப்ரீயா டவுன்லோட் பண்ணி குடுத்திருப்பேனுள்ள.....
  
 நோ...நோ.... அழக்கூடாது
(இதக் கேட்டு எப்படிப்பா அழாம இருக்க முடியும்???)

வழமை போல், என் நான்கு விரல்களையும் மடக்கி, ஆட்காட்டி விரலை என் பக்கம் நீட்டி, எனக்கு நானே கேட்டேன் ,

“இந்த அவமானம் உனக்கு தேவையா???????”
(ஏதோ, அவமானமே படாதவரு மாதிரில்ல  இருக்கு......)


22 comments:

 1. ஹிஹி மொக்கை??நாம சிரிக்கமாட்டம்லே!!!

  ReplyDelete
 2. யோவ் அத சொன்னதே நீதான. உன் நண்பன் மேல பழிய போடுற..

  ReplyDelete
 3. இவ்வளவு காலத்துக்கும் இன்னைக்கிதான் செம கத சொல்லி இருக்க....
  முன்னேற இடம் உண்டு

  ReplyDelete
 4. மைக்ரோசொஃப்ட் நிறுவனம் “ஸ்கைப் (Skype)"ஐ $8.5 பில்லியன் குடுத்து வாங்கியிருக்கானுங்களாம். முட்டால் பசங்க... என் கிட்ட சொல்லியிருந்த்தா கூட ஃப்ரீயா டவுன்லோட் பண்ணி குடுத்திருப்பேனுள்ள.....//

  ஐயோ...ஐயோ..
  கொன்னுப் புட்டீங்க சகோ.
  இதுக்குப் பேர் தான் மரண மொக்கையா?

  மாப்பிளை அப்புறமா, உங்க ப்ளாக்கில் தமிழ் மணம் ஏன் பிரச்சினை பண்ணுது?

  ReplyDelete
 5. @ மைந்தன் சிவா said...

  ''//ஹிஹி மொக்கை??நாம சிரிக்கமாட்டம்லே!!! ''

  ம்ம்ம்.. என்ன பண்ணலாம்??????

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 6. @ எல் கே


  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 7. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  ///யோவ் அத சொன்னதே நீதான. உன் நண்பன் மேல பழிய போடுற..///

  நன்பன்’னு வச்சி இருக்குரதே இப்படி நேரத்துக்கு Use பண்ணிக்கதானே!!!

  ReplyDelete
 8. @ Lakshmi


  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 9. @ Ahmed said...

  ///இவ்வளவு காலத்துக்கும் இன்னைக்கிதான் செம கத சொல்லி இருக்க....
  முன்னேற இடம் உண்டு///

  அப்போ, இன்னும் நாம முன்னேறவே இல்லையா??

  ReplyDelete
 10. @ நிரூபன் said...

  //மாப்பிளை அப்புறமா, உங்க ப்ளாக்கில் தமிழ் மணம் ஏன் பிரச்சினை பண்ணுது? ///
  இப்போ, சரியாக இருக்கும்’னு நினைக்கிறேன்.


  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 11. ஹா ஹா :-) உண்மைலேயே சிரிச்சேங்க! நான் கடைசில இப்படி ஒரு முடிவு வரும்னு எதிர்பார்க்கல!

  ReplyDelete
 12. ஹா.....ஹா.....ஹா......

  ReplyDelete
 13. சிரிப்பு தாங்க முடியல அழுகை அழுகையா வருது

  ReplyDelete
 14. உலகத்தையே முட்டாலாக்கிய புத்திசாளிங்களை முட்டாளுங்க எனும் போதே சந்தேகப் பட்டேன், சரியாப் போச்சு.. ஹி..ஹி..ஹி...

  ReplyDelete
 15. செம லொள்ளு உங்களுக்கு
  சிரிப்பு தான் வருது

  ReplyDelete
 16. அட அவன் சரியாதானே சொல்லி இருக்கான்... நான் கூட ப்ரியாதனே டவுன்லோட் பண்ணினான்..

  ReplyDelete
 17. ஹா ஹா ஹா செம காமெடி.. ரொம்பத்தான் ஜவ்வா இழுத்து ஃபினிஷிங்க் டச்.. ம் ம்

  ReplyDelete
 18. // வழமை போல், என் நான்கு விரல்களையும்
  மடக்கி, ஆட்காட்டி விரலை என் பக்கம் நீட்டி,
  எனக்கு நானே கேட்டேன் ,

  “இந்த அவமானம் உனக்கு தேவையா???????” //

  இதுக்கு பதிலா 5 விரலையும் மடக்கி
  உங்க தலையில ஒரு கொட்டு கொட்டிட்டு
  இருக்கலாம்..!!

  ReplyDelete
 19. பதிவு என்றாள் உங்கள் பதிவு தான் முத்தான முதல் மொக்கை சிரிப்பு தாங்கமுடியல பாஸ்!

  ReplyDelete
 20. அடடே முதல்லையே படிக்காம விட்டுட்டமே, செமையா இருக்கு, ஆனாலும் ரொம்பத்தான் யோசிக்கறீங்க..

  // (இதுக்கு போயி கெஞ்சியிருக்கானே’னு பாக்குரீங்களா?? ஓட்டு போடு’னு எத்தனை முறை கெஞ்சி இருப்போம், இதெல்லாம் சப்ப மேட்டரு)//

  செம பன்ச்.

  ReplyDelete