Tuesday 31 January 2012

போதி தர்மரும் அறியாத 8ம் அறிவு


இறைவன் படைத்த ஒவ்வொரு படைப்புக்கும் அதன் உணவு, உறையுள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை எப்படி தேடிக் கொள்ள வேண்டுமென்ற அறிவை குடுத்தே படைத்திருக்கிறான். ஒவ்வொரு விலங்கினதும் வித்தியாசமான உணவு முறைக்கும் வாழும் இடத்துக்கும் ஏற்ப அதன் உடலமைப்பும், அதற்கு குடுக்கப் பட்டுள்ள அறிவும் வித்தியாசப் படுகிறது.

உலகில் உள்ள ஆயிரக்கணக்கான உயிரிணங்களிடமும் அவை வாழுமிடம், உணவு முறை போன்றவற்றிற்கு ஏற்ப தனித்துவான தன்மைகளை இறைவன் படைத்திருக்கிறான். ஆறறிவு மனிதனிடம் இல்லாத சில நுணுக்கமான அறிவுகள் 5 அறிவு விலங்குகளிடம் பார்க்க முடிகிறது.  தாவரங்களும் இதில் அடங்கும். 

கங்காருவின் குட்டி பிறக்கும் போது ஒரு அங்குலம் கூட இருப்பதில்லை. அது தன் தாயின் உரோமங்களினூடு கங்காருகளுக்கு மட்டுமே இருக்கும் அந்தப் பையை அடையும் அந்தப் பயணம் மிக ஆச்சரியமான ஒரு பயணமே. 
பிறந்து, தன் தங்குமிடத்தை தேடி உரோமங்களினூடு பயணம் செய்யும் சின்னஞ்சிறிய கங்காருக் குட்டி

தாய்க் கங்காருவின் பையில் உள்ள கொஞ்சம் வளர்ந்த கங்காருக் குட்டி

மனிதனின் சக்தி என்ன என்று பார்த்தால், அவனால் அதாவது நம்மால் ஒரு குருவிக் கூட்டைக் கூட அது போல் உருவாக்க முடியாது. மனிதனின்  பலமே அவன் மூலையும், மூட்டுக்களும், நிமிர்ந்து நிற்கும், இரு கால் இடப் பெயர்வு, பேச்சுத் திறன், மிகச் சிறந்த நரம்புத் தொகுதி என்பனவே அவனை மற்றைய விலங்குகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறன்றது. இதுபோக மனிதனில் இறைவன் ஒரு தற்காப்புக் கலையை ஒளித்து வைத்திருக்கிறான். அதை சரியான பயிற்சிகளின் மூலம் வளர்ப்போமானால், அதனால் பயன்கள் பல… என் வாழ்க்கையில் அக்கலை மூலம் நான் கண்ட பலனே இப்பதிவு…

நம்ம நண்பன் பாப் பிறந்த ஊரு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கண்டி – நுவெரெலியா வீதியில் உள்ள “கட்டு கித்துல” எனும் ஒரு சிற்றூர். அந்த ஊரின் அழகை பற்றி வேறொரு பதிவில் விரிவாக இடலாமென்றூ இருக்கிறேன். 


நண்பன் பாப், தன் வீட்டுக்கு வரும் படி ரொம்ப காலமா, கூப்பிட்டுக் கொண்டே இருக்க, ஒரு ஆகஸ்ட் மாதத்துல போறதா முடிவு பண்ணினோம். அதற்கு நம்ம பாப், “இப்போ, நம்ம ஏரியால அவ்ளோ விஷேசமா இருக்காது, டிசம்பர்’ல வந்தீங்கன்னா, நிறைய சுற்றுலாக்கள் வர்ர பீரியட்’ங்குரதால ரொம்ப பசுமையா இருக்கும்’னு சொன்னதால நம்ம வாலிப வயசு தடுத்துவிட்டது, அதனால டிசம்பர்’லயே போகத் தயாரானோம்.

கடைசி நேரத்துல காமராசு’க்கு வர முடியாமல் போக, நான், க்ரேஸி, புள்ளி ராஜாவும் பாப்’ஐயும் அழைத்துக் கொண்டு போகத் தயாரானோம். காலையில் போக வேண்டியது, “மச்சி!! 4.00 மணிக்கு கண்டி நகரத்துல உள்ள எல்லா டியூட்ட்டரியும் முடியும் நேரம். நாம மாலை 4.30 பஸ்ஸுல போறதுதான் சூப்பரா இருக்கும்’னு அனுபவத்துடன் ஒரு ஐடியா குடுக்க, அதற்க்கு மேல நாம சொல்ல என்ன இருக்கு???

நாமளும் ரொம்ப ஆவலா பஸ்’ஸுல போய் ஏற, நமக்கு எமாற்றமே மிஞ்ச, அந்த கோவத்துல பாப்’ஐ திட்டிக் கொண்டே ஊர் போய் சேர்ந்தோம். போற வழில ”பார தெகே” (Paaratheke) ”2 பாதைகள்” அப்படி`ன்னு ஒரு ஊர். இங்லீஷ்`ல எழுதி இருந்தத புள்ளி ராஜா “பர தேகா”னு வாசிச்சுட, அவன கலாய்ச்சிட்டே போனது செம......



ஊருக்கு போக முன்னாடியே, ”மச்சான், நாம வரும் போது, ஊருல வரவேற்பு பலமா இருக்கனும். அதுக்காக நம்மள பத்தி நாலு பிட்டு போட்டு வை நங்கூரம் போட்ட மாதிரி நச்சுனு இருக்கட்டும்”னு சொல்லி வச்சிருந்தோம். அங்க போனா, பாப்’புடைய தம்பி, மச்சான், உறவுக்காரப் பையன்’னு செம வரவேற்பு. ஆஹா!!! நாம சொல்லிக் கொடுத்த மாதிரியே செஞ்சிருக்கான் நம்ம நன்பன்’னு நமக்கெல்லாம் ஒரே பெருமை.

அங்க போய் கொஞ்ச நேரத்துலதான் தெரிஞ்சுது, நம்மள லவ்வர் பாய்ஸ், ரொமாண்டிக்;கான ஆளுங்கனு சொல்லியிருப்பான்’னு பார்த்தா, நம்மல ”கண்டி நகரத்தையே கதி கலங்க வைக்கிற மிகப் பெரிய ரவுடி’ங்கனு சொல்லி வச்சிருக்கான் படுபாவி. அப்புறம் என்ன பண்ண?? நாமளும் ரவுடியாவே நடிக்க வேண்டியாயிடுச்சு..

அந்தப் பசங்களும் ச்சும்மா இல்ல.. வீட்டுக்கு வர்ர ரவுடிகளை வெட்டியா இருக்க விடக் கூடாதுங்குற நல்லெண்ணத்துல, ரோட்டுக்கு ரோடு வாண்டட்’ஆ போய் வம்பிழுத்து வச்சிருக்கானுங்க….. ரத்தம் பாக்காம வீடு போய் சேர முடியாது’னு அப்பவே உறுதியாயிச்சு…

”அண்ணே!! இந்த டைம்’ல இவன அடிக்கிறோம், அப்புறமா, இவன அடிக்கிறோம்’னு ஒரு லிஸ்ட்டே போட்டு வச்சிருக்காங்க… ஒருத்தன் கிட்ட இருந்து தப்பிச்சாலே பெருசு..இதுல லிஸ்ட்டு போட்டு அடி வாங்கனுமா?? என்ன வாழ்க்கைடா இது??? 


சரி... நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகனும்.... அவனுங்க போட்டிருந்த லிஸ்ட்டுலயே ரொம்ப ச்சின்னப் பையனுங்க, தூரத்துல உள்ள இடமா பாத்து அவனுங்கள அட்டாக் பண்ணலாம்’னு முடிவு பண்ணியாச்சு.. அடி வாங்கினாலும் சொந்த ஊர்ல “கெத்’தா இருக்கனுமுல்ல....


நாம கடைசி நேரத்துல வயித்து வலி’னு எஸ்கேப் ஆகிடலாம்’னு சமயம் பார்த்துகிட்டு இருக்கும் போது, ஆட்டோல ஜன்னல் சீட்டு குடுக்குரோம்’னு ஆசைய காட்டி என்னையும் ஏத்திட்டானுங்க படுபாவிப் பசங்க...


நாமளும் தில்லா போயி பக்கத்து ஊர் பாடசாலை முன்னாடி இறங்க, ”இவனுங்கதான் ஆளுங்க”னு 03 பொடிப்பசங்களை காட்டினானுங்க. சரி’னு நாமளும் போயி அவனுங்க கூட வம்பிளுக்க ஆரம்பித்தோம். அதுவர் நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது, அப்புறம் சுமார் ஒரு 40 பேரு இருக்கும், வந்து சூழ்ந்து கொண்டானுங்க..அப்புறம்தான் புரிஞ்சது, அது மேலதிக வகுப்பு முடியும் நேரம்’னு....


ச்சும்மா சொல்ல கூடாது...ஷப்பா... கும்மு கும்மு’னு கும்ம தயாராகிட்டானுக்க....ஆட்டோ ஜன்னல் சீட்டுக்கு ஆசப் பட்டு போன, என் ட்ரெஸ்ஸெல்லாம் ஜன்னல் வைக்கப் போரானுக்களே’னு நான் அழாத குறை... 

இதுதான் நம்ம வாழ்க்கைலயே முக்கியமான ஒரு கட்டம். அப்படி ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில்தான் நம்ம நன்பர்கள் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒழிந்திருந்த எட்டாம் அறிவு கொஞ்சம் கொஞ்சமா விழிக்க ஆரம்பிச்சுடுச்சு.... எடுத்தோம் பாருங்க ஓட்டம்.....


(ஆமாங்க... நான் சொன்ன, இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் படைத்த, போதிதர்மரும் அறியாத தற்காப்புக் கலை “மான் கராட்டி”தான். ஒவ்வொருவரும் ”ஓட்டம்” இந்தக் கலையை சரியான பயிற்சியுடன் வளர்த்தால், அது ஒரு சிறந்த தற்காப்புக் கலையாக அமையும்.)

புதிய ஊரு.. எங்க ஓடுரோம்னே தெரியல.. நம்மள கூட்டிவந்த ஆட்டோ காரர கூட ரொம்ப தில்லா அனுப்பி வச்சிட்டோம். அப்புறம் எல்லோரும் ஓடிப் போயி ஒரு கடைல புகுந்து கொள்ள, நாமளும் புகுந்தாச்சு..

அப்போ, நம்ம பயளுக கடைக் காரரைப் பார்த்து “ அங்கிள் அங்கிள்... நாம் சும்மா ரோட்டுல போகும் போது இந்தப் பசங்க அடிக்க வர்ரானுங்க’னு சொல்ல, நம்மள ஒரு ரூம்’ல பாதுகாப்ப வச்சிட்டாரு அந்த அங்கிள். அப்புறம்தான் தெரியும், அது நம்ம பசங்களோட நண்பனோட அப்பா’னு.. ஒவ்வொரு பிரண்டும் தேவை’னு சும்மாவா சொன்னாங்க...


அப்புறம் ஒரு மாதிரி,  உயிரை கைல புடிச்சிகிட்டு நண்பன் வீடு வந்து சேரும் போது, போதும் போதும்’னு ஆயிடுச்சு... அதுக்கப்புறம் அந்தப் பசங்க, நாம திரும்பி வரும் வர, அடி தடி பத்தி பேசவே இல்ல.. மறுபடி மான் கராட்டிய யூஸ் பண்ணிடுவோம்’னு பயந்து இருப்பானுங்களோ!!!!

Saturday 28 January 2012

நாட்டாமைக்கே தீர்ப்பா????




நம்ம ஆபீஸ்’ல Internet Password பொதுவா நம்ம எல்லோருக்கும் தெரியும். புதுசா கொஞ்சம் பேரு லாப்டாப் வாங்கிட்டு வந்து பண்ணிய அலப்பரை’ல Internet ரொம்ப Slow ஆகிடுச்சு... இதனால கடுப்பான நம்ம டெமேஜர் Passworஐ மாத்திட்டாரு.  டெமேஜரையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் Password தெரியாது.

இதுவர நம்மள கண்டுக்காதவனுங்க கூட, இப்போ நம்மளுக்கு பயங்கர மரியாதை. ஹி..ஹி.. எல்லாம் Password எனும் மந்திரச் சொல்லுக்குத்தான்.... ஹி..ஹி.. விடுவோமா நாங்க... ஏழு ஊர் ரவுடிய பாத்தவனுங்களாச்சே!!!!

 நாளு நாளைக்கு முன்னாடி ஒருத்தன் வளைந்து, நெளிந்துக் கொண்டே வர்ரான். அப்பவே நான் கணக்கு போட்டுட்டேன்.


தம்பி!!! அந்த Internet Password கிடைக்குமா???

அதெல்லாம் எல்லோருக்கும் குடுக்க முடியாதுண்ணே!!!

தம்பி!! நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்ப்பா.... எனக்கு மட்டும் குடுக்க முடியாதா???

நீ குடுக்க மாட்டே!! நீ Skypeஐ திறந்து உன் பொண்டாட்டியோட பேச ஆரம்பிச்சா, அது முழு கம்பனிக்கும் கேக்குமேய்யா..... அப்புறம் யாரவது கேட்டா, என் தலைலதானே மிளகாய் அரைப்பே!!

இல்ல தம்பி!!!  அப்படியெல்லாம் நடக்காது தம்பி!!!!

அப்போ!! உனக்கு Internet Passworஐ குடுத்தா யாருக்கும் குடுக்க மாட்டேல்ல....

ஆமா..ஆமா...


உன்ன நம்பி தந்தா அந்த குடுத்த வாக்கை காப்பாத்துவல்ல....


ஆமா..... ஆமா....

நீ நம்பிக்கையான ஆளுதானே!!!

உன் நண்பர்கள் யாராவது கேட்டா???

தம்பி!! என்னை நம்பி குடுங்க.. நான் யார் வந்து கேட்டாலும் சொல்லப் போரதில்ல...


நானும் உன்னைய மாதிரிதான். யார் வந்து கேட்டாலும் சொல்லப் போரதில்ல.. போய் வா....

(ஓடுர மாட்டுலயே பால் கறக்குறவனுங்க நாம... நம்ம கிட்டயேவா.......  - மைண்ட் வாய்ஸ்)

தம்பி... அது வந்து.....

டேய்!!! எனக்கு கோவம் வர்ரதுக்குள்ள ஓடிடு.....

ஹி..ஹி.. நம்மளுக்கும் கோவம் வரும்ங்குரத நம்பி ஓடிட்டான்.. நல்ல வேலை.... இன்னும் நம்மளையும் நம்புர எதோ ஒரு ஜீவன் உலகத்துல இருந்துகிட்டுத்தான் இருக்கு....

Tuesday 24 January 2012

நண்பன் - இம்சை தாங்க முடியலப்பா....

 

ஒரு நாள் நானும் நம்ம நண்பர்களான பாப் & க்ரேஸியும் ஒரு பயணம் போவதற்காக  காலை 8.00 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் சந்திப்பதாக முடிவு.

நானும், பசங்க காத்துட்டு இருப்பானுங்களே’னு சொன்ன மாதிரியே 8.00 மணிக்கே போய் பாத்துட்டே இருக்கேன், பயபுள்ளைங்க வந்த மாதிரி இல்ல.. அப்புறம் என்ன?? சொந்த காசுல ஃபோன் பண்ண வேண்டி ஆகிடுச்சு...

************************************************

முதல்ல “க்ரேஸி”

டேய்!!! எங்கடா இருக்கே!!! நான் பஸ் ஸ்டாண்ட்’ல ரொம்ப நேரம் வெய்டிங்...

மச்சான்!! நான் ஒரு அண்டர் கவர் ஆபரேஷன் பண்ணிட்டு இருக்கேண்டா.. கொஞ்சம் லேட்டா நானே உனக்கு ஃபோன் பண்ரேன்.

டேய்!!! டேய்!!! டேய்!!!!
(கட் பண்ணிட்டான்.........)

அண்டர் கவர் கவர் ஆபரேஷனா???? யார் வீட்டு Drainageஐ கிளரி கிட்டு இருக்கானோ??னு நினைத்துக் கொண்டிருக்கும் போதே போன் அடிக்கிறது.


மச்சான் இப்போ சொல்லு!!!

டேய்!!! என்னடா அது அண்டர் கவர் ஆபரேஷன்?? அதுக்குல முடிஞ்சிடுச்சா???

அதுவா!!! டவுசர் போட்டுட்டு இருந்தேண்டா... அததான் சொன்னேன்..

அடப்பாவி!! அதாடா அண்டர் கவர் ஆபரேஷன்???

ஆமா!!  அது அண்டர் கவர் ஆபரேஷன்தானே!!!!

கருமம்... கருமம்... சீக்கிரமா வந்து சேருடா.....

***************************************************



அப்புறம் “பாப்”

டேய்!! நேரமாச்சுல்ல... இன்னும் என்னடா பண்ணுர????

டேய்!! உனக்கு எவண்டா சொன்ன நேரத்துக்கே போக சொன்னது???

உனக்கு தெரியுமுள்ள!! நாங்கெல்லாம் பிரின்ஸிபலோட வாழ்றவனுங்க....

எந்த காலேஜ் பிரின்சிபல்’னு தெளிவா சொல்லுடா???

அடப்பாவி!!!  அதாவது, நாங்கெல்லாம் கோடு போட்டு வாழுறவனுங்க’னு சொல்ல வந்தேன்.

அப்போ!! உனக்கெதுக்குடா வீடு, வாசல்??? ஒரு கோடு போட்டு அதுலயே வாழ வேண்டியதுதானே!!!

கிர்ர்ர்கிரிர்கிர்க்ரிர்ர்ர்ர்ர்ர்...........


Sunday 22 January 2012

ஷக்கலக்க பேபி



என்னா லுக்கு,,, என்னா கெத்து.. எப்படி இருக்கேன்...
ஆடிப் பாடி வேலை செய்தால் களைப்பிருக்காது’னு சொல்வாங்க. அதுல நம்ம ஆளுங்கள கேக்கவே வேணாம். பிள்ளை பிறந்ததுல இருந்து சாகும் வரை, வயல் உழுவதிலிருந்து, அரிசி வீடு வந்து சேரும் வரை’னு  எல்லாத்துக்கும் ஒரு பாட்டு வச்சிருப்பாங்க.

சிலருக்கு சோப்பு போடாம குளிச்சாலும், பாட்டு பாடாம குளிக்க முடியாது. சிலருக்கு பயணம் போகும் போது, தூங்கும் போது, டாய்லெட்’லனு எங்கையாவது பாடிக்கிட்டே இருப்பாங்க நம்மாளுங்க. அத பக்கத்துல இருந்து கேக்குரவன் பாடு பெறும் பாடு ஆனால், அதையெல்லாம் யோசிக்கிரதே கிடையாது.

எங்க அப்பாவோட கடைல இருந்து வீட்டுக்கு வர்ரதுக்கு இரண்டு மணித்தியாலம் ஆகும். சுமார் 10 வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் நாம போய் வரும் போது, அப்பாவோட   நண்பரோட குடும்பமும் நம்ம கூட வந்தது.  அதுல ஒரு ச்சின்னப் பையன் நம்ம கூட வந்து உட்கார்ந்துட்டான்.

ஆஹா!! ச்சின்னப் பையன் ஒருத்தன் சிக்கி இருக்கானே!! இந்தப் பையனை கலாய்ச்சிகிட்டே வீடு போய் சேர வேண்டியதுதான்’னு மனசுக்குள்ளேயே ஒரு திட்டத்தை போட்டு விட்டு, பேசத் தொடங்கினேன்.

தம்பி... ஒரு பாட்டுப் பாடுங்களே!!!!

அய்யோ!! என்னால முடியாதுண்ணே!!! வெக்கமா இருக்கு...

என்ன தம்பி கேட்டுபுட்டேன்.. ச்சும்மா ஒரு பாட்டு படிங்க... இதுக்கு எதுக்கு வெக்கப் படனும்....

சரிண்ணே!!!  அப்போ படிக்கிறேன்....
ஷக்க லக்க பே!!!!!!!!!!

ஆஹா!!! அருமையான பாட்டு தம்பி... துள்ளல் பாட்டா படிச்சு அசத்துரீங்க.. ம்ம்.. தாரை தப்பட்டையெல்லாம் கிளிந்து தொங்கட்டும்......

ஷக்க லக்க பே!!!!!!!!!!

சூப்பர்...சூப்பர்.. தொடர்ந்து படிங்க தம்பி.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

மேல படியுங்க தம்பி....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

என்ன தம்பி... அந்த வரியையே படிக்கிரீங்க????

ஷக்க லக்க பே!!!!!!!!!!

அவ்வளவுதான் தெரியுமா??? அப்போ வேற எதாவது பாட்டு படிக்கலாமே!!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!

வேற பாட்டும் தெரியாதா??? அப்போ வேற எதாவது பண்ணலாம் தம்பி.

ஷக்க லக்க பே!!!!!!!!!!

தம்பி.. போதும் தம்பி.. அந்தப் பாட்டை நிறுத்துங்களே!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!

அய்யோ!! தயவு செய்து நிறுத்துங்க தம்பி.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

அவ்வ்வ்..... நிப்பாட்டுப்பா.......

ஷக்க லக்க பே!!!!!!!!!!

நிறுத்துப்பா... மட்ட பே!!! மட்ட பே!!! [மட்ட பே (சிங்களம்)- என்னால முடியல)]


ஷக்க லக்க பே!!!!!!!!!!

அய்யய்யய்யய்யய்ய்யோ!!!!!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!

பக்கத்துல இருந்த என் தம்பியிடம்,
டேய்!! அந்த பிஸ்கட்’அ எடுத்து இவன் வாய்ல குத்துடா...!!! என்னால முடியல....

ச்சொக்கால்ல்லொக்க்க்காப்ப்ப்வ்ப்வ்ப்வ்வ்வ்வ்வ்

ஆஹா!! இதுக்கு முன்னையதே பரவாயில்ல போலிருக்கே!!! அந்த பிஸ்கட்’அ வாய்ல இருந்து எடுடா.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

அவ்வ்வ்...... தம்பி!! இனிமேல் எவன் கிட்டயும் பாட்டு படிக்க சொல்லவே மாட்டேன்ப்பா... அந்த பாட்ட நிறுதுப்பா....

 ஷக்க லக்க பே!!!!!!!!!!

ஆஹா!!! இது எங்க போயி முடியுமோ!!!

காதுல ரத்தம் பார்க்காம விட மாட்டான் போலிருக்கே!!!! அவ்வ்வ்வ்.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

இந்த கொடும போதாது’னு வண்டி’ல இருந்த அடுத்த வாண்டுகளும் கோரஸா ஆரம்பிச்சுடுச்சுங்க.... ஷப்பா.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

வண்டிய ஹாஸ்பிட்டலுக்கு திருப்புங்கடா.... என்னைய காப்பாத்துங்கடா!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

பாட்டுக் படிச்சே, பாலூத்த வச்சி, நம்மள சரித்திரத்துல இடம் புடிக்க வச்சிருவான் போலிருக்கே!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

டேய்!!! அந்த கண்ணாடிய திறந்து விடுடா... நான் குதிச்சுடுறேன்..

அண்ணே!! அத திறக்க முடியாதுண்ணே!!!

ஆஹா...அடச்சி வச்சு அவஸ்தை குடுக்குரானுங்களே!!!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

தம்பி... நீ போரதுக்கு  ஃப்ளைட்  டிக்கட் போட்டு குடுக்குரேன்ப்பா... அந்தப் பாட்ட நிப்பாட்டுய்யா.....!!!!


ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

ஆஹா!!!! சாய்ச்சிபுட்டானே!!!!!!!!  சாய்ச்சிபுட்டானே!!!!!!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

தாரை தப்பட்டையைத்தானே கிளிஞ்சு தொங்க வைக்க சொன்னேன். என்னையயே இப்படி பண்ணிட்டியே!!!!


ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

கொஞ்ச நேரமல்ல... 2 மணித்தியாலம் ஓயாம ஒலிச்சதுல, அது நம்ம காதுல Default Ringing Tone ஆயி.. 2 வாரமா காதுல கேட்ட வண்ணமே இருந்துச்சு.. இந்த கொடும போதாதுனு, வீட்டுல உள்ள ச்சின்னதுங்க வேறு, நாம அசர்ர நேரம் பார்த்து, காதுக்குள்ள “ஷக்க லக்க பே!!!!!!!!!!”னு கத்தினு ஓட ஆரம்பிச்சுடுச்சுங்க....

ஒரு பாட்டு படிக்க சொன்னதுக்காக இப்படியா ஒரே பாட்ட படிக்கிறது???

இப்போ, கூட அந்த பயபுள்ள’ய கண்டால், அந்த கொடுமைய ஞாபகப் படுத்தி, தலையை தடவி ஒரு குட்டு குடுத்து அனுப்புறதுதான் நம்ம வழமை. நம்மள யாருன்னு நெனச்சுக்கிட்டான்????

ஸ்டார்டிங்;ல எப்படி இருந்த என்னைய, ஃபினிஷிங்க்ல இப்படி ஆக்கிப் புட்டானுங்க...







Thursday 19 January 2012

என்னைப் பார்த்தா பாவமா இல்லையா???



  இரண்டு நாட்களுக்கு முன்னாடி டேமேஜர் கூட உக்காந்து அந்த ஆளு சொல்லுரதுக்கெல்லாம்.. வழமை போல ஆஹா.. அருமை, அற்புதம்’னு தலையை ஆட்டிகிட்டு இருக்கேன். அப்போ ஒரு ஆளு வந்தாரு. அவரு ஒரு Engineer. அப்பிடினு அவரே சொல்லிக் கிட்டாரு.
கொஞ்ச நேரம் போயிருக்கும், ”தம்பி இப்போ Sony கம்பனி’ல லைட்டர்’லாம் தயாரிக்கிராங்க போல” அப்படின்னார். நம்மளுக்கு உண்மை தெரியாவிட்டாலும் தெரியாது’னு காட்டிக்கலாமா??? அப்டினு நானும் ஆமா ஆமா’னு சொல்லிட்டேன்.
அப்புறம் கொஞ்ச நேரம் போயிருக்கும்,
தம்பி.. என்னப்பா.. இந்த லைட்டர்’ல நெருப்பே வருதில்ல.. ஒரு வேளை கேஸ் முடிஞ்சிருச்சா’???

என்னது??? என் கிட்ட லைட்டரா??’னு பார்த்தா நம்ம Sony Pen Drive’வை ஒரு மார்க்கமா திருகிகிட்டு இருக்காரு. (ஆஹா…!!!! இதையே லைட்டர்’னு சொன்னே???? – மைண்ட் வாய்ஸ்) 


நம்ம Pen Drive

இப்படியே விட்டா நம்ம Pen Drive’வை ஒரு வழி பண்ணிடுவாரு’னு பயந்து,

சார்!! அது லைட்டர் இல்ல சார்.. என்னோட Flash Drive.

அப்போ Flash’ஷே வரல்லையே!!!

ஷப்பா….. சார் அது Pen Drive சார்…

ஆமா!!!  அப்போ இதுல எந்தப் பக்கத்துல முனை இருக்கு.. எப்படி எழுதுவீங்க????

அவ்வ்வ்வ்வ்………..

ஊர், உலகத்துல உள்ள எசகு பிசகான ஆளுங்களுக்கெல்லாம் எவன்’தான் என் அட்ரஸ் குடுக்குரா’ன்னு தெரியலையே!!!!

Thursday 12 January 2012

வேட்டை - டான் + போலீஸின் கதை




ஒரு முறை காலேஜ் லீவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு வீவு முடிஞ்சு நம்ம காலேஜ் இருக்கிற ஊருக்கு போறேன், காலேஜே ஒரே பரபரப்பாக இருக்கு... இது என்னய்யா புதுசா இருக்கு;னு பாத்தா, காலேஜ்’ல ஒரு டான்(Don) உருவாகிட்டான்’னு செய்தி வருது.

யார்ரா அந்த டான்’னு பார்த்தா... வேறு யாரும் இல்ல.. நம்ம நண்பன் க்றேஸி’தான் அந்த டான். நம்ம க்றேஸி வயசு போய் தாத்தா ஆகிட்டான்’னு சொன்னா கூட நம்பலாம். ஆனால், தாதா ஆகிட்டான்’குறத எப்படி நன்புரது???

சரி அவன் கிட்டவே கேட்டுரலாம்’னு பார்த்தா, ஆளையே  பிடிக்க முடியல. டான் ஆகிட்டா, ஊர்ல உள்ள படியெல்லாம் ஏறி இறங்கனும், ஆட்டோல ஊர சுத்தனும்ங்குற சம்பிரதாயதிற்கு ஏற்ப, காலேஜ்’ல உள்ள படியெல்லாம் ஏறி, இறங்கி முடிச்சுட்டு, ஊர்ல எந்த ஆட்டோவும் வராததால (பைசா குடுக்க மாட்டான்’னு தெரியுமுள்ள) பக்கத்து ஊர் ஆட்டோல பயபுள்ள ஊரை சுற்ற கிளம்பிட்டான்.

 ரொம்ப கஷ்டத்திற்கு மத்தியில நம்ம டானை மடக்கி,

டேய்!!! என்னடா ஆச்சு...??  செம்மரி ஆட்டுக்கு புலி வேஷம் போட்ட மாதிரி உனக்கு ரவுடி வேஷம்.. பார்க்க சகிக்கலயே!!!

மச்சான், 3 நாளைக்கு முன்னாடி கண்டி நகரத்துல இருந்து பஸ்’ல வந்துகிட்டு இருந்தேனா, திடீர்னு ஒரு எடத்துல திடீர்னு போலீஸ் பஸ் வண்டியை மறைத்து, உள்ள புகுந்து என் பக்கத்துல இருந்தவன போட்டு கும்மு கும்மு’னு கும்ம ஆரம்பிச்சானுங்க. அது வர நல்லாத்தான் போய் கிட்டு இருந்துச்சு.

அப்புறம் என்ன நெனச்சானுங்க’னு தெரியல. திடீர்னு ”யோவ்!! நீயும் இவன் கூட கூட்டுதானே”னு சொல்லி என்னையும் இழுத்து கும்மு கும்மு;னு கும்ம ஆரம்பிச்சுட்டானுங்க. அவன் யாரு?? எதுக்கு கூட்டு?? ஏன் அடிக்கிரானுங்க.. எதுவுமே புரியல. அவன் கிட்ட உண்மைய சொல்ல சொல்லலாம்’னு பார்த்தா,  அவனும் அடி வாங்கியே மயங்கி விழுந்துட்டான்.

அப்புறம், போலீஸ் ஸ்டேஷன் கூட்டிப் போயி, அந்தப் பய புள்ளைக்கு சுய நினைவு வரும் வரை, நம்மள கும்மினானுங்க. அவன் எழுந்து, இவன் யாரு’னு என்னைப் பார்த்து கேற்க, அப்புறம் அசடு வழிஞ்ச போலீஸ், நம்மள வீடு வரை, போலீஸ் வண்டிலயே கூட்டி வந்தானுங்க. நான் போலீஸ் வண்டில வந்து இறங்குறதை பார்த்த நம்ம ஊர் பயலுங்க, டெரர் ஆகிட்டானுங்க.. நானும், இதுதான் சந்தர்ப்பம்’னு அதையே கொஞ்சம் பில்ட் அப் பண்ணி டான் (Don) ஆகிட்டேன்.

அந்த நேரம் பார்த்து இன்னொரு சம்பவமும் நமக்கு சாதகமா அமைஞ்சிடுச்சு. அந்த சம்பவம், க்ரேஸியோட அண்ணனை நடு ராத்திரியில் நாலு பேரு தாக்க, அவரும் திருப்பித் தாக்க, கடைசியில் அடுத்த நாளு க்ரேஸியின் அண்ணன் ஹாஸ்பிட்டலில். ஆனால், ஊரிலோ யாரோ ஒரு நல்ல உள்ளம் படைச்சவர் “நம்ம க்ரேஸி ராத்திரி 10 பேரை அடித்து விட்டதாக கதையை பரப்பி விட்டார். அப்புறம் என்ன??? நம்ம டான்’னின் ரேங்க் இன்னும் எகிறிடுச்சு..

அத்தோடு, காலேஜிற்கு, புதியவர்கள் சேரும் காலம் என்பதால் டான் க்ரேஸியை வைத்தே ராகிங்’ன்ற பேர்ல செம வேட்டை நடத்தினோம். அந்த வேட்டைல பாதிக்கப் பட்ட ஒரு முக்கியமான ஆளுதான், நம்ம ”காமராசு”. காமராசு அந்த நேரத்துலதான் நம்ம காலேஜ்’ல சேர்ந்திருக்க, டான் க்ரேஸியின் வேட்டையில் காமராசுவின் பர்ஸும் பல முறை வேட்டையாடப் பட்டிருக்கு. இப்பொழுதும், நம்ம காமராசு சொல்லுவான், “மச்சான், அந்த நாட்கள்ல டான் க்ரேஸிய பார்த்தாலே என் கால், கையெல்லாம் பதற ஆரம்பிச்சுடும்டா’னு.

எப்படி நம்ம பில்ட் அப்பு....

Sunday 8 January 2012

அடுத்தவர் கணணி மூலமா நாம் சம்பாதிக்கலாம்


பணம் சம்பாதிக்கனும்னு போற அபீஸ்’ல ”எப்படி வெட்டியா பொழுதை போக்கலாம்?” என்றும், வெட்டியா பொழுதை போக்குர இண்டெர்நெட்’ல  ”எப்படி பணம் சம்பாதிக்கலாம்’’னு யோசிக்காத ஆளுங்களே கிடையாது.

பணம் சம்பாதிக்கவென இணையத்தில் ஆயிரம் வழிகள் இருந்தாலும் நம்பிக்கையானவை என்பது மிகக் குறைவானதே.  ஆனால் நான் சொல்லப் போவது 100% நம்பிக்கையானது,  அதே நேரம் அது உங்கள் கணனியில் அல்ல, அடுத்தவர் கணனி மூலமாகவும் சம்பாதிக்கலாம்.

அது எப்படி என்று நான் சொல்வதை விட, அனுபவம் வாய்ந்தவர், இதன் மூலம் பணம் பெற்றவரே உங்களிடம் சொல்லப் போகிறார்.


சரி.. இப்போ எல்லோரும் பணக்காரர் ஆகப் போறீங்க. அதுக்கு முன்னாடி ஒரு கனவுப் பாட்டு இருந்தாத்தானே நல்லா இருக்கும். எனவே எல்லோரும் உங்களுக்கு புடிச்ச நாட்டுக்கு போய், இல்ல செட்டு போட்டு கனவுப் பாட்டு பாடிட்டு பதிவுக்கு வாங்க......

நம்ம தம்பியோட கூட படிச்ச பையன்’தான் ”பாண்டு”.நம்ம தம்பி, CD,DVD, Pen Drive, Potable Hard Disk'னு கம்ப்யூட்டர் சம்பந்தமாக எது கொண்டு வந்தாலும் அது பாண்டுவோடதாத்தான் இருக்கும். பாண்டுவால் மட்டும் எப்படி முடியுது???? ஒரு நாள் தம்பியிடம் கேட்டு விட்டேன். அந்த உறையாடல்......

தம்பி... எப்படிடா பாண்டுவால இதெல்லாம் வாங்க முடியுது???

அவன் கம்ப்யூட்டர் மூலமா சம்பாதிக்கிறான்ல...

அடப்பாவமே!! உனக்கும் அவன் வயசும் ஆகுது!! நீயும் இருக்கியே!!!

அண்ணே!! நீங்களே இன்னும் வெட்டியாத்தானே!!!.......................................

டேய்!!! ப்ளடீ ஃபூல்....$*%&^#(@&@@_$#*#^%&u(rwr&%*#%*(%^(#_......
(சின்னப் பசங்க கிட்ட பல்பு வாங்குற நிலமை வந்தா, வன்முறைய கைல எடுத்து அடக்கிடனும். இல்லாவிட்டால், காலம், நேரம் பார்க்காம, ஈவு, இரக்கம் இல்லாம மானத்த வாங்கிடுங்க...)

அண்ணே!! பாண்டு வீட்டுப் பக்கத்துல உள்ள பசங்க கம்ப்யூட்டல்’ல Games Install பண்ரதுக்கு நம்ம பாண்டுவ விட்டா வேற ஆளு இல்ல. சோ, இவனும் ஒரு Games Install பண்ண 50/= புடிங்கிடுவான்.

இதே வேலைய எத்தன முறை பண்ணலாம்?? ஒரு முறை Games Install பண்ணினா முடிஞ்சுதே... ??

அங்கதாண்ணே, நம்ம பாண்டு “தான் ஒரு பிஸினஸ் மேன்’னு நிரூபிக்கிறான். பாண்டு கைல பைசா இல்லைனு வச்சுகங்க. பாண்டு தம்பி ”துரும்பு” இருக்கான்ல. அவன பக்கத்து வீட்டுக்கு அனுப்பி வச்சுடுவான். அவனும் பக்கத்து வீட்டு பையன் அசர்ர நேரம் பாத்து, பாண்டு சொல்லி குடுத்த மாதிரியே, Games Install பண்ணி இருக்குற எடத்துல ஒரு ஃபைல Delete பண்ணிட்டு வந்துடுவான். அப்புறம் என்ன?? மறுபடி பாண்டு கிட்டத்தான் வந்தாகனமுள்ள....

கர்ர்ர்ர்.தூ.... இதெல்லாம் ஒரு பொழப்பாடா????

அண்ணே!!! வீட்டுல வெட்டியா இருக்குறத விட.....

டேய்!!! ப்ளடீ ஃபூல்....$*%&^#(@&@@_$#*#^%&u(rwr&%*#%*(%^(#_......



Friday 6 January 2012

வெட்டிப் பசங்களுக்கு மட்டும்....

Picture (Device Independent Bitmap)



 


ஏய்!!! நீ ப்ரீயா இருந்தா இந்த கோட்ட தாண்டி படிச்சி பாரு........
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Picture (Device Independent Bitmap)

         
ஒத்துக்குறேன். நீங்க வெட்டியாத்தான் இருக்கீங்கனு ஒத்துக்குறேன்....................
 
 
நெக்ஸ்ட்டு போஸ்ட்டுல மீட் பண்ணுறேன்.... 
 
 
 
(இது மெயில்ல வந்தது...யார் பெத்த புள்ள எழுதியதோ????)