Sunday, 10 July 2011

ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு....


நம்ம Gang’ல முக்கியமான ஒரு ஆளுதான் (உன்ன தவிர எல்லானுமே முக்கியமான ஆள்தான்யா..) நம்ம “காமராசு”. நாம எல்லா நன்பர்கள் வீட்லயும் ஓசி  சோறு சாப்பிட்டாலும் இந்தப் பய புள்ள மட்டும் ரொம்ப நாளா தண்ணி காட்டிக் கொண்டே இருந்தான். அதற்கு காரணம், இவன் வீடு ரொம்ப தொலைவுல இருந்ததுவே(அப்பாடா தப்பிச்சான்). அனுராதபுரத்துக்கு அடுத்து இருக்கும் ஒரு சிறிய கிராமமே காமராசு’வின் ஊராகும்.(உன்னைய நம்பி எப்படியா Address குடுத்தான்)

மழை காலத்தில் ஊருக்கு போகலாமா’னு (நீ போனா, வார மழையும் திரும்பி போயிடுமே!!!!) கேட்டா, ”போகலாம், ஆனா மழை காலம் என்பதால, குளத்துல உள்ள முதலையெல்லாம் மூனு மாசம் பசியோட ஊருக்குல உலா வரும். அது ஒன்னும் பிரச்சனை இல்ல, முதலை குரல் வளையை கடிக்கும் போது, கிச்சு கிச்சு மூட்டினால் விட்டுடும்’னு நம்ம Basement;ஐ வீக் ஆக்கிடுவான்.

வெயில் காலம் வரும் வரை காத்துடு இருந்து “மச்சி இந்த முறை ஓசி சோறு போட்டே ஆகனும். வெயில் காலமுள்ள’னு சொன்னா, ”வரலாம், ஆனால் யானையெல்லாம் தண்ணீர் தேடி வந்து ஊருக்குள்ளதான் குடும்பம் நடத்துது. அது மேட்டரே கிடையாது, யானை விரட்டும் போது, யானையின்இரண்டு காலுக்கும் நடுவால ஒடிராம்’னு ஆறுதல் சொல்ல, நம்ம  Basement weakness பில்டிங் பூரா பரவி நடுக்கமெடுத்து விடும்.

சரி, இரண்டுக்கும் நடுப்பட்ட காலம் போகலாம்’னு முடிவெடுத்தா “இப்போ வாரதுல எந்தப் பிரச்சனையும் இல்ல (நீயே ஒரு பிரச்ச்னைதானே!!!) ,ஆனால் ஊருக்குள்ள புலித்தொல்லை (இரண்டு கால், வால் இல்லாத புலி) இருக்கு’னு சொல்ல, ஆஹா!!!! கரடி கூட கக்கூஸ் போக சொன்னாலும், சிங்கம் கூட சீட்டாட சொன்னாலும், முதலைக்கு முதுகு சொறிந்து விட சொன்னாலும் ரெடி.  புலித்தொல்லை வேணவே வேணாம்’னு ஆசையை அடக்கிக் இருக்க வேண்டியதாகிடுச்சு.

இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருக்க, ஒரு மேட்டர்’ல நம்ம காமராசு வசமா நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான். விடுவோமா நாங்க??????  அந்த மேட்டர்க்கு கை, கால், மூக்கு வச்சு பூதகரமாக்கி, “மவனே ஓ.சி சோறு போடல.... உன்ன போட்டு குடுத்துருவோம்டீ”னு மிரட்டி, அவன் ஊருக்கு பொட்டி கட்டினோம்.


ஊர் எல்லையை அடைந்த போது, அங்குள்ள ஒரு கிணற்றில் “இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது”னு (அது குடி நீர்க் கிணறு) போர்டு மாட்டியிருப்பதை பார்த்த க்ரேஸி “இந்த ஊர்ல யாருமே குளிக்க மாட்டானுங்களா??? அப்போ, ஊரே நாருமே”னு சத்தமாக சொல்ல, மொத்த ஊரும் நம்மை கொலை வெறியுடன் பார்க்கத் தொடங்கியது. நம்ம கதைல Starting நல்லாயிருக்கும்  Finishing’தான் ஆப்படிக்கும். இந்த கதைல ஆரம்பத்துலயே சனியன் சிக்னல் குடுத்துடுச்சு...

காமராசு வீட்டில் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துடு, அடுத்த நாள் எங்கே போகலாம்’னு யோசித்த வேளை, குளத்துக்கு குளிக்கப் போகலாம்’னு க்ரேஸி ஐடியா குடுக்க, அனைவரும் பின் வாங்கினோம். (நீ குளிச்சா உலக அதிசயமே!!!) முதலை இருக்குமோ’னு எல்லோருக்கும் பயங்கர பயம்!!!!! (நீ குளிச்சா குளம் நாரிடுமோ’னு முதலைக்கெல்லாம் பயமாம்!!!) நம்ம கேங்’லயே கடல்’ல குளித்த ஒரே ஆளு’ங்குர தைரியத்துல க்ரேஸி மாத்திரம் குளத்தில் குளிக்கப் போவதில் உறுதியாய் இருந்தான். “டேய்!!! நான் கடல்ல குளிக்கும் போது பார்க்காத முதலையா... இதெல்லாம் சப்ப மேட்டரு”னு சொல்ல கடல்ல முதலை இல்லை’னு தெரியாத நாமளும் அவன் பேச்சை நம்ம்ம்ம்ம்பி குளத்துக்கு போக தயாரானோம்.

போகும் வழியில் ஒரு முதியவர், “தம்பி, எங்கப்பா போரீங்க’னு கேட்க நாமளும் குளத்துக்கு போரோம்’னு சொல்ல, “கிரிக்கட் விளையடவா போரீங்க”னு கேட்க நமக்கெல்லால் “ப்கீர்”னு ஆச்சு.  (கேங்’ல எவனுக்குமே குளிக்கிர பழக்கம் இல்லை’னு புரிஞ்சுடுச்சோ!!!)

என்னது???? குளத்துல கிரிக்கட் ஆடுவீங்களா’னு காமராசுவை உளுக்கு உளுக்கு’னு உளுக்க, “மச்சி, மழை காலத்துல குளம், வெயில் காலத்துல மைதானம். இப்போ வெயில் காலமுள்ள..அதுதான் பெரியவர் அப்படி கேக்குறாரு”னு சொல்ல... “டேய்! இப்போ குளத்துல தண்ணீர் இருக்கா? இல்லையா’னு கேட்க, “இருக்கு ஆனா இல்ல’னு குழப்பினான்.



சரி..வந்ததே வந்தாச்சு.. போய் பார்க்கலாம்’னு குளத்தை அடைந்தால் தெளிவான தண்ணீர் இருந்தது. “என்ன பண்ணலாம்’னு யோசித்துக் கொண்டிருக்கும் போதே, தன் திறமையை காட்டும் வெறியுடன் க்ரேஸி ஓடிப் போய் குளத்துல குதித்து விட்டான். பிறகுதான் புரிந்தது, குளத்து நீர், வெளியில் தெளிவாக இருந்தாலும் அடியில் பயங்கர சகதியாக இருந்த மேட்டர்.

அந்த நேரம் பார்த்து அங்கே வந்த ஒரு பெரியவர், “எவன்யா அது??? சகதில புரள்ரவன்??  (அவ்வ்வ்வ்வ்) எருமை மாடே இந்த குளத்தை மோப்பம் புடிச்சுடு  "U" Turn அடிச்சு ஓடுது.. அதுல போய் குதிக்கிரியே!!! கொஞ்சமாவது மூளை இருக்கா???  #&^%#%^#*#(##))##*#&^&*#*(#(#) .....” சரமாரியாக திட்டி விட்டு நம்மளை பார்த்து,
“யோவ்!!! இவன் இவன் உங்க கூட வந்தவனா’??? 
இவர் யாருன்னே தெரியாதுங்க....... (நன்பண்டா....)
முன்ன பின்ன பார்த்து இல்லையா???
சைட்’ல கூட பார்த்தே இல்லை பெரியவரே!’னு சொல்லி நாங்க எஸ்கேப் ஆனோம்.

கொஞ்ச நேரத்துல நன்பன் க்ரேஸி வின்னர் வடிவேலு ஸ்டைல்’ல வீடு வந்து சேர்ந்தான்.

டிஸ்கி 1: என் கதைகளில் வரும் நன்பர் “க்ரேஸி” குறிப்பிட்ட ஒரு நபரை குறிப்பதல்ல.. சில வேலை அது நானாகவும் இருக்கலாம்.(அதுக்காக இந்தக் கதைல வரும் க்ரேஸியும் நானாக இருக்கும்’னு நம்பக் கூடாது)



13 comments:

  1. // இந்தப் பய புள்ள மட்டும் ரொம்ப நாளா
    தண்ணி காட்டிக் கொண்டே இருந்தான். //

    எங்க ஊர் மாதிரியே தான் உங்க ஊரும்
    போல.. இங்கேயும் ஆடு.,மாடு, எருமைக்கு
    தான் தண்ணி காட்டுவாங்க..!

    :)

    ReplyDelete
  2. // உளுக்கு உளுக்கு’னு உளுக்க, //

    இருந்தாலும் நீங்க தமிழை பிடிச்சி
    இப்படி உலுக்கு உலுக்கு’னு உலுக்க
    கூடாது..!

    ReplyDelete
  3. ///
    எங்க ஊர் மாதிரியே தான் உங்க ஊரும்
    போல.. இங்கேயும் ஆடு.,மாடு, எருமைக்கு
    தான் தண்ணி காட்டுவாங்க..!//

    தப்பு..தப்பு... இங்க மனிதர்களுக்குத்தான் தண்ணி காட்டுவாங்க....

    ReplyDelete
  4. ////இருந்தாலும் நீங்க தமிழை பிடிச்சி
    இப்படி உலுக்கு உலுக்கு’னு உலுக்க
    கூடாது..! //

    திருத்திக்கிறேன்...

    ReplyDelete
  5. //அதுக்காக இந்தக் கதைல வரும் க்ரேஸியும் நானாக இருக்கும்’னு நம்பக் கூடாது//

    நான் நம்பமாட்டேன்

    ReplyDelete
  6. கிரேஸி எண்ட ஒரு கரைக்டேர் வைத்து செம கட்டு கட்டிரிங்க பாஸ்

    ReplyDelete
  7. அந்த நேரம் பார்த்து அங்கே வந்த ஒரு பெரியவர், “எவன்யா அது??? சகதில புரள்ரவன்?? (அவ்வ்வ்வ்வ்) எருமை மாடே இந்த குளத்தை மோப்பம் புடிச்சுடு "U" Turn அடிச்சு ஓடுது.. அதுல போய் குதிக்கிரியே!!! கொஞ்சமாவது மூளை இருக்கா?


    ஆகா கலக்குங்க..... கலக்குங்க ...கிரேஸி
    பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  8. இந்த ஊர்ல எவனும் குளிக்க மாட்டாங்களா... சிரித்து ரசித்தேன்.

    ReplyDelete
  9. ரண களம் புரியவில்லையே?

    ReplyDelete
  10. இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருக்க, ஒரு மேட்டர்’ல நம்ம காமராசு வசமா நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான். விடுவோமா நாங்க?????? அந்த மேட்டர்க்கு கை, கால், மூக்கு வச்சு பூதகரமாக்கி, “மவனே ஓ.சி சோறு போடல.... உன்ன போட்டு குடுத்துருவோம்டீ”னு மிரட்டி, அவன் ஊருக்கு பொட்டி கட்டினோம்.



    what's that matter?

    ReplyDelete
  11. ரசிச்சு படித்தேன்...படித்து சிரித்தேன்.... :)

    ReplyDelete
  12. ஃஃஃஃஃ “கிரிக்கட் விளையடவா போரீங்க”னு கேட்க நமக்கெல்லால் “ப்கீர்”னு ஆச்சு.ஃஃஃஃஃ

    உங்களுக்கேற்ற சரியான ஆளப்பா..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

    ReplyDelete