Sunday 4 December 2011

வெள்ளை மாளிகை விருந்துபசாரத்தில் நான்..




வெள்ளை மாளிகையை சுற்றிப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தாலே அனேகமானோர் முண்டியடிப்பர். வெள்ளை மாளிகையில் ஒரு விருந்துக்கு அழைத்தால் யார்தான் முடியாது என்பார்கள். எனக்கும் நண்பர்களுக்கும் சுமார் 7 வருடங்களுக்கு முன் அதற்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. விடுவோமா நாங்க.... (நீ நாறின சோத்தையே ஓ.சி.ல கிடைச்சா விட மாட்டியே!!!)

நமது நண்பன், நல்லவன், வல்லவன் நம்ம கேங்’லயே பல சாகங்கள் புரிந்த நம்ம க்ரேஸியோட பிறந்த நாள். விட்ருவோமா???? ஒரு மாத்தத்துக்கு முன்னாடியே ட்ரீட் குடுடா’னு நச்சரித்ததுல, பைசா பைசா’னு பாக்காம நான், பாப், நம்ம ரெண்டு பேருக்கும் கண்டி நகரத்துல உள்ள பிரபல்யமான ஹோட்டலான White House’ல(வெள்ளை மாளிகை) விருந்து குடுக்குரதா சொல்லி காலம், நேரத்தையும் சொல்லிட்டான்.

White House Resturant'இன் வெளிப்புறத் தோற்றம்
குடுக்குர விருந்துல நல்லா சப்பிடாட்டி நண்பன் மனசு வலிக்குமுள்ள.. அதனால 2,3 நாளு பட்டினி இருந்து கொலைப் பசியோட உள்ள புகுந்தா, பாப் ஒரு மணித்தியாலம் கழிச்சு வர்ரான். நமக்கு பயங்கர கடுப்பு. வந்து சும்மா இருந்தாலும் பரவால,
”மச்சான்!! நான் லேட்டா வந்தாலும் எப்பவுமே பன்ச்சுவாலிட்டி மிஸ் பண்ணினது இல்லாடா’னு சொன்னான் பாருங்க ஒரு பன்ச் டயலாக்.... கர்ர்ர்கககக்கர்ர்ர்ர்ர்.....

சாப்பாடு வரும் வரை ஏதாவது செய்யனுமே!!! நாமளும் ச்சும்மா பேசிட்டு இருக்கும் போது, நாமளும் நம்ம கெத்’ஐ காண்பிக்கனுமே’னு....
க்ரேஸியை பார்த்து....

நான்: மச்சான்!! என்னடா பார்டிய இவ்ளோ சின்னதா குடுக்குரே!!!

பாப்: டேய்!! பரதேசி... அதைப் பற்றி நீ பேசாத..... நீ உன் பிறந்த நாளுக்கு 5/= சாக்லெட்தானே குடுத்தே!!!

க்ரேஸி:  உனக்கு அதையாவது குடுத்தான். என் கிட்ட அதுலயும் பாதிய புடுங்கி சாப்பாடான்யா இவன்..

ஆஹா!!! ஆரம்பத்துலயே அசிங்கப் பட்டுடியேடா !!! அந்த சம்பவத்தை இன்னும் மறக்காம இருப்பானுங்க’னு தெரிஞ்சிருந்தா கம்முனு இருந்திருக்கலாமே!!! - மைண்ட் வாய்ஸ்


அப்புறம் சாப்பாடு வந்து விட.. அதுக்கப்புறம் அசிங்கம், அவமானம் பத்தியெல்லாம் யாரு கவலைப் படுரது... செம கட்டு கட்டியாச்சு... பில் வந்ததும், நமக்கு ரொம்ப மென்மையான மனதுங்குரதால பில்லை பார்த்து நான் அதிர்ச்சியடைய விரும்பல. நம்ம க்ரேஸியே பில்லை செட்டில் பண்ணிட்டான். ஆனால்....

அதற்கு பிறகு அவன் செய்த வேலையை எனக்கும், பாப்’க்கும் தாங்க முடியல... ஆமாங்க, பயபுள்ள வெய்ட்டருக்கு 120/= டிப்ஸ் வச்சிட்டான்..

மச்சீ!! இவ்ளோ டிப்ஸ் எதுக்குடா????

டேய்!! இது பெரிய இடம். மத்த இடங்கள் போல 5, 10/= வைக்க முடியாது.

எனக்கு ரொம்ப ஃபீலிங் ஆயிடுச்சு. அதே ஃபீலிங்’கோடு கொஞ்ச தூரம் வந்து நாம சாப்பிட்ட மேசையை பார்க்கிறேன். வச்ச டிப்ஸ்’ல வெறும் 20/=தான் இருக்கு.. ஆஹா!!! அதுக்குள்ள என்னடா ஆச்சு’னு ஒரே குழப்பமா இருக்க ,  மெதுவாக என்னை சுரண்டிய பாப்,
“மச்சான்.. க்ரேஸி இந்தப்பக்கம் வந்ததுமே நான் 100/= சுட்டுட்டேன். வெளில வா.. 50+50 எடுத்துக்கலாம்’னு சொல்ல காதுல தேன் வந்து பாய்ந்தது’னு சொல்லவா வேணும்.

பார்டியும் குடுத்து பாக்கட் மணியும் குடுத்த நீ நண்பண்டா!!!!!!!





20 comments:

  1. ஆஹா நல்ல பார்டி நல்ல ஃபிரெண்ட். வாழ்க!!

    ReplyDelete
  2. சிரிப்பு தாங்க முடியல....

    ReplyDelete
  3. //(நீ நாறின சோத்தையே ஓ.சி.ல கிடைச்சா விட மாட்டியே!!!)
    //
    மனசாட்சியா ?

    ReplyDelete
  4. இதே போல் டிப்ஸ் எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் சத்யராஜ் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது

    ReplyDelete
  5. அருமை ....இந்த மாதிரி நண்பர்கள் இல்லையே...

    ReplyDelete
  6. அந்த crazy ரொம்ப நல்லவன் டா.... ஒங்கலுக்கெல்லம் treat தார அலவுக்கு ஒரு மஹா நல்லவனா,,, நம்ப முடியல.....

    ReplyDelete
  7. // “மச்சான்.. க்ரேஸி இந்தப்பக்கம் வந்ததுமே
    நான் 100/= சுட்டுட்டேன். வெளில வா..
    50+50 எடுத்துக்கலாம்’னு சொல்ல. //

    அதை கேட்டதும்...

    " இன்னும் வேற டேபிள்லயும் இதுமாதிரி
    50 - 100 எக்ஸ்ட்ரா கிடைக்குதான்னு
    பார்க்குறேன்னு " ஓட்டலுக்கு ஓடினீங்களாமே..!!!

    ReplyDelete
  8. @ NAAI-NAKKS said...

    // :)
    :)
    :)//

    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி

    ReplyDelete
  9. @ எம் அப்துல் காதர் said...

    ///ஆஹா நல்ல பார்டி நல்ல ஃபிரெண்ட். வாழ்க!!///

    நன்றி சார்..

    ReplyDelete
  10. @"என் ராஜபாட்டை"- ராஜா said...

    /////(நீ நாறின சோத்தையே ஓ.சி.ல கிடைச்சா விட மாட்டியே!!!)
    //
    மனசாட்சியா ?//

    ஹி..ஹி... யெஸ் யெஸ்..

    ReplyDelete
  11. @ suryajeeva said...

    /// இதே போல் டிப்ஸ் எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் சத்யராஜ் பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது///

    ஹி..ஹி.. அவரு ஏற்கனவே பண்ணிட்டாரா???
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  12. @ கோவை நேரம் said...

    ///அருமை ....இந்த மாதிரி நண்பர்கள் இல்லையே...///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நல்ல நன்பர்கள் விலை மதிப்பில்லாத சொத்துக்கள்தன்..

    ReplyDelete
  13. @ Anonymous said...

    // அந்த crazy ரொம்ப நல்லவன் டா.... ஒங்கலுக்கெல்லம் treat தார அலவுக்கு ஒரு மஹா நல்லவனா,,, நம்ப முடியல.....//

    டேய்!! Anonymous’ஆ வந்துட்டு லொல்ல பாரு??? நானும் Anonymous’ஆ வந்து நான் ரொம்ப நல்லவன்’னு சொன்னா ஒத்துக்கிவியா???

    ReplyDelete
  14. @ வெங்கட் said...

    /// // “மச்சான்.. க்ரேஸி இந்தப்பக்கம் வந்ததுமே
    நான் 100/= சுட்டுட்டேன். வெளில வா..
    50+50 எடுத்துக்கலாம்’னு சொல்ல. //

    அதை கேட்டதும்...

    " இன்னும் வேற டேபிள்லயும் இதுமாதிரி
    50 - 100 எக்ஸ்ட்ரா கிடைக்குதான்னு
    பார்க்குறேன்னு " ஓட்டலுக்கு ஓடினீங்களாமே..!!!///

    அங்க போய் வெய்ட்டர் கிட்ட அடி வாங்கினத்த சொல்லாம விட்டீங்களே... அதுவே போதும்..

    ReplyDelete
  15. செம ரகளை நன்பா...
    அது சரி நீங்க விருந்துக்கு போனது உண்மையிலேயே வெள்ளை மாளிகை தானா?? இல்ல வெள்ள பெயின்ட் அடிச்ச சாதாரண கடையா??

    ReplyDelete
  16. ha...ha... superb

    ReplyDelete