Monday, 21 March 2016

பத்து எண்ரதுக்குள்ள..... Part i

போன வாரம் நம்ம ஃப்ரெண்டு டட்சனுக்கு கல்யாணம். கல்யாணத்துக்கு போன வேலை (பத்து ப்ளேட்ட முழுங்கியிருப்பே!!!) அவன் வீட்டு முன்னால நிறுத்தியிருந்த காரை பார்த்ததும் (டுபாய்ல இருந்த பழக்கதோஷத்துல பக்கத்துல நிண்ணு போட்டோ எடுத்திருப்பியே) எனக்கு அப்டியே சுருள் சுத்தி ஃப்லேஷ் பேக்குக்கு போக ஆரம்பிச்சுட்டேன்.

சுமார் 10 வருடமிருக்கும். கலேஜ்ல வச்சு, புதுசா அப்பா கார் வாங்கி இருக்குரதா சொன்னான் டட்சன், போய் வண்டிய பாத்துட்டு வந்துரலாம்னு டட்சன் வீட்டுக்கு போனேன்.

என்னா மச்சான்??? வண்டிக்கு கண் திருஷ்டி பட்டுடாம தகர டப்பாவால மூடி வச்சிருக்கீங்கலா....???  அதுக்காக புதிய வண்டிய இவ்ளோ கேவலமாவா மூடுவீங்க???

டேய்!! தகர டப்பாவால மூடலடா... அப்பா வேங்கியிருக்கிற வண்டியே அதுதான்...

கிர்ர்ர்ர்ர்....  டேய்!! இதையா புது வண்டினு சொன்னே???

நான் எப்படா புது வண்டினு சொன்னேன். வண்டி புதுசா வாங்கியிருக்குனுதானே சொன்னேன்.  சரி, வண்டிய பக்கத்து ஆத்துல போய் கழுவிட்டு வருவோமா???

டேய்!! வண்டிய கழுவினா அழுக்குத்தான் போகும்டா, துருப் போகாதுடா.. இத எதுக்குடா கழுவனும்???

மச்சி, யாராவது அவசரமா எங்கையாவது போகனும்னா??? வண்டி கிளீனா இருக்கனும்ல..

அவசரமா போகனும்னா நடந்து போகட்டும்டா.. இந்த வண்டில போறத விட சீக்கிரமா போய்டுவாங்க...

டேய்!! ஹெல்ப் பண்ணு மச்சி, இப்படி எதாவது சொன்னாத்தான் அப்பா வண்டிய குடுப்பாரு. எனக்கும் கொஞ்சம் ட்ரைவிங் பழகிக்கலாம்.

அடப்பாவி உனக்கு ட்ரைவிங்’கே தெரியாதா??? நல்ல வேல இப்பவவாவது சொன்னியே!! உன் கூட நான் பட்ட அனுபவங்கள் ஏராளம். ஆள விட்டா போதும்...

டேய்!! நான் ட்ரைவிங் பழக போகும் போது நண்பன் நீயே வரலனா, வேறு எவண்டா வருவான்???

போகும் போது உன் கூட வருவேன், ஆனா வரும் போது முழுசா வருவேனாங்குரதுதான் என் பிரச்சனை. அப்படியே ஃப்லேஷ் பேக்குக்கு போய் நீ சைக்கிள் பழகினத நெனச்சுப் பாரு.....

Flashback Cycle startஅப்போ எனக்கு பத்து வயசு, நம்மளுக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது, அதனால எவனாவது சைக்கிள் ஓட்டினா ஓடிப் போய் ஏறிக்குரது வழமை, ஒரு நாள் டட்சன் சைக்கிள்ல வர நானும் ஆர்வக்கோளாருல போய் ஏறிட்டேன். ஒரு வளைவுல போகும் போது,திடீர்னு ஒரு மணல் லாரி வந்து ஹார்ன் அடிக்க, பயந்து போன பரதேசி டட்ஸன் சைக்கிளுடன் சேர்ந்து புதருக்குள் போய் விழ, சிராய்ப்புக் காயங்களோடு நான் உயிர்தப்ப, சேஃப்ஃபாக எனக்கு மேல விழுந்து தப்பிச்சான் டட்சன்.
Flashback Cycle finished'

டேய் டட்சன், ஒரு லாரி ஹார்ன் அடிச்சதுக்கே வண்டியோட விழுந்தவன் நீ. உன்னைய எப்படிட்டா நம்புரது??

சரிடா,.. வாழ்க்கைனா ஒரு சில அடி விழத்தானே செய்யும்??

உன் வாழ்க்கைக்கு விழுர அடிய நீ போய் வாங்குடா, நானும் சேர்ந்து எதுக்கு வாங்கிக் கட்டணும்??? நீ மோட்டர் பைக் பழகினத கொஞ்சம் யோசித்துப் பார்த்தியா???

Flashback Motor Bike start


அப்போ எனக்கு ஒரு 15 வயசிருக்கும். டட்சனோட அப்பா ஒரு மோட்டர் பைக் வாங்கியிருந்தாரு, அந்த பைக் பக்கத்து ஊர்ல வரும்போதே நம்ம ஊர்ல தூங்குர குழந்தைங்க கண் விழுச்சிடும். அவ்ளோ சத்தம். அது என்னவோ தெரியல  டட்சனோட பட்டப் பெயருக்கும் அவனோட அப்பா வச்சிக்கிட்டு இருக்கிர வண்டிக்கும் எப்பவுமே தொடர்பிருக்கும். அந்தக் காலத்துல டட்சன “புடு புடு டட்சன்”னுதான் கூப்பிடுவோம்.

ஒரு குளிர் கால காலை வேலைல டட்சனோட அப்பா பைக்கை ஸ்டார்ட் பண்ர நேரம் பாத்து நம்ம ஃப்ரெண்டு க்ரேஸி குளிர்ல காதை மூட, “டேய்!!! என் பைக் சத்ததுக்கா காத மூடிர’னு அடிக்க விரட்ட....நல்ல வேளை அவர் பைக்ல விரட்டினதால க்ரேஸி ஓடித் தப்பிச்சுட்டான்.

வாழ்க்கைல செஞ்ச பெரிய தப்புக்களில் ஒன்று, டட்சனுக்கு முன்னாடியே நான் பைக் ஓட்ட பழகியதாகத்தான் இருக்கும். அவனுக்கும் பைக் பழக்கி விடச் சொல்லி பண்ணிய டார்ச்சரில், நானும் ஒரு குருட்டு நம்பிக்கையில் கிழம்பினேன்.


டட்சன் நல்லா கேட்டுக்க, சைக்கிள் மாதிரியேதான் மோட்டார் பைக்கும், அதுல மிதிக்கனும், இதுல எக்ஸ்லரேட் பண்ணனும் அவ்வளவுதான் வித்தியாசம். புரியுதா???

ப்பூ... இவ்ளோதானா?? நான் ஏதோ பெரிய மேட்டர்னு பயந்துட்டேன்.

டேய்!! முன்னைய மாதிரி எதாவது வாகனம் வந்து ஹார்ன் அடிச்சா, விழுந்துட மாட்டியே???? பைக்ல விழுந்தா சைக்கிள்ல விழுர மாதிரி கிடையாது, கொஞ்சம் ஜாக்கிரதையா போடா...

மெதுவா டட்சன் வண்டிய கிளப்ப நானும் பின்னாடியிருந்து கொண்டேன். கொஞ்ச தூரம் போகும் முன்னாடி அதே மணல் லாரி வேகமா வந்துகொண்டிருக்க, ஃப்லேஷ் பேக் என் கண்ணு முன்னால வர, மச்சி ப்ரேக்’க பிடிடா’னு நான் சொல்ல, படுபாவி டட்சன் காலுக்கு பக்கத்திலிருந்த ப்ரேக்கை குனிந்து கையால் அமுக்க, அவ்வ்வ்வ்வ்.....

அடப்பாவி டட்ஸன். ப்ரேக்க பிடின்னா அத கையாலயாடா பிடிப்பே!!!

நீதானே சொன்னே, சைக்கிள் ஓட்டுர மாதிரியே ஓட்டனும்னு... சைக்கிள்ல ப்ரேக்க காலாலயா மிதிப்பாங்க??? நாம விழுந்தத யாரும் பாக்கலல...

உங்கப்பன் பைக் வர்ரத ஏதோ ஹெலிகப்டர் வந்துட்டதா நெனச்சு முழு ஊரும் வந்துடுச்சுடா பாக்குரதுக்கு.... அவ்வ்வ்.....

Flashback Motor Bike finished

சரி விடு மச்சி. பழசெல்லாம் இப்போ எதுக்கு?? சைக்கிள்ல விழுந்தோம், பைக்ல விழுந்தோம். என்ன நடந்தாலும் வேன்ல இருந்து விழப் போறதில்ல. நம்பிக்கையோட வா மச்சி. நம்பிக்கைதானே வாழ்க்கை.

கொஞ்சம் நிறுத்துடா டட்ஸன். இந்த டையலாக்க எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே!!! டேய்!! ஆட்டோ பழகும் போதும் இதையேதானே சொன்னே?? ஆனா என்ன நடந்ததுனு நல்லா யோசிச்சுப் பாரு....

Auto flashback  adutha pathivil. ..