இங்கு உலகத்தரமான பதிவுகளை தேடாதீர்கள். என் சொந்த அனுபவங்களை கொஞ்சம் ரைமிங்’காகவும், டைமிங்காகவும் இருக்கட்டுமே என சிறிது கற்பனையும் கலந்து எழுதி வருகிறேன்.
Wednesday, 19 October 2011
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். 17. ஒளிவு மறைவு கூடாது. 18. மனைவியை நம்ப வேண்டும். 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும். 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. 21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும். 22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும். 24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க
கூடியவள் மனைவி. 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். 29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும். 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும். 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். 34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது. 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
மொத்தத்துல கணவன், மனைவிக்கு 'அடிமையாக இருக்க வேண்டும்' அப்படின்னு சொல்றீங்க. அது சரி. அடுத்த பதிவுல 'மனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன?' அப்படிங்கறதையும் போடுங்க.
தமிழ் மணம் வாக்குப் பட்டைய தூக்கியாச்சு..ஆனா..மறுபடி வந்திருக்கு... என்ன பன்ரது’னு தெரிஞவங்க இருந்தா சொல்லுங்கப்பா....
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteஆனா இன்னும் கயியாணம் கட்டாதவர் என்ன பண்னுவது பாஸ்..ஹி.ஹி.ஹி.ஹி
@ K.s.s.Rajh said...
ReplyDelete///சூப்பர்
ஆனா இன்னும் கயியாணம் கட்டாதவர் என்ன பண்னுவது பாஸ்..ஹி.ஹி.ஹி.ஹி////
நல்லா...மனப்பாடம் பண்ணி வச்சுக்கங்க...
எலே எப்பேல இருந்து உந்த தொழில் தொடங்கின
ReplyDeleteபயனுள்ள குறிப்புகள்..
ReplyDeleteகுறிப்பாக..
வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
உண்மை..
இனிய மாலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteயாரோ கலியாணமாகப் போறாங்க என்று வதந்தி பரப்பினா, அதற்காக இப்படி எல்லாமா எழுதுவீங்க../
கல்யாண ஆசையைத் தூண்டுறீங்களே.
இல்லற பந்தத்தில் வாழுவோருக்கு
ReplyDeleteவாழ்க்கையில் இணை பிரியாத தம்பதிகளாக வாழ வைப்பதேற்ற நல்ல பதிவு.
உண்மையில் அருமையான தகவலகள்
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteநடிகர் விஜய் பய(ங்கர) டேட்டா
இல்லறம் இனிதாய் அமைந்திட அருமையான கருத்துக்கள்!
ReplyDelete#அருமையானதும் உண்மையுமான வரிகள்.
ReplyDeleteதோனியும் நடிகராகின்றார்.
இத்தனையவும் படிச்சு...வெளங்கி......
ReplyDeleteஇல்லறம் இனிதாய் அமைந்திட அருமையான கருத்துக்கள்...
ReplyDeleteகாலம் மாறிவிட்டதால் இதில் பெரும்பான்மை Homemaker கே...
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன =
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன
@ கவி அழகன் said...
ReplyDelete///எலே எப்பேல இருந்து உந்த தொழில் தொடங்கின//
சொந்த சரக்கு’க்கு இல்ல மாமு...அதுதான்...
@ முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDelete////பயனுள்ள குறிப்புகள்..
குறிப்பாக..
வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
உண்மை..///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவரே!!!
@ நிரூபன் said...
ReplyDelete///இனிய மாலை வணக்கம் பாஸ்,
யாரோ கலியாணமாகப் போறாங்க என்று வதந்தி பரப்பினா, அதற்காக இப்படி எல்லாமா எழுதுவீங்க../
கல்யாண ஆசையைத் தூண்டுறீங்களே.//
அதற்காக தனி பதிவே போட்ட ஆளு நீங்க..இங்க வந்து நம்மள போட்டுத் தாக்குறீங்களே பாஸ்..
@ நிரூபன் said...
ReplyDelete///இல்லற பந்தத்தில் வாழுவோருக்கு
வாழ்க்கையில் இணை பிரியாத தம்பதிகளாக வாழ வைப்பதேற்ற நல்ல பதிவு.///
அதனாலதான் Copy+ Paste’ஆ இருந்தாலும் பரவாயில்லை’னு பதிவுல போட்டுடேன்...
@ "என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete///உண்மையில் அருமையான தகவலகள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ மு.ஜபருல்லாஹ் said...
ReplyDelete/// இல்லறம் இனிதாய் அமைந்திட அருமையான கருத்துக்கள்!//
நன்றி சார்...
@ கூகிள்சிறி said...
ReplyDelete/// #அருமையானதும் உண்மையுமான வரிகள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///இத்தனையவும் படிச்சு...வெளங்கி......///
இதுக்கே இப்படி அழுத்துகிட்டா......
@ ரெவரி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அருமையான பதிவு இளவலே .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
நிச்சயமா கல்யாணம் ஆனவுடன் கடைபிடிக்க "முயற்சி"
ReplyDeleteபண்றேன்!
மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. //
இது மட்டும் கஷ்டம்னு நினைக்கிறேன்
http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
ReplyDelete@ கலைநிலா said...
ReplyDelete///அருமையான பதிவு இளவலே .
பகிர்வுக்கு நன்றி .///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
@ கோகுல் said...
ReplyDelete/// நிச்சயமா கல்யாணம் ஆனவுடன் கடைபிடிக்க "முயற்சி"
பண்றேன்!///
நன்றி... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்ல்ல்
/// மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது. //
இது மட்டும் கஷ்டம்னு நினைக்கிறேன்///
அப்பிடி வேறு இருக்கா??
அருமை..அருமை..
ReplyDeleteஅத்தனையும் அருமை....
அதைவிட அனைத்துமே உண்மை....
அதில் மனம்விட்டுபேசுறது அவ்வளவு முக்கியம்....
அது நடந்தால்...மற்றவையெல்லாம் பின்னாடியே வரும்.....
மொத்தத்துல கணவன், மனைவிக்கு 'அடிமையாக இருக்க வேண்டும்' அப்படின்னு சொல்றீங்க. அது சரி. அடுத்த பதிவுல 'மனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன?' அப்படிங்கறதையும் போடுங்க.
ReplyDeleteகுட் ஷேர்..
ReplyDeleteநானும் இதுவெல்லாம் படிச்சி வைக்கணுமா ?
ReplyDelete