Monday, 14 March 2011

Comments Box'இல் சூனியம்




அன்றும் வழமை போல்தான் விடிந்தது. ஆனால் அப்படி ஒரு பயங்கரமான செய்தி இடி போல் வரும் என்று நினைத்தும் பார்க்கவில்லை. இப்படியெல்லாம் சீரியஸா எழுத வேண்டும்னு ஆசைதான். ஆனால் இரண்டு வரிக்கு மேலே வருதில்லையே!!! அதனால நம்ம ஸ்டைல்’லயே தொடர்கிறேன்.

காலைலயே (12.00 மணியிருக்கும்... இது காலைதானே!!!) தொலைபேசி  அடிக்குதுங்க.  ஆஹா,  இன்று ஏதும் விஷேசமில்லயே!! மலையாளி டீ கடை பாக்கியையும் செட்டில் செஞ்சாச்சு. (அது போன மாதம்....) யாராக இருக்கும்?. யாரோ நமக்கு குட் மார்னிங் சொல்ல போரானுங்க போல். ப்லாக் எழுத ஆரம்பிச்சதுல இருந்து ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்க முடியலப்பா..’னு நினைத்துக் கொண்டே தொலைபேசியை காதுல வச்சா..... நம்ம நன்பன் மக்கான் “ மச்சி, உன் ப்லாக்’ல காமெண்ட்ஸ்” பகுதில எவனோ சூனியம் வெச்சுட்டாண்டா”னு  கத்துறான். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. காலைல முகம் கழுவ முன்னாடியே (அது மாதத்துல ஒரு முறை பண்ரதுள்ள...) கரியை பூசுரானே!!!. நம்ம காமெண்ட்ஸ் பாக்ஸ் அரசியல் வாதியின் மூலையை போல பாவிக்காமல் பத்திரமாக வைக்கப்பட்ட்டிருக்கும் ஏரியா. (உன் மூளைய எப்போ பாவிச்சிருக்கே!!!) அதுல எவன்யா சூனியம் வெச்சான்’னு ஒரே யோசனை. (எவனா இருந்தா என்ன? நாட்டுக்கு நல்லதுதானே பண்ணியிருக்கான்)

Gmail Account'ல ”பிரபல பதிவர்” (இவங்கதானுங்க அப்படி எழுத சொன்னாங்க) வெங்கட், சிரிப்பு போலீஸ் வச்ச சூனியத்துல (மரணம் வரை மொக்கை)

இருந்து இரண்டரை மாதங்கள் போராடி மீண்டு வந்திருக்கோம். அதற்கிடையில் இப்படி ஒரு அனர்த்தமா? (விடுப்பா. விடுப்பா... உன் ப்லாக்’ல காமெண்ட்ஸ் பாக்ஸ்’னு ஒரு ஏரியா இருக்குரதே உனக்கு மட்டும்தான் தெரியும்)

மேட்டர் என்ன?ன்னு சொல்லுடா. ஒன்னுமே புரியல...
நேற்று ராத்திரி Face Book'ல மொக்கை போட்டமுள்ள. அப்போ, உன் பதிவுகளுக்கு ஓட்டு போடு, உன்னை, உன் பதிவை புகழ்ந்து காமெண்ட் போடு’ன்னு எத்தனை முறை வெட்கமே இல்லாம கேவலமாக கெஞ்சி கேட்டிருப்ப..... (ஆஹா.. கம்பெனி சீக்ரெட்’லாம் வெளிய விட்ரானே)
சரிடா.. அதெல்லாம் இப்போ எதுக்கு? சீக்கிரம் மேட்டரை சொல்லுடா...

அதற்கு நன்பன் மக்கான் “நானும் பாவமே, நன்பனாச்சே, ரொம்ப கெஞ்சுரானே’னு (ஆஹா.. அதே வட்டதுக்குள்ளயே சுத்துரானே!!! ) நீ சொல்லி தந்த மாதிரியே!!!  ஒரு காமெண்ட் போட்டேன். (நான் 10 காமெண்ட் போட சொன்னேனே!!!!) ஆனால், அது வேறு ஒருத்தனுடைய பேர்’ல வருதுடா... கை தேர்ந்த சூனியக் காரனா இருப்பான் போலிருக்கு.அதனால, எவனோ உன் ப்லாக்’கு சூனியம் வெச்சிருகான்னு நினைக்கிறேன். இனிமேல் உன் பதிவு வராது. நமக்கு நிம்மதியா இருக்கலாம்பா......”




 அய்யய்யோ!!!  ஆளில்லாத கடைல வந்து சூனியம் வெச்சிருக்கானே!! (சரக்கு இல்லாத கடைல எப்படிய்யா ஆளிருக்கும்?) ஒரு வேலை நம்மல வச்சி ட்ரைனிங் எடுக்குறானோ? (கிழிஞ்சுது...) ஆமா... அவன் பெயர் என்னன்னு சொல்லவே இல்லயே!!!!” என்றேன்.


எனக்கு அதை சரியா வாசிக்க தெரியலடா... ”அனியோனியஸ்” அப்படி என்னவோ எழுதி இருக்கான்யா...


அப்போதுதான் எனக்கு மேட்டர் புரிஞ்சதுங்க.... “அட ஞான சூனியமே!! அது ”Anonymous”

பார்தீங்களா.. ஒரு பதிவை பிரபலமாக்க எவ்வளவு கஷ்டங்களையும், சோதனைகளையும் தாண்டி வர வேண்டி இருக்கு (உன் பதிவ படிக்கிறது அதை விட கஷ்டமும் சோதனையும் ஆச்சே!!). ஓட்டுப் பட்டை இப்போ உங்களுக்கு ரொம்ப பக்கதுலதான் இருக்கு.(ஆட்டோல போகலாமா? நடந்தே போயிடலாமா?) ஒரு குத்து குத்திருங்க நன்பர்களே!!! (யோவ்!! யாருப்பா து கத்திய தூக்குறது?)

8 comments:

  1. // காலைலயே (12.00 மணியிருக்கும்... இது காலைதானே!!!) //

    எத்தனை நாளைக்கு தான் உங்களுக்கு இது மாதிரி சந்தேகம் வரும் (டவுட்டு)இன்னும் கல்யாணமே முடியல!! அவ்வ்வ்வ்..

    ReplyDelete
  2. Please give me your facebook ID
    Ravi-

    ReplyDelete
  3. @Ravi-

    "faaique" this is my FB id.

    ReplyDelete
  4. // ப்லாக் எழுத ஆரம்பிச்சதுல இருந்து
    ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்க
    முடியலப்பா.. //

    ரோட்ல போன.. முட்டு சந்துக்கு இழுத்துட்டு
    போயி கும்மறாங்க.. இதை எவ்ளோ
    பில்டப்பா சொல்றாரு பாருங்க..

    // உன் பதிவை புகழ்ந்து காமெண்ட் போடு’ன்னு
    எத்தனை முறை வெட்கமே இல்லாம
    கேவலமாக கெஞ்சி கேட்டிருப்ப.....
    (ஆஹா.. கம்பெனி சீக்ரெட்’லாம் வெளிய விட்ரானே) //

    சரி.... என்கிட்ட கெஞ்சுனதை நான்
    வெளியே சொல்லலை.. போதுமா.?

    ReplyDelete
  5. @ வெங்கட் //
    ரோட்ல போன.. முட்டு சந்துக்கு இழுத்துட்டு
    போயி கும்மறாங்க.. இதை எவ்ளோ
    பில்டப்பா சொல்றாரு பாருங்க..///

    உங்க அனுபவத்தை ஒரு பாடமாக வெச்சு எங்களுக்கு முன்னெச்சரிக்கை பன்ரீங்க.... நன்றி..

    ReplyDelete
  6. @ எஸ்.கே

    நன்றி சார்

    ReplyDelete
  7. செம திரில்லிங் ஸ்டோரி...-;))

    ReplyDelete