Sunday, 16 October 2011

தமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ!!!

 உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...


பதிவுகத்திலேயே இப்போதைய HOT TOPIC என்ன`ன்னா?? தமிழ் மணம் பற்றிய சர்ச்ச்சைதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எனவே அந்த மாவை நான் மீண்டும் அரைக்க தேவையில்லை.

நான் பொதுவாக இண்ட்லி`யிலேயே உலவுவேன். தமிழ் மணத்தில் ஒரே ஒரு நாள் உலவி இருக்கிறேன், ஆனால் தமிழ் மணம் மீது ஒரு மதிப்பு இருந்தது.  நல்ல பதிவுகளாய் இருந்தால் கட்டாயம் தமிழ் மணத்தில் ஓட்டும் போட்டு வந்தேன். பொதுவாக என் பதிவுகளை 100-200 பேரே படிக்கின்றனர். அதில் அதிகமானோர், தமிழ் மணத்தின் ஊடாகவே வருகின்றனர்.  

ஆனால், கடந்த சில தினங்களாக நடந்த நிகழ்வுகளை பார்க்கையில் தமிழ் மணம் தன் முகத்தில் தானே (பல்லு வெளக்காம..) காரித்துப்பியதை யாரும் மறுக்க முடியாது. டெரர் கும்மியில் தமிழ் மணத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட திரு. தமனீதரன்(பெயரிலி) அவர்களின் சொற்றாடல் அவ்வளவு கேவலமாக இருக்கும்`னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லனும்`னு சொல்வாங்க.. அதுபோலதான் இருந்தது திரு. தமனீதரன்(பெயரிலி) அவர்களது வாதம்.

இரண்டு காரணங்களை வைத்துப் பார்க்கையில் இதற்கு பின்னும் தமிழ் மணத்தில் இணைந்திருக்க வேண்டுமா? என்று யோசிக்க வேண்டியாகிவிட்டது என்று கூட சொல்ல முடியாமல் விலக வேண்டியதாகிவிட்டது என்றே சொல்ல வேண்டியாகிவிட்டது.

1. ” ///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்///”


முஸ்லீம்களான நாம் கூறும் முகமனை கேலிக்குள்ளாக்கியமை. இதை பற்றிய கேட்கப்பட்ட கேள்விக்கு வழமை போல், அசட்டையாக சொன்ன பதில்கள்..

2. என் பதிவுலக அறிமுகத்தில் இருந்தே, இன்று வரை என்னை ஊக்குவித்து வரும் டெரர் கும்மி நன்பர்களுடன் ஏற்பட்ட பகைமை. அவர்களை தமிழ் மணத்தை விட்டு நீக்கியமை (தமிழ் மணம் நீக்க முன்னாடியே, அவங்க  தமிழ் மணத்தை தூக்கி வீசிட்டாங்க..)

இப்போ உங்க உள்மனசுல,
 ”டேய்!!! நீயே ஒரு டம்மி பீஸு.... நீ தமிழ் மணத்தில் இருந்தா என்ன???? இல்லாட்டி என்ன`னு ஒரு கேள்வி கட்டாயம் வந்திருக்கலாம்.வந்திருக்கும்.வந்திருக்கனும்.வந்துதான் ஆகனும். அதுக்கும் ஒரு பதில் வச்சிருக்கேன்.. கீழ படிங்க..

நபி இப்ராஹிம்அலை....(ஆப்ரஹாம்) அவர்களை நம்ரூத் என்ற கொடிய அரசன் மிகப் பெரிய அக்கிணிக் குண்டத்தில் தூக்கி எறிந்த போது, ஒரு ச்சின்னஞ் சிறு குருவி, தன் சொண்டில் நீரை கொண்டு போய் கொட்டியது. இதை பார்த்த மற்றைய குருவிகள், உன்னால அந்த நெருப்ப அனைக்க முடியுமா??? எதுக்கு இந்த பில்ட் அப்பு`னு கேட்ட போது, குருவி சொன்ன பதில், ”இறைவனின் தூதர் நெருப்பில் எறியப்பட்ட போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்???” இறைவன் ஒரு நாள் என்னிடம் கேட்டால், என் சக்திக்குற்பட்டதை நான் செய்துவிட்டேன் என்ற பதில் என்னிடம் உள்ளது” என்றது அந்தக் குருவி.

இது போல் நானும் என் சக்திக்குற்பட்டதை செய்து விட்டேன்.

முக்கிய குறிப்பு :

ஏண்டா வெளியேறினோம்’னு கவலையோட போகல... சந்தோசமா வெளியேருகிறேன்.

கடைசியா ஒரு காமெடி

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.46 comments:

 1. super நமக்கு இனி தமிழ்மணமே வேண்டாம்

  ReplyDelete
 2. நல்ல முடிவு நண்பரே...

  ReplyDelete
 3. என்னப்பா எல்லோறும் தமிழ்மணத்தை விட்டு போறீங்கள்

  ReplyDelete
 4. Tamilmanam ena payriya APPATAKARA?

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்.நன்றி தமிழ்மணத்தை தூக்கி எறிந்ததற்கு

  ReplyDelete
 6. போச்சு போச்சு உணகளுக்கு அண்ணா நகர்ல ஒரு கிரௌண்ட் நிலம் போச்சு ..ஹ ஹா ...

  ReplyDelete
 7. // என்னப்பா எல்லோறும் தமிழ்மணத்தை விட்டு போறீங்கள் //

  எல்லோரும் இல்லீங்க..

  " தமிழ்மணத்தை " பற்றி முழுசா
  புரிஞ்சவங்க மட்டும் தான் விலகுகிறோம்..!!

  ReplyDelete
 8. நல்லாச் சொல்லி இருக்கீங்க..... துணிச்சலாம முடிவு......!

  ReplyDelete
 9. //துணிச்சலான....// தவறுக்கு வருந்துகிறேன்

  ReplyDelete
 10. ///புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.//

  இந்த ரணகளத்துலேயும்.....??

  ReplyDelete
 11. நீங்களெல்லாம்(நாங்களும் தான்)முதுகெலும்பு இல்லாதவங்களுன்னு "ஒருத்தர்" சொல்லுறாரு!எதிர்த்து நிக்கணுமாம்!துஷ்டனைக் கண்டா தூர விலகணும்னு நான் நினைக்கிறேன்!

  ReplyDelete
 12. முதுகொலும்புள்ளவர் என்பதை நிரூபித்துவீட்டீர் போங்கள்....

  புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி :)

  ReplyDelete
 13. தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்.

  ReplyDelete
 14. // ”இறைவனின் தூதர் நெருப்பில் எறியப்பட்ட போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்???” இறைவன் ஒரு நாள் என்னிடம் கேட்டால், என் சக்திக்குற்பட்டதை நான் செய்துவிட்டேன் என்ற பதில் என்னிடம் உள்ளது” என்றது அந்தக் குருவி.//

  உங்க பதிவை விட இந்த மேட்டர் டாப்பு....

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும்
  சகோ நம் போன்ற டம்மி பீஸ்கள் தமிழ் மனத்தைப் புரக்கணிக்க முன் வந்தால் நாளடைவில் தமிழ் மனம் டம்மி பீஸவது உறுதி இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 16. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

  தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்
  http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

  ReplyDelete
 17. வணக்கம் சகோ,
  நானும் உள்ளேன்.

  ReplyDelete
 18. தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்.

  ReplyDelete
 19. மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்

  http://iyakkangal.blogspot.com/2011/10/blog-post_17.html

  ReplyDelete
 20. நானா நீங்களும்  கிளம்புறீங்களா??? வேதனை கூடுகின்றது!

  ReplyDelete
 21. நல்ல புரிந்துணர்வுடன் எடுத்த முடிவு..:))

  ReplyDelete
 22. http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html


  தமிழ்மணமே இந்த வாரத்துக்குள் மண்ணீப்பு கேள்..!!!

  ReplyDelete
 23. சரியான முடிவு... இதுவரைக்கும் உங்களுக்கு நா ஓட்டு போட்டதே இல்ல... இன்னைக்கு இருக்குற அத்தன விட்ஜெட்டையும் அமுக்குறேன்யா..

  ReplyDelete
 24. @ sgramesh said...

  // super machchi. Thanks and all the best//

  u r welcome..

  ReplyDelete
 25. @ வைரை சதிஷ் said...

  ///super நமக்கு இனி தமிழ்மணமே வேண்டாம்///

  ஆமாம் நன்பா... அந்த சனியனை தூக்கி எரிஞ்சாச்சு...

  ReplyDelete
 26. @ Dr. Butti Paul said...

  /// நல்ல முடிவு நண்பரே...//

  நன்றி

  ReplyDelete
 27. @ K.s.s.Rajh said...

  ///என்னப்பா எல்லோறும் தமிழ்மணத்தை விட்டு போறீங்கள்///

  வாங்க ராஜ்.. உங்க கேள்விக்கு வெங்கட் சார் அழகா பதில் சொல்லி இருக்காரு..
  கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 28. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

  /// Tamilmanam ena payriya APPATAKARA?//

  இதுவர அப்படித்தான் நெனச்சிகிட்டு இருந்திருப்பாங்க.... இனிமே கிடையாது..

  ReplyDelete
 29. @ ’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

  /// வாழ்த்துக்கள்.நன்றி தமிழ்மணத்தை தூக்கி எறிந்ததற்கு//

  நன்றி..

  ReplyDelete
 30. @ இம்சைஅரசன் பாபு.. said...

  ///போச்சு போச்சு உணகளுக்கு அண்ணா நகர்ல ஒரு கிரௌண்ட் நிலம் போச்சு ..ஹ ஹா ...///

  ஆமா.. அதனாலதான் இப்போ ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்..(அப்டித்தா அவங்க நினைக்கிறாங்க...)

  ReplyDelete
 31. @ வெங்கட் said...

  //// என்னப்பா எல்லோறும் தமிழ்மணத்தை விட்டு போறீங்கள் //

  எல்லோரும் இல்லீங்க..

  " தமிழ்மணத்தை " பற்றி முழுசா
  புரிஞ்சவங்க மட்டும் தான் விலகுகிறோம்..!!///

  ம்ம்ம்.. உண்மைதான்..

  ReplyDelete
 32. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /// நல்லாச் சொல்லி இருக்கீங்க..... துணிச்சலாம முடிவு......!//

  நன்றி அண்ணா..

  ReplyDelete
 33. அந்த கீழ்த்தரமான வரிகள் தமிழ் மணத்தில் இருந்தா?

  மூன்று நாள் கழித்து வந்து பார்த்தால் ஆளாளுக்கு என்னவோ...எல்லாத்தையும் வாசிச்சிட்டு வருகிறேன்....

  ReplyDelete
 34. ஏய் அப்பிடி போடு

  ReplyDelete
 35. Click the link below and read.
  http://seasonsnidur.blogspot.com/2011/10/blog-post_17.html
  தமிழ்மணம் திரட்டி. பற்றி பதிவர்கள்....
  "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?

  விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
  தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
  குட்டி சுவர்க்கம்
  சீ தமிழ் மனமே ............................
  தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

  பயணிக்கும் பாதை

  தமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ!!!  தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

  ReplyDelete
 36. தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.
  பதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா?

  ReplyDelete
 37. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

  என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

  தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!

  மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

  ReplyDelete