Sunday, 20 March 2011

அமீரகம்- இது ஒரு சுய நல பூமி

" அப்போ.. அப்போ.. பழசையும் கொஞ்சம் நெனச்சு பார்க்கனும், அது நமக்கு கற்று தந்த பாடங்கள் நிறைய இருக்கு...."



அமீரகம் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. கண்டவை, உணர்ந்தவை, அனுபவித்தவை, காயங்கள்,வலிகள், புதிய நன்பர்கள், புது முகங்கள், பல்வேறு நாட்டு மக்களின் தொடர்பு, இப்படி எத்தனையோ கடந்து வந்தாச்சு. பழையவற்றை எண்ணிப் பார்க்கும் போது, சில வலிகள் இப்போது இன்பமாய் இருக்கிறது. அப்போது இருந்த  சந்தோசங்கள் இப்போது வலிக்கிறது.

இங்குள்ள மக்களின் மதிப்பு, அவர்களின் நற்குணங்களில் இல்லை. அவர்களின் சம்பளத்திலேயே இருக்கிறது. ஒவ்வொருத்தரும் இங்கு வாழ்வதை விட வாழ்வது போல் பாசாங்கு செய்து கொண்டு தம் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.10- 20- 30 வருடங்களை இன்கேயே கழித்து விட்டு அழும் முதியவர்களையும் பார்த்திருக்கிறேன். அதையே பெருமையாயை சொல்லிக் கொள்ளும் மக்களையும் தினம் தினம் பார்க்கிறேன்.



ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை ஒரு புதிராகத்தான் கழிகின்றது. இங்கிருந்து வேலையை விட்டு நாடு செல்வோரை சந்தோசமாக வழி அனுப்பி வைப்பவர்கள் ஒரு சிலரில் நானும் ஒருவன். எனக்கு கிடைக்காத பாக்கியம் அவர்களுக்கு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன். இங்கு நன்பர்கள் வரும் போது, இவர்களும் இந்த சகதியில் வந்து சிக்கிக் கொள்கின்றனரே! என்று மனதில் ஒரு வழி பிறக்கிறது. இந்த வெளி நாட்டு வாழ்க்கை நம் கைகளால் நாமே தேடிக் கொண்ட ஒரு மீள முடியா துயரம்.

தொடரும் இந்த அவலம்..........

11 comments:

  1. ஆமாம் நண்பரே இங்கே இந்த வாழ்க்கை கட்டாயத்தின் கட்டாயட்த்தின் பேரிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் வேறு வழியில்லாமல்.

    ReplyDelete
  2. அமீரகம் மட்டுமல்ல நண்பரே, அமெரிக்காவும் அப்படித்தான்.

    ReplyDelete
  3. //அமீரகம் மட்டுமல்ல நண்பரே, அமெரிக்காவும் அப்படித்தான்.//

    ந‌ல்ல‌ ப‌திவு.

    இங்கே வ‌ந்து க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ச‌ம்பாரித்து செல்வ‌ம் சேர்க்கிற‌வ‌ர் ப‌த்து பேரென்றால்,வெளி நாடு செல்ல‌ இருக்கிற‌ செல்வ‌த்தை தொலைத்து வான‌த்தை பார்ப்ப‌வ‌ர்க‌ள் 100 பேர். அந்த‌ 100 பேரில் நாம் இல்லை என‌ ச‌ந்தோச‌ம் கொள்ளுங்க‌ள். வாழ்க்கை ச‌வால்தான்,எங்கிருந்தாலும் அதை எதிர் கொள்ள‌தான் வேண்டும்,.. (சாரி ந‌ண்பா, ப‌திவை பார்த்து உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு எழுதிட்டேன்)

    ReplyDelete
  4. தொழிளாளர்கள் அமீரகத்தில் படும் துயரங்கள் என்று தொலைக்காட்சியில் காட்டிய போது பார்த்தேன். இப்போ உங்கள் எழுத்தில் பார்க்கிறேன்.ந‌ல்ல‌ ப‌திவு.

    ReplyDelete
  5. இங்கே புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதைதானே நடக்குது :-)

    ReplyDelete
  6. இது தான் நிதர்சனம். உங்கள் மனதில் உள்ளது இதுபோல் இன்னும் நிறைய வரும். அருமையான எழுத்து நடை தொடருங்க தல!!

    ReplyDelete
  7. அவ்வளவு கஷ்டமா ? விரைவில் உங்க ஊருக்கு வரணும்னு கடவுளை வேண்டிக்கிறேன் .. உண்மைதான் . சொந்த ஊர் போல எந்த ஊரும் வராது என்பது ..!!

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சகோதரர் அவர்களுக்கு
    இன்றுதான் உங்கள் பதிவு பார்த்தேன்

    வாழ்த்துக்கள் சகோ
    இதையும் படிச்சு பாருங்க
    மலேசியா கள்ளக்குடியேறி
    http://valaiyukam.blogspot.com/2010/12/blog-post_27.html

    ReplyDelete
  9. veli naaddu vaazhkkaiyai urukkamaaka sila varikalil arumaiyaaka pathivu seythuzzeerkal-meerapriyan

    ReplyDelete
  10. .10- 20- 30 வருடங்களை இன்கேயே கழித்து விட்டு அழும் முதியவர்களையும் பார்த்திருக்கிறேன். அதையே பெருமையாயை சொல்லிக் கொள்ளும் மக்களையும் தினம் தினம் பார்க்கிறேன்.

    உண்மை நிகழ்வுகளை தரம்பட தந்துள்ளீர்கள் .இன்னும் முழுவதுமாக படிக்க வில்லை.படித்துவிட்டு பின்னோட்டம் எழுதுகிறேன் .

    ReplyDelete
  11. // 00971504408553 //

    யோ!! உனக்கு எல்லாம் எதுக்குயா மொபைல் நம்பர்... எப்பவும் சுவிட் ஆப்.....

    ReplyDelete