Tuesday, 27 September 2011

காற்றிலே ஒரு கடிதம்



காலேஜ் போகின்ற காலத்துல, நானும் நம்ம நண்பர்களும் ஒரு மைதானத்துல கிரிக்கட் ஆடுரது வழக்கம். அந்த மைதானம் பாதையோரத்தில் இருந்தால் கிரிக்கட் விளையாடுவது போக, ரோட்டுல போகும் வரும் பிகர்களை சைட் அடிக்கும் வசதியும் இருந்ததால் நம் மைதானத்துல எப்போதுமே கூட்டம் கலைகட்டும்...

ஒரு நாள் வழமை போல நாள் விளையாட்டிக் கொண்டிருக்கும் போது, ஒரே கூத்தும் கும்மாளமுமாக ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. பார்க்கும் போதே சுற்றுலா சென்றுகொண்டிருக்கும் பாடசாலை மாணவிகளின் வண்டி என்பது புரிஞ்சிடுச்சு.

நாமளும் விளையாட்டை நிறுத்தி விட்டு ஜொள்ளு வடிய வண்டியை பெப்பெரப்பே`னு பார்த்துடு இருக்க, வண்டியிலிருந்து வந்த ஒரு காகிதத்துண்டு நண்பன் க்ரேஸியின் காலடியில் வந்து விழ, நண்பன் முகத்தில் ஜொள்ளு இரு மடங்காக கரை புரண்டு ஓடியது.

நம்மளுக்கோ கடுப்பு தாங்கமுடியல.... இவ்ளோ பேர் இருக்கோம். அவன் கிட்டவா விழனும்.. ச்சே!!!

"மச்சி.... ஒரு வேளை அந்த லெட்டர் எனக்குதான்யா வந்திருக்கும்....`னு நண்பன் பொப் சொல்ல நம்மளையெல்லாம் ரொம்ப கேவலமா ஒரு லுக்கு விட்ட க்ரேஸி

"டேய்!!! நாம் தூரத்துல இருந்து வரும் போதே பாத்துடுதான்யா இருக்கேன்.. (இப்போதான்யா  புரியுது, இவன் ஏன் எல்லா பந்தையும் கோட்டை விட்டிருக்கான்`னு...?) நிச்சயமா இது எனக்கு வந்துதாண்டா.."னு சொல்ல..

"மச்சி ஒரு அந்த பொண்ணு "Bombay Looking Kolkata Going"ஆ இருக்குமோ..(மாறு கண் என்பதை நாம இப்படித்தான் சொல்லுவோம்..)`னு நாம கடுப்பேத்த, மறுபடியும் அதே கேவலமான லுக்`அ விட்டுடு, லெட்டரை திறக்க ஆரம்பித்தான்..


நம்மளுக்கெல்லாம் "Address இருக்குமோ Phone No. இருக்குமோ "ஒரே தவிப்போ தவிப்பு... போயும் போயும் இவன் கைல சிக்கிடுச்சே`னு கடுப்போ கடுப்பு...

லெட்டரை திறந்த க்ரேஸியின் முகமோ நாம் எதிர் பார்த்ததிற்கு மாற்றமாக "சோத்தாலையும் அடி வாங்கி சேத்தாலையும் அடி வாங்கி"ன மாதிரி ஆயிடுச்சு.

ஆமா.. அதுல அப்படி என்னதான் எழுதி இருந்துச்சு`னு பார்த்தா...

........................................................




........................................................




........................................................




........................................................




........................................................





"டேய்! தெருப்பொருக்கி நாயே!!!!
ரோட்டுல கிடக்குரதெல்லாம் பொருக்கி வாசிக்கிரியே!!!!
வெக்கமாயில்ல.......
வீட்டுல சோறா திண்ணுர இல்ல ****** திண்ணுர???
காவாலிப் பயலே "
( கடிதத்தை சிங்கள மொழியிலிருந்து இருந்து உங்களுக்காக தமிழில் மொழி பெயர்த்தவர் உங்கள் அபிமான "புன்னகையே வாழ்க்கை" ப்லாக் ஓனர் சாட்சாத் நானேதான்..)


முதல்ல தெருப்பொருக்கி நாய்`னு பின்னாடி காவாலி`னு திட்டியிருக்காங்களே!!! லாஜிக் இடிக்குதே`னு தோன்றினாலும், அதை கேட்டா, நம்மள இடிப்பானுங்களே`னு சைலண்ட் மொட்`லயே இருந்துட்டேன்



26 comments:

  1. Nalla DAMIL translate panringale, sari ippo enaku solunga therupporukki, kaawaali rendukkum singalathula enna solwanga???

    ReplyDelete
  2. ///Nalla DAMIL translate panringale, sari ippo enaku solunga therupporukki, kaawaali rendukkum singalathula enna solwanga??? ///

    நங்கூரம் இட்ட மாதிரி நச்சு`னு இருக்கட்டுமே`னு 4 பிட்`ட சேர்த்து போட்டா, இப்படிய குண்டக்க மண்டக்க கேள்வி கேப்பீங்க....

    ReplyDelete
  3. முதல் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.. நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்
    இனி தொடர்ந்து வருவேன்

    ReplyDelete
  4. ஆமா தெருப்பொறுக்கிக்கும் காவாலிக்கும் என்ன வித்தியாசம்

    ReplyDelete
  5. மச்சி இது என்ன பிளாஸ்பேக் வாரமா எல்லோறும் பிளாள்பேக்கா எடுத்துவிடுறம்...ஹி.ஹி.ஹி.ஹி...உங்கள் நண்பர் மாதிரி நம்ம டீமிலயும் சிலர் இருந்தாங்க பந்தை பிடிக்கவே மாட்டாங்க இப்பதான் தெரியுது.அவனுங்களும் இப்படித்தான் ரோட்டில போர பிகர்களை பாத்துகிட்டு இருந்து இருக்காங்க..ஹி.ஹி.ஹி,ஹி

    ReplyDelete
  6. adadaa mathuran nalla kelwi ketinga, athuku sirantha bathil ipawe kidaikkum,,

    @faaiq- athenna kundaka mandaka ?

    ReplyDelete
  7. @மதுரன் said...

    ///முதல் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.. நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்
    இனி தொடர்ந்து வருவேன்///

    தொடந்து வாருங்கள் நன்பரே!!! உங்கள் வரவு நல்வரவாகட்டும்..

    ReplyDelete
  8. @ மதுரன் said...

    ///ஆமா தெருப்பொறுக்கிக்கும் காவாலிக்கும் என்ன வித்தியாசம்///

    அதெல்லாம் சொல்லிக் குடுக்கக் கூடாது சார். அப்புறம் நீங்க நம்மல ரொம்ப கேவலமா பார்க்க ஆரம்பிச்சுடுவீங்க..

    ReplyDelete
  9. @ K.s.s.Rajh said...

    /// மச்சி இது என்ன பிளாஸ்பேக் வாரமா எல்லோறும் பிளாள்பேக்கா எடுத்துவிடுறம்...ஹி.ஹி.ஹி.ஹி...உங்கள் நண்பர் மாதிரி நம்ம டீமிலயும் சிலர் இருந்தாங்க பந்தை பிடிக்கவே மாட்டாங்க இப்பதான் தெரியுது.அவனுங்களும் இப்படித்தான் ரோட்டில போர பிகர்களை பாத்துகிட்டு இருந்து இருக்காங்க..ஹி.ஹி.ஹி,ஹி///

    வாங்க ராஜ். நாம எப்பவுமே ஃப்லாஷ் பேக் பதிவர்தான். வேற எழுதுரதுக்கு சரக்கில்லையே!!

    ReplyDelete
  10. @ HajasreeN said...

    ///adadaa mathuran nalla kelwi ketinga, athuku sirantha bathil ipawe kidaikkum,,

    @faaiq- athenna kundaka mandaka ?///

    அது ஒரு நல்ல கேள்வி. அதை பற்றி ஒரு தனி பதிவு போட இருக்கிறேன். (ஹி..ஹி.. இப்படித்தான் நிறைய பேரு சமாளிச்சுடு இருக்காங்க....)

    ReplyDelete
  11. இந்த சமாளிசுபிகேசன் என்கிட நடக்காது,

    @ராஜ்- பிளாஷ்பேக் இனிமையான அனுபவம், எனக்கு ரொம்ப பிடிக்கும்

    ReplyDelete
  12. இது ரொம்ப நாள் உங்க கூட பழகின
    பொண்ணு எழுதின லெட்டர் மாதிரி
    தெரியுதே..தப்பா கிரேஸி கையில
    கிடைச்சிடுச்சோ...!!!

    ReplyDelete
  13. @ வெங்கட் said...

    ///இது ரொம்ப நாள் உங்க கூட பழகின
    பொண்ணு எழுதின லெட்டர் மாதிரி
    தெரியுதே..தப்பா கிரேஸி கையில
    கிடைச்சிடுச்சோ...!!!///

    welcome back...

    கோர்த்துவிடுராரே!!!!

    ஏன் சார்.. உங்களுக்கும் இதே போல அல்லது இஅத விட மோசமான லெட்டர்`லாம் கெடச்சிருக்கா???

    ReplyDelete
  14. சைலண்ட் மொட்`லயே இருந்துட்டேன்
    நல்ல சோக்கு மாப்பு

    எப்படித்தான் முடியுது

    ReplyDelete
  15. இனிய மாலை வணக்கம் பாஸ்..

    எப்படி இப்படியெல்லாம்..

    ரோட்டில் சும்மா நிற்கும் போது கடிதம் வந்து விழுகின்றதென்றால் புரிய வேணாம்.


    அவ்...ட்ரான்ஸ்லேஷன் பண்ணி நீங்க வாங்கிக் கட்டமா எஸ் ஆகினீங்க பாருங்க...
    அவ்....

    ReplyDelete
  16. ஆயுபுவோன்...காற்றிலே ஒரு கடிதம்...காதல் ராக்கெட் வித் அணுகுண்டு...ஹரிம ரசயினே..
    ஹோ ண்ட...

    ReplyDelete
  17. ஐ, இவரு வாங்கின பல்ப இன்னொருத்தர் தலைல கட்டிட்டாரு...

    ReplyDelete
  18. பாஸ்! உண்மைய சொல்லுங்க இந்த பல்பு நீங்கா வாங்கினதுதானே? :-)

    ReplyDelete
  19. @ கவி அழகன் said...

    ///சைலண்ட் மொட்`லயே இருந்துட்டேன்
    நல்ல சோக்கு மாப்பு

    எப்படித்தான் முடியுது//
    இதுக்கெல்லாம் 4 இடத்துல அடி வாங்கி அனுபவம் பெறனும்...

    ReplyDelete
  20. வணக்கம் ...

    ////எப்படி இப்படியெல்லாம்..

    ரோட்டில் சும்மா நிற்கும் போது கடிதம் வந்து விழுகின்றதென்றால் புரிய வேணாம்.///

    எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை'தான்...

    ////அவ்...ட்ரான்ஸ்லேஷன் பண்ணி நீங்க வாங்கிக் கட்டமா எஸ் ஆகினீங்க பாருங்க...
    அவ்....////
    அந்த எடத்துல கம்முனு இருந்துட்டேன். ப்ளாக்'லதான் பில்ட் அப்

    ReplyDelete
  21. @ ரெவெரி said...

    ///ஆயுபுவோன்...காற்றிலே ஒரு கடிதம்...காதல் ராக்கெட் வித் அணுகுண்டு...ஹரிம ரசயினே..
    ஹோ ண்ட...///
    என் தலைப்பை விட "காதல் ராக்கெட் வித் அணுகுண்டு" இது நல்லா இருக்கு..
    அட... சிங்களத்துல புகுந்து விளையாடுறீங்க..

    ReplyDelete
  22. @ Dr. Butti Paul said...

    ///ஐ, இவரு வாங்கின பல்ப இன்னொருத்தர் தலைல கட்டிட்டாரு...//

    அவர் வாழ்க்கை ஒளிரட்டுமே'னுதான்

    ReplyDelete
  23. @ஜீ... said...

    ///பாஸ்! உண்மைய சொல்லுங்க இந்த பல்பு நீங்கா வாங்கினதுதானே? :-)/////
    நான் வங்கி இருக்க வேண்டியது... but எஸ்கேப்..

    ReplyDelete
  24. ஹா ஹா ஹா ஏமாற்றம்

    ReplyDelete
  25. //கடிதத்தை சிங்கள மொழியிலிருந்து இருந்து உங்களுக்காக தமிழில் மொழி பெயர்த்தவர் உங்கள் அபிமான "புன்னகையே வாழ்க்கை" ப்லாக் ஓனர் சாட்சாத் நானேதான்..//

    அப்படினா நீங்க எதாச்சும் அதிகமா சேர்த்திருப்பீங்க.. நான் நம்ப மாட்டேன் :))

    ReplyDelete
  26. ஆஹா கலக்கல்...
    சொல்லுவீங்க சொல்லுவீங்க...
    பொண்ணுங்க நாங்க டியூஷன் போகும் போதும் இப்படித்தான்...பாதையை மறைத்து விளையாடுவானுங்க....
    “தங்கச்சி போங்க” னு டீசன்ட்டா வழிவிடுவானுங்க...
    விளையாட இடமில்லைனு நெனச்சா...
    கதை இப்படிப்போகுதா...
    அப்போ எல்லா ஊர்ப்பசங்களும்...இதுக்காகத்தானா ரோட் ல விளையாட்றது...

    ReplyDelete