Thursday, 26 August 2010

தம்புள்ள மைதானமும், மஹேல ஜயவர்தனயும்...பாகம் II

முதல் பாகத்தை படிக்க ingu kilikkavum...   


இந்த மைதானத்துக்கு ஒரு சிறப்பம்சமும் பெருமயும் என்னவெண்றால் இந்த மைதானம் இருப்பதும் பிரபல பதிவாளர்!! Mr .Faaique (அதாங்க நான்தான்)  இருப்பதும் ஒரே மாவட்டத்திலாகும். என் வீட்டிலிருந்து வெறும் 30 கி.மி. களே…)

பின்பு சாப்பாட்டு இடைவேலையின் போது வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு (அதை நீ சொல்லித்தானா தெரிய வேண்டும்) வந்து உட்கார்ந்து score board`ஐ கவனமாக பார்க்க தொடங்கினோம். பக்கத்தில் ஒரு கூட்டம் குரங்கு வித்தைகள் காட்டிக்கொண்டு இருந்த்தனர். (தொலைக்காட்சியில் வர வேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டு வந்திருப்பானுங்க போலும்…) தப்பித்தவறி கெமராவில் பட்டு (எல்லாம் ஒரு அசட்டு நம்பிக்கைதான்) அதை யாராவது பார்த்து விட்டால், கதை கந்தலாகி விடும் என்பதால் நாம் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தோம்.(நமது இரசாயணவியல் ஆசிரியர் கிரிக்கட்டில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர், அவர் கண்ணில் பட்டால்……..)
அந்த நேரம் மஹேல ஜயவர்தன out of form`இல் இருந்த நேரம். அந்த நேரத்தில் வழமை போலவே சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். இந்த சின்ன மேட்டருக்கா ”மஹேல ஜயவர்தன” என்று தலைப்பு வைத்தாய்? என்று திட்டக் கூடாது. மேட்டர் பின்னால் வரும். (யாருப்பா.. அது திரும்பி பின்னால் திரும்பிப் பாக்குரது…. நான் சொன்னது கட்டுரையின் பின்னால் வருமென்று)

போட்டியின் கடைசி நேரம் இரு ஒவர்களில் 26 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அனேகமானோரது எண்ணம் இலங்கை தோற்று விடும் என்பதாகவே இருந்தது. கடைசி நேரம் டில்ஷான் (அந்த நேரம் டில்ஷான் ஐந்தாவது அல்லது ஆறாவது துடுப்பாட வருவார்) தொடர்ந்து நான்கு நான்கு ரன்கள் அடிக்க முழு மைதானமும் குதூகலித்தது. நாமும் தலை கால் தெரியாமல் ஆடினோம்.

இங்கும் வழமை போல் இந்த நேரம்தான் விதி விளையாடியது, அதாவது, எவனோ ஒரு கமெராக் காரண் சரியாக நம்மையும் ஆட்டத்தையும் வீடியோ எடுத்து அது நேரடியாக ஒளிபரப்பாகி விட்டது. இது நமக்கு தெரியாததால் நாமும் ஆபிரிக்க காட்டு வாசி போல் தொடர்ந்து ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தோம்.

கடைசியில் இலங்கை அணி வெல்ல பரிசளிப்பையும் பார்த்து விட்டு போகலாம் என்றெண்ணினால், அந்தப் பகுதி இரும்புக்கம்பியால் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் அங்கும் இங்கும் தேடிய போது நம் ஆசிய விதிப்படி ஒரு ஆள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு ஒரு வழி இருப்பதை கண்டு பிடித்தோம். உடனே போலீஸின் கண்ணில் மண்னை தூவி விட்டு ( நீ அந்த கும்மிருட்டில் புகுந்தால் எவனுக்குய்யா தெரியும்.. ஓவரா பில்ட்-அப் குடுக்குர…)  அந்த வழியின் மூலம் ஊர்ந்து மைதானத்தை அடைந்தோம். முன்னாள் இலங்கை அணி பலத்த பாதுகாப்புடன் போய் கொண்டிருக்க அந்த சம்பவம் நடந்தது.

எவனோ ஒருவன் பார்வையாளர் பகுதியில் இருந்து “யோவ் மஹேல…… உனக்கு கிரிக்கட் சரி வராது. நீ வீட்டுக்கு போய் வேறு எதாவது வேலை பார்” (வேறு என்ன வேலை செய்வார்’? யாருக்காவது guess பண்ண முடியுமா?) என்று சத்தம் போட மஹேல ஜயவர்தனயும் தன் பங்குக்கு “யோவ் எவன்யா அது? தைரியமிருந்த்தால் வெளியே வாய்யா..” என்று சத்தம் போட… இதை கொஞ்சமும் எதிர் பாராத அந்த சௌண்ட் பார்ட்டி கூட்டதுக்குள் புகுந்து மறைந்தான்.

அதன் பின் வந்த காலங்களில் மஹேல ஜயவர்தன சிறந்த முறையில் விளையாடி அணியின் ஒரு சிறந்த தலைவராகவும் தன்னை வெளிப்படித்தினார். இன்றைய உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களை பட்டியலிட்டால் அதில் மஹேலவுக்கு ஒரு உயர்ந்த இடம் (கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரம்? என்றெல்லாம் கேட்கக் கூடாது.) இருக்கிறது. இது அவரது தன்னம்பிக்கைக்கு நல்ல எடுத்துக்காட்டு..


நாம் திரும்பி வரும் போது மாத்தளை நகரம் வர பஸ் இல்லாமல் ஒரு லொரியில் ஏறி வழியில் ஓரிடத்தில் இறங்கி இன்னோர் லொரியில் ஏறினோம். அதில் ஏறிய பின்னர் தான் தெரிந்தது அந்த ஓட்டுனர் போதை வஸ்து பாவிப்பவர் என்று. வேகம் என்றால் அப்படியொறு நம் வரலாறு காணாத வேகம்… ஆஹா…. அன்று நம் வாழ்வில் கடைசி நாள் என்று நினைத்துக்கொண்டு நம் கைகளை இருக பிடித்துக்கொண்டு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் பாடசாலையில் சொல்ல நாம் ஒவ்வொரு பொய் தயாரித்துக் கொண்டு போக, நாம் கிரிக்கட் பார்க்கப் போன விடயம் தொலைக்காட்சியில் பார்த்த அனைவருக்கும் தெரிந்திருந்ததால் முழுப் பாடசாலையும் பரவியிருந்தது. இது தெரியாமல் நாம் இரசாயணவியல் ஆசிரியரிடம் போய் பல்லித்து மாட்டிக் கொண்டு வழமை போல் வாங்கிக் கட்டினோம்.  (நம்ம கதைகளில் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கு பினிஸிங் சரியில்லையே…)

14 comments:

 1. இன்னிக்கு நான்தான் முதல் ..
  படிச்சிட்டு வரேன் ..

  ReplyDelete
 2. ப.செல்வக்குமார் @
  இன்னிக்கு நான்தான் முதல் ..////

  நம்ம ஏரியால அதெல்லாம் மேட்டர்'ஏ கிடையாது...
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 3. இரசாயணவியல் ஆசிரியரிடம் செம அடி வாங்கினது அடுத்த பதிவா?

  ReplyDelete
 4. நீங்க மைதானத்துக்குள்ள போனதை பத்தி எதும் சொல்லலையே!

  ReplyDelete
 5. (நம்ம கதைகளில் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கு பினிஸிங் சரியில்லையே…)
  //

  நெசமாவா

  ReplyDelete
 6. நல்லா கதை சொல்லுறீய.....

  ReplyDelete
 7. கிரிக்கேட் போட்டி என்றாலே ஒரு பரவசம் தான். அத அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். வாழ்த்துக்கள் சகோதரா..

  ReplyDelete
 8. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) @@@
  //இரசாயணவியல் ஆசிரியரிடம் செம அடி வாங்கினது அடுத்த பதிவா?//
  அதெல்லாம் காலையில் பல்துலக்குற மாதிரி தினமும் நடப்பது.. அதையெல்லாம் பதிவா போட முடியாது..

  ReplyDelete
 9. @அருண் பிரசாத் said...
  நீங்க மைதானத்துக்குள்ள போனதை பத்தி எதும் சொல்லலையே!//
  இருக்கே... இன்னுமொரு முறை வாசியுங்கள்.. (நோ.. நோ.. விருப்பமில்லாவிட்டால் விட்டு விட்டுடுங்க.. அதுக்கு எதுக்கு செருப்பை எல்லாம் தூக்கிட்டு... )

  ReplyDelete
 10. @@வெறும்பய said...
  ///(நம்ம கதைகளில் ஸ்டார்டிங் நல்லாத்தான் இருக்கு பினிஸிங் சரியில்லையே…)///
  அந்த சொகக் கதைகலத்தான் ஒவ்வொரு பதிவிலும் எழுதிக்கொண்டிருக்கிரேனே...

  ReplyDelete
 11. வழமை போல் வாங்கிக் கட்டினோம் supper

  ReplyDelete
 12. யாதவன் said...
  கல்லூரி வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா.. .

  ReplyDelete
 13. // “யோவ் மஹேல…… உனக்கு கிரிக்கட் சரி வராது. நீ வீட்டுக்கு போய் வேறு எதாவது வேலை பார்”//

  மஹேலவை பார்த்து அப்படிக்கேட்டது நான்தான் (இருட்டில யாரென்று தெரியாதது நல்லதா போச்சு)

  ReplyDelete
 14. @எப்பூடி..
  //மஹேலவை பார்த்து அப்படிக்கேட்டது நான்தான்///

  எப்பூடி.. ....

  ReplyDelete