Wednesday, 11 August 2010

கடைசிப் பக்கம்


நம் பாடசாலை காலத்தில் பயிற்சி புத்தகங்களின் கடைசி பக்கங்களை யாரும் ஞாபகம் இருக்கிறதா? (நல்லா கேக்குறாங்கய்யா டீட்டைலு.. )   எப்படி மறக்க முடியும்? அங்கேதானே நாம் அனைவரும் கையொப்பமிட்டும், கவிதை!! (இப்போதுதான் புரிகிறது... நீ என் பரீட்சையில் சித்தியடையவில்லை என்று) எழுதியும் பழகினோம். இதற்கு யாரும் விதி விலக்கல்ல. சிலரது புத்தகங்களின் கடைசி பக்கம் பார்க்கவே சுவாரசியமாக இருக்கும் (அங்கெ என்ன கிரிக்கடா ஆடினீர்கள்?) . அதை இப்பொழுது பார்த்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.(கவனமாக பார்க்கவும்.. பழைய கல்லூரிக் கால வில்லங்கங்கள் வெளியாகி தங்மணிகளிடம் அடி வாங்கவும், பட்டினி கிடக்கவும் நேர்ந்த்தால் அதற்கு நஷ்ட ஈடு தரப்படமாட்டாது) சில குசும்புத்தனமான ஆசிரியர்கள் மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை திடீரென சோதனை செய்வதுண்டு. அதில் மாட்டிக்கொண்ட களவுகளும், காதல் கதைகளும் ஏகப்பட்டவை உண்டு.
அப்பா பாடப்புத்தகம் வாங்க தந்த பணத்தை ஆட்டய போட்டுவிட்டு ஒரே கொப்பியில் பத்து பாட குறிப்புகளையும் எழுதி காலத்தை ஓட்டிய ஜகஜால கில்லாடிகளும் உண்டு (ஐயோ அது நானில்லப்பா நமக்கு நண்பர்களுடைய கொப்பி இருக்க பயமேன்)
நமது பௌதீகவியல் ஆசிரியர் வாசிகசாலையிலுள்ள புத்தகங்களையெல்லாம் அடுக்கிகொண்டு வந்து நமக்கு எழுதச்சொல்லியே காலத்தை ஓட்டுவார். அவ்வளவு குறிப்புக்கும் கொப்பி வாங்கி கட்டுப்பட்டியாகாது என்பதால் ஒரே வரி இடுக்கில் சின்ன எழுத்தில் மூன்று வரி எழுதி (என்னா வில்லத்தனம்) மாட்டிக்கொண்டு முழித்த அனுபவமும் உண்டு. (எவன்யா அது கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறது... கல்லூரி வாழ்கையில  இதெல்லாம் சகஜமப்பா... ) 
என் நன்பன் க்ரேஸி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது கொப்பியின் பின் பக்கத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தான்.

              ”அரை மணித்தியால படிப்பு
              அதிலும் இரட்டை சிரிப்பு
              ஆசிரயரை கண்டால் நடிப்பு
              இதுதான் கல்லூரிப் படிப்பு”

(இந்த உன்னதக் கவிதை கணிதப் பாட ஆசிரியரிடம் மாட்டிகொள்ள, தர்ம அடி வாங்கியதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்!!!!! என்ன இருந்தாலும் என் நன்பனாச்சே!!!!!)
என் இன்னொரு நன்பன் பொப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் கொப்பியின் பின் பக்கத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தான்.

                “ஒரே பார்வயில் காதலா…..
                 ஒரு மூங்கில் காடெரிய
                 ஒரு தீக்குச்சி போதுமே….”

இது ஆசிரியையிடம் மாட்டிகொண்டு மானம் கப்பலேரியது தனிக்கதை.
இதைப்போல் உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்கும். கொஞ்சம் அசை போட்டுப் பாருங்கள். (நீ பட்ட அவமானம் போதாதா...?  நாம எதுக்கு...!!!! )
பயபுள்ள கேப்டனின் ரசிகனா இருப்பான் போலிருக்கு... 

ஒரு முறை தன்னை உதைத்த நன்பனின் சப்பாத்தை(shoe) கழட்டி இரண்டாம் மாடியில் இருந்து வீச நம் நன்பனும் பதிலுக்கு அவன் புத்தகப்பையை தூக்கி வீச இரண்டும் நம் அதிபரின் தலையில் விழுந்து வாங்கிக்கட்டிய சம்பவமும் உண்டு. (அது வேறு பதிவில் வரும் .... நண்பர்கள் இதை வாசித்து விட்டு ஆட்டோ அனுப்பாமல் இருந்தால்... )   
நன்பர்களுடன் இருக்கும் போது ஏதும் பிரச்சனை, கஷ்டம் வந்தாலும் கூட பின்னாளில் அதை நினைக்கும் போது இனிமையாக இருக்கும். அதுதான் நட்பு.

13 comments:

 1. when we are thinking now that is golden movements...

  ReplyDelete
 2. உண்மையில் மறக்க முடியாத அனுபவங்கள் அது

  ReplyDelete
 3. "அருண் பிரசாத் "
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 4. yah faaique its a golden movements never forget

  ReplyDelete
 5. பாடசாலை வாழ்கையில் எத்தனை மறக்கமுடியா நினைவுகள்.. எத்தனை குறும்புத்தனம்... நினைத்தாலே இனிக்கும்.. நினைவுகளை புதுப்பிதமைக்கு ரொம்ப நன்றி. பதிவுகள் கலக்கல்.. வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

  சாகிர்...

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி. M.Z.M

  ReplyDelete
 7. வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி... ZAkir...

  ReplyDelete
 8. bale bale unakullaum thalapa kattina sankar ondu thunguraandu sollawe illa '
  but thanks for the remembrance

  ReplyDelete
 9. adai faaique..super machan..well done..

  ReplyDelete
 10. it's me Waleed...

  ReplyDelete
 11. ஓ! நீயா?
  என்னா கத..
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

  ReplyDelete