Thursday, 19 August 2010

"ஸ்ரீ பாத" போன கதையும் அது சிரிப்பான கதையும்


சமனல கந்த (வண்ணத்துப்பூச்சி மலை)  எனப்படும் இந்த மலை இலங்கையில் தென் பீட பூமியில் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி நகரில் இருந்து 40 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. 2,243 மீட்டர் உயரம் கொண்ட இலங்கையின் இரண்டாவது உயரமான கூம்புருவான மலையாகும். சுற்றியும் மலை சூழ்ந்த இடமாயினும் இந்த மலை தனித்து தெரியும் அளவுக்கு உயரமானது. சுற்றியும் காடு அடர்ந்து காணப்படுகிறது மற்றும் இங்கு யானை சிறுத்தை மற்றும் இலங்கைக்கு தனிச்சிறப்பான பல விலங்குகளும் தாவரங்களும் அடங்குகின்றன.
உற்றுப் பார்த்தால் பக்தர்கள் ஏறுவதுதெரியும் 

இந்த மலையை அனைத்து மத மக்களும் புனித ஸ்தலமாக கொண்டாடுகின்றனர். காரணம் இந்த மலையின் உச்சியில் உள்ள 1.8 மீட்டர் பெரிய கால் சுவடாகும். புத்தர்கள் புத்தருடையுது என்றும் ஹிந்துக்கள் சிவனுடையது என்றும் முஸ்லிம்கள் மற்றும் கிரிஸ்தவர்கள் இது முதல் மனிதரான மற்றும் இறை தூதரான ஆதம் (Adam) உடையது என்றும் நம்புகின்றனர். இதனால் புத்தர் ”ஸ்ரீ பாத மலை” என்றும் ஹிந்துக்கள் “சிவனொலிபாத மலை” என்றும் முஸ்லிம் ”ஆதம் பாவா மலை” என்றும் ஆங்கிலத்தில் “Adams Peak” என்றும் அழைக்கப்படுகிறது.

மலையின் உச்சியை அடைய ஆறு முக்கிய பாதைகள் உள்ளன. அவையாவன  இரத்தினபுரி – பலாபத்தள, ஹட்டன் – நல்லதண்ணி (இந்த ஊரை பற்றி ஒரு முக்கிய சம்பவம் பின்னே வரும்.), குருவிட்ட – ஏறத்ன, முர்ரய்வத்த, மூக்குவெத்த & மாலிம்பொட ஆகியனவாகும். இதில் நல்லதண்ணி, பலாபத்தல வீதிகள் பிரபலமானவையாகும். பஸ் வண்டிகள் ஹட்டனிலிருந்து நல்லதண்ணி வரையும் இரத்தினபுரி வரையும் குருவிட்டயிலிருந்து ஏரத்ன வரையும் வரும். இந்த இடங்களில் இருந்து காட்டினூடு கரடு முரடான பாதையில் ஒழுங்கற்ற படிகளிலும் 7- 9 கி.மி ஏற வேண்டும். இதில் நல்லதண்ணி பாதை மிகவும் பிரபலமானது. இது கொஞ்சம் தூரமாக இருந்தாலும் பாதை சரிவு குறைந்ததாகவும் இலகுவாகவும் இருக்கும்.
முக்கோண வடிவ நிழல் விழும் காட்சி  

பொதுவாக ஹிந்துக்களும் பௌத்தர்களுமே இங்கு போவதை வழக்கமாகவும் புண்ணியமாகவும் கருதுகின்றனர். பொதுவாக யாத்திரீகர்கள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை படையெடுக்கின்றனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட சீரற்ற படிகளையும் கடும் மழை, குளிர் காற்று மற்றும் பனியில் ஏறி மலையின் உச்சியை அடைவது என்பது ஒரு ரிஸ்கான வேலையாகும்.

செங்குத்தான குறுகிய மலைப்பாதை. 
இங்கு வருவோரின் முக்கிய நோக்கம் இந்த மலையின் உச்சியில் இருந்து சூரியோதயத்தை பார்ப்பதாகும். முன்பே சொன்னது போல் இந்த மலையின் பக்கத்தில் உள்ள மலைகள் எதுவும் இதன் அளவுக்கு உயரம் இல்லாததால் சூரியோதயத்தை இதிலிருந்து பார்ப்பதும் இம்மலை கூம்புருவாக இருப்பதால் சூரியோததின் போது இதன் பிரமாண்டமான முக்கோண வடிவ நிழல் மேற்குப்பக்கத்தில் விழுவதை பார்ப்பதும் ஒரு தனி அனுபவம்தான். அதற்காக இங்கு வருவோர் இரவிலே ஏறத்தொடங்குவார்கள். அப்போதுதான் காலையில் மலையுச்சியை அடைய முடியும்.

சூர்யோதயம்  

நமது ஊர்களில் ”இந்த மலைக்கு ஒரு முறையேனும் போகாதவனும் கேனயன், இரண்டாவது முறை போகின்றவனும் கேனயன்” என்பர். நாம கேனயன் இல்லை என்பதை மலையேறி நிரூபிக்க வேண்டியாகிவிட்டது. நமக்குதான் ரிஸ்க் எடுக்குரது ரஸ்க் சாப்பிடரது மாதிரியாச்சே.
நாளை மலை ஏறும் படலம் ஆரம்பம் ........
நாங்க ரெடி நீங்க ரெடியா?


தொடர்வதற்கு http://faaique.blogspot.com/2010/08/ii.html

18 comments:

  1. /// சமனல கந்த ///

    தல இது இன்னா மொழின்னு எனக்கு தெரியல

    என்னுமோ பாலபத்துர,நல்லதண்ணின்னு சொல்றீங்கன்னு தெரியுது ஆனா ஒன்னும் விளங்கள

    ReplyDelete
  2. அதெல்லாம் சிங்கள மொழி ஜில்லு...

    ReplyDelete
  3. ஹா எரிட்டிங்க போல

    ReplyDelete
  4. //குருவிட்ட – ஏறத்ன, முர்ரய்வத்த, மூக்குவெத்த & மாலிம்பொட ஆகியனவாகும். ///
    வாயில நொலயலையே ..?
    வேற ஏதாவது நல்ல பேரா வைக்கச் சொல்லுங்க ..
    // ”இந்த மலைக்கு ஒரு முறையேனும் போகாதவனும் கேனயன், இரண்டாவது முறை போகின்றவனும் கேனயன்”//
    இது நல்லா இருக்கு ..
    படங்களும் இடங்களும் அருமை. கலக்கி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாங்க A.சிவசங்கர் "

    நாளை ஏறலாம் .

    ReplyDelete
  6. ப.செல்வக்குமார்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. சூர்யோதயம் நல்ல இருக்கு அப்படியே இந்த பதிவிற்கு தலைப்பு வைத்து விடுங்கள்

    ReplyDelete
  8. நல்ல வித்தியாசமான பதிவு.
    புதிய விஷயம் தெரிந்தது.
    நீங்க 2 முறை ஏறி இருக்கீங்களா?

    ReplyDelete
  9. அருமையா இருக்கு.. உங்க பதிவும்..வண்ணத்துப்பூச்சி மலையும்

    ReplyDelete
  10. "அருண் பிரசாத் said...


    " நீங்க 2 முறை ஏறி இருக்கீங்களா? "
    நாளை தெரியும்...

    ReplyDelete
  11. "வெறும்பய said...

    அருமையா இருக்கு.. "

    thnks ...

    ReplyDelete
  12. "சௌந்தர்,"
    வாங்க சௌந்தர் , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  13. படங்கள் அனைத்தும் அருமை நண்பா...அந்த ஊர் இவ்வளவு அழகாக உள்ளதா...நல்ல பதிவு. தொடர்ந்து இதுபோல் எழுதுங்கள்...

    ReplyDelete
  14. ரகுநாதன்
    நன்றி ரகுநாதன்..

    ReplyDelete
  15. அழகான படங்கள் நண்பா,,,

    நல்ல பதிவு..

    ReplyDelete
  16. ப.செல்வகுமார் said
    ////குருவிட்ட – ஏறத்ன, முர்ரய்வத்த, மூக்குவெத்த & மாலிம்பொட ஆகியனவாகும். ///
    வாயில நொலயலையே ..?
    வேற ஏதாவது நல்ல பேரா வைக்கச் சொல்லுங்//

    அதற்காக வாழப்பழம்ன்னா வைக்க முடியும்
    ஹி.. ஹி... அது சிங்கள வார்த்தைகள்

    ReplyDelete
  17. @ Riyas..

    ///அதற்காக வாழப்பழம்ன்னா வைக்க முடியும்
    ஹி.. ஹி... அது சிங்கள வார்த்தைகள்//

    ஹி.. ஹி... varukaikkum karuththukkum nanri... .

    ReplyDelete
  18. sirapaana malai oru muraiyenum varuvom .

    T.pandian,
    theni dist,
    tamilnadu,
    india.

    ReplyDelete