Monday, 16 August 2010

ஓவர் பில்ட் – அப் உடம்புக்கு ஆகாது…….

நம்ம  கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அதாங்க.. சூரியனுக்கே டார்ச் அடிப்பவர்) ஒரு பதிவில் “மீனே தனக்கு மசாலா தடவிக்கொண்டு எண்ணையில் குதிப்பது” என்பார். அது போல என் நன்பனுக்கு ஒரு சம்பவம் நடந்தது. ஆப்பில் தெரியாமல் போய் உட்காருவது வேறு, ஆப்பை எடுத்து தனக்கே செருகிகொள்வது வேறு. நன்பனுக்கு நடந்தது இரண்டாவது வகை.

என் நெருங்கிய நன்பர்களில் ஒருவன் பொப்(வழமை போல் பெயர் மாற்றப்பட்டுள்ளது). சொந்த ஊர் (சொந்தம் கொண்டாட ஊர் என்ன அப்பன் வீட்டு சொத்தா?) நுவரெலியா மாவட்டத்தில் இரம்பொட பகுதியில் உள்ள கட்டுகிதுல எனும் நகரமாகும். (கிராமம் என்று உன்மையை எழுதினால் அந்த ஏரியால தலை காட்ட முடியாது என்பதால் அதுவும் மறைக்கப்பட்டுள்ளது)

நாம் அவனை சந்திக்க அடிக்கடி அங்கு செல்வதுண்டு(ஏன் அவர் வர மாட்டாரா என்றெல்லாம் கேட்க கூடாது, நாம சிங்கத்தையே அதன் குகைக்கு சென்று சந்திக்கிற ஆளுங்க… இதெல்லாம் ஜுஜூபி மேட்டரு…)

நம்ம நன்பன் க்ரேஸி (ஹி…ஹி.. இவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது…… உருப்படியாக ஏதாவது செய்தால் சொந்தப் பெயரில் எழுதலாம்..) ஒவ்வொரு முறையும்!!!! காதலில் தோல்வி அடையும் போது அங்கு சென்று பீல் பண்ணி அழுது அடுத்தவனின் தூக்கத்தை கெடுத்து அந்த கெப்`பில்(gap) அவன் நல்லா தூங்கி விட்டு அடுத்தவனை சாப்பிட விடாமல் அதையெல்லாம் அவன் சாப்பிட்டு விட்டு வருவான் (இது ஒவ்வொரு மாதமும் கட்டாயம் இது நடக்கும்)

நாம் ஒரு முறை அங்கு சென்ற போது, ஒரு மாலை வேலை பொப் வீட்டுக்கு வந்த முன்ஸில் (அட.. இவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது காரணம் இவர்தான் கதையின் நாயகன்) தன் வீட்டுக்கு வருமாறு விடாப்பிடியாக இருந்தான் (நம்புங்கப்பா…). நாமும் சும்மா கிடைக்கும் தேனீர் மற்றும் பிஸ்கட்`ஐ ஏன் விட வேண்டும் (விடுவோமா நாங்க….) என்று யோசித்து போவதென முடிவெடுத்து வெளியே வந்தோம்.

வாசலின் அருகே வரும் போது தேயிலை தோட்டத்தில் (வாசலின் அருகே எப்படியா தேயிலை தோட்டம் இருக்கும்) வேலை செய்யும் இரு பெண்கள் நன்பன் பொப்பின் தந்தையின் கடைக்கு வந்து விட்டு சென்றனர்.(வந்தா போகத்தானே வேனும்….ஷப்ப்பா…….) நாம் இன்னொரு நன்பனுக்கு ஒரு 5 நிமிடம் காத்திருந்து விட்டு வெளியே வரும் போது நன்பன் முன்ஸிலின் காந்த கண்ணில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு கண்ணில் பட்டுவிட்டது. இதை பார்த்தவுடன் நம் ஒவ்வொருத்தரது மனதிலும் கொத்து பரோட்டா, சமூசா என்று பல ஐட்டங்கள் கொசுவத்தி சுருள் போல் சுற்றிக்கொண்டிருக்க நன்பன் முன்ஸில் மனதோ வேறு திசையில் சுற்றியது.

முன்ஸில் கூறியதாவது “இந்த பணம் கட்டாயம் அந்த தோட்டத்து பெண்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். நாள் முழுதும் வேலை செய்து விட்டு போகும் போது விட்டு சென்றுள்ளனர். இது அவர்களின் ஒரு நாள் சம்பளமாக இருக்க வேண்டும்………etc..(மலையக மக்கள் முன்னனி அரசியல்வாதிகளே நோட் பண்ணுங்கப்பா…..) என்று செண்டிமெண்டாக பேச நம் கண்களில் கிளிசரின் இல்லாமலே கண்ணீர். (ரொம்ப நல்லவனா இருக்கானே!!! நம் நன்பர்களில் இப்படி ஒருத்தனா? சான்ஸே இல்லயே!!!)

நாம் முன்ஸில்`இன் பேச்சை கேட்டு பீல் பண்ணிக்கொண்டு போதே, இதை அவர்களிடம் குடுக்காமல் திரும்ப மாட்டேன் என்று சபதம் செய்து விட்டு அப்பெண்கள் சென்ற திசையில் ஓடி மறைந்தான். நமக்கோ வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஐம்பது ரூபாய் ஜஸ்ட் மிஸ் ஆகிய கவலையிலும் இருந்து மீள ரொம்ப நேரமானது.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு பின் களைப்புடன் (ஓடிப்போய் வந்ததால்) திரும்பிய நன்பன் முன்ஸிலின் கண்களில் ஆனந்த கண்ணீர். இவர் பணத்தை ஒப்படைத்த போது அவர்கள் பட்ட சந்தோசத்தை சொல்லி எங்களையும் மெய்சிலிர்க்க வைத்தான். நம் நன்பனின் பெரிய மனதை எண்ணியவாறும் நம் கையில் கிடக்கவில்லையே என்ற வயிற்றெரிச்சலிலும் நன்பன் முன்ஸில்`இன் வீட்டின் முற்றத்தை அடைந்தோம்.

தன் வீட்டு கதவை திறக்க சென்றவன் அப்படியே நின்று கொண்டு யோசிக்கத் தொடங்கினான். முகத்தில் ஆயிரம் கேள்விக் குறிகள் இருளிலும் மின்னியது!!!!. என்னவென்று விசாரித்தால் சொல்ல மறுக்கிறான். பலமுறை கேட்டு நச்சரித்த போது (விடுவோமா நாங்க..) “அம்மா வீட்டுக்கு சாமான் வாங்கச் சொன்னதாகவும் அதற்கு தந்த ஐம்பது ரூபாயை காணவில்லை”யென்றும் சொல்ல நமக்கு உண்மை கொஞ்சம் கொஞ்சமாக புலப்பட தொடங்கியது.

அங்கு விழுந்து கிடந்தது நன்பனின் முன்சிலின் ஐம்பது ரூபாயாகும். அதைத் தெரியாத முன்சில் தன் சொந்த பணத்தயே அந்த தோட்டக்கார பெண்களிடம் கொடுத்து வந்துவிட்டான். சும்மா கொடுத்து விட்டு வந்திருந்தாலும் பரவாயில்லை. கொடுத்ததும் இல்லாமல் பயபுள்ள என்னா பில்ட் உப்? விட்டான். இதை தெரிந்ததும் நாங்கள் விழுந்து!! விழுந்து!! சிரிக்கவில்லை என்றால் நீங்க நம்பவா போரீங்க….

நிலவரத்தின் தன்மை அறிந்து வீட்டில் உள் சென்றால் முன்ஸிலுக்கு நடக்கப் போகும் கலவரத்தை தெரிந்ததாலும் எல்லாரும் தன்னிடம் இருந்த கொஞ்ச பணத்தையும் போட்டு  (வெறும் ஐம்பது ரூபாய்`க்கா)அவனுடைய நிலமையை சீராக்கி மீண்டும் கடையை நோக்கி நடந்தோம்.
     

20 comments:

  1. அழகாக கதை சொல்லி இருக்கிறீர்கள்.
    நகைச்சுவையாக கொண்டு சென்று இருக்கிறீர்கள்.
    கதை முழுவதும் ஒரே பாராவில் அமைந்தது போல் இருக்கிறது.
    அதை பிரித்து சிறு,சிறு பத்தியாக பிரித்து இருந்தால் படிப்பதற்கு இன்னும் வசதியாக இருக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி ABUL பசர்.. திருத்தி விடுகிறேன்

    ReplyDelete
  3. நல்ல நகைச்சுவையுடன் சொல்லியது அருமை.

    நீங்களே உங்களை வாரிவிட்டு கிட்டா எப்படி? எங்களுக்கும் சான்ஸ் கொடுங்க

    ReplyDelete
  4. "அருண் பிரசாத் "
    "நீங்களே உங்களை வாரிவிட்டு கிட்டா எப்படி? எங்களுக்கும் சான்ஸ் கொடுங்க "
    எல்லா வித்தையும் உங்களிடம் கற்றதுதான்...

    ReplyDelete
  5. கதையில் நகைச்சுவை ஒருபக்கம் ததும்பினாலும், இடையில் வரும் சொலவாடைகள் இன்னும் ரசிப்பைக் கூட்டுகின்றன.ரைட்டு. வாழ்த்துகள் மக்கா!!

    ReplyDelete
  6. நன்றி அப்துல் காதர் சார்.

    ReplyDelete
  7. சிரிக்க வைத்தீர்கள் நண்பரே!வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நல்ல கதை..
    உங்க நண்பரை நினைச்சா
    சிரிப்பு., சிரிப்பா வருது..

    ReplyDelete
  9. வாங்க mynthan ,
    karuththukku நன்றி

    ReplyDelete
  10. வெங்கட் சார்
    தல... உங்கள் வரவு நல் வரவாகட்டும்..

    ReplyDelete
  11. senthil..
    thnk u for ur visit & comments..

    ReplyDelete
  12. நல்லாயிருக்கு.. ரொம்ப நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. /// ஒவ்வொரு முறையும்!!!! காதலில் தோல்வி அடையும் போது அங்கு சென்று பீல் பண்ணி அழுது அடுத்தவனின் தூக்கத்தை கெடுத்து ////

    இது என்னாது மாசம் ஒரு காதலா :)

    நல்லாயிருங்க

    ReplyDelete
  14. அந்த நண்பரை நினைச்சி நினைச்சி(இன்னும் காயப் போடுல) சிரிச்சிகிட்டு இருக்கேன்

    இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே,அந்த பணத்தை தொலைத்துவிட்டு பில்டப் கொடுத்தது நீங்கதானே

    நைசா நண்பர் பேர சொல்லி போட்டா நாங்க நம்பிடுவோமா :)

    ReplyDelete
  15. ஜில்லு...
    வந்ததே vanthaai ..
    என்பா... வீண் புரளிய கிளப்புறே ...

    ReplyDelete
  16. sorry spelling mistake
    intresting

    ReplyDelete
  17. யாஸிர் நிசாருத்தீன்//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா...

    ReplyDelete