Monday, 23 August 2010

விளையாட்டுப் போட்டியும் மாங்காய் மரமும்…

நமது பாடசாலையில் இரு வருடத்துக்கு ஒரு முறை விளையாட்டுப் போட்டி நடப்பது வழக்கம் (இது உங்க பாடசாலையில் மாத்திரமா நடக்குது). இக்காலங்களில் நம்ம பசங்களுக்கு கொண்டாட்டம்தான். இந்த நாட்களில் நாம் நம் அணிகளுக்கு விளையாடுவதை தவிர வேறு எல்லா வேலையும் செய்வோம். (நீ எப்பவுமே அப்படித்தானே..)  
ஒரு முறை விளையாட்டுப் போட்டி நடக்கும் காலம் நமது வீட்டின் கீழிருந்த தோட்டத்தில் ஒரு மாங்காய் மரம் காய்த்து குழுங்கிகொண்டிருந்தது. காய்த்த மரத்துக்கு கல்லடி படா விட்டால் பழ மொழி பிழையாகிவிடும் என்பதால் தமிழை வளர்க்கவாவது அத்தோட்டத்தில் உள்ள மாங்காய்களை ஆட்டயப் போடலாம், என நம் நன்பர்கள் குலாமில் (நான், பொப், டட்ஸன், க்ரேஸி, ராஜா) முடிவானது.

இதை எப்படி அமுலாக்குவது என்று யோசித்த போது மாலையில் பாடசாலையில் நீளம் தாண்டுதல் போட்டிக்கான பயிற்சி நடை பெறுவதாக செய்தி கிடைத்தது. இதை சாக்காக வைத்து வீட்டில் இருந்து, நீளம் தாண்டுதல் போட்டிக்கான பயிற்சிக்காக போவதாக சொல்லி விட்டு வெளியேறி ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தோம். அஙிருந்து பாடசாலை மைதானத்துக்கு போய் கொஞ்ச நேரம் பிலிம் காட்டிவிட்டு மைதானத்துக்கு பின்னாலிருந்த புதர் வழியாக ஒவ்வொருத்தராக யாருக்கும் சந்தேகம் வராத படி வெளியேறினோம்.

கொஞ்ச தூரத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து மாங்காய் மரத்தடியை அடைந்தோம். ஏற்கனவே முடிவு செய்த படி கல் மற்றும் கட்டைகளை பாவித்து மாங்காய் பரிக்க தயாரான போது, நம்ம க்ரேஸி, தான் மரம் ஏறுவதில் கில்லாடி என்றும், இதை போல் பல ”ஜல புல ஜல புல ஜங்” வேலைகளில் அவனுக்கு அனுபவம் இருப்பதாகவும் சொன்னான் (விதி வலியது..யாரை விட்டது….) நமக்கு நம்பிக்கையூட்ட இன்னும் பேசிகொண்டேயிருந்தான். கடைசியில் என்ன நடந்தால் நமக்கென்ன… மாங்காய் கிடத்தால் போதும் என்றெண்ணி அவனை மரத்தில் ஏற அனுமதிக்கப் பட்டது.

ஏறும் போது ஒரு அனுபவமிக்க திருடனை போன்று நன்றாகத்தான் ஏறினான்.(ஙொய்யாலா… எத்தனை மரங்கள், எத்தனை கோழிகளை ஆட்டய போட்டிருப்பான்) அவன் கிளைகளை குலுக்க குலுக்க விழும் மாங்காய்களை நாம் ஒன்று சேர்க்கத்தொடங்கினோம்.

அப்பொழுதுதான் அந்த கெட்ட சம்பவம் நடந்தது. ”தொப்” ”தொப்” என்று மாங்காய் விழும் சப்தத்துக்கு மத்தியில் “தொப்”பென்று ஒரு பெரிய சத்தமும் பின் முனகல் சத்தமும் கேட்கத் தொடங்கியது. சத்தம் வந்த திசையை பார்த்தால் நம் ஆருயிர் நன்பனும் அனுபவமிக்க மாங்காய் திருடனும், கொஞ்ச நேரத்துக்கு முன் மரத்துக்கு மேலுமிருந்த்த மரத்தடியில் மாங்காய்களுக்கு மத்தியில் க்ரேஸியின் சட்டை விழுந்து கிடக்கிறது. முனகல் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் விழுந்த சட்டைக்குள் ஙொய்யால அவனும் இருக்கிறான்.(ஸாரிங்க… மாங்காய் பொறுக்கிய அவசரத்தில் சரியாக பார்க்கவில்லை)

நமக்கு காலும் ஓடவில்லை கையும் ஓடவில்லை(நாய்க்குத்தான்யா நாலும் ஓடும்). என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டில் போய் சொன்னால் அங்கே நடக்கப் போகும் நிகழ்வு இதை விட மோசமாக இருக்கும். கொஞ்ச நேரம் மூளையை!!! பிளிந்து யோசித்ததில் நன்பனும் நம் குழுவின் தலைவனுமான “பொப்” இன் கிரிமினல் மூளையின் எங்கோ ஒரு மூலையில் ஒரு யுக்தி முளைத்தது. அது கொஞ்சம் ரிஸ்க்`ஆக இருந்தாலும் நமக்குத்தான் அது ரஸ்க் சாப்பிடுர மாதிரியாச்சே….(செய்வதற்கு வேறு வழியும் இல்லை யோசிக்க நேரமும் இல்லை)

உடனே அதை அமல் செய்யும் பொருட்டு க்ரேஸியை தூக்கிக்கொண்டு பாடசாலை மைதானத்துக்கு ஒடினோம்(மாங்காயையும் மறக்கவில்லை). நல்ல வேளை அங்கு யாரும் இல்லை. போட்ட திட்டத்தின் படி அங்கிருந்த நீளம் தாண்டும் போட்டிக்கான இடத்தில் க்ரேஸியை அப்படியே போட்டுவிட்டு மாங்காய்களை மறைவான இடத்தில் வைத்து விட்டு வீட்டுக்கு ஓடிப்போய் ”க்ரேஸி நீளம் தாண்டுதல் பயிற்சியின் போது விழுந்து விட்டதாகவும் (காலில் மட்டும்தான் பலமாக அடிபட்டிருந்தது என்பதால் ரொம்ப வசதியாக!!! போய் விட்டது) உடனே வருமாறும் அழைக்க, வீட்டார்களும் ஓடோடி வந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். நாமும் கவலையுடன் (இவ்வளவு நன்றாக மரமேறுபவனை இழந்துவிட்டோமே.. இனிமேல் யார் மரமேறுவது????? ) இருந்த மாங்காய்களை பங்கு பிரித்து விட்டு வீடு போய் சேர்ந்தோம்.
அடுத்த நாள் பாடசாலை முழுவதும் க்ரேஸி விளையாட்டுப் பயிற்சியின் போது விழுந்து அடிபட்ட சம்பவம் அறிந்து முழு பாடசாலையும் சென்று அஞ்சலி செலுத்தியது.… ஸாரி…. இன்னும் உயிருடந்தான் இருக்கிறானில்ல,…….. சுகம் விசாரித்தது.
விளையாட்டுப் போட்டி முடிவின் போது நன்பனின் தன் இல்லத்துக்காக!! அவன் எடுத்த கடும் முயற்சியை பாராட்டி கௌரவப் பரிசொன்றும் வழங்கப் பட்டது. க்ரேஸி காலில் கட்டுடன் போய் பரிசு வாங்க அதை தூரத்தில் இருந்து கலங்கிய கண்களுடன் பார்த்து ரசித்தோம். இதற்கு முழு உதவியாயும் காரணமாயும்  இருந்த நமக்கு ஏதும் கிடைக்கவில்லை என்பது கவலையே..(நோ… நோ…. நோ.. bad words…) 

15 comments:

 1. ஒரு நண்பர்கள் கூட்டம் இது மாதிரியாவே திரிஞ்சீங்களா பாஸ். ஹா..ஹா... (தமாஸ்) அசத்துங்க!! நல்ல இருக்கு!!

  ReplyDelete
 2. ஹ ஹ ஹா... நல்ல அனுபவம் தான்.

  கடைசில அந்த மாங்காய்களை சாப்பிட்டீங்களா? இல்லையா?

  ReplyDelete
 3. எம் அப்துல் காதர் சார்,,
  ஒரு நண்பர்கள் கூட்டம் இது மாதிரியாவே திரிஞ்சீங்களா //
  அப்படி திரியாம ஒலுங்கா படிச்சிருந்தா படிச்சிருந்தா எதுக்கு சார் இப்போ நாம ப்லாக் எலுதிட்டு இருக்கனும்...

  ReplyDelete
 4. அருண் பிரசாத் ///
  கடைசில அந்த மாங்காய்களை சாப்பிட்டீங்களா? இல்லையா?//
  விடுவோமா நாங்க......

  ReplyDelete
 5. நல்ல நகைச்சுவை பதிவு அருமை பாயிக்.

  ReplyDelete
 6. coolza////

  நன்றி சாகிர்.....

  ReplyDelete
 7. அதெப்பிடிங்க நாங்க சொல்ல நினைக்கிறதா எல்லாம் நீங்களே சிவப்பு எழுத்தால போட்டிருக்கிறீங்க? :-)

  ReplyDelete
 8. எப்பூடி.. ///
  எல்லாம் ஒரு சேப்டி'தான்

  ReplyDelete
 9. ஃபாயிக் தம்பி,

  அழகான லங்கைத்தமிழில் வித்தியாசமான மொழிநடை! சுவாரஸ்யமான பதிவு. எம்மையும் எம் பள்ளிக் காலத்துக்கு இட்டுச் சென்றது. பதிவுலகில் பேரும் புகழும் பெற அன்பான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. SUMAZLA/சுமஜ்லா@

  நன்றி அக்கா

  ReplyDelete
 11. கொஞ்சம் பழைய நினைவுகளை எட்டி பார்க்க வைத்துவிட்டீர்கள்

  ReplyDelete
 12. ஜிஎஸ்ஆர் @
  நன்றி நன்பா.....

  ReplyDelete
 13. மாங்காவ திருடித்தின்னாத்தான் ருசியாயிருக்கும்....

  பதிவும் ருசியா இருக்கு....

  ReplyDelete
 14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நண்பரே..

  ReplyDelete