Wednesday, 25 August 2010

தம்புள்ள மைதானமும், மஹேல ஜயவர்தனயும்...


2003ம் ஆண்டு நாம் உயர் தரம் படித்துக்கொண்டு இருக்கையில் தம்புள்ள மைதானத்தில் இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் கிரிக்கட் போட்டி நடக்க இருந்தது. இதை தெரிந்தவுடன் நானும் டட்ஸனும் ராஜாவும் போக முடிவெடுத்தோம். ஆனால் அன்று பாடசாலை நடக்கும் தினம், ஆனாலும் நமக்கு ரிஸ்க் எடுக்குரது ரஸ்க் சாப்பிடர மாதிரி என்பது நம் பதிவுகளை தொடர்ந்து!!! படிக்கும் (இதை எழுதும் போது உனக்கே சிப்பு வந்திருக்குமே சிப்பு..)  இதயம் பலவீனமில்லாத நல்லுள்ளம் படைத்த நன்பர்களுக்கு தெரியும்.எனவே, பாடசாலைக்கு முழுக்கு போட்டு விட்டு போவதென்று முடிவெடுக்கப் பட்டது. 

பாடசாலைக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் சொல்லி செய்தி அனுப்பிவிட்டோம், (அது எப்பவவாவது லீவு போடறவன் செய்றது..)  இதில் எனக்கும் ராஜாவுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை காரணம் (உங்களையெல்லாம் எவன் கணக்கிலேடுத்தான்?) நாம் அந்த ஊரில் தங்கி படித்துக்கொண்டிருந்தோம், ஆனால் டட்ஸனோ வீட்டில் இருந்து வெளியேறுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்பதால் அவன் வீட்டுக்கே சென்று கூட்டி வருவது என்று முடிவு செய்தோம். (சிங்கத்தையே அதன் குகைக்கு சென்று சந்திப்பதுதான் நம்ம ஸ்டைல்( இலங்கயில் சிங்கம் இல்லாததால் தப்பிச்சேன்).

சரியாக போட்டி தினத்தன்று நாமும் தயாராகி டட்ஸனின் வீட்டை அடந்த்தோம். நமது திட்டம் டட்ஸனின் தந்தை வீட்டை விட்டு வெளியேறியவுடன் நாம் டட்ஸனுடன் தப்பிப்பதே. ஹொலிவூட் படங்களுக்கு நிகராக  திட்டம் போட்டுவிட்டு போய் வசமாக  டட்ஸனின் தந்தையிடம் மாட்டிக்கொண்டோம் (எந்தவொரு விஷயத்தையும் நீ ப்ளான் பண்ணினா இப்படித்தான் இருக்கும்). பிறகு என்ன? ஆரம்பிக்க வேண்டியதுதானே…..!! திணர திணர கதர கதர திட்டு விழுந்தது. எல்லாம் ஒருவாறு முடிந்ததவுடன் ”வை ப்லட் சேம் ப்லட்” என மூவரும் துடைத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினோம்.  (அவ்வளவு திட்டியும் திருந்தவில்லை??? அப்பவே திருந்தியிருந்தா இப்போ எதுக்கு ப்லாக் எழுதிட்டு இருக்கனும்)
தம்புள்ள விகாரை 
 நமது திட்டப்படி முதலில் தம்புள்ள விகாரைக்கு சென்று சும்மா சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்த குரங்குகளுடன் குத்தாட்டம் போட்டு அதை  போட்டோ எடுத்து விட்டு (போட்டோல எப்படிய்யா வித்தியாசம் கண்டு பிடிச்சே) அப்படியே மைதானத்துக்கு நடையை விட்டோம். நமக்கு மைதானம் இருந்த இடம் தெரியாததால் ரொம்ப தூரம் நடக்க வேண்டியாகிவிட்டது. ஒருவாறு மைதானத்தை அடைந்து டிக்கட்!! எடுத்து விட்டு (இதென்ன புதிய பழக்கம்) ஒரு வாறு ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்தோம். நாம் என்ன வி.ஐ.பி எரியாலயா உட்கார்ந்திருப்போம்… வெளியில் இருந்த கொங்ரீட் படிக்கட்டுதான் நம்ம இருக்கை.

இங்கு வந்ததுதான் புரிந்தது வீட்டில் பார்ப்பதே சிறந்தது என்று.. வேறென்ன… ஒன்றுமே சரியாக தெரியவில்லை. எல்லோறும் சிறிது சிறிதாக தெரிந்தனர். (ஊர்ல தென்னந்தோப்புல விளையாடியவநெல்லாம் சர்வதேச மைதானத்துக்கு போனால் அப்படித்தான் இருக்கும்)     இப்பொதுபோல் பெரிய டிஜிட்டல் திரைகள் அப்போது இருக்கவில்லை (நீ எடுத்து 10/= டிக்கட்டுக்கு உட்கார இடம் கிடைத்தே பெரிய விடயம்.. டிஜிட்டல் திரை வேறு கேட்குதா)
எல்லோரும் பயங்கரமாக கத்திக் கூத்தாடும் போது எதோ முக்கியமாக நடந்து விட்டது தெரிந்து நாமும் சேர்ந்து பயங்கரமாக (நீ சிரித்தாலே அப்படித்தானே  இருக்கும்) கூத்தாடுவோம். பின்பு என்ன நடந்தது என்று score board`ஐ பார்த்து "என்ன நடந்தது?" தெரிந்து கொள்வோம். கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்தால் நியூஸிலாந்து 140 ரன்கள் அடித்து இருந்தது.

(மைதானம் திறந்த புதிதில் 140 ரன்கள் அடிப்பதே பெரும் பாடாக இருந்தது. கடைசியாக நடந்த போட்டியில் அப்ரிடி அடித்த அடியை பார்க்கும் போது இது தம்புள்ள மைதானம்தானா? என்ற சந்தேகம் வந்தது.)
இந்த மைதானத்துக்கு இன்னுமொரு சிறப்பம்சம் உண்டு, ஆனால் அதை அநேகமானோர் அறிய மாட்டீர்கள். அந்த விபரம்... மற்றும் தொடர்ச்சி.. 
தொடரும்... 


12 comments:

 1. தங்களுக்கு நகைச்சுவை உணர்வு நன்றாக இருக்கிறது

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 2. ஜிஎஸ்ஆர்@
  வருகைக்கும் பிரசுரித்தமைக்கும் நன்றி நன்பா...

  ReplyDelete
 3. அருண் பிரசாத்@
  வருகைக்கும் மருத்துக்கும் நன்றி அருண் ப்ரசாத்

  ReplyDelete
 4. நல்லா., Comedy-ஆ இருக்கு..
  ஆமா ஜெயவர்தனே பத்தி
  ஒரு வரில கூட வரலையே..

  அப்படி அவரு என்ன தான்பா
  செஞ்சாரு..??

  சீக்கிரம் 2-வது பாகம் போடுங்க..

  ReplyDelete
 5. வெங்கட் ///
  வருகைக்கு நன்றி...
  பொறுங்க தல...பதிவு பெறுத்து விட்டது..அதனால் ஜவவர்தனவுக்கு லீவு விட்டாச்சு....
  நாளை வருவாரு....

  ReplyDelete
 6. ரமேஷ்@
  வருகைக்கு நன்றி..
  சத்தியமா நீங்க ரொம்ப நல்லவன் சார்...

  ReplyDelete
 7. ம்ம்... கெளப்புங்க ராசா.... நல்லா போகுது.. :)

  ReplyDelete
 8. வாங்க ரகுநாதன்...
  எங்கட ஆள காணல்லையே'ண்டு பார்த்தேன்..

  ReplyDelete
 9. //சிங்கத்தையே அதன் குகைக்கு சென்று சந்திப்பதுதான் நம்ம ஸ்டைல்( இலங்கயில் சிங்கம் இல்லாததால் தப்பிச்சேன்//
  அட உண்மையிலேயே இலங்கையில் சிங்கம் இல்லையா ..?
  //அவ்வளவு திட்டியும் திருந்தவில்லை??? அப்பவே திருந்தியிருந்தா இப்போ எதுக்கு ப்லாக் எழுதிட்டு இருக்கனும்//
  இது சரிதான் ..
  //அந்த விபரம்... மற்றும் தொடர்ச்சி..
  தொடரும்//
  அட பாவமே .. தொடர் வேறயா ..?நல்லாத்தான் இருக்கு .. தொடருங்க ..!!

  ReplyDelete
 10. @ ப.செல்வக்குமார்
  வருகைக்கு நன்றி...

  ReplyDelete