Friday, 13 August 2010

திருமணத்தில் போன மானம்........



மனிதனாக பிறந்த எவரும் பல்பு  வாங்காமல் இருப்பதில்லை.(ஆஹா… நம்மளுக்கும் தத்துவம் நல்லா? வருதே!.. நோபலுக்கு பரிந்துரை செய்ங்கப்பா!) அனாலும் சிலரிடத்தில் அல்லது சில இடங்களில் வாங்கியவை வாழ்க்கையிலேயே மறக்க முடிவதில்லை(வாங்குறதே பல்பு, அதை எங்கு வாங்கினால் என்ன? யாரிடம் வாங்கினால் என்ன?). அப்படி ஒரு விடயத்தை பற்றியே எழுதப்போகிறேன். (அப்பாடா… விஷயத்துக்கு வந்தாச்சு….)
எனக்கும் என் நன்பன் Dutsunக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு பொது நன்பன் கம்பளை எனும் ஊரில் இருந்தான். ஒரு நாள் அவசரமாக தொலைபேசியில் அழைத்த Datsun, நம் நன்பனின் தங்கைக்கு திருமணம் என்றும் நாம் இருவரும் அழைக்கப்பட்டிருப்பதாகும் சொன்னான். (சாப்பாடு………..விடுவோமா நாங்க…). நானும் சரியென்று திருமணம் நடக்கும் திகதியை கேட்டுக்கொண்டேன் ஆனால் இடத்தை பற்றி அவ்வவாக கேட்கவில்லை, (வேண்டியது “சோறு…” அதை எங்கு போட்டால் என்ன?) காரணம் அந்த ஊர் எனக்கு அவ்வளவாக தெரியாது. dutsunக்கு அந்த ஊரில் உறவினர் இருப்பதாலும் அவன் அங்கு போய் வருவதனாலும் நம்மிடம் எதோ talking & Walking GPRS`ஏ இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

திருமண நாளும் வந்தது. நாங்களும் மணமகனுக்கு இணையாக!!! அலங்கரித்துக் கொண்டு (இதுக்கு மேலேயும் ஒரு அழகு தேவையா? என்றெல்லாம் கேட்கக்கோடாது) பஸ்ஸில் ஏறினோம். ஊரின் எல்லையை அடைந்ததும் Dutsun வண்டியின் ஜன்னலினூடு எதோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்தான். காரணம் கேட்டபோது அவனுக்கும் திருமண மண்டபம் தெரியாதாம்!!.(பார்ரா..வில்லங்கத்தை ticket எடுத்து கூட்டி வந்திருக்கிறேன்) ஆனால் அந்த மண்டபம் மசூதியோடு சேர்ந்து இருப்பதாகவும், இந்த ஊரில் ஐந்து திருமண மணடபங்கள்தான் இருப்பதாகவும் அதில் ஒன்றுதான் மசூதிக்கு பக்கத்தில் இருக்கும் என்று நெஞ்சில் பாலை வார்த்துக்கொண்டிருக்கும் போதே மஸூதிக்கு பக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் கண்களில் பட்டது. உடனே இரங்கிவிட்டோம்.
 எல்லொரும் எங்களை ஒரு மாதிரியாக பார்த்தனர். நமக்கு நம் நன்பனை தவிர வேறு யாரையும் அங்கு தெரியாததாலும் நாம் கொஞ்சம் அழகாய் இருப்பதாலும்  (நம்புங்கப்பா…) அதை நாம் பெரிதாக நினைக்கவில்லை.(அழைக்காமலே எத்தனை திருமணத்துக்கு போய் இருப்போம்) ஆனால் நன்பன் மட்டும் கண்ணில் படவேயில்லை. பயபுள்ள உள்ளே (சமையல் கட்டில்தானுங்கோ!! நம்ம நன்பனாச்சே!!!) பயங்கர பிஸியாக இருப்பான் போல்… என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது நம்ம சகா dutsun, சாப்பாட்டு பந்தி ஆரம்பித்து விட்டதாகவும் பயங்கரமாக பசிப்பதாகவும் (இங்கு சாப்பிடுவதற்காகவே நாளு நாள் சாப்பிடாமல் வந்திருப்பான் போலும்.. ) முதலில் சாப்பிடுவோம் பின்பு தேடுவோம் என்று மனதை பிராண்டினான்.

நண்பனின் பேச்சை மீற முடியாததால்!!! மெதுவாக உள்ளே புகுந்து வசதியாக!! ஒரு இடத்தை பிடித்து அமர்ந்தோம். அனேகமானோர் நம்மளை குறு குறு என்று பார்த்தாலும் நாம் சாப்பாட்டை தவிர எங்குமே கவனத்தை சிதர விடாமல் காரியத்தில் கண்ணாய் இருந்தோம். வெளியே வரும் போது அனேகமானோர் கிளம்பியிருந்தாலும்!!! நம் நன்பனை மட்டும் காணவே இல்லை.
நம்மளுக்கும் மூளையில்!!(இருக்குப்பா...நம்புங்க...) எங்கோ பொறி தட்டியது.. அங்கு தடபுலாக வருவோரையும் வரவேற்றும் போவோரை வழியனுப்பிக்கொண்டிருந்த ஒரு பையனை ஒதுக்குப்புறமாக கூப்பிட்டு “இது நம் நன்பனின் பெயரை சொல்லி அவன் வீட்டு திருமணமா?” என்று கேட்க…. விட்டான் பாருங்க ஒரு ”லுக்கு”… (நோ…நோ… அழுதுருவேன்). ”யோவ்!! அந்த மண்டபம் அடுத்த தெருவில் இருக்கிறது. இது என் அண்ணனின் திருமணம்தான். வந்ததே வந்தாச்சு… சாப்பிட்டு போங்க” என்றான். நம்மளும் அசடு வழிந்து கொண்டே ”இல்ல பரவாயில்ல நாங்க அங்கே போயே சாப்பிடுகிறோம்” (நாளு ப்லேட் உள்ளே விட்டதை சொல்லவா முடியும்) என்று வெளியேறி அடுத்தவர்களும் நம் முகத்தை மனப்பாடம் பன்னும் முன் வந்த ஒரு ஆட்டோவில் ஏறி அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நன்பன் இருந்த திருமண மண்டபத்தை அடந்தோம்.ஆஹா அதுவும் மசூதிக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. (அதைப் பார்த்த நம்ம நன்பன் Dutsunனின் முகத்தை பார்க்கனுமே!!!)
மண்டபத்தின் வாசலிலேயே நம் நன்பன். நமக்கு பகீறென்ரது… (பந்தி முடிந்துவிட்டதோ….பயபுள்ள பந்தி முடியாம வெளியே வரமாட்டானே….!) நமக்கும் நன்பனுக்கும் நடந்த உரயாடல் வருமாறு……
நன்பன்: இப்போதா வருகிரீர்கள்?
நாம்:    ஆ……….. அ…ஆமாம்… Bus Late…
நன்பன் : இடத்தை கண்டு பிடிக்க கஷ்டமாக இருந்ததா?
நாம்:    சீச்… சீ… அப்படியெல்லாம் எதுவுமில்லை (நாளு ப்லேட் உள்ளே         விட்டிருக்கோமுள்ள…..) நன்பன் Dutsun எனும் GPRS இருக்கும் போது என்ன கஷ்டம்?
நன்பன்: சாப்பிட்டாச்சா?
நாம்:    அது… அது.. வந்து….. இன்னும் இல்ல……
நன்பன்: சீக்கிரம் வாங்க.. (சாப்பாட்டுக்கு எப்போதய்யா மெதுவாக வந்தோம்)
நாம்:   (சாப்பிட ஆரம்பிச்சா என்ன பேச்சு)
(நன்பனின் அன்பு கட்டளையை மீற முடியாததாலும் உப்பு, காரம் போன்றவை எப்படி இருக்கிறது என்று பார்க்க இன்னும் 2 ப்லேட் உள்ளே விடப்பட்டது)
கடைசியாக நடந்ததை கேட்டால் இதுவரை நடந்தது எவ்வளவோ பரவாயில்லை என்பீர்கள். அதாவது திரும்பி வந்ததும் நம்ம நன்பன் Dutsun ஒரு பெரிய்ய்ய்ய ஆப்பு ஒன்று வைத்தான், அதாவது ”திருமணத்துக்கு அழைத்ததே அவனை மட்டும்தானாம். என்னை சும்மா கம்பனிக்கு கூட்டிச் சென்றானாம்!!!!” (உன்னையெல்லாம் எவன்யா கூப்பிடுவான்?) ஆஹா… இது தெரியாமல் ஓவரா பில்ட் அப் (build-up) கொடுத்துட்டோமே! (கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வைக்கிறானுங்க…)

27 comments:

  1. .(ஆஹா… நம்மளுக்கும் தத்துவம் நல்லா? வருதே!.. நோபலுக்கு பரிந்துரை செய்ங்கப்பா!) //
    நல்லா சொல்றாங்கையா தத்துவம்!!

    //(உன்னையெல்லாம் எவன்யா கூப்பிடுவான்?)//

    அது சரி!

    ReplyDelete
  2. சகோதரரே,word verification 'a நீக்கி விட்டால் அனைவரும் கமெண்ட் பண்ண இலகுவாக இருக்கும்!அத்துடன் indic translator 'ஐ எவ்வாறு இணைத்தீர்கள் என்பதை எனக்கு அறியத்தர முடியுமா?

    ReplyDelete
  3. வருக்கு நன்றி , தமிழ் unicode பற்றி அறிய இந்த லிங்க்'ஐ(http://gsr-gentle.blogspot.com/2010/08/blog-post_9927.html) சொடுக்கவும் , வோர்ட் வரிபிகாதியன் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அறியத்தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. வந்துட்டேன் ..!! இருங்க படிச்சிட்டு வரேன்..!!

    ReplyDelete
  5. //(இதுக்கு மேலேயும் ஒரு அழகு தேவையா? என்றெல்லாம் கேட்கக்கோடாது) ///
    அட அழக இருக்கறதுல என்னங்க தப்பு ..?
    ///(நம்புங்கப்பா…) //
    நான் நம்புறேங்க ..!
    // ”இல்ல பரவாயில்ல நாங்க அங்கே போயே சாப்பிடுகிறோம்” (நாளு ப்லேட் உள்ளே விட்டதை சொல்லவா முடியும்) ///
    அங்க தாங்க உங்க மூளைய பயன்படுத்திருக்கீங்க ..!!
    நல்லா இருக்குங்க ..!!

    ReplyDelete
  6. //மனிதனாக பிறந்த எவரும் பல்பு வாங்காமல் இருப்பதில்லை//
    :-)
    நன்றாக இருந்தது!

    ReplyDelete
  7. வலைபதிவு அனுபவத்திற்கு வரவேற்கிறேன்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நன்றி நண்பரே,நான் எனது தளத்தில் இணைத்து விட்டேன்.

    ReplyDelete
  9. எழுத்தில் நகைச்சுவை ததும்புகிறது . வாழ்த்துக்கள் , தொடர்ந்து எழுதுங்கள் . மீண்டும் வருவேன்

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வகுமார், அருண் பிரசாத், எஸ்.கே , சங்கர் அண்ணா

    ReplyDelete
  11. ஹாய் நண்பா ,நீ சொன்ன அந்த நண்பன்(datsun) யார்ப்பா? அந்த தியாஹி
    இப்போ எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்.I think He is Real Hero.
    --ANYWAY,அந்த நாட்களை மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.....

    ReplyDelete
  12. அந்த மர்ம மனிதன் நீதான் என்று சொல்லி உன் மானத்தை போக்க விரும்பவில்லை.. இதே பேரில் இன்னும் பல சம்பவங்கள் வெளி வர இருக்கின்றன. என்பதை நினைக்கும் பொது கவலையாக இருக்கிறது..

    ReplyDelete
  13. சார் நம்ம ஏரியாவுலையும் கல்யாணம் ஒண்டிருக்கு. வர்ரேலா....??

    எங்க ஏரியாவுலையும் நிறைய கல்யாணா மண்டபங்கள் இருக்கு.
    நிறையப் போடுவாங்க....

    வாங்களன் ப்ளீஸ்..
    (அட்ரஸ்ஸா?? அது எதுக்கு சார்.?? எல்லா மண்டபத்துலையும் முட்டி மோதி மோப்பம் பிடிச்சு வந்துடமாட்டீங்களா என்ன?)

    வாங்களன் ப்ளீஸ்...

    யாரூட்டுக் கல்யாணமா?? அது எதுக்கு உங்களுக்கு அதெல்லாம் கேட்டா போறீங்க???

    ReplyDelete
  14. நோன்பு முடியட்டும் சுகில்... ஒரு கை பாத்துடுவோம்...

    ReplyDelete
  15. //மனிதனாக பிறந்த எவரும் பல்பு வாங்காமல் இருப்பதில்லை.(ஆஹா… நம்மளுக்கும் தத்துவம் நல்லா? வருதே!.. நோபலுக்கு பரிந்துரை செய்ங்கப்பா!) //

    செய்திட்டாபபோச்சி.. நல்ல நகைச்சுவையா இருக்கு KEEP IT UP

    ReplyDelete
  16. நன்றி ரியாஸ்...

    ReplyDelete
  17. //(கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வைக்கிறானுங்க)//
    //மனிதனாக பிறந்த எவரும் பல்பு வாங்காமல் இருப்பதில்லை//

    ஆஹா அசத்தலோ அசத்தல்.. ,,,, தொடரட்டும் தல.

    ReplyDelete
  18. வருகைக்கு நன்றி.. எம், அப்துல் காதர் சார்.
    நன்றி கௌசல்யா

    ReplyDelete
  19. நல்லாயிருக்கு தம்பி

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. ஜிஎஸ்ஆர் .."
    வாங்க நண்பா ...
    கருத்துக்கு ரொம்ப நன்றி....

    ReplyDelete
  22. haa.......
    haa..........
    my home town iz gampola!!

    ReplyDelete
  23. wow ......
    funny experience...
    my home town z also gampola!!!

    ReplyDelete
  24. கலக்குறீங்க நண்பா...நகைச்சுவை இயல்பாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்க. உங்க ஊர் பக்கம் எங்க ஊர் போலத்தான் பேசுவீங்க போலிருக்கே.. (தமிழ்நாட்டுத் தமிழ்)

    ReplyDelete
  25. ரகுநாதன் ///
    varukaikkum கருத்துக்கும் நன்றி ...
    // உங்க ஊர் பக்கம் எங்க ஊர் போலத்தான் பேசுவீங்க போலிருக்கே.. (தமிழ்நாட்டுத் தமிழ்)//
    இங்கு (துபாயில்) தமிழ் நாட்டு மக்களுடன் sernthu நமக்கும் பழகிப்போச்சு

    ReplyDelete
  26. காரியத்துல மட்டும்தான் கண்ணாயிருக்கனும்... அதுக்காக எதையும் தாங்கிக்கலாம்.... பொது வாழ்க்கையினு வந்துட்டா.......அப்பா....

    ReplyDelete
  27. @ ஜீவன்பென்னி said...
    //காரியத்துல மட்டும்தான் கண்ணாயிருக்கனும்...//
    அதைதான் பார்த்தீங்கள்ள...

    ReplyDelete