Sunday, 8 January 2012

அடுத்தவர் கணணி மூலமா நாம் சம்பாதிக்கலாம்


பணம் சம்பாதிக்கனும்னு போற அபீஸ்’ல ”எப்படி வெட்டியா பொழுதை போக்கலாம்?” என்றும், வெட்டியா பொழுதை போக்குர இண்டெர்நெட்’ல  ”எப்படி பணம் சம்பாதிக்கலாம்’’னு யோசிக்காத ஆளுங்களே கிடையாது.

பணம் சம்பாதிக்கவென இணையத்தில் ஆயிரம் வழிகள் இருந்தாலும் நம்பிக்கையானவை என்பது மிகக் குறைவானதே.  ஆனால் நான் சொல்லப் போவது 100% நம்பிக்கையானது,  அதே நேரம் அது உங்கள் கணனியில் அல்ல, அடுத்தவர் கணனி மூலமாகவும் சம்பாதிக்கலாம்.

அது எப்படி என்று நான் சொல்வதை விட, அனுபவம் வாய்ந்தவர், இதன் மூலம் பணம் பெற்றவரே உங்களிடம் சொல்லப் போகிறார்.


சரி.. இப்போ எல்லோரும் பணக்காரர் ஆகப் போறீங்க. அதுக்கு முன்னாடி ஒரு கனவுப் பாட்டு இருந்தாத்தானே நல்லா இருக்கும். எனவே எல்லோரும் உங்களுக்கு புடிச்ச நாட்டுக்கு போய், இல்ல செட்டு போட்டு கனவுப் பாட்டு பாடிட்டு பதிவுக்கு வாங்க......

நம்ம தம்பியோட கூட படிச்ச பையன்’தான் ”பாண்டு”.நம்ம தம்பி, CD,DVD, Pen Drive, Potable Hard Disk'னு கம்ப்யூட்டர் சம்பந்தமாக எது கொண்டு வந்தாலும் அது பாண்டுவோடதாத்தான் இருக்கும். பாண்டுவால் மட்டும் எப்படி முடியுது???? ஒரு நாள் தம்பியிடம் கேட்டு விட்டேன். அந்த உறையாடல்......

தம்பி... எப்படிடா பாண்டுவால இதெல்லாம் வாங்க முடியுது???

அவன் கம்ப்யூட்டர் மூலமா சம்பாதிக்கிறான்ல...

அடப்பாவமே!! உனக்கும் அவன் வயசும் ஆகுது!! நீயும் இருக்கியே!!!

அண்ணே!! நீங்களே இன்னும் வெட்டியாத்தானே!!!.......................................

டேய்!!! ப்ளடீ ஃபூல்....$*%&^#(@&@@_$#*#^%&u(rwr&%*#%*(%^(#_......
(சின்னப் பசங்க கிட்ட பல்பு வாங்குற நிலமை வந்தா, வன்முறைய கைல எடுத்து அடக்கிடனும். இல்லாவிட்டால், காலம், நேரம் பார்க்காம, ஈவு, இரக்கம் இல்லாம மானத்த வாங்கிடுங்க...)

அண்ணே!! பாண்டு வீட்டுப் பக்கத்துல உள்ள பசங்க கம்ப்யூட்டல்’ல Games Install பண்ரதுக்கு நம்ம பாண்டுவ விட்டா வேற ஆளு இல்ல. சோ, இவனும் ஒரு Games Install பண்ண 50/= புடிங்கிடுவான்.

இதே வேலைய எத்தன முறை பண்ணலாம்?? ஒரு முறை Games Install பண்ணினா முடிஞ்சுதே... ??

அங்கதாண்ணே, நம்ம பாண்டு “தான் ஒரு பிஸினஸ் மேன்’னு நிரூபிக்கிறான். பாண்டு கைல பைசா இல்லைனு வச்சுகங்க. பாண்டு தம்பி ”துரும்பு” இருக்கான்ல. அவன பக்கத்து வீட்டுக்கு அனுப்பி வச்சுடுவான். அவனும் பக்கத்து வீட்டு பையன் அசர்ர நேரம் பாத்து, பாண்டு சொல்லி குடுத்த மாதிரியே, Games Install பண்ணி இருக்குற எடத்துல ஒரு ஃபைல Delete பண்ணிட்டு வந்துடுவான். அப்புறம் என்ன?? மறுபடி பாண்டு கிட்டத்தான் வந்தாகனமுள்ள....

கர்ர்ர்ர்.தூ.... இதெல்லாம் ஒரு பொழப்பாடா????

அண்ணே!!! வீட்டுல வெட்டியா இருக்குறத விட.....

டேய்!!! ப்ளடீ ஃபூல்....$*%&^#(@&@@_$#*#^%&u(rwr&%*#%*(%^(#_......



33 comments:

  1. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.....

    ReplyDelete
  2. நீங்களும் அப்படி தான் எண்டு கேள்வி பட்டமே

    ReplyDelete
  3. நல்லாயிருக்கே ... நம்ம வீட்டுப் பக்கமும் கேம் விளையாடுற பசங்க இருக்காங்க.

    ReplyDelete
  4. டிராப்ட்ல இருக்குற போஸ்ட்டை பப்ளீஷ்
    பண்ணும் போது.. தேதியை செக் பண்ணவும்..

    இன்னிக்கு போட்ட இந்த போஸ்ட் 4 -ந் தேதி
    காட்டுகிறது.. பலருக்கு இந்த பதிவு
    டாஷ்போர்டிலேயே அப்டேட் ஆகியிருக்காது..
    ( அப்பாடி தப்பிச்சாங்க.. :) )

    ReplyDelete
  5. ..$*%&^#(@&@@_$#*#^%&u(rwr&%*#%*(%^(#_......

    ReplyDelete
  6. @ கடம்பவன குயில் said...

    ////எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.....///

    ஆமாங்க.. நாமதான் கவனமா இருக்கனும்..

    ReplyDelete
  7. @ HajasreeN said...

    /// நீங்களும் அப்படி தான் எண்டு கேள்வி பட்டமே///

    எங்க வீட்டு பக்கத்துல நீங்க இல்லாம பெய்டீங்களே!!!

    ReplyDelete
  8. @ NAAI-NAKKS said...

    ///NALLA
    TECHNIC//

    நீங்களும் ட்ரை பண்ணி பாக்கலாம். அடி வாங்கினா நான் பொறுப்பில்ல...

    ReplyDelete
  9. @ஹாலிவுட்ரசிகன் said...

    ////நல்லாயிருக்கே ... நம்ம வீட்டுப் பக்கமும் கேம் விளையாடுற பசங்க இருக்காங்க.///

    இன்னைக்கே பிஸினஸை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்...

    ReplyDelete
  10. @வெங்கட் said...

    ///டிராப்ட்ல இருக்குற போஸ்ட்டை பப்ளீஷ்
    பண்ணும் போது.. தேதியை செக் பண்ணவும்..

    இன்னிக்கு போட்ட இந்த போஸ்ட் 4 -ந் தேதி
    காட்டுகிறது.. பலருக்கு இந்த பதிவு
    டாஷ்போர்டிலேயே அப்டேட் ஆகியிருக்காது..
    ( அப்பாடி தப்பிச்சாங்க.. :) )///

    மாத்தியாச்சு.. நம்ம கிட்ட இருந்து தப்பிக்க விட்ட்டுரலாமா???

    ReplyDelete
  11. @ மு.ஜபருல்லாஹ் said...

    /// ..$*%&^#(@&@@_$#*#^%&u(rwr&%*#%*(%^(#_......//

    $#&#*$&#^#*%%$@#@#@)$&#*%...

    ReplyDelete
  12. எங்க வீட்டு பக்கத்துல நீங்க இல்லாம பெய்டீங்களே!!! //


    உங்க வீட்டு பக்கத்துல நான் இருந்தா ஆப்புரமா நான் பாவிக்குதெல்லாம் ஐ போன் ஐ பெட் ஐ மக் ஆ தான் இருக்கும்

    ReplyDelete
  13. @ HajasreeN said...

    ///எங்க வீட்டு பக்கத்துல நீங்க இல்லாம பெய்டீங்களே!!! //


    உங்க வீட்டு பக்கத்துல நான் இருந்தா ஆப்புரமா நான் பாவிக்குதெல்லாம் ஐ போன் ஐ பெட் ஐ மக் ஆ தான் இருக்கும்///

    i Phone, i Mac.. ithukkellam "i Paid"aaa????

    ReplyDelete
  14. இப்படி கூட யோசிப்பாங்களா?

    ReplyDelete
  15. //அது எப்படி என்று நான் சொல்வதை விட, அனுபவம் வாய்ந்தவர், இதன் மூலம் பணம் பெற்றவரே உங்களிடம் சொல்லப் போகிறார்//

    எனக்கு என்னவோ உங்க மேலதான் சந்தேகமா இருக்கு. அது நீங்கதனே ஹி..ஹி....

    ReplyDelete
  16. அடப்பாவிங்களா...சின்னப்பசங்கள இப்டியா ஏமாத்தறது.என்னிக்காவது மாட்டுவிங்க... :)

    ReplyDelete
  17. @ சிநேகிதி said...

    ///இப்படி கூட யோசிப்பாங்களா?//

    இதுக்கே இப்படியா?? இன்னும் நிறைய இருக்கு....

    ReplyDelete
  18. @ஜெய்லானி said...

    /////அது எப்படி என்று நான் சொல்வதை விட, அனுபவம் வாய்ந்தவர், இதன் மூலம் பணம் பெற்றவரே உங்களிடம் சொல்லப் போகிறார்//

    எனக்கு என்னவோ உங்க மேலதான் சந்தேகமா இருக்கு. அது நீங்கதனே ஹி..ஹி....//

    ஏற்கனவே, ஊர்ல சம்பந்தப் பட்ட ஆளு அடிக்க தேடிட்டு இருக்கானாம்.. இங்க வேற மாதிரி பிரச்சனைய கெளப்பி விடுரீங்க போல இருக்கு???

    ReplyDelete
  19. @ சேலம் தேவா said...

    /// அடப்பாவிங்களா...சின்னப்பசங்கள இப்டியா ஏமாத்தறது.என்னிக்காவது மாட்டுவிங்க... :)///

    அதுதான் நாம எல்லோர் கிட்டயும் போட்டு குடுத்தாச்செ... அப்புறன் என்ன?????

    ReplyDelete
  20. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Bro...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..


    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..!!!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. ஸ்ஸ் அபா மாப்ள நிசமாவே இப்படித்தான் சில இடத்துல நடக்குது போல ஹிஹி!

    ReplyDelete
  22. பிஸ்னெஸ் டெக்னிக்? சர்ர்தான்

    ReplyDelete
  23. சில பதிவர்களோட பதிவுகளை வாசித்து விட்டு, இஞ்சி தின்ற குரங்காய் இறுகி போய் இருக்கும் போது தான் உங்கள் நினைவு வரும். உடனே புன்னகை பூக்க உங்க பதிவை வாசிக்க துவங்கி விடுவேன். பகடிக்கு நூறு சதம் மினிமம் காரண்டி. உங்களை நம்பி வரும் எங்களை போன்றவர்களை நீங்கள் சிரிக்க வைக்காமல் விட்டதில்லை. நையாண்டி உங்களுக்கு இயல்பாக வருகிறது. பாராட்டுக்கள்.

    எனக்கும் கேம் இன்ஸ்டால் செய்ய தெரியும். என்னிடம் கொம்யூட்டரும் இருக்கிறது.பக்கத்து வீடும் இருக்கிறது. ஆனால் "துரும்பு" தான் இல்லை. நீங்க வர ஏலுமா?

    ReplyDelete
  24. @ ரெவெரி said...

    ///இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Bro...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..


    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..!!!

    வாழ்த்துக்கள்...///

    உங்களையும் சந்தித்ததில் ரொம்ப சந்தோசம் நண்பரே!!

    ReplyDelete
  25. குந்தியின் புதல்வர் 'பாண்டு' ஓரளவிற்கு நல்ல ஆளாயிற்றே..
    எப்பது அவருக்கு இப்படி குறுக்கு / கிறுக்கு புத்தி வந்தது ?

    ReplyDelete
  26. @ விக்கியுலகம்Jan 10, 2012 08:11 PM

    /// ஸ்ஸ் அபா மாப்ள நிசமாவே இப்படித்தான் சில இடத்துல நடக்குது போல ஹிஹி!///

    கிட்டத் தட்ட நிறைய இடத்துல இதே தியரிதான்...

    ReplyDelete
  27. @ மனசாட்சி

    // பிஸ்னெஸ் டெக்னிக்? சர்ர்தான்//
    ஹி..ஹி.. ஆமா சார்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  28. @ உதயம்Jan
    ///சில பதிவர்களோட பதிவுகளை வாசித்து விட்டு, இஞ்சி தின்ற குரங்காய் இறுகி போய் இருக்கும் போது தான் உங்கள் நினைவு வரும். உடனே புன்னகை பூக்க உங்க பதிவை வாசிக்க துவங்கி விடுவேன். பகடிக்கு நூறு சதம் மினிமம் காரண்டி. உங்களை நம்பி வரும் எங்களை போன்றவர்களை நீங்கள் சிரிக்க வைக்காமல் விட்டதில்லை. நையாண்டி உங்களுக்கு இயல்பாக வருகிறது. பாராட்டுக்கள்.///

    உங்க காமெண்ட் ரொம்ப உற்சாகத்தை கொடுக்கிறது சார். வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி..

    ReplyDelete
  29. @ உதயம்

    ///எனக்கும் கேம் இன்ஸ்டால் செய்ய தெரியும். என்னிடம் கொம்யூட்டரும் இருக்கிறது.பக்கத்து வீடும் இருக்கிறது. ஆனால் "துரும்பு" தான் இல்லை. நீங்க வர ஏலுமா?//

    அந்த ஜாப்’ல ரிஸ்கு ரொம்ப ஜாஸ்தியாச்சே....

    ReplyDelete
  30. @ Madhavan Srinivasagopalan

    // குந்தியின் புதல்வர் 'பாண்டு' ஓரளவிற்கு நல்ல ஆளாயிற்றே..
    எப்பது அவருக்கு இப்படி குறுக்கு / கிறுக்கு புத்தி வந்தது ?///

    ஆக்சுவலி, அவரு பேரு ”பாண்டு நம்பர் 2”. நான் சுருக்கமா பாண்டு’னு போட்டிருக்கேன்.

    ReplyDelete
  31. உங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் போல

    ReplyDelete
  32. ஆன்லைனில் அதிகம் சம்பாதிக்க புதிய வழி : இங்கே கிளிக் பண்ணவும்

    ReplyDelete