Tuesday, 31 January 2012

போதி தர்மரும் அறியாத 8ம் அறிவு


இறைவன் படைத்த ஒவ்வொரு படைப்புக்கும் அதன் உணவு, உறையுள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை எப்படி தேடிக் கொள்ள வேண்டுமென்ற அறிவை குடுத்தே படைத்திருக்கிறான். ஒவ்வொரு விலங்கினதும் வித்தியாசமான உணவு முறைக்கும் வாழும் இடத்துக்கும் ஏற்ப அதன் உடலமைப்பும், அதற்கு குடுக்கப் பட்டுள்ள அறிவும் வித்தியாசப் படுகிறது.

உலகில் உள்ள ஆயிரக்கணக்கான உயிரிணங்களிடமும் அவை வாழுமிடம், உணவு முறை போன்றவற்றிற்கு ஏற்ப தனித்துவான தன்மைகளை இறைவன் படைத்திருக்கிறான். ஆறறிவு மனிதனிடம் இல்லாத சில நுணுக்கமான அறிவுகள் 5 அறிவு விலங்குகளிடம் பார்க்க முடிகிறது.  தாவரங்களும் இதில் அடங்கும். 

கங்காருவின் குட்டி பிறக்கும் போது ஒரு அங்குலம் கூட இருப்பதில்லை. அது தன் தாயின் உரோமங்களினூடு கங்காருகளுக்கு மட்டுமே இருக்கும் அந்தப் பையை அடையும் அந்தப் பயணம் மிக ஆச்சரியமான ஒரு பயணமே. 
பிறந்து, தன் தங்குமிடத்தை தேடி உரோமங்களினூடு பயணம் செய்யும் சின்னஞ்சிறிய கங்காருக் குட்டி

தாய்க் கங்காருவின் பையில் உள்ள கொஞ்சம் வளர்ந்த கங்காருக் குட்டி

மனிதனின் சக்தி என்ன என்று பார்த்தால், அவனால் அதாவது நம்மால் ஒரு குருவிக் கூட்டைக் கூட அது போல் உருவாக்க முடியாது. மனிதனின்  பலமே அவன் மூலையும், மூட்டுக்களும், நிமிர்ந்து நிற்கும், இரு கால் இடப் பெயர்வு, பேச்சுத் திறன், மிகச் சிறந்த நரம்புத் தொகுதி என்பனவே அவனை மற்றைய விலங்குகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறன்றது. இதுபோக மனிதனில் இறைவன் ஒரு தற்காப்புக் கலையை ஒளித்து வைத்திருக்கிறான். அதை சரியான பயிற்சிகளின் மூலம் வளர்ப்போமானால், அதனால் பயன்கள் பல… என் வாழ்க்கையில் அக்கலை மூலம் நான் கண்ட பலனே இப்பதிவு…

நம்ம நண்பன் பாப் பிறந்த ஊரு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கண்டி – நுவெரெலியா வீதியில் உள்ள “கட்டு கித்துல” எனும் ஒரு சிற்றூர். அந்த ஊரின் அழகை பற்றி வேறொரு பதிவில் விரிவாக இடலாமென்றூ இருக்கிறேன். 


நண்பன் பாப், தன் வீட்டுக்கு வரும் படி ரொம்ப காலமா, கூப்பிட்டுக் கொண்டே இருக்க, ஒரு ஆகஸ்ட் மாதத்துல போறதா முடிவு பண்ணினோம். அதற்கு நம்ம பாப், “இப்போ, நம்ம ஏரியால அவ்ளோ விஷேசமா இருக்காது, டிசம்பர்’ல வந்தீங்கன்னா, நிறைய சுற்றுலாக்கள் வர்ர பீரியட்’ங்குரதால ரொம்ப பசுமையா இருக்கும்’னு சொன்னதால நம்ம வாலிப வயசு தடுத்துவிட்டது, அதனால டிசம்பர்’லயே போகத் தயாரானோம்.

கடைசி நேரத்துல காமராசு’க்கு வர முடியாமல் போக, நான், க்ரேஸி, புள்ளி ராஜாவும் பாப்’ஐயும் அழைத்துக் கொண்டு போகத் தயாரானோம். காலையில் போக வேண்டியது, “மச்சி!! 4.00 மணிக்கு கண்டி நகரத்துல உள்ள எல்லா டியூட்ட்டரியும் முடியும் நேரம். நாம மாலை 4.30 பஸ்ஸுல போறதுதான் சூப்பரா இருக்கும்’னு அனுபவத்துடன் ஒரு ஐடியா குடுக்க, அதற்க்கு மேல நாம சொல்ல என்ன இருக்கு???

நாமளும் ரொம்ப ஆவலா பஸ்’ஸுல போய் ஏற, நமக்கு எமாற்றமே மிஞ்ச, அந்த கோவத்துல பாப்’ஐ திட்டிக் கொண்டே ஊர் போய் சேர்ந்தோம். போற வழில ”பார தெகே” (Paaratheke) ”2 பாதைகள்” அப்படி`ன்னு ஒரு ஊர். இங்லீஷ்`ல எழுதி இருந்தத புள்ளி ராஜா “பர தேகா”னு வாசிச்சுட, அவன கலாய்ச்சிட்டே போனது செம......



ஊருக்கு போக முன்னாடியே, ”மச்சான், நாம வரும் போது, ஊருல வரவேற்பு பலமா இருக்கனும். அதுக்காக நம்மள பத்தி நாலு பிட்டு போட்டு வை நங்கூரம் போட்ட மாதிரி நச்சுனு இருக்கட்டும்”னு சொல்லி வச்சிருந்தோம். அங்க போனா, பாப்’புடைய தம்பி, மச்சான், உறவுக்காரப் பையன்’னு செம வரவேற்பு. ஆஹா!!! நாம சொல்லிக் கொடுத்த மாதிரியே செஞ்சிருக்கான் நம்ம நன்பன்’னு நமக்கெல்லாம் ஒரே பெருமை.

அங்க போய் கொஞ்ச நேரத்துலதான் தெரிஞ்சுது, நம்மள லவ்வர் பாய்ஸ், ரொமாண்டிக்;கான ஆளுங்கனு சொல்லியிருப்பான்’னு பார்த்தா, நம்மல ”கண்டி நகரத்தையே கதி கலங்க வைக்கிற மிகப் பெரிய ரவுடி’ங்கனு சொல்லி வச்சிருக்கான் படுபாவி. அப்புறம் என்ன பண்ண?? நாமளும் ரவுடியாவே நடிக்க வேண்டியாயிடுச்சு..

அந்தப் பசங்களும் ச்சும்மா இல்ல.. வீட்டுக்கு வர்ர ரவுடிகளை வெட்டியா இருக்க விடக் கூடாதுங்குற நல்லெண்ணத்துல, ரோட்டுக்கு ரோடு வாண்டட்’ஆ போய் வம்பிழுத்து வச்சிருக்கானுங்க….. ரத்தம் பாக்காம வீடு போய் சேர முடியாது’னு அப்பவே உறுதியாயிச்சு…

”அண்ணே!! இந்த டைம்’ல இவன அடிக்கிறோம், அப்புறமா, இவன அடிக்கிறோம்’னு ஒரு லிஸ்ட்டே போட்டு வச்சிருக்காங்க… ஒருத்தன் கிட்ட இருந்து தப்பிச்சாலே பெருசு..இதுல லிஸ்ட்டு போட்டு அடி வாங்கனுமா?? என்ன வாழ்க்கைடா இது??? 


சரி... நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகனும்.... அவனுங்க போட்டிருந்த லிஸ்ட்டுலயே ரொம்ப ச்சின்னப் பையனுங்க, தூரத்துல உள்ள இடமா பாத்து அவனுங்கள அட்டாக் பண்ணலாம்’னு முடிவு பண்ணியாச்சு.. அடி வாங்கினாலும் சொந்த ஊர்ல “கெத்’தா இருக்கனுமுல்ல....


நாம கடைசி நேரத்துல வயித்து வலி’னு எஸ்கேப் ஆகிடலாம்’னு சமயம் பார்த்துகிட்டு இருக்கும் போது, ஆட்டோல ஜன்னல் சீட்டு குடுக்குரோம்’னு ஆசைய காட்டி என்னையும் ஏத்திட்டானுங்க படுபாவிப் பசங்க...


நாமளும் தில்லா போயி பக்கத்து ஊர் பாடசாலை முன்னாடி இறங்க, ”இவனுங்கதான் ஆளுங்க”னு 03 பொடிப்பசங்களை காட்டினானுங்க. சரி’னு நாமளும் போயி அவனுங்க கூட வம்பிளுக்க ஆரம்பித்தோம். அதுவர் நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது, அப்புறம் சுமார் ஒரு 40 பேரு இருக்கும், வந்து சூழ்ந்து கொண்டானுங்க..அப்புறம்தான் புரிஞ்சது, அது மேலதிக வகுப்பு முடியும் நேரம்’னு....


ச்சும்மா சொல்ல கூடாது...ஷப்பா... கும்மு கும்மு’னு கும்ம தயாராகிட்டானுக்க....ஆட்டோ ஜன்னல் சீட்டுக்கு ஆசப் பட்டு போன, என் ட்ரெஸ்ஸெல்லாம் ஜன்னல் வைக்கப் போரானுக்களே’னு நான் அழாத குறை... 

இதுதான் நம்ம வாழ்க்கைலயே முக்கியமான ஒரு கட்டம். அப்படி ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில்தான் நம்ம நன்பர்கள் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒழிந்திருந்த எட்டாம் அறிவு கொஞ்சம் கொஞ்சமா விழிக்க ஆரம்பிச்சுடுச்சு.... எடுத்தோம் பாருங்க ஓட்டம்.....


(ஆமாங்க... நான் சொன்ன, இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் படைத்த, போதிதர்மரும் அறியாத தற்காப்புக் கலை “மான் கராட்டி”தான். ஒவ்வொருவரும் ”ஓட்டம்” இந்தக் கலையை சரியான பயிற்சியுடன் வளர்த்தால், அது ஒரு சிறந்த தற்காப்புக் கலையாக அமையும்.)

புதிய ஊரு.. எங்க ஓடுரோம்னே தெரியல.. நம்மள கூட்டிவந்த ஆட்டோ காரர கூட ரொம்ப தில்லா அனுப்பி வச்சிட்டோம். அப்புறம் எல்லோரும் ஓடிப் போயி ஒரு கடைல புகுந்து கொள்ள, நாமளும் புகுந்தாச்சு..

அப்போ, நம்ம பயளுக கடைக் காரரைப் பார்த்து “ அங்கிள் அங்கிள்... நாம் சும்மா ரோட்டுல போகும் போது இந்தப் பசங்க அடிக்க வர்ரானுங்க’னு சொல்ல, நம்மள ஒரு ரூம்’ல பாதுகாப்ப வச்சிட்டாரு அந்த அங்கிள். அப்புறம்தான் தெரியும், அது நம்ம பசங்களோட நண்பனோட அப்பா’னு.. ஒவ்வொரு பிரண்டும் தேவை’னு சும்மாவா சொன்னாங்க...


அப்புறம் ஒரு மாதிரி,  உயிரை கைல புடிச்சிகிட்டு நண்பன் வீடு வந்து சேரும் போது, போதும் போதும்’னு ஆயிடுச்சு... அதுக்கப்புறம் அந்தப் பசங்க, நாம திரும்பி வரும் வர, அடி தடி பத்தி பேசவே இல்ல.. மறுபடி மான் கராட்டிய யூஸ் பண்ணிடுவோம்’னு பயந்து இருப்பானுங்களோ!!!!

22 comments:

  1. //ஆட்டோல ஜன்னல் சீட்டு குடுக்குரோம்’னு ஆசைய காட்டி என்னையும் ஏத்திட்டானுங்க படுபாவிப் பசங்க..//
    ஹா ஹா ஹா! அவ்ளோ நல்லவரா பாஸ் நீங்க? :-)

    ReplyDelete
    Replies
    1. அதுதான் எனக்கும் புரியல.....

      Delete
  2. //ஒவ்வொரு பிரண்டும் தேவை’னு சும்மாவா சொன்னாங்க...//
    ஆமாமா!
    அதுசரி தெஹிவல பக்கம் வருவீங்களா பாஸ்? சில பேரை கவனிக்கணும்! :-)

    ReplyDelete
    Replies
    1. 4 வருஷத்துக்கு முன்னால கிட்டத் தட்ட ஒரு வருஷம் தெஹிவல`ல உள்ள ரவுடிங்க கூடதான் கபடி விளையாடிட்டு இருந்தேன்.. தெஹிவலைல நீங்க எந்த இடம்???

      Delete
  3. ////ஆமாங்க... நான் சொன்ன, இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் படைத்த, போதிதர்மரும் அறியாத தற்காப்புக் கலை “மான் கராட்டி”தான். ஒவ்வொருவரும் ”ஓட்டம்” இந்தக் கலையை சரியான பயிற்சியுடன் வளர்த்தால், அது ஒரு சிறந்த தற்காப்புக் கலையாக அமையும்.)////

    ஹி.ஹி.ஹி.ஹி. பாஸ் ”மான் கராட்டி”இலகுவாக கற்றுக்கொள்ளாமா இல்லை அதுக்கு ஏதாவது தகுதிகள் இருக்கா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. இலகுவாக கற்றூக் கொள்ளலாம்.. ஆனாலும் அனுபவத்துடன் கற்றுக் கொள்வது ரொம்ப சிறந்தது....

      Delete
  4. ஹா ஹா செம செம.. முதல் இரண்டு பந்தியையும் படிக்கும் போது அட இது நம்ம பாயிக் பதிவான்னு ஒரு சந்தேகம்.. இன்றைக்கு அறிவுபூர்வமா ஏதோ சொல்ல வரார்ன்னு தொடர்ந்தா 'நம்ம நண்பன் பாப்' அப்பிடின்னு பார்த்தவுடன்.. ஆஹா இப்பதான் ரனகளம் தொடங்கப்போவதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. நீங்க என் கிட்ட ரொம்ப எதிர் பாக்குரீங்க.... என்ன பண்ண... வச்சிகிட்டா வஞ்சகம் பண்றோம்???

      Delete
  5. பாரதெகே ஊர கேள்விப்பட்ட ஞாபகம்..

    ஆமாம் பாஸ். சிக்கலில் மாட்டினதும் வேகமா ஓடி தப்பிப்பதும் ஒரு தற்காப்பு கலைதான்..

    அந்த வகையில நிறைய பேருக்குள்ள போதிதர்மர் இருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. பாரதெகே`ங்கிற ஊரு கண்டியை நு்வரெலிய வீதியில் இருக்கு.. கம்பளையை தாண்டியவுடன் வரும்...

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்....

      Delete
  7. இன்னும் இன்னும் ...எதிர்பார்கிறேன் .....

    ReplyDelete
    Replies
    1. ஏற்கன்வே டெமேஜு ரொம்ப ஜாஸ்தி... இன்ன்னும் இன்னுமா எதிர் பார்க்குரீங்க??

      Delete
  8. ஒன்பதாவது அறிவுல முடிப்பீங்கன்னு நினைச்சேன்...ஏமாத்திட்டீங்க...சுவாரஸ்யமாய் இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. 8 அறிவே ரொம்ப ஜாஸ்தியாச்சே....

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. கண்டி நுவரெலியா வீதியில் சிலமுறை போயிருக்கிறேன். ஊரைக் கவனித்ததில்லை. அடுத்த முறை நோட் பண்றேன்.

    என்னடா ... பதிவு வேற ட்ராக்ல ட்ராவல் பண்ணுதேன்னு பார்த்தேன். பழையபடி உங்க ட்ராக்குக்கு வந்துட்டீங்க. செம காமெடி கலக்கல்.

    ReplyDelete
    Replies
    1. பாரதெகே`ங்கிற ஊரு கண்டியை நு்வரெலிய வீதியில் இருக்கு.. கம்பளையை தாண்டியவுடன் வரும்...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

      Delete
  10. கங்காருவின் குட்டி பிறக்கும் போது ஒரு அங்குலம் கூட இருப்பதில்லை. அது தன் தாயின் உரோமங்களினூடு கங்காருகளுக்கு மட்டுமே இருக்கும் அந்தப் பையை அடையும் அந்தப் பயணம் மிக ஆச்சரியமான ஒரு பயணமே
    >>
    ஒருமுறை டிஸ்கவரி சேனலில் பார்த்து வியந்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் முதன் முதலில் ஆனந்த விகடன் “ஹாய் மதன்” பகுதியில் படித்தேன். கங்காரு ஆச்சரியாமதொரு படைப்புத்தான்

      Delete
  11. மான் கராட்டே பத்தி இப்பதான் உங்களுக்கு தெரியுமா..?! So...Sad. அதுல நான் பிளாக்பெல்ட். :))

    ReplyDelete
  12. தலைப்பை பார்த்து ஏதோ "ஸ்டடி" செய்து எழுதிய ஆய்வு கட்டுரை போல.. அதனால் சாவகாசமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளி போட்டேன். இரவு சாப்பிட்டபின், என் அறிவுக்கு தாகம் எடுத்த மாதிரி உணர்ந்ததால் "போதி தர்மர்" கட்டுரையை வாசித்தேன். வாசிக்க வாசிக்கவே சரியான ப்ளாக்கை தான் வாசிக்கிறமா? இல்லை பாயிக் பெயரில் எவனாவது போலி, கீலி கெளம்பிட்டானா என்ற யோசனை வந்து போனது, இல்லையே போலி உருவாகிற அளவிற்கு பாயிக் கருத்துக்கு "வொர்த்" இல்லையே??.. (சாரி. நான் கொஞ்சம் ஓப்பன் டைப். மண்டையில உள்ளதை மறைக்க தெரியாது) நல்லா சிரிக்க வச்சிக்கிட்டு இருந்த புள்ளயெல்லாம் ஏன் தான் இப்படி அறிவு பூர்வமாக ஆய்வு செஞ்சு இப்படி நம்ம கண்ண கட்ட வைக்கனும் என்ற யோசனையிலேயே, அந்த ரெண்டாவது போட்டாவையும் தாண்டிட்டேன் அதாவது வாசிச்சிட்டேன்.

    அப்புறமா தெரிஞ்சது.. அந்த புள்ள நம்மள ஏமாத்தலன்னு. விதியேன்னு முச்சூடும் படிச்சிட்டு தான் படுத்தேன். இதுல ஆங்காங்கே நிறுத்தி காட்சிய மனசுல இருத்தி நானே படம் ஓட்டி பார்த்தேன். அதுலயும் அந்த ஒரு சீன், இருங்க அதாங்க ஆட்டோவின் ஜன்னலோர சீட்டுக்கு ஆசைப் பட்டு.. அய்ய்யோ அந்த சீன் வாழ்க்கைக்கும் மறக்காது. ஏன்னா.. எதுல ஏறினாலும் ஜன்னலோர சீட்டை தேடும் மொரட்டு பய புள்ளயா இருந்தவன்யா நானு.

    ReplyDelete