Thursday, 12 January 2012

வேட்டை - டான் + போலீஸின் கதை
ஒரு முறை காலேஜ் லீவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு வீவு முடிஞ்சு நம்ம காலேஜ் இருக்கிற ஊருக்கு போறேன், காலேஜே ஒரே பரபரப்பாக இருக்கு... இது என்னய்யா புதுசா இருக்கு;னு பாத்தா, காலேஜ்’ல ஒரு டான்(Don) உருவாகிட்டான்’னு செய்தி வருது.

யார்ரா அந்த டான்’னு பார்த்தா... வேறு யாரும் இல்ல.. நம்ம நண்பன் க்றேஸி’தான் அந்த டான். நம்ம க்றேஸி வயசு போய் தாத்தா ஆகிட்டான்’னு சொன்னா கூட நம்பலாம். ஆனால், தாதா ஆகிட்டான்’குறத எப்படி நன்புரது???

சரி அவன் கிட்டவே கேட்டுரலாம்’னு பார்த்தா, ஆளையே  பிடிக்க முடியல. டான் ஆகிட்டா, ஊர்ல உள்ள படியெல்லாம் ஏறி இறங்கனும், ஆட்டோல ஊர சுத்தனும்ங்குற சம்பிரதாயதிற்கு ஏற்ப, காலேஜ்’ல உள்ள படியெல்லாம் ஏறி, இறங்கி முடிச்சுட்டு, ஊர்ல எந்த ஆட்டோவும் வராததால (பைசா குடுக்க மாட்டான்’னு தெரியுமுள்ள) பக்கத்து ஊர் ஆட்டோல பயபுள்ள ஊரை சுற்ற கிளம்பிட்டான்.

 ரொம்ப கஷ்டத்திற்கு மத்தியில நம்ம டானை மடக்கி,

டேய்!!! என்னடா ஆச்சு...??  செம்மரி ஆட்டுக்கு புலி வேஷம் போட்ட மாதிரி உனக்கு ரவுடி வேஷம்.. பார்க்க சகிக்கலயே!!!

மச்சான், 3 நாளைக்கு முன்னாடி கண்டி நகரத்துல இருந்து பஸ்’ல வந்துகிட்டு இருந்தேனா, திடீர்னு ஒரு எடத்துல திடீர்னு போலீஸ் பஸ் வண்டியை மறைத்து, உள்ள புகுந்து என் பக்கத்துல இருந்தவன போட்டு கும்மு கும்மு’னு கும்ம ஆரம்பிச்சானுங்க. அது வர நல்லாத்தான் போய் கிட்டு இருந்துச்சு.

அப்புறம் என்ன நெனச்சானுங்க’னு தெரியல. திடீர்னு ”யோவ்!! நீயும் இவன் கூட கூட்டுதானே”னு சொல்லி என்னையும் இழுத்து கும்மு கும்மு;னு கும்ம ஆரம்பிச்சுட்டானுங்க. அவன் யாரு?? எதுக்கு கூட்டு?? ஏன் அடிக்கிரானுங்க.. எதுவுமே புரியல. அவன் கிட்ட உண்மைய சொல்ல சொல்லலாம்’னு பார்த்தா,  அவனும் அடி வாங்கியே மயங்கி விழுந்துட்டான்.

அப்புறம், போலீஸ் ஸ்டேஷன் கூட்டிப் போயி, அந்தப் பய புள்ளைக்கு சுய நினைவு வரும் வரை, நம்மள கும்மினானுங்க. அவன் எழுந்து, இவன் யாரு’னு என்னைப் பார்த்து கேற்க, அப்புறம் அசடு வழிஞ்ச போலீஸ், நம்மள வீடு வரை, போலீஸ் வண்டிலயே கூட்டி வந்தானுங்க. நான் போலீஸ் வண்டில வந்து இறங்குறதை பார்த்த நம்ம ஊர் பயலுங்க, டெரர் ஆகிட்டானுங்க.. நானும், இதுதான் சந்தர்ப்பம்’னு அதையே கொஞ்சம் பில்ட் அப் பண்ணி டான் (Don) ஆகிட்டேன்.

அந்த நேரம் பார்த்து இன்னொரு சம்பவமும் நமக்கு சாதகமா அமைஞ்சிடுச்சு. அந்த சம்பவம், க்ரேஸியோட அண்ணனை நடு ராத்திரியில் நாலு பேரு தாக்க, அவரும் திருப்பித் தாக்க, கடைசியில் அடுத்த நாளு க்ரேஸியின் அண்ணன் ஹாஸ்பிட்டலில். ஆனால், ஊரிலோ யாரோ ஒரு நல்ல உள்ளம் படைச்சவர் “நம்ம க்ரேஸி ராத்திரி 10 பேரை அடித்து விட்டதாக கதையை பரப்பி விட்டார். அப்புறம் என்ன??? நம்ம டான்’னின் ரேங்க் இன்னும் எகிறிடுச்சு..

அத்தோடு, காலேஜிற்கு, புதியவர்கள் சேரும் காலம் என்பதால் டான் க்ரேஸியை வைத்தே ராகிங்’ன்ற பேர்ல செம வேட்டை நடத்தினோம். அந்த வேட்டைல பாதிக்கப் பட்ட ஒரு முக்கியமான ஆளுதான், நம்ம ”காமராசு”. காமராசு அந்த நேரத்துலதான் நம்ம காலேஜ்’ல சேர்ந்திருக்க, டான் க்ரேஸியின் வேட்டையில் காமராசுவின் பர்ஸும் பல முறை வேட்டையாடப் பட்டிருக்கு. இப்பொழுதும், நம்ம காமராசு சொல்லுவான், “மச்சான், அந்த நாட்கள்ல டான் க்ரேஸிய பார்த்தாலே என் கால், கையெல்லாம் பதற ஆரம்பிச்சுடும்டா’னு.

எப்படி நம்ம பில்ட் அப்பு....

10 comments:

 1. Antha bus-la
  adi vangunathu
  neengathaane ???

  ReplyDelete
 2. @ NAAI-NAKKSJan

  /// Antha bus-la
  adi vangunathu
  neengathaane ???//

  ஹி..ஹி.. அது எங்க அண்ணன் சொங்கி மங்கி.....

  ReplyDelete
 3. யோவ் பாஸ் நான் வேட்டை பட விமர்சன் என்று நம்பி உள்ளே வந்தேன் ஆனா பல்பு வாங்கிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 4. // ”யோவ்!! நீயும் இவன் கூட கூட்டுதானே”னு
  சொல்லி என்னையும் இழுத்து கும்மு கும்மு;னு
  கும்ம ஆரம்பிச்சுட்டானுங்க. //

  இதே மாதிரி இன்னொரு சமயம்
  " டானோட கூட்டு தானே நீன்னு.? "
  உங்களையும் கும்மனாங்களே.. அதை
  மட்டும் சென்ஸார் பண்ணினது ஏனுங்க..?

  ReplyDelete
 5. @ K.s.s.Rajh

  //// யோவ் பாஸ் நான் வேட்டை பட விமர்சன் என்று நம்பி உள்ளே வந்தேன் ஆனா பல்பு வாங்கிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்//

  ஹி..ஹி.. நீங்க வரல்ல.. வர வச்சோமுள்ள....

  ReplyDelete
 6. @ வெங்கட்Jan 13, 2012 01:09 AM

  //// ”யோவ்!! நீயும் இவன் கூட கூட்டுதானே”னு
  சொல்லி என்னையும் இழுத்து கும்மு கும்மு;னு
  கும்ம ஆரம்பிச்சுட்டானுங்க. //

  இதே மாதிரி இன்னொரு சமயம்
  " டானோட கூட்டு தானே நீன்னு.? "
  உங்களையும் கும்மனாங்களே.. அதை
  மட்டும் சென்ஸார் பண்ணினது ஏனுங்க..?///

  நீ வெங்கட்டோட கூட்டுத்தானே’னு பதிவுலக்த்துல அடிக்க விரட்டுரானுங்க..

  ReplyDelete
 7. எப்படி நம்ம பில்ட் அப்பு....

  சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரப்பு................

  ReplyDelete
 8. பல்பு...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. //எப்படி நம்ம பில்ட் அப்பு....// இதெல்லாம் ஒரு பொழப்பு.!?
  ஹி.ஹி..அப்டின்னு நான் கேக்க மாட்டேன்.உண்மை தெரிஞ்சா ஊர்ல கேப்பாங்க... :) பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete