Wednesday, 1 September 2010

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்


என்னையும் ஒரு பதிவராக மதித்து தொடர் பதிவுக்கு அழைத்த நன்பன் ஹாய் அரும்பாவூர் முபாரக்`கிற்கு என் நன்றிகள் ( முபாரக்`ற்கு 4 குச்சி மிட்டாயும் 3 குருவி ரொட்டியும் பார்சல்....)
(யோவ் நீ பதிவெழுத வந்தே ஒரு மாதந்தான் ஆச்சு… அதுக்குள்ளயா...? சாதனை படைத்து விட்டு கின்னஸில் எழுதுவது உங்க பாணி…. கின்னஸில் எழுதி விட்டு சாதனை படைப்பது எங்க பாணி…. நோ நோ… பாணியைப் பற்றி பேசினா யாருப்பா அது சாணி அடிக்கிறது.. )

பதிவுலகில் எனக்கு ஆதரவு தரும் பதிவர்களுக்கும் என் இம்சை தாங்காமல் ஓட்டு மற்றும் பின்னூட்டம் இடும் நன்பர்களுக்கும் என் நன்றிகள்.

நான் ஏன் பதிவுலகத்திற்கு வந்தேன்…
அது சம்பவம் அல்ல சரித்திரம்..
அது விபத்து அல்ல விசித்திரம்
சினிமாவில் ஹீரோ அறிமுகக் காட்சியில் கெமராவக் கொஞ்சம் ஆட்டுரது வழக்கம். அதுதான் நாமளும் கொஞ்சம் செய்து பார்க்கலாமென நம்ம கெமரா காரருக்கு குடுத்த இம்சையில் பயபுள்ள போட்டோவை இப்படி எடுத்துவிட்டான். (யோவ்…… உன் போட்டோவ விட இது எவ்வளவோ நல்லாயிருக்கு)



1.அது என்ன புன்னகையே வாழ்க்கை ?
இதை எங்கே சுட்டேன் என்று தெரியாது. ஆனால் ரொம்ப நாளாக என் பெயருடன் எழுதி வருகிறேன்.  அதனால் தலைப்பை தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்க வில்லை.
  பதிவுலகத்திற்கு வர காரணம் ?
        கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் அலுவலகத்தில் பயங்கர பிஸியாக  வலையுலகில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக அழுத்தியதில் ஒரு பதிவு திறந்து விட்டது. அநேகமாக அது “இட்லி வடை”யாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதன் பின் நியூஸ் பானை, தமிலிஷ் என அறிமுகமாகி 2 வருடங்கள் வெறும் பின்னூட்டம் மட்டுமே இட்டுக் கொண்டிருந்தேன். பதிவு ஆரம்பிக்க ஆசையிருந்த்தும் ஒரு நமக்கு எழுதுவதில் இருந்த ஆர்வம்!! பற்றி தெரிந்திருந்ததால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.( தப்பிவிட்டோம் என்று சிரிக்க வேண்டாம்.. மீண்டும் வருவேன்)  ஒரு நாள் நன்பர் Mr. Zakir இன் இருப்பிடத்துக்கு சென்ற போது அவர் ”உன்மை உணர்வுகள்” எனும் பதிவு எழுதுவது தெரியவந்தது. அப்போதுதான் ஆஹா நாமும் ஆர்ம்பித்தால் என்ன? என்று யோசித்தேன். எனக்கு சொந்தமா எழுத வராது. எதையாவது சுட்டு நம் பதிவில் இட்டால் கூட இப்போ கும்மு கும்மு என்று குமுறிர்ராணுங்க… என்ன பன்னலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன். எனக்கு பிரச்சனையே அதிகம் எழுத முடியாமையே…அப்பொது கோகுலத்தில் சூரியனில் நன்பர் வெங்கட்`டின் பதிவுகளை படிக்க நேர்ந்தது. ஒவ்வொரு ஆக்கமும் 4- 10 வரிகளில் சும்மா நச்`ண்டு இருக்கும். நாமும் இப்படியாவது ஆரம்பிப்போம் என்று எழுத ஆரம்பித்தேன். அதன் பின்னர்தான் தெரிந்தது, நிறைய எழுதுவது கஷ்டமல்ல.. கொஞ்சமாக எழுதுவதுதான் கஷ்டமென்று…

 எப்படி தொடங்குவது என்று யோசித்த போது Miss. Sumajla அக்காவின் ”ப்ளாக் தொடங்குவது எப்படி?” என்ற பதிவு கிடைத்தது.அதை பின்பற்றி ஆரம்பித்தேன். மின்னஞ்சல் மூலமும் நிறைய உதவிகள் செய்தார்.. பின்பு ப்லாக்`கை மெருகேற்ற நன்பர் Mr. Zakir (உன்மை உணர்வுகள்) மற்றும் நன்பர் Mr. Mubarak (ஹாய் அரும்பாவூர்) ரொம்ப உதவினர்.

 நாமும் எதாவது நாலு பேருக்கு பிரயோசனாமாக எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கிறது. ஆனால் தட்டச்சில் கை வைத்தும் வெறும் மொக்கை மட்டும்தான் வருகிறது.
  2.முதல் பதிவை பற்றி ?
ப்லாக் ஆரம்பித்து ஒரு மாதம் வரை எதுவுமே எழுதவில்லை. வெறுமனே டெம்ப்லேட் மாற்றிக்கொண்டும் விட்ஜெட் மாற்றிக்கொண்டும் காலத்தை ஓட்டினேன். காரணம் முதல் பதிவை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பின்பு ஒருவாறு ”வெள்ளோட்டம்” என்று ஒரு அறிமுகப்படுத்தும் விதமாக எழுதினேன். பின் அபூதாபியிலுள்ள் ஷேக் சையத் மஸ்ஜித் பற்றி எழுதலாம் என எண்ணி அம்மஸ்ஜிதுக்கு சென்று புகைப்படங்களை சுட்டு வந்து ஒரு பதிவு எழுதினேன்.

3.முதல் பாராட்டு 
முதல் பின்னூட்டமாக வந்த பாராட்டு Miss.புவநேவரி ராமநாதன்`னிடம் இருந்து வந்தது. தொலை பேசியில் Mr. Deva அண்ணா, நன்பர் ஞானசேகர் தொடர்பு கொண்டு ஊக்கமளித்தார் (கடந்த வாரம் ஒரு இரவில் நன்பர் முபாரக் தொடர்பு கொண்டு பேசினார். நானும் தூக்க மயக்கத்துடன் பேசினேன், என்ன பேசியிருப்பேன் என்று இன்று வரை யோசித்துக் கொண்டிருக்கிறேன்). Gtalk’இல் நன்பர் பனித்துளி சங்கர் , நன்பர் அருன் ப்ரசாத் போன்றோர் ஊக்கமளித்தனர். Mr. Venkat (கோகுலத்தில் சூரியன்),  என் ஒவ்வொறு எழுத்தாக வாசித்து (என்ன கொடுமப்பா…)  நிறைய Tips தந்தார். இன்றும் இவர்களது சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எப்பொழுதும் பின்னூட்டம் இடும் நன்பர் ஸாகிர், நன்பர் கோமாளி, நூறு கவிதை புகழ் வெறும்பய (கவிஞர் வெறும்பாதி) சௌந்தர், சிரிப்பு பொலீஸ், அருன் ப்ரசாத், அபுல் பசார், அப்துல் காதர், பென்னி, ரியாஸ் இன்னும் இதர நன்பர்களுக்கும் என் நன்றிகள்.

4.பின்னுட்டம் வாக்களிப்பு எதற்கு முன்னுரிமை ?
இரண்டுக்குமே சம உரிமைதான். நம் பதிவு பல பேரை சென்றடைய வாக்கு அவசியம். பின்னூட்டம் மேலும் மேலும்  நம்மை எழுதத் தூண்டும். (”ஐ….   இதுதானா மேட்டரு.. இதுக்கு பின்னாடி உனக்கு பின்னூட்டமே கிடையாது” என்றெல்லாம் சொல்லக் கூடாது)
தொழினுட்ப பதிவுகளுக்கு, பொது அறிவு, வரலாறு போன்ற பதிவுகளுக்கு கட்டாயம் வாக்களிப்பேன். அடுத்த பதிவுகள் பிடித்திருந்தால் வாக்களிப்பேன். Animation Films, ARRahman தவிர்ந்த எந்த சினிமா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதோ வாக்களிப்பதோ கிடையாது.

ச்சும்மா...

5.வலைபதிவை பிரபலம் ஆக்க என்ன செய்விர்கள் ?
இண்ட்லி, தமிழ் 10, உழவு, இலங்கை பதிவர்கள் போன்ற திரட்டிகளில் இணைக்கிறேன். பதிவுலக நன்பர்களுக்கு G Talk, Gmail மூலம் தெரிவிக்கிறேன். நன்பர்களுக்கு கிடைக்கிற Gap`இல் எல்லாம் பதிவு போட்டிருக்கிறேன், படிச்சியா? படிச்சியா? என்று torture குடுக்கிறேன்.  

6.நண்பர்களின் ஆதரவு உள்ளதா ?
என்னது? ஆதரவா? அமீரகத்தில் ஆட்டோ இல்லாத்தால் தப்பித்திருக்கிறேன். இல்லாவிடில் எப்போதோ என் கதை முடிந்திருக்கும். அவ்வளவு இம்சை குடுத்திருக்கிறேன். சில வேளை வாக்களிப்புக்காகவும் பின்னூட்டத்திற்காகவும் மிரட்டலும் விட வேண்டியதாகி விடுகிறது. முன்பெல்லாம் Yahoo Meassanger, G talk, Skype, Face Book என எல்லா வழிகளிலும் மொக்கை போட்ட பயலுக நம்மளை கண்டாலே பின் வாசல்(sign out) வழியாக தப்பிச்சிர்ரானுங்க…. ஆனாலும் நாங்க விட மாட்டோமுள்ள… 

7.உங்களுக்கு பிடித்த  பதிவர்?
புன்னகையே வாழ்க்கை” என்று ஒரு பதிவுங்க.. Mr. Faaique என்று ஒரு பையன் சூப்பரா எழுதுரானுங்க.. அப்படி சொன்னால் நீங்க நம்பவா போரீங்க….
நிறைய பேர் உண்டு…… ஒரு சிலரின் எல்லா பதிவுகளும் பிடிக்கும். சிலவேளை சிலரது ஒரு சில பதிவுகள் மாத்திரம் பிடிக்கலாம்.   

8.வலைபதிவு வந்த பின்பு ஏதும் மாற்றம் ?
அதிகமாக யோசிக்க வேண்டியிருக்கிறது… தூங்கும் நேரம் குறைந்துள்ளது. (அலுவலகத்திலா .. வீட்டிலா?) அதிக நன்பர்கள் வட்டம், அவ்வளவுதான்…..

9.பதிவுலகில் வந்த பின்பு நண்பர்களின் வட்டம் அதிகம் ஆகி உள்ளதா ?
நிறையவே….. உலகமெல்லாம் நன்பர்கள் கிடைத்துள்ளனர்… 


10.மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு ஏதும் கருத்து ?
அடுத்தவர்களுக்கு கருத்து சொல்வதை விட, அடுத்தவர்களிடம் இருந்து நான் கேட்க வேண்டியவை நிறைய இருக்கு…….
பதிவெழுதுதல், பதிவுலகம் பற்றி பாடசாலை மட்டத்தில் அறிமுகம் செய்து மாணவர்களின் நல்ல பதிவுகளை, ஆக்கங்களை வெளியுலகிற்கு கொண்டு வரவும்,  சொந்தமாக பதிவு எழுத வைக்கவும் திட்டம் ஒன்று உள்ளது. நான் அமீரகத்தில் இருந்து கொண்டு இந்த திட்டம் எந்தளவு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. 

47 comments:

  1. தம்பி... அருமையா கோர்வைய ரசிக்கும்படியா இருந்துச்சுப்பா பதில்கள்...வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  2. ஹாஹாஹா.. ஒரே நகைச்சுவைதான் போங்கள்..:P கலக்கல் பதில்கள் ரசித்தேன்..:D

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா...

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Bavan

    ReplyDelete
  5. வரலாறு போன்ற பதிவுகளுக்கு//

    ஏன் ? புவியியல், எகனாமிக்ஸ் , மேத்ஸ் , கெமிஸ்ட்ரி , பிசிக்ஸ் இதுக்கெல்லாம் கமண்ட்ஸ் போட மாட்டிங்களா ?

    ReplyDelete
  6. @மங்குனி அமைசர் said...
    ///வரலாறு போன்ற பதிவுகளுக்கு//

    ஏன் ? புவியியல், எகனாமிக்ஸ் , மேத்ஸ் , கெமிஸ்ட்ரி , பிசிக்ஸ் இதுக்கெல்லாம் கமண்ட்ஸ் போட மாட்டிங்களா ?///

    இதை நானும் சிவப்பு கலர்'ல எழுதலாம்'ன்டு நெனச்சிட்டு விட்டுட்டேன்...
    வரவுக்கு நன்றி அமைச்சரே...

    ReplyDelete
  7. நல்ல நகைச்சுவ உணர்வு

    ReplyDelete
  8. @ ஜிஎஸ்ஆர்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

    ReplyDelete
  9. உங்களையே நீங்க வாறிகிட்டா நாங்க என்ன பண்ணுறது. எங்களுக்கும் சான்ஸ் குடுங்க. இதுக்கு மேல நீங்க ( ) உள்ள எழுத தடை விதிக்கிறேன்

    ReplyDelete
  10. @ யோ வொய்ஸ் (யோகா)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

    ReplyDelete
  11. @ அருண் பிரசாத்
    ///உங்களையே நீங்க வாறிகிட்டா நாங்க என்ன பண்ணுறது. எங்களுக்கும் சான்ஸ் குடுங்க. இதுக்கு மேல நீங்க ( ) உள்ள எழுத தடை விதிக்கிறேன்///

    vks ஆளுங்க கிட்ட இருந்து தப்புறது ரொம்ப கஷ்டமா போச்சு...

    ReplyDelete
  12. யதார்த்தமாகவும்,அழகாகவும்
    சொல்லி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. சுப்பர் அப்பு சுப்பர்.................. இவ்வளவு நாளும் மிஸ் பண்ணிட்டனே சரி......... இனி விடவே மாட்டன்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. // பதிவுலகம் பற்றி பாடசாலை மட்டத்தில் அறிமுகம் செய்து மாணவர்களின் நல்ல பதிவுகளை, ஆக்கங்களை வெளியுலகிற்கு கொண்டு வரவும், சொந்தமாக பதிவு எழுத வைக்கவும் திட்டம் ஒன்று உள்ளது. //

    நல்ல யோசனை தான். முயற்சியுங்கள். பதில்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  15. நீங்க பதிவு எழுதணும் ஏதாச்சும் முதலீடு பண்ணுங்கன்னு என்கிட்டே வந்து கேட்டது நான் ஒரு லட்ச ரூபாய் உங்களுக்கு கொடுத்தது இதப் பத்தியெல்லாம் சொல்லவே இல்லை!!!

    ReplyDelete
  16. அப்பாடா இதுவாவது எனக்கு புரியிர மாதிரி எழுத்திருக்கியே,முன்னேரிட்ட மாப்ள :)

    ஆமாம் அந்த தாடி வச்ச மூடிய அதான் உன் முழு முகத்த காட்டுவன்னு பாத்தா மழுப்பிட்டியே :)

    ReplyDelete
  17. /// பயலுக நம்மளை கண்டாலே பின் வாசல்(sign out) வழியாக தப்பிச்சிர்ரானுங்க…. ஆனாலும் நாங்க விட மாட்டோமுள்ள… ///

    விடாத விடாத :)

    சரளமா தமிழ் தாருமாறா வந்துருக்கு ரைட்டு :)

    ReplyDelete
  18. @ abul bazar/அபுல் பசர்

    //யதார்த்தமாகவும்,அழகாகவும்
    சொல்லி இருக்கிறீர்கள்.//
    thnks sir..

    ReplyDelete
  19. நல்ல கோர்வையா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள். தமிழ் பூந்துவிளையாடுது.

    //புன்னகையே வாழ்க்கை” என்று ஒரு பதிவுங்க.. Mr. Faaique என்று ஒரு பையன் சூப்பரா எழுதுரானுங்க.. அப்படி சொன்னால் நீங்க நம்பவா போரீங்க….//

    நிசமாவே அவுரு நல்லாத்தான் எழுதுறாரு.

    ReplyDelete
  20. @ பிரபா
    வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி...

    ReplyDelete
  21. @ எம் அப்துல் காதர்
    வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  22. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //நீங்க பதிவு எழுதணும் ஏதாச்சும் முதலீடு பண்ணுங்கன்னு என்கிட்டே வந்து கேட்டது நான் ஒரு லட்ச ரூபாய் உங்களுக்கு கொடுத்தது இதப் /பத்தியெல்லாம் சொல்லவே இல்லை!!!///

    எனக்கும் award தர சொல்லி குடுத்த amount 'க்கு இன்னும் award வந்து சேரவில்லை... முதலில் அதை குடுங்க... இல்லாவிடில் டெரர் பாண்டியனிடம் சொல்லி இருக்கும் மீதி award 'களையும் ஆட்டைய போற்றுவோம்..

    ReplyDelete
  23. @ஜில்தண்ணி - யோகேஷ்
    //அப்பாடா இதுவாவது எனக்கு புரியிர மாதிரி /எழுத்திருக்கியே,முன்னேரிட்ட மாப்ள :)///

    என்ன செய்ய... .? இல்லாவிட்டால் vote போட மாட்டேங்கிறீங்களே....

    //விடாத விடாத//
    விடுவோமா நாங்க...

    ReplyDelete
  24. @ஜீவன்பென்னி
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  25. // அப்பொது கோகுலத்தில் சூரியனில்
    நன்பர் வெங்கட்`டின் பதிவுகளை
    படிக்க நேர்ந்தது. ஒவ்வொரு ஆக்கமும்
    4 - 10 வரிகளில் சும்மா நச்`ண்டு இருக்கும். //

    இதபாருங்க Faaique..
    நான் எத்தனை தடவை
    சொல்லி இருக்கேன்..
    இப்படி ( கம்மியா ) புகழ்ந்தா
    எனக்கு எப்பவுமே பிடிக்காதுன்னு..

    ஹி., ஹி., ஹி..!!

    அது சரி.. எங்க Blog-க்கு எல்லாம்
    வெறும் பேர் மட்டும் தான் போடுவீங்களா..?
    Link எல்லாம் குடுக்க மாட்டீங்களா..??

    ReplyDelete
  26. பதில்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  27. முஹம்மது நல்ல அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. நான் கொஞ்சம் லேட்டு.. ஆணி அதிகம் அதுதான்

    எல்லாம் நல்ல நகைச்சுவை உணர்வுடன்..

    தொடரட்டும் உங்கள் டார்ச்சர் சாரி பதில்கள்

    ReplyDelete
  29. நல்லா இருக்கு தோழர் எங்க ஊரு வட்டார வழக்குல (பசங்க வட்டாரம்) எழுதிருக்கீங்க (எப்படி நாங்களும் பிராக்கெட் போடுவோம்ல )

    ReplyDelete
  30. சூப்பர்,அசத்தலான ஆரம்பம் தான்,பதிவுலக பிரபலத்தில் சேர்ந்திட்டீங்க,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. நல்ல அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. நன்றாக பதில் எழுதியிருக்கீங்க...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. /// கின்னஸில் எழுதி விட்டு சாதனை படைப்பது எங்க பாணி…. ///
    மொக்கையா பதிவு எழுதறது மத்தவங்க பாணி , ஆனா மொக்கையப் பத்தி மட்டுமே பதிவெழுதறது என்னோட பாணி.. இந்த பாணி எப்படி இருக்கு ...?

    ReplyDelete
  34. /// ஆனால் தட்டச்சில் கை வைத்தும் வெறும் மொக்கை மட்டும்தான் வருகிறது.///
    அப்படி வந்துதுன்னா உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குது அப்படின்னு அர்த்தம் ..

    ReplyDelete
  35. சத்தியமா எல்லாமே நல்லா எழுதிருக்கீங்க .. தொடர்ந்து மொக்கை போட .. ஓ .. சாரி .. தொடர்ந்து நல்ல நல்ல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் ..!!

    ReplyDelete
  36. @ வெங்கட்

    //இப்படி ( கம்மியா ) புகழ்ந்தா
    எனக்கு எப்பவுமே பிடிக்காதுன்னு..//

    இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிக்கிதூ இருக்கு....

    ReplyDelete
  37. @ வெங்கட்..
    ///அது சரி.. எங்க Blog-க்கு எல்லாம்
    வெறும் பேர் மட்டும் தான் போடுவீங்களா..?
    Link எல்லாம் குடுக்க மாட்டீங்களா..??///
    வெச்சு கிட்டா வஞ்சகம் பண்றோம்... போட்டா போச்சு...

    ReplyDelete
  38. @ வெறும்பய ,.....
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவரே...

    ReplyDelete
  39. @ கும்மாச்சி..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  40. @ Riyas..
    வந்துடீங்கள்ள... அதனால தப்பிச்சீங்க.... இல்ல...... ஹா ஹா....ஹா...... (ரௌடி சிரிப்பு...)

    ReplyDelete
  41. @ feroz said...
    ///நல்லா இருக்கு தோழர் எங்க ஊரு வட்டார வழக்குல (பசங்க வட்டாரம்) எழுதிருக்கீங்க (எப்படி நாங்களும் பிராக்கெட் போடுவோம்ல )////
    பிராக்கெட் போடறது முக்கியமில்ல பிராக்கெட் உள்ள போடறதுதான் முக்கியம்....

    ReplyDelete
  42. @ asiya omar said...
    //சூப்பர்,அசத்தலான ஆரம்பம் தான்,பதிவுலக பிரபலத்தில் சேர்ந்திட்டீங்க,வாழ்த்துக்கள்.///

    என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணல்லையே...

    ReplyDelete
  43. @ THE PEDIATRICIAN

    நன்றி தலைவரே...

    ReplyDelete
  44. @ ரகுநாதன்...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்

    ReplyDelete
  45. @ ப.செல்வக்குமார்..

    உங்களுக்கு "லொள்ளு " ரொம்ப ஜாஸ்திங்க....

    ReplyDelete