Saturday, 4 February 2012

என் நாட்டுக்கு என்னால் முடிந்தது.....




இன்று எம் நாட்டின் சுதத்திர தினம். எனவே நாமும் நாட்டுக்காக செய்த ஒரு அறிய செயலைப் பற்றியதே இந்தப் பதிவு.

காலேஜ்'ல உயர்தரம் படிக்கும் போது மூனு  நாள் சுற்றுலா போறதுக்கு ஏற்பாடு செயப் பட்டது. நாமளும் வெட்டியா இருக்குரவனுங்கதானே... முதல்லையே போயி பேரை பதிந்து விட்டோம்.

சுற்றுலாவிற்கு நான், பாப், சிட்டி, டட்சன், காமராசு ஆகிய ஐந்து பெரும் தயாராகி விட்டோம். கிரேசி மாத்திரம் அந்த நேரம் டெங்கு காய்ச்சலினால் அவதிப்பட்டதால் வரமுடியவில்லை.

திருகோணமலை- நிலா வெளி கடற்கரை

சுற்றுலாவின் முதல் நாள் திருகோணமலையில் கும்மியடித்து விட்டு இரவு கிண்ணியா நகரில் உள்ள ஒரு காலேஜில்  தங்குவதாக முடிவு. கிண்ணிய நம்ம நண்பன் சிட்டியோட சொந்த ஊரு. எனவே சாப்பாடு, தங்குமிடம்'னு எல்லாவற்றுக்கும் சிட்டியோட அப்பாவே ஏற்பாடு பண்ணியிருந்தாரு.. ஊர்க்காரன் சிட்டி நம்ம கூட இருப்பதால இரவெல்லாம் ஊர் சுற்ற எந்த சிரமும் இருக்கவில்லை.

திருகோணமலை - புறா மலைத் தீவு
அடுத்த நாள் காலை கிழக்கு மாகாணங்களை பார்க்கவென பயணம் ஆரம்பம். நம்ம எல்லோருடைய திட்டமும் என்னவென்றால் கிண்ணியா நகரை நம்ம பஸ் கடக்கும் போது, நாம போடுற  ஆட்டத்துலயும், பாட்டத்துலயும் கிண்ணியா நகரமே அதிரணும்,
இந்த நகரத்தையே ஒரு கலக்கு கலக்கனும், நாம யாருன்னு இந்த ஊருக்கு காட்டனும், நாம போடுற கூத்துல தாரை தப்பட்டையெல்லாம்
கிழிஞ்சு தொங்கணும். 

பயணம் ஆரம்பமானவுடனே நம்ம பாட்டும் கூத்தும் ஆரம்பாககியது. ஆனாலும் நாம் நினைத்தது போல் எந்த பாட்டும் சரியாக அமையவில்லை.. எவனாவது ஒரு பாட்டை ஆரம்பிக்க அந்தப் பாட்டு சரிவராது.. நிறுத்துடா`னு எவனாவது சத்தம் போடுவான். என்ன பண்ணலாம்'னு கைய பிசையும் போது ஒரு பய எடுத்து விட்டான் பாருங்க ஒரு பாட்டு......

அது ஒரு ஐம்பது வருட பழைய பாட்டா இருந்தாலும் நாம் ரீ-மிக்ஸ் பண்ணி கோரசா டாப் சவுண்டில்  கதறஅதை கேட்டு  எல்லா பயபுள்ளகளும்
 கண் மண் தெரியாம வெறித்தனமா குத்தாட்டம் போட்டதுல  மொத்த கிண்ணியா நகரமும் அதிர்ந்தது..  எல்லோரும் ஷாக் ஆகி ஆடாம அசையாம அப்படியே அந்த அந்த இடத்துலாய் நின்று விட்டார்கள். மொத்த நகரமுமே பிரமிப்பின் உச்சிக்கே சென்று விட்டது. நிச்சமயமாக சொல்வேன். கிண்ணியா மக்கள் அந்தப் பாடலை மறந்திருக்க மறந்திருக்க மாட்டார்கள்.

உங்க எல்லோருக்கும் அது என்ன பாடலா இருக்கும்'னு தெரிய ஆவலா இருக்கும். நாம ரி - மிக்ஸ் பண்ணி குத்தாட்டம் போட்ட  50 வருட பழைய பாடல்... நம்ம நாட்டு தேசிய கீதமேதான்...

சுற்றுலா முடிய தாரை தப்பட்டை கிழிந்ததோ இல்லையோ, நம்ம காலேஜ் Band Set  கிழிந்து தொங்கியது. எல்லோரும் சேர்ந்து அதிபரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு சொந்த செலவில் புதிய Band Set வாங்கிக் குடுக்க வேண்டியதாகிடுச்சு..



திருகோணமலை கடல்

திருகோணமலை துறைமுகம்

திருகோண்மலை - கிண்ணியா பாலம்

திருகோண்மலை - கிண்ணியா பாலம்




10 comments:

  1. போயும் போயும் தேசிய கீதத்தையா குத்தினீங்க? அதப் போய் ஏன் பாஸ்?

    சரி ... சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. குத்துரது`னு முடிவு பண்ணிட்டா, அப்புறம் யோசிக்க கூடாதுல்ல...

      நன்றி

      Delete
  2. நீங்க ஸ்ரீலங்கா-வா ..

    ReplyDelete
  3. நீங்க ஸ்ரீலங்கா-வா ..

    ReplyDelete
    Replies
    1. நான் ஸ்ரீலங்கா கிடையாது... ஆனால், என்னுடைய நாடு ஸ்ரீலங்கதான்...

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்

    அடப்பாவிங்களா

    ReplyDelete
  5. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete