Tuesday 26 April 2011

எலி மருந்து



வீட்ல கொஞ்ச நாளா வீட்ல எலித்தொல்லை ஜாஸ்தியாயிடுச்சு (உன் தொல்லையை விடவுமா? ) . எலி அடிக்கிறதும் நமக்கு நமக்கு Set ஆகாது. (புலி அடிக்கிரவனுக்கு எலி அடிக்க சொன்னா?)  ஏன்னா? நமக்கு குழந்தை மனசு!!!!! எலித்தொல்லைக்கு முடிவு கட்ட என்ன பண்ணலாம்’னு யோசித்த வேலை, ஒரு புண்ணியவான் ‘ரன் ரெட் (Run Rat)னு ஒரு எலி மருந்து இருக்கு, அதை எலிக்கு வச்சா, சாப்பிட்ட உடனேயே செத்துப் போயிரும்’னு ஒரு ஐடியா குடுக்க, அதை வாங்க நானும் ஒரு கடைக்கு போனேன்.

நான் : அய்யா!!  Run Rat இருக்கா?

கடைக்காரர்: ஆமா தம்பி, இங்கிலாந்து 30 ஓவர்’ல 200 ரன், 4 விக்கட் போயிடுச்சு...

என்னது? இங்கிலாந்து, 30 ஓவர், 4 விக்கட்’ஆ...  ஆஹா!!! Run Ratஐயும் run Rate'ஐயும் போட்டு குழப்பிட்டாரே!!!! மறுபடியும் முயற்ச்சிக்கலாம்’னு நினைத்து,

 நான்: இல்லங்க....  RUN RAT?????

கடைக்காரர்: என்னது? இலங்கை RAN RATE'ஆ? (ஆஹா!!! அதே வட்டதுக்குள்ளேயே   இருக்கானே இந்த ஆளு) தம்பி, இலங்கை விளையாடிய போட்டி நேற்றே முடிஞ்ச்சு. (ரொம்ப முக்கியம்) விவரம் தெரியாத பையனா இருக்கியே!!!! (இது வேறயா? இந்த அவமானம் உனக்கு தேவையா?)

இவர் தொல்லைய விட, எலித்தொல்லையே பரவாயில்லை போல இருந்துச்சு. அப்படியே வீடுக்கு நடயை காட்டினேன்.

டவுட்டு: மனிதன் மருந்து சாப்பிட்டா பிழைத்துக் கொள்கிறான், எலி மருந்து சாப்பிட்டா செத்து போயிடுது. ஏன்?




10 comments:

  1. வீட்ல கொஞ்ச நாளா வீட்ல எலித்தொல்லை ஜாஸ்தியாயிடுச்சு (உன் தொல்லையை விடவுமா? ) . எலி அடிக்கிறதும் நமக்கு நமக்கு Set ஆகாது. (புலி அடிக்கிரவனுக்கு எலி அடிக்க சொன்னா?) ஏன்னா? நமக்கு குழந்தை மனசு!!!!! எலித்தொல்லைக்கு முடிவு கட்ட என்ன பண்ணலாம்’னு யோசித்த வேலை, ஒரு புண்ணியவான் ‘ரன் ரெட் (Run Rat)னு ஒரு எலி மருந்து இருக்கு, அதை எலிக்கு வச்சா, சாப்பிட்ட உடனேயே செத்துப் போயிரும்’னு ஒரு ஐடியா குடுக்க, அதை வாங்க நானும் ஒரு கடைக்கு போனேன்.//

    சகோ, இந்த எலி மருந்து தொடர்பாக பெட்டாவில் நின்று ஒருவர் கூவி கூவி விளம்பரம் பண்ணுவார். அந்த வீடியே யூடியூப்பில ரொம்ப பேமஸ்,

    ReplyDelete
  2. நான் : அய்யா!! Run Rat இருக்கா?//

    அடப் பாவி, அது ரன் ரேற்,
    எலி மருந்து ரன் ரற்...

    ஹி..ஹி...

    ReplyDelete
  3. டவுட்டு: மனிதன் மருந்து சாப்பிட்டா பிழைத்துக் கொள்கிறான், எலி மருந்து சாப்பிட்டா செத்து போயிடுது. ஏன்?//

    என்னம்மா யோசிக்கிறீங்க நீங்க..

    எலி மருந்து எலிக்கென்று மட்டும் பிரத்தியேகமாக தயாரித்திருப்பாங்க. மனிதனுக்கென்று உள்ள மருந்தை சாப்பிட்டா, எல்லோடும் போயிடுவீங்களே..
    அதான்...ஹி...ஹி..

    ReplyDelete
  4. // மனிதன் மருந்து சாப்பிட்டா பிழைத்துக்
    கொள்கிறான், எலி மருந்து சாப்பிட்டா
    செத்து போயிடுது. ஏன்? //

    உங்க அறிவுக்கு நீங்க
    ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில
    புரோபசரால்ல இருக்கணும்..
    ஆனா துபாய்ல போயி ஒட்டகத்தை
    குளிப்பாட்டிட்டு இருக்கீங்களே ஏன்..? # டவுட்டு

    ReplyDelete
  5. // விவரம் தெரியாத பையனா இருக்கியே!!!! //

    கடைசில எலி மருந்து விக்கறவனுக்கு கூட
    இந்த விஷயம் தெரிஞ்சி போச்சா..?

    ஹி., ஹி., ஹி..!!

    ReplyDelete
  6. >>
    வீட்ல கொஞ்ச நாளா வீட்ல எலித்தொல்லை ஜாஸ்தியாயிடுச்சு (உன் தொல்லையை விடவுமா? )

    ஹி ஹி

    ReplyDelete
  7. //மனிதன் மருந்து சாப்பிட்டா பிழைத்துக் கொள்கிறான், எலி மருந்து சாப்பிட்டா செத்து போயிடுது. ஏன்? //

    பால்டாயில் ஒரு ரவுண்ட் அடிச்சிப்பாருங்க தலைவரே... விடை கிடைச்சிடும்..

    ReplyDelete
  8. இவர் தொல்லைய விட, எலித்தொல்லையே பரவாயில்லை போல இருந்துச்சு. அப்படியே வீடுக்கு நடயை காட்டினேன்

    ஹா ஹா ஹா சிரிப்பு அடக்க முடியலை

    ReplyDelete
  9. பாஸ்,
    உங்க பேனர் பஞ்ச் நல்லா தான் இருக்கு . அதை விட இது பெட்டரா இருக்கா பாருங்க.

    Everybody likes to be in heaven But dislikes to die

    ReplyDelete
  10. இந்த சீசன்ல ரன்ரேட் கேட்கலாமா ஹிஹி

    ReplyDelete