Saturday, 16 April 2011

ஊர்க் கோப்பை - இது உலகக் கோப்பைக்கு Equal'ஆன நம்ம ஊர் கிரிக்கட் பகுதி 2

இந்த சதிவலையில் நான் எப்படி சிக்கினேன் என்ற சோகக் கதையை அறிய இங்கே கிளிக்கவும்.போட்டி ஆரம்பம் ஆனது. நேரம் பற்றாக்குறையால் 4 ஓவர் போட்டியில் ஒவ்வொரு ஓவரிலும் 4 பந்துகளே வீசப்படும் என் முடிவு செய்யப்பட்டது. நமக்கு அந்த கவலையே இல்லாததால், ஒரு ஓரமாக பந்து வராத ஏரியாவுல போய் செட்டில் ஆகியாச்சு. (அப்போ, நீ விக்கட் காப்பாளரா?)

நன்றி பவன் (எரியாத சுவடிகள்)


இரண்டு ஓவர் முடிந்தது. எதிரணியினர்,  சின்ன பசங்க என்று சொல்ல முடியாத அளவுக்கு சுமாராக ரன்கள் சேர்த்திருந்தார்கள். அப்போதுதான் என் நன்பனும், நம் அணியின் கேப்டன், அந்த துரோகத்தை செய்தான். அது எனக்கு மட்டுமில்லை, நம் அணிக்கே செய்த துரோகம். ஆம்....... பந்து வீச சொல்லி, என் கையில் பந்தை தந்துவிட்டான். (spot Fixing என்பது இதுதானா?) முழு ஊரே திரண்டு வந்து பார்த்துக் கொண்டிருப்பதால் முடியாதுடா’னு கதறி அழ முடியாத நிலை. எவ்வளவோ சைலண்ட்’ஆ சொல்லிப் பார்த்தேன். முடியல......
நன்றி பவன் (எரியாத சுவடிகள்)

சரி... நாமளும் ஒரு ஓவர போட்டு பாப்போமே!!!! என்ன நடக்க போகுது? ஸ்ரீசாந்த்’ஏ தன்னை பந்து வீச்சாளர்’னு சொல்லிக் கொல்லும் போதும்,விக்கட் வீழ்த்தும் போதும், நமக்கு முடியாதா? அப்பிடின்னு பந்தை கையில் வாங்கியாச்சு...

முதல் பந்து...
சின்ன பயதானே!!! என்ன அடிக்க போரான்னு..... மெதுவா போட்டேன். விட்டான் பாரு ஒரு சிக்ஸர். (அதை விட பெரிய ரன் இல்லையே!!!!)
(வாழ்க்கை’னா இரு சில அடிகள் விழத்தானே செய்யும். அடுத்த பந்துல உன்னை கவனிக்கிறேண்டீ....)

இரண்டாம் பந்து
கொஞ்சம் பில்ட் அப் காட்டினா, பய புல்ல பயந்துராலாம்’னு ஒரு குருட்டு நம்பிக்கை’ல மைதானத்தில் எல்லை வரை சென்று வேகமாக ஓடி வந்ததுல, பந்து வீச வேண்டிய இடம் வரும் போது ஏற்பட்ட களைப்புல பந்து ரொம்ப மெதுவாகவே வீச வேண்டியதாகிடுச்சு...
விட்டான் பாரு ஒன்னு...... கடவுள் புண்ணியத்துல வெறும் நான்கு மாத்திரம்தான் (தூ....) போச்சு...
நன்றி பவன் (எரியாத சுவடிகள்)

மூன்றாம் பந்து..
இது முந்தியவை போல் விபரீதம் ஆகி விடக் கூடாது என்பதால் ரொம்ப திட்ட மிட்டு, போட்டேன் பாருங்க ஒரு பால்...... துடுப்புடன் பந்தை எதிர் கொள்ள இருந்த பையன் சடார்’னு விலகிட்டான்.
அந்த பயம்!!!’னு ஒரு லுக்கு விட்டுடு தில்’லா திரும்பினா, நடுவர் சோளக் காட்டு பொம்மை போல கைகள் இரண்டையும் ”பெப்பெர்பே”’னு விரிச்சு வெச்சிட்டு இருக்காரு.... என்னா’னு கேட்டா அது அகலப் பந்து’ங்குறாரு.... ஆஹா... இதுக்குதான் பயபுள்ள ஒதுங்கி வழிவிட்டானா?
அதே போல இன்னுமொன்று......இன்னுமொன்று....
மொத்தம் 3 அகலப் பந்து தொடர்ந்து போட்டாச்சு.....
அப்புறம், ஒரு மாதிரி ஒருபந்து (தவறுதலாக) நேராக போக, அது தவறுதலா துடுப்புல எங்கயோ பட்டு, விக்கட் காப்பாளர் கையில் விழ, ஐ!!!! நாமளும் ஒரு விக்கட் எடுத்தாச்சு....

நான்காம் பந்து
இன்னொரு அகலப் பந்து.....
கடைசிப்பந்து, இதை எப்படியாலும் போட்டு, ஓவர முடிச்சுர வேண்டியதுதான்னு, போட்டால். வழமை போல, ஈவு இரக்கம் இல்லாமல் விட்டான் பாருங்க... பந்து தாழ்வாக நான்கு ரன்களை நோக்கி பறத்து கொண்டிருக்க,நம்ம ஆளு ஒருத்தன்,  கேட்ச் பிடிக்கிறேன் பாரு’னு கையை போட, பந்து அவன் கையில் பட்டு ஆறு ஓட்டமாகிடுச்சு.....

ஒரே ஓவர்.. வெறும் நான்கு பந்து.... 20 ரன்கள்......

நாம் குடுத்த பதிலடி.....அடுத்த பதிவில்.......


10 comments:

 1. உங்களோட தலைப்பு முழக்கத்திற்கு ஏற்றார்போல நகைச்சுவை ததும்ப ததும்ப எழுதியிருக்கிங்க நண்பா... இந்த நெஃராவ நானும் ஒரு வாங்கு வாங்கலாம்னு நெனச்சேன்... இதுக்கு மேல அவன் அடி தாங்க மாட்டான்... வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. @ ஜெயசீலன் said...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே

  ReplyDelete
 3. // ஒரே ஓவர்.. வெறும் நான்கு பந்து.... 20 ரன்கள்...... //

  ஹி., ஹி.,
  இவரு நம்மள விட பெரிய
  பவுலரா இருப்பாரு போல..

  ReplyDelete
 4. // ஒவ்வொரு ஓவரிலும் 4 பந்துகளே
  வீசப்படும் என் முடிவு செய்யப்பட்டது. //

  உங்களுது ஓவர்ல..
  6, 4, Wide, Wide, Wide, Wicket, Wide, 6..

  குடுத்த ஒரு ஒவர்லயே.,
  ரெண்டு ஒவர் ( 8 பந்து ) போட்ட
  உங்க திறமையை கண்டு விக்கி
  நிக்கிறேன்..

  ReplyDelete
 5. //வாழ்க்கை’னா இரு சில அடிகள் விழத்தானே செய்யும்.//

  வாழ்க்கைல அடி விழலாம், அடியே வாழ்க்கை ஆகலாமா?..:P

  பதிவு அருமை, சிரிச்சு சிரிச்சு முடியல..:D

  ReplyDelete
 6. @வெங்கட் said...
  ///
  உங்களுது ஓவர்ல..
  6, 4, Wide, Wide, Wide, Wicket, Wide, 6..
  ///
  இத திருப்பி, திருப்பி சொல்லி காட்டனுமா? (அய்யய்யோ நானும் இன்னொரு முறை சொல்லிடேனே) விடுங்க பாஸ்.... இதெல்லாம் சகஜம்....

  ReplyDelete
 7. @வெங்கட்
  ////
  குடுத்த ஒரு ஒவர்லயே.,
  ரெண்டு ஒவர் ( 8 பந்து ) போட்ட
  உங்க திறமையை கண்டு விக்கி
  நிக்கிறேன்.. ///

  இதெல்லாம் கிரிக்கட்’ல ராஜ தந்திரம்’ப்பா....

  ReplyDelete
 8. @ Bavan said...

  //வாழ்க்கை’னா இரு சில அடிகள் விழத்தானே செய்யும்.//

  வாழ்க்கைல அடி விழலாம், அடியே வாழ்க்கை ஆகலாமா?..:P

  அடுத்த பதிவு இதற்கு பதில் சொல்லும்..

  ReplyDelete
 9. என்ன விளையாட்டு இது.....

  ம்.. அருமை...

  ReplyDelete
 10. அருமை
  அருமை

  சுவாரசியம் கலந்த சிரிப்பு

  ReplyDelete