Wednesday, 20 April 2011

ஊர்க் கோப்பை - இது உலகக் கோப்பைக்கு Equal'ஆன நம்ம ஊர் கிரிக்கட் பகுதி 3

முன்னைய பதிவு பதிவு1, 2எதிரணி 4 ஓவரில் (ஒரு ஓவரில் நான்கு பந்துகள் மாத்திரமே) அடித்த ஓட்ட எண்ணிக்கை 36. அதுல நம்ம Account’ இருந்து 20 ரன்கள்..ஹிஹி…..

நம்ம ஆளுங்க ரொம்ப திறமையான ஆளுங்கதான். ஆனாலும் விதி விளையாடிடுச்சு. எதிரணி பசங்க சின்ன ஆளுங்க, மைதானத்துல எந்த எடத்துல எவன் இருக்கான்னு புரியவே இல்லை. எங்கு பந்தை அடித்து விட்டு, ஓட்டம் எடுக்க முயற்சித்தாலும் அங்கிருந்து ஒருத்தன் பந்தை எடுத்து வீசி, ஆட்டமிழக்க செய்து, நம்மாளுங்களை பார்சல் பண்ணிக் கொண்டிருந்தானுங்க. கிரிக்கட்’லயும் கொரில்லாதாக்குதல் நடத்தினானுங்க..  கடைசியாக எது நடக்க கூடாதுன்னு நான் நினைத்தேனோ, அது நடந்து விட்டது. ஆம். நான் துடுப்பெடுத்தாட வேண்டிய தருணம்……
நன்றி பவன் (எரியாத சுவடிகள்)

கடைசி ஓவர், 4 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டும், நான் கேப்டனிடம்மச்சி, 4 பந்துல எப்பிடிய்யா 12 ரன்கள் எடுக்குறது?னு கேற்க, ரொம்ப கடுப்பில் இருந்தவன்நீ 4 பந்துல 20 ரன்கள் குடுக்கலையா? அது போலதான்னு கத்த, மறுபடி என் மானம், மரியாதை கப்பலேற்றப் பட்டது.
ஒரு மேட்டர் இறங்க முன்னாடி 10, 000 தடவை யோசிக்கனும், இறங்கிட்டா, ஒரு தடவை கூட யோசிக்க கூடாதுனு முடிவெடுத்து களத்தில் ஏறினேன்.

முதல் பந்து
பந்து என் பக்கமாகவே வரஆஹாஇந்த பந்தை வாண்டட் வைட்(Wide) வேண்டியதுதான்னு நானும் கொஞ்சம் முன்னாடி நகர, அந்த பந்துல என்ன மாயம் பண்ணினானோ? அது என்னை cross பண்ணி, எனக்கு முன்னாடி போயிடுச்சு.
முதல் பந்தே ரொம்ப கேவலமா முகம் கொடுத்ததில், என் பேட்டிங் திறமை எதிரணிக்கு நன்கு விளங்கிவிட்டது.

இரண்டாம் பந்து
இந்த பந்தை ஆறு ரன்கள் ஆக்கியே ஆக வேண்டும் என்ற வெறியில் துடுப்பை முடியுமான அளவு சுழற்றியதில் பந்து எல்லையை தாண்டி இருக்க வேண்டும், ஆனால் துடுப்பில் படலையே!!!!

மூன்றாம் பந்து
இந்த பந்து துடுப்புல பட்டாலே பெரிய விசயம் என்றெண்ணி, வருகின்ற பந்துக்கு துடுப்பை காட்ட, அது எனக்கு ரொம்ப பக்கதுல இருந்தவன் கையில விழ, விடுவானா அவன்?

நான்காம் பந்து
ஹி..ஹிமூன்றாம் பந்துடனேயே, மேட்ச் முடிஞ்சுடுச்சு……
இப்படியே கூட்டத்துக்குள் நுழைந்த்தால், பல முட்டைகள், தக்காளிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வருமென்பதால் மைதானத்தின் பிற் பகுதியில் உள்ள புதருக்குள் ஓடி ஒளிய வேண்டியதாயிடுச்சு

நன்றி பவன் (எரியாத சுவடிகள்)
.

மேட்ச் முடிவில் கேட்கப்பட்ட கேள்விகளும், நான் கொடுத்த பதில்களும்

ஏன்யா? ஒரு ரன் கூட எடுக்க முடியலயா?
ஒரு ரன் எடுக்கத்தான் வைட்(wide) விடலாம்’னு பார்த்தேன். ஜஸ்டு மிஸ்ஸு…. (ஆத்தீ கல்லை தூக்குறானே!!!)

ஊரே கூடி பார்க்கும் போது மானத்தை வாங்கிட்டியே!!!
ஆமா!!! ஊரே கூடி பார்த்துடு இருந்த்தா எப்படிய்யா விளையாடுரது? நாம தோட்டதுகுள்ள கிரிக்கட் விளையாடும் போது யாரும் பார்த்து இருக்காங்களா?
மைதானத்துல நிழலுக்கு கூட ஒரு மரம் இல்லை. நம்ம மைதானத்துல, batsman'க்கு ஒன்னு பந்து வீசுரவனுக்கு ஒன்னு, பந்து பொறுக்குறவன் கூட ஒவ்வொரு மரத்து நிழலுல, எவ்வளவு COOl’ஆ சூப்பரா விளையாடுவோம். மைதானமாய்யா இது? (மறுபடி கல்லை தூக்கிறுவானோ!!!)

COVER DRIVE’ல அடிக்க சொன்னேனே!!! ஏன்யா அடிக்கல?
ஆமா!!!! COVER DRIVE, COVER DRIVE’னு பல முறை சொன்னியே!! அப்படின்னா என்ன’னு ஒரு முறையாலும் சொன்னியா?
நம்ம மைதானத்துல, ”நேரா அடிச்சா ஆறு, பக்கது தோட்டதுக்குள்ள அடிச்சா ரன் கிடையாது, பலா மரம் இரண்டுக்கும் நடுவுல அடிச்சா 2 ரன், பந்து காட்டுல விழுந்து காணாமல் போனா ஆள் அவுட்டு” இதுதான்யா எனக்கு தெரியும். இத விட்டுடு புதுசு புதுசா ஏதாச்சும் சொன்னா எனக்கு என்னையா தெரியும்?

இதுக்கு பிறகும் அந்த இடத்தில் இருப்பது நம் உடல் நலத்துக்கு ஆகாது என்பதால்…… ESCAPE…..

6 comments:

 1. மச்சான்... எல கிரி பெளசி.. !!

  ReplyDelete
 2. "சென்னை-600028" ல சீனை உல்டா பன்னி Post போட்ட மாதிரி தெரியுதே? ...............

  ReplyDelete
 3. பாஸ் உங்ககிட்ட ஒரு கேள்வி?

  பாரிய கட்டிடங்கள் கட்டும்போது யாரவது ஒருவர் இறப்பார் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். உங்கள் அனுபவம் எப்படி?

  ReplyDelete
 4. http://blogintamil.blogspot.com/2011/04/wow-interesting-posts.html
  தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்..

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா வயிறு வலிக்குது
  சின்னன்ல வெட்டு முத்தத்தில விளையாடிய யாபகம் வருகுது

  ReplyDelete