Thursday, 7 April 2011

ஊர்க் கோப்பை - இது உலகக் கோப்பைக்கு Equal'ஆன நம்ம ஊர் கிரிக்கட் பகுதி 1


 அன்று ஒரு பிரபல பதிவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, (அவரு உன் கூட பேசினாரா?) எப்படி பிரபலமாகலாம்’னு கேட்க, (நல்லா... போர்த்தி தூங்கினால் கனவுல ஆகலாம்) அந்த சீசன்’ல எந்த மேட்டர் சூடாக இருக்கோ, அதை பற்றி எழுதுப்பா’ன்னு சொன்னாரு. (எரிமலையை பற்றி எழுதலாமே!!!)  நானும் ஏதாவது சூடா கிடைக்காதா’ன்னு தேடிக் கொண்டு இருந்தப் போ, (ஆயா கடைக்கு போயிருந்தா, சூடா பாயா கெடச்சிருக்கும்ல..) வந்திச்சீ பாருங்க உலகக் கோப்பை. (நீ தேடாவிட்டாலும் உலகக் கோப்பை வந்திருக்கும்பா) விடுவோமா நாங்க?????? நாமளும் நம்ம அனுபவத்தை எழுதி, கொமண்ட்ஸ், ஓட்டும் கொட்டோ கொட்டுனு கொட்ட, ஒரெ ராத்திரில பிரிபல பதிவர் ஆகிரலாம்’னு (வழமை போல 6 ஓட்டு மட்டுமே விழுந்தா?) முடிவு பண்ணி களத்தில் இறங்கியாச்சு.... (களம் எவ்வளவு ஆழம் என்றெல்லாம் கேட்க கூடாது)

உலகத்துல உள்ள முக்கியமான கிரிக்கட் அணியெல்லாம் விளையாடினா, அது ”உலகக் கோப்பை” ( கனடாவெல்லாம் முக்கியமான அணியா?னு கேக்க கூடாது.... சொல்லிபுட்டேன்). ஊர்ல உள்ள முக்கியமில்லாத பசங்கலெல்லாம் ஒன்னு கூடி விளையாடினால், அது ”ஊர் கோப்பை”.
(ஐ!!!!! தலைப்புக்கு லாஜிக்’கா விளக்கம் குடுத்தாச்சு......)


நன்றி பவன் (எரியாத சுவடிகள்)
ஒவ்வொரு வருடமும் பெருநாள் முடிய நம்ம ஊருல, கிரிக்கட் போட்டி நடக்கும். நாம எப்பவுமே கம்யூட்டர் கேம்’ல சொந்த அணி உருவாக்கி அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா’னு பெரிய பெரிய அணியெல்லாம் மண் கவ்வ வைக்கிறதுல கில்லாடி ஆச்சே!!! அதனால இதை போல சின்ன போட்டிக்கு போவது கிடையாது. (கூப்பிட்டாதானே போகனும்!!!). 

சுமார் 3 வருசதுக்கு முன்னாடி, கிரிக்கட் போட்டி நடந்து கொண்டிருந்த சமையம் அந்த ஏரியாக்கு போக வேண்டியதாகி விட்டது. (ஏதாவது ஃப்ரீயா குடுத்திருப்பாங்களோ!!!) போட்டி அதன் போக்கில் நடந்து கொண்டிருக்க, நாமளும் நம்ம நன்பர்களோடு ,மொக்கை போட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து, ஒருத்தனுக்கு ஒரு விபரீத ஆசை மனதில் முலைத்து விட்டது. நாமளும் ஒரு அணி உருவாக்கி விளையாடலாமே’ன்னு (உன் மொக்கை தாங்க முடியாம இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பான்..) ஒரு பிட்டு போட, எல்லோரும் தயாராகிட்டானுங்க..

நமக்கு எதுக்கு பொல்லாப்பு, நாம நழுவிடலாம்’னு பார்த்தா, ஒரே அமுக்கா அமுக்கி நம்மளையும் அணியில் சேர்த்துட்டானுங்க. ( ஹி ஹி.... சொந்த செலவுல சூனியம் வெச்சிருக்கானுங்க..). வேணாம்’யா எதுக்குப்பா, இந்த வில்லங்கம்’னு கெஞ்சினேன், கதறினேன். விதியை யாரால் மாற்ற முடியும்? ஆனாலும், எவ்வளவு அடி வாங்கினாலும் நாம பாதுகாப்பாக இருக்கனும் என்பதற்காக ஒரு கண்டிஷன் போட்டேன். அது,  “நான் கடைசியாகத்தான் பெட் பண்ணுவேன். (ஆனாலும் ஓட்டம் எடுக்க மாட்டேன்) பந்து வீச மாட்டேன். (கேட்டாலும், எவனும் குடுக்க மாட்டானுள்ள...) (இது அவனுங்க போட்ட கண்டிஷன்’ஆ இருக்குமோ)


நன்றி பவன் (எரியாத சுவடிகள்)

அப்போ, கொஞ்சம் திருப்தியான ஒரு செய்தி கிடைத்தது, நாம விளையாட வேண்டியது, மொத்த அணிகளிலும் இருந்த சின்ன பசங்க & பலவீனமான அணியுடன். ( அதிர் அணியும் இதையேதான் சொல்லுதுப்பா...) அப்பாடா’னு ஒரு பெருமூச்சு விட்டேன்.

டாஸ் ( Toss)  போட போய் வந்த நம்ம அணியின் கேப்டன் “ நாம டாஸ்’ல தோற்று போய் விட்டோம்டா’னு சொல்ல, ப்ப்ப்பூ.... க்ரிக்கெட்’ன்றது இவ்ளோதானா? நாம தோற்று விட்டோமுள்ள... நான் கிளம்பவா’னு போக பார்க்க, மறுபடியும் விட்ட பாடில்லை. (எதிர் அணியிடம் பணம் வாங்கியிருப்பானுங்களோ!!!)

எதிரணி முதலில் துடுப்பெடுத்தாட களம் ஏற நாமளும் feilding பண்ண களம் ஏறினோம் (மைதானம் மேட்டில் இருந்ததால், களம் இறங்காமல் ஏற வேண்டியதாகிவிட்டது)

அனல் பறக்கும் ஒரு போட்டி அடுத்த பதிவில்.................

11 comments:

  1. ஹி., ஹி., ஹி..!!

    போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  2. ஒரு விபரீத ஆசை மனதில் முலைத்து விட்டது
    x
    ஒரு விபரீத ஆசை மனதில் முளைத்து விட்டது

    ReplyDelete
  3. ஹி ஹி ஹி.... நல்லாத்தான் ஆரம்பிச்சி இருக்குது.... பந்து மேல பட்டுட போகுது ஓரமா நில்லுங்க தம்பி....

    ReplyDelete
  4. kaluthai kathuratha kavithai enru ninaikkum madayarhal irukkum varai,,,,,, unakkum valvu undu faaique..... all the best.

    ithu yaar cmnt nu romba yosikkatha,,,,,,,,,
    naanthaan onnoda poorveeham arintha ore nanban.

    ReplyDelete
  5. வெங்கட் said...

    ///ஹி., ஹி., ஹி..!!
    போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..///

    இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டு இருக்கு....

    ReplyDelete
  6. @ அருண் பிரசாத் said...

    ///ஹி ஹி ஹி.... நல்லாத்தான் ஆரம்பிச்சி இருக்குது.... பந்து மேல பட்டுட போகுது ஓரமா நில்லுங்க தம்பி.///

    இத பந்துகிட்ட சொல்லுங்க......

    ReplyDelete
  7. ///naanthaan onnoda poorveeham arintha ore nanban. ///

    போடா...டேய் ...போடா..நன்பனாம்..நன்பன்..ஒரு ஓட்டு போடமுடியல....

    ReplyDelete
  8. //பந்து வீச மாட்டேன். (கேட்டாலும், எவனும் குடுக்க மாட்டானுள்ள...) (இது அவனுங்க போட்ட கண்டிஷன்’ஆ இருக்குமோ) //

    அடுத்த முறை ப்ளாக்ர்ஸ் கிறிக்கட் டீம்ல நீங்கதான் பாஸ் ஓப்பினிங் பௌலர்..:P

    ReplyDelete
  9. ///அடுத்த முறை ப்ளாக்ர்ஸ் கிறிக்கட் டீம்ல நீங்கதான் பாஸ் ஓப்பினிங் பௌலர்..:P ///
    நீங்க எதிரணியா?

    ReplyDelete