Wednesday 23 March 2011

Burj Khaleefa (புர்ஜ் கலீபா)



ஒரு  கெமரா வாங்கின நாளில் இருந்து (நன்பனிடம் வாடகைக்கு, 2வருடத்திற்கு முன்னால்......) இரவுக் காட்சியை படம் பிடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை.( வெளிச்சத்துல பிடிக்கிர புகைப்படமே out of focus. இதுல, இரவிலா?)

நம்ம தகுதி அந்தஸ்த்துக்கு ஏற்ற இடத்துக்கு போனால்தானே நமக்கு பெருமை. (சிறைச்சாலைக்கு போக வேண்டியதுதானே!!!) எனவே,  நான் போன இடம், Burj khaleefa, Dubai Mall.

இந்த பதிவில் இரவில் எடுத்த போட்டோக்களை இட வில்லை. அது அடுத்த பதிவில்............  (வெளிச்சதுல எடுத்ததே இருட்டாத்தான் தெரியுது. இருட்டு எடுத்தது????????????)

எல்லா புகைப் படங்களும் என்னால் எடுக்கப்பட்டவையே!!!! (நெட்டில் இருந்தா?)


உலகின் அதி உயர்ந்த கட்டிடம்
160 மாடிகள், 828 மீட்டரிலும் அதி உயரம் (2 716.5 அடி)
உலகின் அதிக மாடிகளை உடைய கட்டிடம்
மனிதர்களால் உருவாக்கப் பட்ட அதி உயர் கட்டமைப்பு (free standing structure)
உலகிலேயே அதிக உயரமும் நீண்ட தூரமும் செல்லக் கூடிய Lifts.
3000 வாகனம் நிருத்தும் வசதி, 11 ஹெக்டேயர் பரப்பு கொண்ட தோட்டமும் (பார்க்), ஆறு நீர்த்தடாகங்களும் கொண்டது.
57 elevators  8 escalatorsகளை கொண்டது
30 கட்டுமான கம்பனிகள் சேர்ந்து 100 நாடுகளை சேர்ந்த 12 000 தொழிளாளிகளால் 22 மில்லியன் man hours (தமிழில் என்ன? ) 6 வருடங்களில் (2004 - 2010)உருவாக்கப்பட்டது.
 



burj Khaleefa இல் இருந்து 300 மீட்டர் தூரத்திலுள்ள ஒரு கட்டிடப்பணியிலேயே 2 வருடம் வேலை செய்ததால் இதன் கடைசி இரு வருட ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்துக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கட்டிட திறப்பு விழா, வாண வேடிக்கை பார்க்க முடியாமல் போனது கவலையே!!
 இதன் மேல் பொருத்தப்பட்டுள்ள, சுழலும் விளக்குகளின் ஒளி வானிலுள்ள மேகத்தில் விழுவதை பார்த்திருக்கிறேன். இது ஒன்றே இதன் உயரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். மேக மூட்டமான நாட்களில், இந்த ஒளி மேகத்தில் படுவது, மேக ஓட்டம் இரண்டும் பார்க்கும் போது பார்க்க சூப்பராக இருக்கும்.



கட்டும் போது இருந்த ஆர்வமும் பெருமையும் திறக்கும் போது டுபாய் அரசாங்கத்துக்கோ, எமார் நிறுவனதுக்கோ இருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் அந்த நேரம் டுபாய் மிகப் பெரிய பொருளதார நெருக்கடியை சந்தித்திருந்தமை. இக் கட்டிட நிர்மாணப் பணியை முடிப்பதே ஒரு சவாலாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மிகப் பெரிய கடன் சுமை, பொருளாதார நெருக்கடியால் இக் கட்டிடம் அபூ தாபி அரசாங்கத்திற்கு விட்கப்பட்டு விட்டதாகவும் ஒரு கதை உலவுகின்றது. அதை மெய்ப்பிக்கும் வகையில் புர்ஜ் டுபாய் என்று பெயரிடப்பட்டு இருந்த இக் கட்டிடம் திறப்பு விழாவிற்கு முந்திய இரவு “புர்ஜ் கலீபா” என்று பெயர் மாற்றப்பட்டது. 

 
மேலே தெரியும் விமானம் திட்டமிட்டு போட்டோ பிடிக்கப்பட்டதல்ல. எதேச்சையாக அமைந்தது
இது போல் ஒரு கட்டிடம் ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ இதே செலவில் அல்ல, இது போல் இரண்டு மடங்கு செலவிலும் அமைக்க முடியாது. காரணம், நம் இந்திய, பாகிஸ்தானிய, வங்காள தேசத்து மிக மிக குறைந்த சம்பள எதைச் சொன்னாலும் செய்யும் முழு நேர தொழிளாளிகள். 


பக்கதிலுள்ள என்னை கவர்ந்த ஒரு கட்டிடம். இதன் கண்ணாடிச் சுவரில் புர்ஜ் கலீஃபா’வின் நிழலை பார்க்கலாம்.





11 ஹெக்டேயர் பரப்பு கொண்ட தோட்டத்தின் ஒரு பகுதி
 




















8 comments:

  1. படங்கள் எல்லாம் சூப்பர்

    ReplyDelete
  2. தூரத்தில் இருந்துதான் பார்த்திருக்கிறேன்.. பக்கத்தில் வந்து பார்க்கனும்..

    ReplyDelete
  3. @ ரியாஸ்,
    சுடச் சுட கொமண்ட்ஸ் போட்டதற்கு ரொம்ப நன்றி

    ReplyDelete
  4. ஏன் பாஸ். ஒரு சந்தேகம். லில் இடுவதற்காக என்றே தொப்பி இல்லாமல் புகைப்படம் எடுத்தீர்களா?

    ReplyDelete
  5. ஏன் பாஸ். ஒரு சந்தேகம். Profile லில் இடுவதற்காக என்றே தொப்பி இல்லாமல் புகைப்படம் எடுத்தீர்களா?

    ReplyDelete
  6. இது போல் ஒரு கட்டிடம் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ இதே செலவில் அல்ல இது போல் இரண்டு மடங்கு செலவிலும் அமைக்க முடியாது.

    சரியாக சொன்னீர்கள். தொழிளாளிகளை கசக்கி பிழிந்து டுபாய் வேலை வாங்கிய கொடுமையை தொலைகாட்சியில் காட்டினார்கள்.

    ReplyDelete
  7. // சரியாக சொன்னீர்கள். தொழிளாளிகளை கசக்கி பிழிந்து டுபாய் வேலை வாங்கிய கொடுமையை தொலைகாட்சியில் காட்டினார்கள். //


    " புர்ஜ் கலீபா " பற்றி தெரியும்.. ஆனா
    அதன் மறுபக்கம் இவ்வளவு கொடுமையானதா..?

    So Sad..!!

    ReplyDelete
  8. எதேச்சையாக எடுத்ததாய் சொன்னீரே அந்த விமானம் தெரியும் புகைப்படம் அது அருமையாய் இருக்கிறது.

    ReplyDelete