Friday, 25 March 2011

குவைட்,இராக்’கின் பஸ்ரா பகுதிகளில் வரலாறு காணாத மணல் புயல் 25-03-2011




இன்று மாலை (25-02-2011) குவைட்,இராக்’கின் பஸ்ரா பகுதிகளில் வரலாறு காணாத  (வரலாறு வந்து சொல்லிச்சா?) மணல் காற்று வீசியது.மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்த மணல் காற்றில் இரவு 8.00 மணிவரை நீடித்தது. (டின்னர் லேட் ஆச்சுல்ல....)  பயங்கர காற்றும் அள்ளி வீசும் மணலும் (மணல் காற்றுல மணல்தான்யா வரும்)  எனக்கு ஒரு புதிய அனுபவமாகவும், கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.


* இன்றுதான் மொத்த வேலைத்தளத்தினதும் சுத்தம் செய்யும் வேலை முடிந்தது. மறுபடி நாளை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
* புயல் வரும் முன்னே நம்முடன் வேலை செய்யும் செர்பிய நாட்டு முதியவர், அழைத்துக் கொண்டு போய் காட்டியதால், கொஞ்சம் போட்டோ எடுக்க முடிந்தது.
* புயல் வருவதை பார்த்ததுமே நம்ம கூட வேலை பார்க்கும் கர்நாடக நபர் ஒருவர் “ அய்யோ... 2012’க்கு முன்னே உலகம் அழியப்போகுதே”னு ஒப்பரி வைக்க தொடங்கி விட்டார்.
ஏற்கனவே ”சூப்பர் மூன்” விஷயத்தில்( சோதிடத்டை நம்பி)  பயந்து கொண்டிருந்தவர், புயலை பார்த்ததும் பண்ணிய அலப்பரை தாங்க முடியலப்பா.....
*Office Room, Bed room எல்லம் மணல் காடாய் இருக்கிறது. என்ன பண்ணலாம்???????

மிக முக்கியமாம செய்தி

ரொம்ப நாளாக கழுவாமல் பாதுகாத்து வந்த என் காலுரைகளை நேற்றுதான் மக்கள் நலன் கருதி கழுவி காய போட்டேன். அதையும் புயல் தூக்கிடுச்சு. (புயல் வந்ததே அதனாலதான்யா) அது கிடைக்க அனைவரும் பிரார்த்திக்கவும். (Cool...Cool.. சின்ன பசங்க வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா....)

நான் கிளிக்கிய போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.














சேர்பிய நன்பர்
சைனா காரன் தில்’ல பார்தீங்களா......










ஓடுங்கப்பா..... ஓடுங்கப்பா.....

புயல் நம்மள வந்தடைந்த போது.....








18 comments:

  1. ஆஹா...ரொம்பவும் டெரராதான் இருக்கும் போல படத்தை பார்த்தாலே தெரியுதே..!!

    நான் ரியாதில் இருந்த போது இதை அனுபவித்திருக்கிறேன் . ஆகக்கொடுமை..பக்கத்துல இருப்பவனே கண்ணுக்கு தெரியாது.

    நீங்க புரோபைலில் துபாய் , யூ ஏ இ நெம்பரை குடுத்துட்டு குவைத்துல நானே எடுத்த போட்டோன்னு போட்டிருக்கீங்களே ஒரே குழப்பமா இருக்கே ...!!! :-)))))))))))))

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இன்று மாலை (25-02-2011)என்பதை தவறுதலாக எழுதியுள்ளிர்களே.

    பாஸ். சுட சுடச் சுட போடோக்களை எமக்கு வழங்கியதற்கு நன்றிகள்.

    டுபாய் போய் எவ்வளவோ ப(பு)டிச்சிட்டிங்க!

    ReplyDelete
  4. பாஸ். உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது. அவற்றை முறையாக காப்புரிமை செய்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. பாஸ். இதில் ஏதாவது ஒரு டெம்பலடை உங்க ப்லோக்கிற்கு பன்னுங்க.

    Night Sky

    http://btemplates.com/2011/blogger-template-night-sky-1-1/

    Business Walk
    http://btemplates.com/2011/blogger-template-business-walk/

    ReplyDelete
  6. வணக்கம் பாஸ்....
    என்னப்பா இது??
    மிரட்டுறீங்க போங்க.
    நேர்ல பாத்தா எப்பிடி இருக்கும்??
    கடவுளே....
    அடிக்கடி வாறதில்லைன்னு கோபிக்க கூடாது என??

    தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன?
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_26.html

    ReplyDelete
  7. தமிழ் மணம் வேலை செய்யவில்லை பாஸ்

    ReplyDelete
  8. உங்க கேம்ப்ல இருந்த குப்பையெல்லாம் எங்க வீட்ல வந்து கொட்டீட்டீங்களே!

    ReplyDelete
  9. அபூர்வமான புகைப்படங்கள்.ரபாஷ் சொல்றது மாதிரி காப்புரிமை செய்து கொள்ளுங்கள்.காப்புரிமையுடன் சி.என்.என் ,பி.பி.சிக்காரங்க மாட்டுனா பேரம் பேசி வித்துடுங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இங்கு(சவுதியிலும்) நேற்றிரவு ஒன்பது மணியில் இருந்து இதை விட மோசமாக இருந்தது. இப்ப பரவாயில்லை!!

    ReplyDelete
  11. பாஸ், உலகக்கோப்பையை யார் வென்றால் நீதீயாக இருக்கும் என்று ஒரு பதிவுடுங்களேன்.

    ReplyDelete
  12. நன்றி ரஃபாஸ்,
    டெம்ப்லேட் குடுததுக்கு நன்றி.
    நான் விளையாடிய ஒரு உலக போப்பை பற்றி பதிவு போட இருக்கிறேன். பாருங்கள்

    ReplyDelete
  13. நன்றி மைந்தன் சிவா....

    ReplyDelete
  14. நன்றி ராஜ நடராஜன்,
    எங்க வீட்டு குப்பை உங்க வீட்டு குப்பை இல்லீங்க... மொத்த ஊர் குப்பையும் வந்து சேர்ந்திருக்கு....

    ReplyDelete
  15. @ அப்துல் காதர்
    நம்ம ஏரியால ம்ட்டும்’னு நெனச்சேன். உங்க ஏரியாலயுமா?

    ReplyDelete
  16. பாக்கவே பயமாயிருக்கே.... நேர்ல எப்படி இருந்திருக்குமோ தெரியலையே!!

    ReplyDelete
  17. arumaiyana padangal...................inge abu dhabile intha maatiri ellam vanthathu kidaiyaathu

    ReplyDelete
  18. இது இறந்து புதைத்துவிட்ட செய்தி ஆயிற்றே?!!!

    ReplyDelete