Saturday, 12 March 2011

ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது.

நான் எட்டாம் வகுப்புல படிச்சுக்கொண்டிருந்த வேலை (இப்பவும் அவ்வள்வுதானே படிச்சிருக்கே...) , எங்களுக்கு Maths பாடத்திற்கு ஒரு ஆசிரியர் (X) வந்தார் (அதுக்கு முன்னாடி MATHS TACHER'அ பார்த்ததே கிடையாதா?). பயங்கர கண்டிப்பான ஆளுங்க... அவரைப் பார்த்தாலே நம்ம Basement Weak’க்காகிரும். எப்பவாவது ஒரு காமெடி பண்ணிட்டு குலுங்கி குலுங்கி சிரிப்பாரு. அதை பார்த்து நாமளும் சிரிப்போம். திடீரெனெ சிரிப்பை நிறுத்தி விட்டு, வகுப்பு நேரத்துல என்னடா சிரிப்பு?னு போட்டு கும்மு கும்மு’னு கும்முவார். (எல்லோரும் பண்ரதுன்னு நாமளும் பண்ணினா இப்பிடித்தான் நடக்கும்)  நாம சிரிக்காம இருந்தா, “நான் காமெடி பண்ணியும் நீ சிரிக்கலையா, இருடீ வச்சுக்குறேன்” என்பது போல ஒரு லுக்கு விடுவார்.

வகுப்புல எல்லோரையும் விட நம்ம நன்பன் க்ரேஸி’யை கும்முவதில் அவருக்கு தனி இன்பம். Time Pass ஆகவில்லை’னா கூட நம்ம சமஸ்தானத்தை வாட்டி எடுப்பாரு. மரங்கொத்தி எல்லா மரத்தையும் கொத்தி கொத்தி இருந்துட்டு , ஒரு நாள் வாழை மரத்தை கொத்தும் போது மாட்டிக் கொள்ளுமாம். (தத்துவம்??????) அது போலதான்,  நம்ம X'ம் ஒரு நாள் நம்மிடம் மாட்டிக் கொண்டார்.

ஒரு நாள் ரொம்ப காமெடி மூட்’ல வந்த Mr. X,  ஒரு நம்மள குஷிப் படுத்த அவருக்கு நடந்த ஒரு கதையை சொல்ல தொடங்கினார்.

“ மக்கா!!!! நாமெல்லாம் காலேஜ்’ல இருக்கும் போது, ஒரு நாள் இறால் சமைத்தோம், அதுல 4,5 கரப்பான் பூச்சு விழுந்துடுச்சு, அது தெரியாம நாமளும் சாப்பிட்டு விட்டோம்”

சமையல் குறிப்பு எழுதுர மக்கா...... இதையும் சேர்த்துக் கொள்ளுங்கப்பா.....

இதுதான் அவர் சொன்ன கதை சுருக்கம். இதை சொல்லி விட்டு  பலமாக குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தார். நாமும் எதுக்கு வில்லங்கம்’னு எப்போ சிரிப்பை நிறுத்திட்டு போட்டு தாக்க போராரோ’னு பயந்து கொண்டே சிரிக்க ஆரம்பித்தோம். எத்தனை மணித்தியாலம் பாடம் நடந்தாலும் எந்த சந்தேகமும் வராத, நன்பன் க்ரேஸி’க்கு இந்த கதையை கேட்டதும் ஏகப்பட்ட சந்தேகம் வந்துடுச்சு. விதி வலியது, யாரை விட்டது.

நன்பன் க்ரேஸி Mr.X'ஐ பார்த்து, சார் சமைக்கும் போது, எப்பிடி சார் கரப்பான் விழும்?
Mr.X: அது ரொம்ப பழைய அடுப்படி’ய்யா....

க்ரேஸி : சார்... கரப்பான் விழுந்தது’னு தெரிஞ்சே ஏன் சார் சாப்டீங்க?

Mr.X : ஷப்பா........ சாப்பிடும் போது தெரியாதுடா......விழுந்த யாரும் காணலன்னு சொன்னேன்ல...

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. விட்டானா நம்ம ஆளு?

க்ரேஸி : சாப்பிட்டதுக்கப்புறம் எப்படி சார் தெரிய வரும்? விழுந்ததை யாருமே காணலையே!!!

Mr.X :........................................................................

மறுபடி அவர் சேவை வழமை போல் தொடர்ந்தது. 

8ம் வகுப்பு







11 comments:

  1. // நான் எட்டாம் வகுப்புல படிச்சுக்கொண்டிருந்த
    வேலை (இப்பவும் அவ்வள்வுதானே படிச்சிருக்கே...) , //

    இப்படி சொன்னா.. அம்புட்டு பெரிய
    படிப்பெல்லாம் நீங்க படிச்சிருக்கீங்கன்னு
    நாங்க நம்புவோமாக்கும்..!!

    அஸ்கு புஸ்கு..!!

    ReplyDelete
  2. @வெங்கட் said... /////அம்புட்டு பெரிய
    படிப்பெல்லாம்////
    அது எப்படிங்க இருக்கும்?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  3. @drbalas
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. சார் நான் எல் கே ஜி யே ஆறு வருஷம் படிச்சேன் .நீங்க பரவாயில்லையே எட்டாம்பு வரை படிச்சிருக்கீங்க :-))))))))

    ReplyDelete
  5. வெங்கட் said...

    // நான் எட்டாம் வகுப்புல படிச்சுக்கொண்டிருந்த
    வேலை (இப்பவும் அவ்வள்வுதானே படிச்சிருக்கே...) , //

    இப்படி சொன்னா.. அம்புட்டு பெரிய
    படிப்பெல்லாம் நீங்க படிச்சிருக்கீங்கன்னு
    நாங்க நம்புவோமாக்கும்..!!

    அஸ்கு புஸ்கு..!!//

    வெங்கட்டை விட ரெண்டு படிப்பு கூட படிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. @ ஜெய்லானி

    6 வருசமா? இது ரொம்ப ஓவரா இருக்கே!!!!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

    ///வெங்கட்டை விட ரெண்டு படிப்பு கூட படிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.. //

    வெங்கட் 6ம் க்ளாஸ் வர படிச்சிருக்காரா? நம்பவே முடியல...

    ReplyDelete
  9. பட்டையை கிளப்பிட்டீங்க...

    ReplyDelete
  10. சீ கறுமம் கறுமம் இது என்ன படம்யா தனிய புழு மட்டுமே இரக்க 2 அட்டை 2 தவளை போட்டா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

    ReplyDelete