Wednesday 8 October 2014

நாரோடு சேர்ந்த பூவும் நாறும்...


வாசனைத் திரவியங்களுக்கு அரேபிய நாடுகளில் எப்போதும் ஒரு தனி மதிப்புண்டு. அரேபிய நாட்டு வாசனைத் திரவியங்களும் பெயர் போனவை.

ஆனால் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது, வாசனைத் திரவியம் பற்றியதும் அல்ல, அரேபிய நாடுகளைப் பற்றியும் அல்ல.... நாம் பார்க்கப் போவது சாக்கடையை பற்றி.. அவன்தான் நாய் சந்தியிலிந்து வரும் நம் நண்பன் சாக்கட சாமில்.

இவனை பற்றிய முன்னைய பதிவுகள்

1. கொழும்பிலே ஒரு கொலைக் களம்

2. டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி

டுபாய் மெயின் ரோட்டுல மலையாளி’ன்ற பதிவில் சாக்கட சாமில் டுபாய்க்கு வந்ததை பார்த்தோம். இனிமே டுபாய்’ல இவன் நம்மள பாடா படுத்தினத பாக்கலாம்.

ஒரு வெள்ளிக் கிழமை, லீவு நாளு, நல்ல குளிரு.. போர்த்திகிட்டு தூங்கலாம்னு பார்த்தா, நம்ம சாக்கட ரூமுக்கு வந்துட்டான். (இவனுக்கு வழி சொன்னவன் மட்டும் என் கைல கெடச்சான்????........ மைண்ட் வாய்ஸ்) 

மச்சி... நான் அத்தர் ஒன்னு வாங்கனும்டா.....

சரி போய் வாங்கு.....

அதெப்படி.... நீயும் வா... எனக்கு இடம் தெரியாதே.....

இவன் அத்தர் பூசினா, வாசம் அடிக்காவிட்டாலும் பரவால... இவன் கிட்ட அடிக்கிர நாற்றமாவது குறையுமே’னு நெனச்சி, நானும் போக ரெடியானேன்.

போய் பஸ்ஸில் ஏறியதும் வழமை போல, சாக்கட சாமில்,

மச்சி.. என் பர்ஸ உன் ரூம்ல வச்சிட்டு வந்துட்டேடா.....

பிரச்சனையே அல்ல... நான் கொண்டுவந்திருக்கேன்..

இல்ல மச்சான் நான் சொல்ரது என் பர்ஸுடா...

நான் கொண்டுவந்திருக்கரதும் உன் பர்ஸைத்தாண்டா........ (யார் கிட்ட.... எத்தனை முறைதான் நாமளும் ஏமார்ரது...- மைண்ட் வாய்ஸ்)

ஒருவாறு கடை வீதிக்குவந்தாச்சு,
ஒவ்வொரு கடையிலும் எத்தனை அத்தர் (Perfume) இருக்கோ,அத்தனையும் பூசிப் பார்த்தாச்சு... சாக்கடைக்கு எதுவுமே செட் ஆகல....

பூவோட சேர்ந்த நாறும் மணக்கும்’னு சொல்வாங்க... ஆனா... நாறோட சேர்ந்த பூவும் நாறும்’னு சாக்கடயிடம் படித்துக் கொண்டேன்.

ஒரு கடைக்காரன் சொன்னான்.. “ டேய்.. பாத்ரூம்’ல கொமட் இருக்கு.. அதையும் போய் முகர்ந்து பாக்குரயா????”

வேறு வெரைட்டி இல்லையானு ஒரு கடையில் கேட்க, அவன் சொன்னான்.. “டேய்!! என் அக்குளை வேணும்னா முகர்ந்து பாக்குறியா???

எவன் எவ்வளவு கேவலமா திட்டினாலும் சாக்கட அசரவேயில்ல... ஒவ்வொரு கடையா போய் கொண்டிருந்தோம்..

இப்படி ஒரு கடையில் அத்தர்(Perfume) தேடிக் கொண்டிருக்கும் போது, சாக்கட சாமில் ஒரு பெட்டியை தூக்கிக் கொண்டு,

மச்சி, இங்க பார்ரா... சூப்பரா இருக்கு... இதுதாண்டா இவ்வளவு நாளா தேடியது... வாவ்.. என்ன ஒரு வாசம்...

எனக்கும் ஒரே சந்தோசம்... ஷப்பா... வீடு போய் சேரலாம்னு......

கடைக் காரரைப் பார்த்து, அய்யா... ஒன்னுக்கு மூனு பெட்டியா பார்சல் பண்ணிக் குடுங்கையா... இவன் இம்ச தாங்க முடியல...

சாக்கட சாமிலின் கையில் இருந்த பெட்டியை பார்த்த, கடை முதளாலியின் முகத்தில் பொறி பறந்தது.... அப்போதுதான் அவரு சொன்னாரு......

..................


..................


..................


..................



டேய்!!!! அது என்னோட சாப்பாட்டுப் பார்சல்’டா....

No comments:

Post a Comment