Wednesday 15 October 2014

கைது செய்யப் பட்ட கருணா....

2005ம் ஆண்டாக இருக்க வேண்டும். Mobile Phoneகள் அனைவரினதும் கைகளில் தவழ ஆரம்பித்திருந்த நேரம். எப்படியோ நம்ம நண்பன் க்ரேஸி வெளிநாட்டில் இருக்கும் அண்ணனின் காலில் கையில் விழுந்து ஒரு போனை வாங்கிவிட்டான். எதுக்கு அவ்வளவு அசிங்கப் பட்டு ஒரு போன் வாங்கனும்????? அப்பொழுதெல்லாம், போன் இருந்தா பொண்ணுக்களை ஈஸியாக மடக்காலாம்னு நம்பிக்கிட்டிருந்த காலம்.

போன் எடுத்ததிலிருந்து க்ரேஸியோட இம்ச தாங்க முடியல. எதோ போன் இருக்குறவன் மட்டும்தான் உலகத்துலயே வாழ தகுதியானனுங்க’ங்குற மாதிரி...... கைல Watch கட்டியிருந்தாலும் போன்லதான் டைம் பார்ப்பாராம்....

ஒரு நாள்.... க்ரேஸி என்னிடம்......

மச்சி... இன்னைக்கு செய்தி கேட்டியா....?

இல்ல மச்சி...  நீ எப்படா செய்தியெல்லாம் கேக்க ஆரம்பிச்ச????

போன் வாங்கினதிலிருந்து உலகமே கைக்குள்ள வந்த மாதிரிடா.... எல்லா செய்தியும் போன்லயே சொல்லிர்ரானுங்க....

போன்ல செய்தி சொல்ரானுங்களா??? டேய்!!! சும்மா பொய் சொல்லாதே.....!!!

கருணா அம்மனை கைது பண்ணிட்டாங்க தெரியுமா????

கருணா அம்மன் புலிகளுடன் இருந்து பிரிந்திருந்த கால கட்டம் அது... அபோதைய நிலவரப்படி க்ரேஸி சொன்னது ஒரு சூடான தகவலே!!!

எப்படா?? எப்படிடா???? உனக்கெப்படிடா தெரியும்????

இதுக்குதாண்டா போன் வச்சிருக்கணும்டு சொல்ரது.. இப்பொழுதான் ஃப்ரண்டு ஒருத்தனுக்கு Call பண்ணும் போது, போனை கட் பண்ணிட்டு “கருணாவை (அம்மன்) பஸ்’சுக்குள்ள அமர்த்தி பிடிச்சுருக்கதா” சிங்களத்துல சொன்னாங்க...

அடப்பாவி... உனக்கு சிங்களமே தெரியாதே!!! எப்படிடா சொன்னாங்க??

“கருணாகர பசுவ அமதன்ன”னு சொன்னாங்க... வேணும்னா அதே ஃப்ரண்டுக்கு மறுபடி Call பண்ணி காட்டவா??? நீயே கேக்குறியா???

அடப்பாவி க்ரேஸி.....   #%$##^#&&#%$@$#%^&@#*@#&@#@%^@#
” கருணாகர பசுவ அமதன்ன”னு சொன்னா கருணாவ பஸ்ஸுக்குள்ள அமத்திட்டானுங்க’னு அர்த்தமில்ல,(Call போரதுல ஏதோ ப்ராப்ளம் இருக்கு) தயவு செய்து பின்னர் அழுத்தவும்’னு அர்த்தம்டா.....

கிர்ர்ர்ர்ர்ர்............

No comments:

Post a Comment