Saturday 7 June 2014

ஸ்மைல் ப்ளீஸ்....


ஆசையே இல்லாமல் வாழனும்’னு புத்தர் ஆசை பட்டார். (உன் கிட்ட சொன்னாரா???) அது போல ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை, மோகம் கட்டாயம் இருக்கும். (உன் ப்லாக் பக்கம் வந்ததுக்கு ஆசயோ மோகமோ காரணமல்ல.. அது எங்க விதி..!!!) சில பேரினது வாழ்க்கையின் போக்கையே அது மாற்றிவிடும். (இப்பவே தலை வலிக்குது... ) சிலரிற்கு கொஞ்ச காலத்தில் மறந்து வேறொன்றிற்கும் தாவி விடுவர். (டேய்.. இப்பவே நான் வேற ப்லாக்குக்கு தாவிட்றேன்...யப்பா.. ஆளை விடு...
 
என்னடா இவன் தத்துவம் எல்லாம் பேசுரானேனு Confuse ஆகிடாதீங்க... (தூக்கதுல உளர்ரதுக்கு பேரு தத்துவமா???) என்ன தத்துவம் பேசி ஆரம்பிச்சாலும், (மொக்கைய போட்டுத்தானே முடிப்பே!!!) நம்ம பதிவு நாம வழமை போல நாம பல்பு வாங்கிய கதையாகத்தான் இருக்கும். (உன் மூஞ்சிக்கு நீ பல்பு வாங்காம பரீட்சைல மார்க்கா வாங்க போறே???)

நம்ம க்ரேஸிக்கு கேமரா மீது ஈடுபாடு ரொம்பவே அதிகம். (கேமரா’ங்குறது பொண்ணு பேரா’னு எவன்யா கேக்குறது???) போட்டோ எடுக்க தெரியுமா’னு கேக்க கூடாது? பயபுள்ள எப்போ பாரு, புதிய கேமரா என்ன வந்திருக்கு?? (அதை யார் கிட்ட ஆடைய போடலாம்???) அதை இயக்குறது எப்படி’னு கேமரா சம்பந்தமான விஷயங்களையே நோண்டிக்கிட்டே இருப்பான். (அதற்குப் பதிலா உன் கண்ண நோண்டியிருந்தா நாமளாவது நிம்மதியா இருந்திருப்போம்...)



ஒரு முறை நானும் க்ரேஸியும், பாப்’ம் அடையாள அட்டை எடுப்பதற்காக (அடி வாங்குறவனுக்கெல்லாம் எதுக்குடா அடையாள அட்டை) ஒரு ஸ்டூடியோவுக்கு போய் போட்டோ எடுத்து விட்டு வந்தோம், அப்புறமா, சில நாட்களில் போட்டோ வீட்டுக்கு வந்தது, ஆனால், க்ரேஸி மாத்திரம் போட்டோவைக் காட்டாமல் மறைத்து விட்டு, வேறு போட்டோ எடுக்கலாம்னு சொல்லிக் கொண்டிருந்தான்.

மச்சி...வேற போட்டோ எடுத்தாலும் இதே மூஞ்சியும் முகரக் கட்டையும்தான் வரப்போகுது. உலகத்துல எவனுக்குடா, அவனோட அடையாள அட்டை போட்டோ  சூப்பரா வந்திருக்கு? அப்புறம் எதுக்குடா வேறு போட்டோ’னு சொல்லியும் பயபுள்ள கேக்குற மாதிரி இல்ல. அந்த போட்டோவில் ஏதோ ஒன்னு இருக்கு’னு புரிந்துகொண்டு நானும் பாப்’ம் க்ரேஸி  ஒழித்து வைத்திருந்த போட்டோவை கண்டு பிடித்த போது, அந்த போட்டோ இப்படித்தான் இருந்தது...



xxxxxx





xxxxxx





xxxxxx







டிஸ்கி: அடையாள அட்டை போட்டோ பக்க வாட்டில்தான் எடுப்பார்கள்

ஆ....... அய்ய்ய்ய்யோ!!!!!... அம்மா....... ஆத்தா.....

அடப்பாவி க்ரேஸி!!! இப்படியாடா போட்டோக்கு போஸ் குடுப்பே!!!! எப்படிடா இப்படி முடிஞ்சது உன்னால......

க்ரேஸி தான் செய்த சாதனையை அசடு வழிய விவரிக்க ஆரம்பித்தான்.
இல்ல மச்சி.... கேமராகாரன் ரொம்ப பழைய வகை கேமராவால போட்டோ எடுத்தானா????, அந்த வகை கேமரா எங்கையுமே காண முடியுரதில்ல. அதனால எப்படி போட்டோ எடுக்குரா’னு அவனுக்கு தெரியாம பார்த்தேன்.. அதுதான் இப்படி ஆகிடுச்சு...

போடாங்.......

No comments:

Post a Comment