இந்த மாத
(September) PIT Photography போட்டிக்கான தலைப்பு “எழுத்துருக்கள்”.
அதாவது, போட்டோவில் தமிழ், அல்லது ஆங்கில எதாவது ஒரு எழுத்துரு தெளிவாக
தெரிய வேண்டும்.என்னிடமிருந்த போட்டோக்களில் சல்லடை போட்டு ஒரு சிலதை
தேடிப் பொறுக்கி எடுத்து அதில்
ஒன்றை அனுப்ப முடிவு செய்திருக்கிறேன். தெரிவு உங்கள் கையில்.....
உங்களுக்கு பிடித்த (தலைப்புக்கு பொறுத்தமான) போட்டோவை சொல்லவும்.
எல்லாமே நல்லா இருக்கு`னு சொல்லிராதீங்க...
(அதுக்கெல்லாம் சான்சே கிடையாது ..Don't Worry)
சில வேளை தலைப்புக்கு பொருத்தமில்லாமல் இருக்கலாம். So, மன்னிச்சூ............
ஒவ்வொரு படத்திலும் என்ன எழுத்துரு இருக்குனு அடைப்புக் குறிக்குல போட்டிருக்கிறேன்.
இந்த
போட்டோவ சுட்டு வேற யாராவது அனுப்பிட்டா என்ன பண்ணுவீங்க`னு கடந்த மாதம்
பீதிய கிளப்பி விட்டுதால இந்த முறை ஒவ்வொரு போட்டோவிலும் நம்ம கம்பெனி Logo
(Mac DG) போட்டிருக்கேன். நம்ம கிட்ட யாரும் வாலாட்ட முடியாதுல்ல..
|
1. ( t )Dubaiஇன் பர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் பக்கத்திலுள்ள ஒரு கட்டிடம். கட்டிட நிர்மான வேலை முடிந்து Tower Craneஐ அகற்றும் காட்சி. |
|
2. ( O ) டுபாயில் எடுக்கப் பட்டது. கூடைப் பந்தாட்டக் கூடை |
|
3. ( O ) அபூதாபி, ஷேக் சையத் மஸ்ஜிதிலுள்ள ஒரு மினாராவின் உற்புரத் தோற்றம் |
|
4. ( H ) நம்ம பயலுகதான்.. ச்சும்மா தமாசு... |
|
5. ( A ) Ibnu Batuta Mall, Jabel Ali Dubai |
|
6. ( Y ) New Zealand Farm, Ambewela, Nuwareliya |
|
7. ( ள ) New Zealand Farm, Ambewela, Nuwareliya |
|
8. ( C ) Terminal 3 Air Port, Dubai |
|
9. ( A ) நீர் பருகுமிடம். ஷேக் சையத் மஸ்ஜித், அபூதாபி |
|
11. ( A ) வாயில்களில் ஒரு வாயில், ஷேக் சையத் மஸ்ஜித், அபூதாபி |
|
12. ( C ) இதன் சரியான பேரு மறந்திடுச்சு.... நம்ம ஊரு |
|
14. ( e ) டுபாய் மால்`இன் ஒரு அலங்கரிக்கப் பட்ட கூரை |
|
15. ( S ) தலவாக்கலை வீதி, இதுல S உருவை காண்பது கஷ்டம்தான்... |
|
16. ( r ) New Zealand Farm, Ambewela, Nuwareliya |
|
17. ( T ) ரயிலுக்கான பிரிட்டிஷ் கால இரும்புப் பாலம், நானு ஓய, நுவரெலிய |
|
18. (Y) St. Clair's Falls, தலவாக்கலை. |
அருமையான தகவல் நண்பா உங்கள் படங்கள் சூப்பர்..
ReplyDeleteஆனால் ஒரு விடயம் உங்கள் கம்பனி லோகோவை...ஒரு மூலையில் போட்டு இருக்கிறீங்க உங்கள் படத்தை காப்பி அடிக்கனும் என்று நினைச்சாங்கனா.அதை ஈசியா குரோப் பன்னி பயன்படுத்தலாம்.என்வே உங்கள் லோகோவை பதிவில் போட்ட படங்களில் நடுவில் போட்டீங்கன்னா.குரோப்பன்ன முடியாது ஏன்னா நடுவில் இருந்தால் எப்படி குரோப்பன்னுவது படம் முழுதாக வராதே..கவனிக்குக.
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
ReplyDeleteஆல் ஃபோட்டோஸ் ஆர் பியூட்டிஃபுல் அன்ட் மீனிங்ஃபுல்/
ஐ லைக் ஆல்!
@ ////K.s.s.Rajh said...
ReplyDeleteஅருமையான தகவல் நண்பா உங்கள் படங்கள் சூப்பர்..
ஆனால் ஒரு விடயம் உங்கள் கம்பனி லோகோவை...ஒரு மூலையில் போட்டு இருக்கிறீங்க உங்கள் படத்தை காப்பி அடிக்கனும் என்று நினைச்சாங்கனா.அதை ஈசியா குரோப் பன்னி பயன்படுத்தலாம்.என்வே உங்கள் லோகோவை பதிவில் போட்ட படங்களில் நடுவில் போட்டீங்கன்னா.குரோப்பன்ன முடியாது ஏன்னா நடுவில் இருந்தால் எப்படி குரோப்பன்னுவது படம் முழுதாக வராதே..கவனிக்குக.
/////
நானும் யோசித்தேன். ஆனால் படத்தின் தன்மை இழந்து விடுமோனுதான் லோகோ`வ மேல் மூலைல போட்டிருக்கேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
ReplyDelete/////வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
ஆல் ஃபோட்டோஸ் ஆர் பியூட்டிஃபுல் அன்ட் மீனிங்ஃபுல்///
ஐ லைக் ஆல்!/////
ஐடியா மணி கிட்டா ஐடியா கேட்டா, ”ஐ லைக் ஆல்!”னு எஸ்கேப்பா????
12 c இதுப்பேரு ஜெனோடெர்மா (Ganoderma ) குருப் ஒரு வகை சாப்பிடும் காளான் :-)
ReplyDeleteபார்க்க விக்கி :http://en.wikipedia.org/wiki/Ganoderma
எப்படித்தான் லோகோவை போட்டாலும் அதை மட்டும் தனியா கழட்டும் பலே கில்லாடிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் .
ReplyDeleteபடங்கள் அருமை :-)
வணக்கம் நண்பா,
ReplyDeleteஅனைத்துப் போட்டோக்களுமே அருமை..
செலக்சன் சூப்பர்,
அம்பேவலப் பாமினைப் போய்ப் பார்க்க வேண்டும் எனும் ஆவலில் உள்ளேன்.
6 -ரொம்ப அசத்தலான பொருத்தம்.
ReplyDeleteபடங்கள் அருமை நண்பா ...
ReplyDeleteபடங்கள் அனைத்தும் சூப்பர்,, முக்கியமாக அந்த இயற்கை காட்சி படங்கள்..
ReplyDeleteஏதாவது போட்டோவ சுட்டு நம்ம பதிவுல போட பார்த்தா உஷாராயிட்டிங்களே..
அனைத்தும் அழகு
ReplyDeleteபடங்கள் அறுமை...
ReplyDelete”ள” எழுத்துக்கு ஆடு கொஞ்சம் தலையை வளைத்திருந்தால் ரெம்ப நல்லா இருந்திருக்கும்...
"A .O .Y . நன்றாய் வந்திருக்கு....
மற்றது லோகோ...
சிறுசா மங்கலா இருக்கே...நீங்க சொன்னதாலதான் அதைப் பார்க்க நேர்ந்தது...
இன்னும் பெரிசா போட்ருந்திச்சு......
எல்லா போட்டோக்களும் அருமை.
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteகுறிப்பிட்டு எந்தப்போட்டோ நல்ல இருக்குன்னு சொல்லன்னு நினைச்சேன் கல்கண்டின் எந்தப்பகுதி இனிப்பா இருக்கும்னு சொல்லமுடியுமா. அதுபோல எல்லா போட்டோவுமே ரொம்ப நல்லா இருக்கு.
ReplyDeleteஅருமையான உழைப்பு. பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
ReplyDeleteநேரமிருக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html
12 வது படம் காளான் என நினைக்கிறேன்.
ReplyDeleteதலவாக்கொல்லைப் படங்கள் ரம்மியமாக மலையகத்தின் பிரதிபலிப்பு. இலங்கையின் மலையகம் எப்போதும் எழிலே!
அருமையான படப்பிடிப்பு!