உலகத்தின் பெண்சுதந்திரம்
உலகம்
கண்ட பெண் சுதந்திரம்
என்ன சுதந்திரமாம்? கண்ணும் , மனதும் கூசும்
பள்ளியிலே ஆரம்பிக்கிறது
பெண் குழந்தைகளின்
சுதந்திரம், அருவருப்பான
பாடலுக்கு ஒரு ஆட்டம்
கேட்டால் பள்ளி இறுதி
கொண்டாட்டம்!
மாநிலத்தில் அழகி போட்டி!
உலகளவில் ஒரு அழகி போட்டி!
பெண்ணின் அங்கங்களை அளந்து
ஒரு பூனை நடை!
ஒரு எலி நடை!
பெண்களின் உடலை மதிப்பிட்டு
மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க
வக்கிரம் கொண்ட ஆண்கள்
புடை சூழ – தாராளமாக
வந்த பெண்ணிற்கு
உலக அழகி (அருவருப்பு)பட்டம்!
உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும்
கழுகுகளுக்கு கிடைத்ததோ
ஒரு அழகி(அருவருப்பு)போட்டி!
அரைகுறை உடையுடன் நடக்க வைத்து
பண முதலைகளின் பொருள்களை விற்க
பெண்களை சந்தைப்படுத்தி
உலக அழகி (சுதந்திர) அடிமை பட்டம்!
கார் விளம்பரமா?
ஆண்கள் பயன்படுத்தும்
பொருள்களின் விளம்பரமா?
இழுத்து வா பெண்ணை
அரைகுறை ஆடையுடன்
நிற்க வை! ஆணுடன்!
கல்லூரியா? ஆணுடன்
பெண்ணையும்
கலந்து படிக்க வை!
பாய் – பிரண்ட்
கேர்ள் – பிரண்ட்
இரண்டும் இல்லையென்றால்
நீ ஒரு பைத்தியம்
இந்த உலகில்!
சிவப்பு விளக்கு
என்ற ஒரு தெரு!
அரசே அங்கீகாரம்
கொடுத்து நடத்தும்
அசிங்கங்கள்!
அசிங்கத்திற்கே
மரியாதை கொடுக்கும்
உலகத்தின் அரசாங்கங்கள்!
வக்கிரம் படைத்தவர்களுக்கு
பெண் என்றால் எல்லாவற்றையும்
துறந்து அலைய வேண்டும்!
வேஷ்டியோடு அலையும்
ஊரில் பேண்ட் போட்டுக்கொண்டு
நடந்தால் ஆச்சர்யம்!
தலைவிரி கோலத்துடன்
செய்தி வாசிக்கும் பெண்!
ஐந்துவயது பெண் குழந்தையின்
ஆடையுடன் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் நடத்தும் பெண்!
இறுக்கமான ஆடை அணிந்து
ஹாய், பாய் – காலேஜ் பெண்!
பெண்ணையே திருமணம்
செய்து கொள்ளும் பெண்!
யாரோடும் வாழ்வேன் – யாரும்
என் சுதந்திரத்தில் தலையிடாதே
நவீன நரகல் பெண்கள்!
இப்படிப்பட்ட கண்ணியமற்ற
சுதந்திரம்(?) பெண்களுக்கு வேண்டுமாம்!
உலகத்தில் உள்ள வக்கிரம்
படைத்தவர்கள் கதறுகிறார்கள்!!!
நாங்கள் கொடுத்த சுதந்திரம்
ஏன் இஸ்லாத்தில் இல்லை?
எரிச்சலில் – அவதூறு
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லையாம்!
இஸ்லாம் வழங்கிய
சுதந்திரத்தை பார்த்து
எங்கள் பெண்கள் போல்
நீங்களும் வந்தால்தான்
நாங்கள் பார்க்கமுடியும்!
இப்படி புர்க்காவோடு வந்தால்
எப்படி? - பற்றி எறிகிறது
அவர்களின் வயிறு!
அந்த கலக்கத்தில்
கீழ்ப்பாக்கத்தில்
இருப்பதற்கு தகுதி படைத்த
உலக அறிவிலிகள் கதறுகிறார்கள்!
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம்
இல்லை என்று!
1432 வருடத்திற்கு முன்பே
இஸ்லாம் வழங்கிய சுதந்திரம்!
வாழ்வதற்கே சுதந்திரம்
பிற மதங்களில் இல்லை!
ஆனால் இஸ்லாத்தில்
வாழ, பேச, படிக்க
வியாபாரம் செய்ய
சொத்துக்களை தன்
பெயரில் வைத்துக்கொள்ள
சுதந்திரம்!
பிடித்த மணமகனை
தேர்வு செய்ய சுதந்திரம்!
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து
பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!
என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!
திருமணத்தில் மஹர் என்ற உரிமை!
தந்தை சொத்தில் உரிமை!
கணவன் சொத்தில் உரிமை!
மகன் சொத்தில் உரிமை!
இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!
உலகில் பெண்ணுக்கு
மனிதன் வழங்கிய சுதந்திரம்
கண்ணியமற்ற அலங்கோலம்!
உலகை படைத்த அல்லாஹ்
வழங்கிய பெண் சுதந்திரம்
கண்ணியமிக்க அந்தஸ்து!
நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட
பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய
பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.
அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 33:59)
தமது பார்வைகளத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும்
நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே
தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக்
கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)
தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும்
அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க
வேண்டாம்.நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால்
வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 24:31)
மஹர் - திருமணத்தின் போது மண மகனால் மண மகளுக்கு குடுக்க வேண்டியது. இது பணமாகவோ, பொருளாகவோ குடுக்கலாம். இதற்கான குறிப்பிட்ட தொகை இல்லை. மணமகளுக்கு தான் விரும்பிய தொகையை கேற்கும் உரிமை இருக்கிறது.
எழுதியவர்:
அலாவுதீன். S.
Copy & Paste By:
புன்னகையே வாழ்க்கை ப்லாக் ஓனர்..
பேஸ்புக்`ல “AlMowilath Islamic library"ங்குர தளத்திலி இருந்து அவர்கள் அனுமதியுடன் எடுக்கப்பட்டது.
இண்ட்லி வாக்குப் பட்டையை காணலையே... என்ன பன்னலாம்????
ReplyDeletecbi-il complaint kudukavum :P
ReplyDeleteநல்ல அருமையான பதிவு..மிகவும் யதார்த்தை சொல்கின்றது.
ReplyDelete//உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும்
ReplyDeleteகழுகுகளுக்கு கிடைத்ததோ
ஒரு அழகி(அருவருப்பு)போட்டி!//
சரியாகச் சொன்னீர்கள் நண்பரே,
பணம் திங்க வேண்டுமென்றால்
ஆயிரம் வழி உண்டய்யா
ஏனிந்த கொலை வெறி உன் நெஞ்சில்
பெண்களின் ஆடை குறைத்து அவர்கள் பூனை நடை
போடுவதில் தான் உன் பண ஆசையை வைக்க வேண்டுமா...
மாற்றிக்கொள் உன் மதியை...
அழகிய சமுதாய சாடலுக்கு
மிக்க நன்றி நண்பரே.
உச்சத்துக்கு போயிட்டிங்க நண்பா
ReplyDeleteஅத்தனையும் அருமை
அருமையான தகவல்...
ReplyDeleteவிருப்பாக இருந்தது...
அனைத்தும் அப்பட்டமான உண்மை
இனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteதற்போது உங்கள் தளம் என் டாஷ்போர்ட்டில் வருகிறது.
உலகளாவிய விற்பனைச் சந்தையில் கவர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பெண்ணின் சதை பற்றியும்,
இஸ்லாம் மதம் பெண்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரம் பற்றியும் கூறும் அருமையான படைப்பினை எம்மோடு பகிர்ந்திருக்கிறீங்க.
மிக்க நன்றி.
முதல் தடவை உங்கள் தளத்துக்கு வருகிறேன், காலதாமதத்துக்கு மன்னிக்கவும். சிந்தனையை தூண்டும் ஒரு ஆக்கத்தை பகிர்ந்திருக்கிறீர்கள், நன்றி நண்பரே.
ReplyDeleteநல்ல பகிர்வு சகோதரா...
ReplyDeleteஅருமையா பதிவு ......
ReplyDeleteநன்றி ...........
மிகவும் அருமையான விடயத்தை கவிதையாக கொடுத்திருக்கிறார்கள்..
ReplyDeleteஉடலை வெளியே காட்டிச்செல்வதுதான் பெண் சுதந்திரம் என்றால் அந்த சுதந்திரம் தேவையில்லைதானே,,
அஸ்ஸலாமு அலைக்கும்...
ReplyDeleteசூப்பர் பதிவு...பகிர்ந்து கொண்டதற்கு ஜசாக்கல்லாஹ் பிரதர்...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
sago arumaiyana padhivu.
ReplyDeleteRaja avargaley youtube-turn to islam sendru paarungal islathai thazhuviya pengal burgavaipatri enna solgiraargal endru therindhu kollungal.
god bless you
kalam
@ kalaam,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மிஸ்டர் ராஜா`வ விடுங்க.... பாவம், வயித்தெரிச்சல்ல சொல்ராரு..