Thursday, 28 July 2011

எங்க ஊரு நல்ல ஊரு..



ஜூலை 28ம் திகதி என் ப்லாக்`கின் (இதெல்லாம் ஒரு ப்லாக்`ஆ) முதலாவது பிறந்த நாள். எனவே, என்ன பண்ணலாம்`னு யோசிச்சுடு இருந்தப்போ, (ப்லாக்`அ இழுத்து மூடிடு. பிறந்த நாளுல சமூக சேவை செய்ததாகிடும்) நன்பர் ரியாஸ் "எங்க ஊரு நல்ல ஊரு" தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறார். நாம ஊருக்காக இதுவர எதுவுமே செஞ்சதில்ல... (இதுக்கு பிறகும் செய்ய போறதில்ல...) இந்தப் பதிவையாலும் எழுதழாம்னு........(ஆமா... இதுதானே நோகாம நோம்பு கும்புடுர வேலை)



எங்க ஊரு பேரு "நிககொள்ள (Nikagolla)" (வாய்ல நுலையலனா விட்ருங்க..அதுக்காக வாழைப்பழம்`னு பெயர் வைக்க முடியாது..) இது இலங்கையின் மத்திய மலை நாட்டில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். எமது மாவட்டத்தில் மிகப் பழைய ஊர்களில் ஒன்றும் கூட. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட ஒரு சமவெளி என்று கூட சொல்லலாம். ஊரின் குறுக்கே ஒரு சிறிய ஆறும் ஓடுகின்றது. (ஆத்துல தண்ணி ஓடுதா`னு கேட்டா எனக்கு கெட்ட கோவம் வரும்????)

எனது வீட்டின் முற்புற தோற்றம்
 மாத்தளை - குருனேகல, மாத்தளை - கலேவல, கண்டி - யாழ்ப்பாணம் இந்த மூன்று பாதையையும் இணைக்கும் ``பைபாஸ்`` பாதையிலேயே எங்க ஊரு அமைந்துள்ளது.(பாதையில ஊர் இருந்தா வண்டி எப்படி போரது`னு யோசிக்க கூடாது) மாத்தளை நகரத்திலிருந்து "செலகம" பஸ்ஸில் குருனேகல வீதியில் 15 கி.மீ தூரம் பிரயாணம் செய்வதன் மூலம் எங்க ஊரை வந்தடையலாம்.

பொன் மாலை பொழுது

கிட்டத்தட்ட 600 குடும்பங்கள் இருக்கலாம். இதில் 100% தமிழ் பேசும் முஸ்லீம்களே வசிக்கிறோம். இருந்தாலும் சுற்றிலும்  தேயிலை, மற்றும் இரப்பர் தோட்டங்களில் வசிக்கும் இந்திய பழங்குடி தமிழ் பேசும் ஹிந்துக்களும் உள்ளனர்.

வயல் வெளி
முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. முக்கியமாக நெல் பயிரிடப்பட்டாலும், இதர காலங்களில் மற்றும் சேனைகளில் தக்காளி, பாவற்காய், கத்தரி, வெண்டிக்காய், மிளகாய், மரவள்ளி போன்ற மரக்கரிகளும் பயிரிடப் படுகின்றன. முன்பு அதிகமானோர் புகையிலை பயிரிட்டனர். இப்போது ஒரு சிலரே புகையிலை பயிரிடுவது சந்தோசமான விடயெமே. ஆங்கிலேயர் காலத்தில் நம் ஊர் முழுவதும் இரப்பர் தோட்டங்களாக இருந்ததாக தந்தையிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆங்கிலேயர் வசித்த பங்களா`க்களும் ஊருக்குள் இருக்கின்றது. இப்போது இரப்பர் தோட்டங்கள் அழிக்கப் பட்டுவிட்டன. அனைத்தும் தென்னந் தோட்டங்கள் ஆகிவிட்டன. முன்பு அதிகமாக இருந்த கொக்கோ மரங்களும் இப்போது காண்பது ரொம்ப அரிதாகிவிட்டது. ஒவ்வொரு தோட்டங்களிலும் மிளகு, கோப்பி, கராம்பு போன்றவை கட்டாயமாக இருந்து வருகிறது. இப்போது அரசாங்கத்தால் கருவா, ஏலம், சாதிக்காய் போன்றவை பயிரிட உதவியும் ஆர்வமூட்டவும் படுகிறது.

தக்காளி (பொது அறிவு வளர்ச்சிக்காக...)

மக்களில் அதிகமானோர் வெளி மாவட்டங்களில் தொழில் செய்பவர்களே. ஊரில் உள்ள அனைவைரையும் பெருநாள் தினங்களிலேயே பார்க்க முடியும். இது போக சிறு கைத்தொழில்களும், கால் நடை வளர்ப்பு போன்றவையும் உண்டு.


50 வயதையும் தாண்டிய மாவட்டத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்ற, உயர் தரம் வரை படிக்கக் கூடிய வசதியுடன் மின்ஹாஜ் மஹா வித்தியாலயம் எனும் பெயருடைய பாடசாலையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பாடசாலை மட்டத்தில் நடக்கும் முக்கிய போட்டிகளில் நம்ம ஊர் பாடசாலை பெயரை கேட்டாலே அடுத்த பாடசாலைகளுக்கு பேஸ்மண்ட் வீக்காயிடும். அவ்வளவு திறமையான மாணவ, மாணவிகளை கொண்ட பாடசாலையாகும்.
காலை வேளை (ஊர் சார்ந்த பகுதி)

ஒவ்வொருவரும் அந்த ஊர்களில் பிறந்த பெரியவர்களை பற்றி எழுதி இருக்கின்றனர். எனக்கும் எழுதும் ஆசை இருந்தாலும்,  என் ஊரில் எந்தப் பெரியவருமே பிறந்ததில்லை என்பதும் எல்லாம் குழந்தைகளாகவே பிறக்கின்றனர் என்பதும் முக்கிய விடயமாகும். (விடுப்பா.. விடுப்பா... மனிதன்னு  பொறந்தா மண்டைய போடுரதும் பதிவுனு வந்துட்டா மொக்கைய போட்ரதும் சகஜமப்பா...)

குடி நீர் வசதிக்காக ஒரு சில திட்டங்கள் போடப்பட்டாலும், திட்டம் போட்டவர்களை தவிர எவருக்கும் நன்மை பயக்காததால், அனைவரும் கிணற்றையே நம்பி உள்ளனர். விவசாயத்திற்கு சிறியதொரு குளம் இருந்தாலும், மழை மற்றும் ஆற்று நீரே பயன்படுகிறது.

மக்களில் அனேகமானோர் நடுத்தர வர்க்கத்தினரே வாழ்கின்றனர்.  திருமண பந்தங்கலை பொறுத்தவரை ஊருக்குள் கலப்புத் திருமணங்கள் அரிதாகவே நடக்கின்றன. அனேகமானோர் ஊரை அண்டிய வெளியூர்களிலும் சிலர் தூர ஊர்களில் திருமணம் செய்துள்ளனர்.

விளையாட்டை பொறுத்த வரை இளைஞர்களில் ஒரே தெரிவு கிரிக்கட்`ஆகவே இருக்குறது. சில காலங்களில் உதைப் பந்தாட்டமும் விளையாடப்படும்.

இன்னும் ஊரைப் பற்றி நிறைய சொல்ல முடியுமாக இருந்தாலும் பதிவின் நீளம் எண்ணி இத்தோடு முடிக்கிறேன்.

24 comments:

  1. உங்கள் வலைப்பூவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    //வாய்ல நுலையலனா விட்ருங்க..அதுக்காக வாழைப்பழம்`னு பெயர் வைக்க முடியாது.// ;)))

    வழமைபோல் படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  2. good to see you

    zeerazy

    ReplyDelete
  3. ஆமா அழகாய் ஊரப்பற்றி சொல்லியிருக்கிறீங்கள்:...
    அழகான படங்கள்...
    பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. super photos ...
    super presentation
    congrats

    ReplyDelete
  5. happy birthday ...to smiling blog

    ReplyDelete
  6. ஊரை பற்றி எழுதும் போது குழந்த மனசு வெளிப்படுகிறது ( ஆண்டு 5 கட்டுரை மாதிரி எண்டு சொல்ல வரேல )

    வலைப்பூவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //ஊரின் குறுக்கே ஒரு சிறிய ஆறும் ஓடுகின்றது.//
    அதிசய ஊர் தான்... 7 8 9 10 லாம் ஓடுமா? இல்ல ப்ரேக்ட்டவுன் ஆச்சா? :))

    ReplyDelete
  8. //மாத்தளை - குருனேகல, மாத்தளை - கலேவல, //

    இதுவும் வாய்ல நுழையலை....

    ReplyDelete
  9. @ விடிவெள்ளி


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  10. @ ரியாஸ் அஹமது said...

    // super photos ...
    super presentation
    congrats//

    நன்றி நன்பா.....

    ReplyDelete
  11. @கவி அழகன் said...

    ///ஊரை பற்றி எழுதும் போது குழந்த மனசு வெளிப்படுகிறது///

    நான் இன்னும் குழந்தைதானே!! ஹி...ஹி...

    ReplyDelete
  12. @ //மாத்தளை - குருனேகல, மாத்தளை - கலேவல, //

    இதுவும் வாய்ல நுழையலை.... ////

    என்ன பண்ணலாம்????
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  13. அட தொடர்பதிவெல்லாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள் நண்பா.. நான் எப்ப எழுத போர்னோ தெரியல

    ReplyDelete
  14. உங்க பிளாக்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  15. // தக்காளி (பொது அறிவு வளர்ச்சிக்காக...)//

    இதான் தக்காளியா பாஸூ..!!!

    நானும் கூகுள்., என்சைக்ளோபீடியா.,
    விக்கிபீடியான்னு எல்லாத்துலயும் தேடி பார்த்துட்டேன்..
    ஆனா தக்காளி இப்படி தான் இருக்கும்னு
    என் அறிவு கண்ணை திறந்து வெச்சதே உங்க
    பிளாக் தான்.. பன்றி., சாரி.. நன்றி..!

    ReplyDelete
  16. // திட்டம் போட்டவர்களை தவிர எவருக்கும் நன்மை பயக்காததால், அனைவரும் கிணற்றையே நம்பி உள்ளனர்.//

    நக்கல் அதிகம் சார் உங்களுக்கு. அதே மாதிரி உங்க ஊருக்கும் அழகு அதிகம்.

    ReplyDelete
  17. அழகாய் ஊரப்பற்றி சொல்லியிருக்கிறீங்கள்:...
    நல்ல நடை...அழகான படங்கள்...

    பதிவிற்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  18. வாவ் அழகான ஊர் அழகான புகைப்படங்கள்..

    நானும் உங்க ஊருக்கு வந்திருக்கேன்..

    தொடர்பதிவை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி,, நாந்தான் வர லேட்டாயிட்டன்,,

    ஏன் தமிழ்மனத்துல இனைக்கல்ல..

    ReplyDelete
  19. //(வாய்ல நுலையலனா விட்ருங்க..அதுக்காக வாழைப்பழம்`னு பெயர் வைக்க முடியாது..) //

    வாலை பலம்ன்னுதான் பலதடவை நுலையுது . ஹி..ஹி. :-)) இலங்கையின் பல பெயர்கள் வாயில் நுழையவே கஷ்டப்படும் .

    ReplyDelete
  20. //அந்த ஆறு ரொம்ப கஷ்டத்துல ஓடிட்டு இருக்கு. விட்ருங்க.//

    அப்ப ரெண்டு மூனு மூனா ஆக்கிட்டுங்க கஷ்டமில்லாம் ஓடும் :-)

    ReplyDelete
  21. ஊர் அழகாயிருக்கிறது.
    பிறந்த நாள் வாழ்த்துகள்... வலைப்பூவிற்கு.

    ReplyDelete
  22. ((மத்திய மாகாணத்திலேயே முதல் முதல் முழுக் குர்`ஆஅனை ஓதி தராவீஹ் தொழும் முறை எங்கள் ஊரிலேயே ஆரம்பிக்கப் பட்டது என்பதாக கே ள்விப்பட்டிருக்கிறேன். )) ஏம்பா பாயிக்கு இது கொஞ்சம் ஓவரா இல்ல!?. நெஸ்த்துக்குமா? - நஸீம் முஸ்தபா

    ReplyDelete
  23. @ நஸீம் முஸ்தஃபா...

    ///((மத்திய மாகாணத்திலேயே முதல் முதல் முழுக் குர்`ஆஅனை ஓதி தராவீஹ் தொழும் முறை எங்கள் ஊரிலேயே ஆரம்பிக்கப் பட்டது என்பதாக கே ள்விப்பட்டிருக்கிறேன். )) ஏம்பா பாயிக்கு இது கொஞ்சம் ஓவரா இல்ல!?. நெஸ்த்துக்குமா? - நஸீம் முஸ்தபா ///

    கேள்விப் பட்டதுதான்... உண்மையாக இருக்கலாம்...

    ReplyDelete
  24. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete