Saturday, 17 September 2011

நாங்கெல்லாம் வில்லேஜ் விஞ்ஞானிங்க...

இதையெல்லாம் பாத்து பயந்துராதீங்க... வழமை போல மொக்கைதான்..

நம் ஊர்களில் சில பழக்க வழக்கங்கள் பொதுவாக இருக்கும். அதில் அனேகமானவை மூட நம்பிக்கைகளாக கூட இருக்கும். இன்னும் சில விஞ்ஞானத்துடனே வீம்பா விளையாடக் கூடியதாக இருக்கும். சில பழக்க வழக்கங்கள் என்ன காரணம் என்று தெரியாமலே முன்னோர்கள் செய்த ஒரே காரணத்திற்காக செய்பவையும் உண்டு.

சின்ன வயசில் பார்த்திருக்கிறேன், வயல்களில் Cassateகளில் உள்ள ரீல்களை குறுக்கும் நெடுக்குமாக கொடி போல் கட்டி இருப்பார்கள். அது காற்று வீசும் போது ஒரு வினோதமான சத்ததை உருவாக்கும். இதன் மூலம் பயிரை நாடி வரும் பறவைகள் மற்றும் கால் நடைகளை விரட்டுது நோக்கமாகும். (இதுக்கு பேருதான் விஞ்ஞானத்தோடு வீம்பா விளையாடுரதா????) புதிதாக கட்டும் வீடுகளில் பொம்மைகளை வைப்பர். இது மக்களின் பார்வையை திசை திருப்பி கண் திருஷ்டியிலிருந்து பாதுகாக்கும் உத்தியாகும். இப்படி பல உண்டு....

ஆனால், எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு, அது என்னதுன்னா,  நம் ஊர்களில் பழ மரங்களில் பூ பூத்து, பிஞ்சாகி, காயாகி, பழமாகும் வேலையிலே (உங்க ஊர்ல மட்டும்தான் இப்படி நடக்குதா???) பழங்களை ஒரு பையால் சுற்றி வைப்பர். அது எதுக்கு`னுதான்....ஒரு நாள் நானும், க்ரேஸி, பொப், காமராசு, டட்ஸன், புள்ளி ராஜா போன்ற நன்பர்களும் மேலதிக வகுப்புக்கு போய் வந்து கொண்டிருந்த வேளை, தூரத்தில் ஒரு மா மரத்தில் காய்த்த, பழுத்த பழங்களை பைகளால் கட்டி வைத்திருந்தனர். (பைல கட்டி வச்சிருந்தா அது பழுத்ததா, காயா`னு எப்படி தெரியும்`னு கேக்க கூடாது. அதுக்கெல்லாம் ரொம்ப அனுபவம் வேணும்) இதை பார்த்ததும் நம்ம புள்ளி ராஜாவுக்கு அறிவுப்பசி வந்துடுச்சு (பழத்தை பார்த்ததும் என்ன பசி வந்திருக்கும்`னு நம்மளுக்கு தெரியாதா???) . நம்மள பார்த்து ”இப்படி ஏன் பண்ராங்க`னு” கேட்க, நம்ம பசங்க ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அனுமாங்களை தட்டி விட்டனர்.


காமராசு:-
மச்சீ... அது அணில், குரங்கு, பறவைகள் பழத்த சாப்பிட்ராம இருக்கத்தான் அப்படி கட்டி வச்சிருக்கானுங்கடா...

பொப்:-
இல்லடா... அது கண் திருஷ்டில இருந்து பாதுகாக்கத்தான் அப்படி ஒரு வேலை பண்ணி இருக்கானுங்க...

நான்:-
பழம் சீக்கிரமாக பழுக்குரதுக்காக அப்படி பண்ணி இருக்கானுங்கடா...
(மூடி வைப்பதன் மூலம் CO2 செறிவடைவதால் பழம் சீக்கிரமாக பழுத்து விடும்)


க்றேஸி:-
திருடன் எவனும் ஆட்டைய போட்டுட கூடாதுள்ள.. அதுதான்யா அப்படி பண்ணி வச்சிருக்காங்க..  (இவர் சொல்வது கற்கள், கட்டைகளின் மூலம் பழம் பறிக்கும் பொடிப் பசங்க)

டட்ஸன்:-
அப்படியெல்லாம் இல்ல மச்சி... பழம் பழுத்து கீழே விழுந்தா வேஸ்ட் ஆயிடும்ல.... அதற்காகத்தான் அது ஒரு பாதுகாப்பு உத்தி.

நானும் இன்று வரை யோசிச்சுகிட்டே இருக்கேன். (உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா????) இதுல எது சரியா இருக்கும்`னு... ஆனா இன்று வரை புரியவே இல்ல..

17 comments:

 1. இதில் நீங்க மட்டும் கொஞ்சம் விஞ்ஞான ரீதியா
  சிந்திச்சது போல தெரியுது....
  ஆனாலும் இப்படி ஒரு சிந்தனை
  உங்களுக்கு வந்ததுக்கு முதலில் வாழ்த்துக்கள்....
  இதில் ஆயிரம் காரணம் சொன்னாலும்
  உங்கள் நண்பர் பொப் சொன்னதுதான் நம்மவர்கள்
  மனதில் இருந்தது என்பது என் தாழ்மையான கருத்து......

  ReplyDelete
 2. ”பழம் சீக்கிரமா பழுக்க” எந்த ஊர்லடா பழம் பழுக்கும். காய் தான் பழுக்கும்.... இதுல நிச்சயமா க்ரேஸி சொன்னதுதான் correct..ஏன்னா கட்டி வெக்காத பல பழங்களை ஆட்டய போட்ட அனுபவத்துல இருந்து சொன்ன மாதரி இருக்கு......
  zeerazy

  ReplyDelete
 3. @ மகேந்திரன் said...
  //இதில் நீங்க மட்டும் கொஞ்சம் விஞ்ஞான ரீதியா
  சிந்திச்சது போல தெரியுது....
  ஆனாலும் இப்படி ஒரு சிந்தனை
  உங்களுக்கு வந்ததுக்கு முதலில் வாழ்த்துக்கள்....///
  நாம் ஒன்னும் பெருசா கண்டு பிடிக்கல.. எங்கேயோ படித்த ஞாபகம்..

  ///இதில் ஆயிரம் காரணம் சொன்னாலும்
  உங்கள் நண்பர் பொப் சொன்னதுதான் நம்மவர்கள்
  மனதில் இருந்தது என்பது என் தாழ்மையான கருத்து...... ///

  இதுவும் சரியாத்தான் இருக்கு...

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 4. நானும் பொப் சொன்னது தான் சரி என்கிறன்

  ReplyDelete
 5. @ Zeearzy..

  ///”பழம் சீக்கிரமா பழுக்க” எந்த ஊர்லடா பழம் பழுக்கும். காய் தான் பழுக்கும்.... இதுல நிச்சயமா க்ரேஸி சொன்னதுதான் correct..ஏன்னா கட்டி வெக்காத பல பழங்களை ஆட்டய போட்ட அனுபவத்துல இருந்து சொன்ன மாதரி இருக்கு......
  zeerazy ////

  அடப்பாவி.. அடங்குடா.. நீயே உன்ன காட்டி குடுத்துருவ போலிருக்கே!!!

  ReplyDelete
 6. @ கவி அழகன் said...

  ///நானும் பொப் சொன்னது தான் சரி என்கிறன்///

  காட்டு விலங்குகல விட நம்ம ஆளுங்கட பார்வையே மோசமானது`னு சொல்ரீங்க.. அதுவும் சரியாத்தான் இருக்கு...

  ReplyDelete
 7. (பைல கட்டி வச்சிருந்தா அது பழுத்ததா, காயா`னு எப்படி தெரியும்`னு கேக்க கூடாது. அதுக்கெல்லாம் ரொம்ப அனுபவம் வேணும்)

  சாதாரனமா...ஐயாவுக்கு எத்தனை வருட அனுபவம் இருக்கும்.....???

  ReplyDelete
 8. “மிஸ்டர் பொப்” சொன்னதுக்காகத்தான் பெரும்பாலானவர்கள் கட்டி வெக்கிறாங்க....

  ஆனால் உண்மைக் காரணம்
  “மிஸ்டர் நான்” சொன்னதாகத்தானிருக்கும்...

  ReplyDelete
 9. நானும் எங்க ஊர்களில் இப்படி செய்யும் போது யோசித்து பார்ப்பேன் ஆனா எனக்கு புரியவே இல்லை

  ReplyDelete
 10. என்னவெல்லாம் வெச்சு பதிவு போடுதாங்கப்பா.. ஸ்ப்பாஆ

  அதுல நீங்க சொன்னத தவிர மற்ற எல்லாம் ஓக்கே..

  ReplyDelete
 11. உங்க நண்பர்கள்தான் விலா வாரியா விளக்கம் கொடுதிருக்காங்களே. அப்புரமும் ஏன் யோசிக்கிரீங்க.?

  ReplyDelete
 12. மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும் ....

  நீர் ஒரு வாழும் ஐன்ஸ்டீன் அய்யா....

  ReplyDelete
 13. நீங்க மட்டும் கொஞ்சம் விஞ்ஞான ரீதியா
  சிந்திச்சது போல தெரியுது....

  ReplyDelete
 14. அட! பழசை எல்லாம் ஞாபக படுத்திட்டீங்க. கொய்யா, மாதுளை, சிலபேர் வாழை குலைக்கு கூட கட்டுவாங்க.

  ReplyDelete
 15. என் கடமையை செய்திட்டன் பிரதர்

  ReplyDelete
 16. ஐன்ஸ்டீன் எடிசன் ரேஞ்சுக்கு யோசிக்கிறீங்களே..நண்பரே...

  ReplyDelete
 17. கடைசியாக உங்கள் நண்பர் டட்சன் சொன்ன விளக்கம் தான் சரி.

  ReplyDelete