Friday, 1 July 2011

"சிங்கப்பூர் நூடுல்ஸ்" அதிரடி செய்முறை விளக்கம்
2004, டிசம்பர்’ சுனாமி வந்து போன சமயம், (அதென்ன விருந்தாளியா?? வந்து போறதுக்கு.....) அதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்க்கவென கூட்டம் கூட்டமாக போக ஆரம்பித்த சமயம் (லட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப் பட்டிருந்தாங்களே.... அவங்க கதி????) நாமளும் போகலாமென, கூட்டத்தோடு கூட்டமா நாமளும் சேர்ந்த்தாச்சு. (எங்கயாவது கூட்டம் சேர்ந்த்தா நாமளும் அங்கு போய் எட்டிப் பார்க்கிறது, நம் கடமை)

போன இடத்தில் சாப்பாடு சமைக்க ஒவ்வொரு நாளும் சமைக்க தெரிந்தவர் ஒருவர், எடு பிடி வேலைக்கு ஒருவர் என இரண்டு பேர் கொண்ட குழுவை (ஜோடி) போடப்பட்டது. எனது குழுவில் க்ரேஸி சமையலுக்கும், என்னை எடு பிடி வேலைக்கும் போடப் பட்டது. நாம சமைக்க வேண்டிய நாள் கடைசியில் இருந்ததால், நாம் அதைப் பற்றி கவலைப் படாம எவர்? எது? எவ்வளவு சூப்பரா சமைத்தாலும், அது நொல்ல, இது நொல்லனு கடுப்பேத்திடு இருக்க, நாம சமைக்க வேண்டிய நாளும் வந்துடுச்சு….. (எல்லானுமே உண்ணாவிரதம் இருந்திருப்பானுங்களோ!!!!)

நாமளும் ரொம்ம்ம்ம்ப யோசித்து, கடைசில, நூடுல்ஸ் செய்ரதா முடிவு பண்ணியாச்சுக்ரேஸி வழமை போல ஒரு கோக்கு மாக்கு வேலை பார்த்துடுவான் என்பதால, அவன் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருந்த்தேன், க்ரேஸி நூடுல்ஸ் செய்ய, நான் திருகிய தேங்காய் பூவை பிழிந்து விட்டு சக்கையை குப்பையில் போட போக, க்ரேஸிய பராக்கு பார்த்துக் கொண்டே போய், நூடுல்ஸ் கொட்டி விட்டேன்

தேங்காய் துருவும் செய்முறை விளக்கம் (என் ப்லாக் படிச்சா அறிவு வளரும்)

இதைப் பார்த்த க்ரேஸிக்கு பல்ஸ் எகிறிடுச்சுதெரிந்த கெட்ட வார்த்தையாலெல்லாம் அபிஷேகம் நடத்தி முடிக்க,(செஞ்ச வேலைக்கு டிக்சனரிய பாத்து திட்டி இருந்த்தா கூட தப்பில்லை) இப்போ என்ன பண்ணலாம்???’னு யோசித்தோம். புதுசா வாங்கி சமைக்க பணமும் இல்லை, நேரமும் இல்லை, ஏற்கனவே நம்ம மேல கடுப்புல இருக்கானுங்க.’னு LOCK இல்லாத டாய்லெட்’ல குந்தினது போல ஒரே டென்சன். என்ன பண்ணலாம்’னு தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்க, க்ரேஸி ஒரு ஐடியா சொல்ல, என் முகத்துல ஆயிரம் மின்னல்கள்(இப்போ மின்னல்.. கொஞ்ச நேரத்துல இடி விழப் போகுதுல்ல....) அப்படியே பண்ணலாம்’னு முடிவு பண்ணியாச்சு… (அது என்ன ஐடியானு இங்கேயே சொல்லிடா கதைல ஒரு டுவிஸ்டு இருக்காதுல்ல....) (கதையே இல்ல...அதுல டுவிஸ்டு கேக்குதா????)

சாப்பாட்டு நேரம் ஒவ்வொருத்தரும் வந்து அமரும் நேரம் பார்த்து, நான் ஒரு மூலையிலும், க்ரேஸி அடுத்த மூலையிலும் அமர்ந்து கொண்டு (ஓடுரதுக்கு வசதியா இருக்குமே!!!!) நம் திட்டத்தை அமுல் படுத்த ஆரம்பித்தோம்

தேங்காய் துருவலில் இருந்து பால் பிழியும் செய்முறை (என் ப்லாக் படிச்சா அறிவு வளரும்)


நூடுல்ஸ்ஸை பார்த்து ஒவ்வொருத்தர் முகமும் டெரர் ஆகும் நேரம் பார்த்து, க்ரேஸி சத்தமாகமச்சி, "சிங்கப்பூர் நூடுல்ஸ்" சூப்பரா வந்துருக்குல்ல…”னு சவுண்டு விட,  நாம யாரு??? எங்க மாமா சிங்கப்பூர் 5 ஸ்டார் ஹோட்டல் Chief Cook ஆச்சேஅவர் கிட்ட இருந்து படிச்ச வித்தைடா இது.. பின்னிடோமுள்ள..”னு சவுண்டு விடடெரர் ஆகின மூஞ்செல்லாம் சிங்கப்பூர் நூடுல்ஸ் சாப்பிடுர ஆரவம் வந்துடிச்சு....

சாப்பிட்டு முடிய, சில சாப்பாட்டு ஆர்வலர்கள் செய்முறை விளக்கம் கேட்க, அவர்களை சமாளிக்க பெரும் பாடாகிடுச்சு….

13 comments:

 1. சாப்பாட்டு விஷயம் நமக்கு நல்ல தகவல் தான். ஆனால் இப்படி எல்லாம் சென்சார் செய்யாத
  படங்களைப் போட்டு மக்களை கவரணும் என்று நினைத்தால்.... அவ்வ்வ்வ்!!

  ReplyDelete
 2. // (என் ப்லாக் படிச்சா அறிவு வளரும்) //

  அப்ப நீங்க உங்க பிளாக் எழுதறதோட
  சரியா.?படிக்கறதெல்லாம் இல்லையா.?!

  ReplyDelete
 3. // LOCK இல்லாத டாய்லெட்’ல குந்தினது
  போல ஒரே டென்சன். //

  வாரே வாவ்.. என்னா உவமை..
  என்னா உவமை..!

  வருங்காலத்தில் நீர் ஒரு பாலகுமாரன்
  போலவோ., சாண்டில்யன் போலவோ.,
  ஜெயகாந்தன் போலவோ பெரிய
  எழுத்தாளரா வருவீர்கள் என்று உங்கள்
  எழுத்து நம்பிக்கை தருகிறது..!

  ReplyDelete
 4. @ எம் அப்துல் காதர் said...
  ///சாப்பாட்டு விஷயம் நமக்கு நல்ல தகவல் தான். ஆனால் இப்படி எல்லாம் சென்சார் செய்யாத
  படங்களைப் போட்டு மக்களை கவரணும் என்று நினைத்தால்.... அவ்வ்வ்வ்!! ///
  self sensor பண்ணிக்க சொல்லி அப்பிடியே விட்டுட்டேன்...

  ReplyDelete
 5. @ வெங்கட் said...
  ///
  // (என் ப்லாக் படிச்சா அறிவு வளரும்) //

  அப்ப நீங்க உங்க பிளாக் எழுதறதோட
  சரியா.?படிக்கறதெல்லாம் இல்லையா.?!//

  என் ப்லாக் படிச்சதாலதானே நீங்க இவ்ளோ அறிவாளியா இருக்கீங்க... உங்கள மாதிரி ஒருத்தர் போதுமே தல...

  ReplyDelete
 6. @ வெங்கட் said..

  ///வருங்காலத்தில் நீர் ஒரு பாலகுமாரன்
  போலவோ., சாண்டில்யன் போலவோ.,
  ஜெயகாந்தன் போலவோ பெரிய
  எழுத்தாளரா வருவீர்கள் என்று உங்கள்
  எழுத்து நம்பிக்கை தருகிறது..! ////

  சாரு நிவேதா’வ சொல்லிடுவீங்களோ’னு பயந்துட்டேன்.....

  ReplyDelete
 7. // சாரு நிவேதா’வ சொல்லிடுவீங்களோ’னு பயந்துட்டேன்..... //

  சாருவும் அதுக்கு தான் பயந்துட்டே இருந்தாராம்..!

  ReplyDelete
 8. @ வெங்கட் said...

  /// // சாரு நிவேதா’வ சொல்லிடுவீங்களோ’னு பயந்துட்டேன்..... //

  சாருவும் அதுக்கு தான் பயந்துட்டே இருந்தாராம்..!///

  அந்தப் பயம் இருக்கட்டும்.......

  ReplyDelete
 9. ஐயோ ஐயோ எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு
  இருந்தாலும் நீங்க கெட்டிக்காரர்
  --

  ReplyDelete
 10. ////ஐயோ ஐயோ எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு
  இருந்தாலும் நீங்க கெட்டிக்காரர் ///

  அது உலகத்துக்கே தெரியுமே!!!!

  ReplyDelete
 11. nalla samaiyal pathivu..
  samaiyalil nEngka puliya? hahaha....
  valththukkal..


  can you come my said?

  ReplyDelete