இங்கு உலகத்தரமான பதிவுகளை தேடாதீர்கள். என் சொந்த அனுபவங்களை கொஞ்சம் ரைமிங்’காகவும், டைமிங்காகவும் இருக்கட்டுமே என சிறிது கற்பனையும் கலந்து எழுதி வருகிறேன்.
Tuesday, 19 July 2011
வசூல் ராஜா Vs புள்ளி ராஜா
நான் படித்த பாடசாலையில் (நீ எப்படா படிச்சே’னு யோசிக்கிரவங்க நான் சென்று வந்த பாடசாலை’னு வாசிக்கவும்) நிறைய வெளியூர் மாணவர்கள் படித்தனர். பாடசாலையை சுற்றியுள்ள அனேகமான வீடுகளில் மாணவர்கள் தங்கியிருந்தனர். வீடு வாடகைக்கு விடுவதன் முலம் வீட்டுக்காரர்களுக்கு சிறு வருமானம் வந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு வருமானம் வருதோ இல்லையோ, நமக்கு கட்டப் பஞ்சாயத்து (ராகிங்) மூலம் வருமானம் வந்து கொண்டிருந்தது. நம்ம ஏரியாவுக்கும் புதுசா ஒருத்தன் எண்ட்ரி ஆனாலும் நாமளும் அங்கு எண்ட்ரி ஆகி நமக்கு வர வேண்டியதை ஷார்ப்பா கரந்துடுவானுங்க நம்ம பயலுங்க.
இலங்கையின் எல்லா பகுதியில் இருந்து மாணவர்கள் வந்தாலும், வடக்கு, கிழக்கிலிருந்து வரும் பார்ட்டி’தான் ரொம்ப விஷேசம். கொஞ்சம் உலுக்கினா பைசாவும் கொட்டோ கொட்டுனு கொட்டும். சிங்களம் தெரியாமலும் இருக்குறதால ஈஸியா மடக்கிடலாம்.
இப்படி காலம் போய் கொண்டிருக்கையில், கிழக்கிலிருந்து வந்த ஒரு பையன் தங்கியது நம்ம நன்பன் க்ரேஸி வீட்டுல. பயபுள்ள ரொம்ப பெரிய பார்டி’னு பார்த்தாலே புரிஞ்சுது. ஆனாலும் க்ரேஸி வீட்டுல இருந்தால ஒன்னும் பண்ண முடியல. பார்ட்டி புதுசா இருக்கும் போதே கறந்துடனும் பழசாயிட்டான்னா, அப்புறம் வேலைக்காகாது.
அதுகாக நாம ரெடி பண்ணின ஆளுதான் “புள்ளி ராஜா”. பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.... யாரும் பயந்துடாதீங்க. அவன் பேரு ராஜா. நம்ம கேங்’ல ஒரு முக்கிய புள்ளிங்குரதால “புள்ளி ராஜா”னு செல்லமா கூப்பிடுவோம். (இப்படி கூப்பிட்டால்தான் பயளுக மிரளுரானுங்க....)
புள்ளி ராஜா பற்றிய ஒரு சிறிய விளக்கம், இவர் கண்டி நகரத்துக்கு பக்கதுல உள்ள ஒரு சிற்றூர்ல இருந்து வர்ரதாலயும், கண்டியிலுள்ள ரௌடிகளுடைய பெயர்களை மனப்பாடம் பண்ணி வச்சிருப்பதாலயும் இவரும் ஒரு மிகப் பெரிய ரௌடி’னு வாண்டட்’ஆ காலேஜ் பூரா கதை பரப்பியிருந்தோம். அதனால நம்ம ஆளைக் கண்டாலே காலேஜ் நடுங்கும்.
நம்ம ஆபரேஷன் ஆரம்பமானது (செய்யுர கேப்மாரி வேலைக்கு இவ்ளோ பில்ட்-அப்’ஆ???). நாம டார்கெட் பண்ணின ஆளு, எப்போ வெளியே போறான், எப்போ வாறான்’னு க்ரேஸியிடம் இருந்து நியூஸ் வந்துகொண்டிருக்க சரியான தருணத்தில் நாம போட்ட திட்டத்தின் படி புள்ளி ராஜா களத்தில் இறங்கி ஆளை மடக்கி, உருட்டி, மிரட்டி பெரிய அமௌண்ட் கரந்தாச்ச்சு. அடுத்த ஒரு வாரம் நம்ம கேங்’க்கு திருவிழா கொண்டாட்டம்தான்.
அந்தப் பையன் நம்மிடமே வந்து “ஒரு ரவுடி அவன ராகிங் பண்ணினதா சொல்லி அழுததும், நாம அவனுக்கு ஆறுதல் சொன்னதும் வேறு கதை.
டிஸ்கி 1: என் கதைகளில் வரும் நன்பர் “க்ரேஸி” குறிப்பிட்ட ஒரு நபரை குறிப்பதல்ல.. சில வேலை அது நானாகவும் இருக்கலாம்.(அதுக்காக இந்தக் கதைல வரும் க்ரேஸியும் நானாக இருக்கும்’னு நம்பக் கூடாது)
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
மவனே செய்யாத கூத்தெல்லம் செய்திருக்க
ReplyDeleteபாவம்டா
@ kavi alahan
ReplyDelete///மவனே செய்யாத கூத்தெல்லம் செய்திருக்க
பாவம்டா ///
அதெல்லாம் கண்டுக்க கூடாது.. ஏன்னா, அது வாலிப வயசு...
வழக்கம் போல...
ReplyDeleteஆரமபம் அமர்க்களமா இருக்கு..
ஆனா Finishing சப்னு இருக்கு..!
இன்னும் பயிற்சி தேவையோ..?!!
// அவன் பேரு ராஜா. நம்ம கேங்’ல ஒரு
ReplyDeleteமுக்கிய புள்ளிங்குரதால “புள்ளி ராஜா”னு
செல்லமா கூப்பிடுவோம். //
அப்ப " புள்ளி ராஜா " உங்க நண்பர் தானா..??!
ஒரு 4 வருஷத்துக்கு முன்னாடி
மொத்த தமிழ்நாடும் இவரை தான்
தேடிட்டு இருந்தது..!
////வழக்கம் போல...
ReplyDeleteஆரமபம் அமர்க்களமா இருக்கு..
ஆனா Finishing சப்னு இருக்கு..!///
உண்மைதான்.. என்ன பண்ண...வச்சிகிட்டா வஞ்சகம் பண்றோம்?????
////ஒரு 4 வருஷத்துக்கு முன்னாடி
ReplyDeleteமொத்த தமிழ்நாடும் இவரை தான்
தேடிட்டு இருந்தது..! ///
அப்போ புள்ளி ராஜா.. இப்போ 2G ராஜா... தமிழ் நாட்டுல எப்பவுமே ஒரு ராஜா இருந்திட்டுதான் இருக்காங்க...
ம்ம்ம்ம் கலக்கல்தான்... எப்பிடித்தான் யோசிக்கிறாங்களோ
ReplyDeletemanam pohuthu........
ReplyDelete//அப்போ புள்ளி ராஜா.. இப்போ 2G ராஜா... தமிழ் நாட்டுல எப்பவுமே ஒரு ராஜா இருந்திட்டுதான் இருக்காங்க...//
ReplyDelete:D overa yosikireengale mottu anna faaique :P
//வச்சிகிட்டா வஞ்சகம் பண்றோம்?????//
adhaan venkat kitta training eduka solrom fees just 1000/hr
//என் கதைகளில் வரும் நன்பர் “க்ரேஸி” குறிப்பிட்ட ஒரு நபரை குறிப்பதல்ல.//
idhu yen enga appan kudhirukulla illangara madhiri irukku :)
good dude thanks 4 sharing
ReplyDeleteஇன்று முதல் உங்களையும் பதிவுகளில் தொடர்கிறேன்
ReplyDeleteஉங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்,,
ReplyDeletehttp://riyasdreams.blogspot.com/2011/07/blog-post_23.html
vote potachu cmnt paniyachu but ninga flow pana kuda ilaye :(
ReplyDeleteவாசிக்கத்தூண்டும் எழுத்துநடை..
ReplyDeleteஅடுத்த அசத்தலுக்காக காத்திருக்கிறேன்..
வாழ்த்துக்கள்..
ஆவலை தூண்டிய ஆரம்பம். சட்டென முடிந்துவிட்டது.
ReplyDelete